Sunday, July 8, 2012

strmuslim யின் ஜூலை மாத சஞ்சிகை

ஷியாக்களின் கொள்கையும் வரலாறும்
ஷியாக்களின் கொள்கையும் வரலாறும்
ஷியாக்கள் ஓர் ஆய்வு -1
யூத வேர்களில் உதயமான ஷியா விருட்சம்

"ஈரானில் இமாம் குமைனியின் இஸ்லாமியப் புரட்சி', "ஈரான் இஸ்லாமிய வீராங்கனைகளின் ஆயுதப் பயிற்சி' என்ற புகழார வசனங்கள் தமிழக இஸ்லாமிய ஏடுகளில் மாறி மாறி எழுதப்பட்டன. தற்போது அவை நூல் வடிவில் மாறி உலா வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை வெளியிடும் இயக்கங்கள் ஈரானை இமயத்தில் கொண்டு போய் நிறுத்தின.

அப்போதே அந்த இயக்கங்களின் ஆபத்துக்களை உணர்ந்து ஈரானை ஆளும் ஷியாக் கொள்கையானது குர்ஆன், ஹதீசுக்கு எதிரான கொள்கை என்பதை தவ்ஹீது ஜமாஅத் தனது ஏடுகளில் இனம் காட்டியது.



இன்றளவும் ஈரானை இஸ்லாமிய நாடு என்றும் ஷியாக்களின் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி என்றும் பறை சாற்றுபவர்கள் தமிழகத்தில் இருக்கத் தான் செய்கிறார்கள். தவ்ஹீது ஜமாஅத்திற்கு எதிரான பரேலவிஸ ஆலிம்களுடன் இவர்கள் கூட்டுச் சேர்ந்து கொண்டு தங்கள் குருட்டுத் தனத்தில் நீடித்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அரபகத்தில் யூதர்களுக்கும், ஷியாக்களுக்கும் எதிராகத் துணிச்சலான பல நடவடிக்கைகளை மேற்கொண்டவரும், இஸ்லாத்தின் இந்த இரண்டு எதிரிகளுக்கு எதிராக அரபகத்தை ஒன்றிணைக்கும் ஆற்றல் கொண்டவர் என்று கருதப்பட்டவருமான இராக் அதிபர் சதாம் ஹுசைனை படுகொலை செய்ய ஏகாதிபத்திய அமெரிக்கா எண்ணிய போது அந்தக் காரியத்தை ஷியாக்கள் ஏற்று கச்சிதமாகச் செய்து முடித்தனர்.

இந்தக் கோழைத்தனமான கொடுஞ்செயலை உலகம் முழுவதும் ஒன்று திரண்டு எதிர்த்த போது இராக்கில் உள்ள ஷியாக்கள் மட்டுமல்ல! உலகெங்கிலும் உள்ள ஷியாக்கள் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர்.

இந்தியாவிலும் "சதாம் ஹுசைன் தூக்குத் தண்டனைக்குத் தகுதியானவர் தான்'' என்று அனைத்திந்திய ஷியா சட்ட வாரியத்தின் துணைத் தலைவர் கல்பி சித்தீக் என்பவர் தெரிவித்தார்.

இதன் மூலம் சுன்னத் வல் ஜமாஅத் (தமிழகத்தில் உள்ள சுன்னத் வல் ஜமாஅத் அல்ல) முஸ்லிம்களுக்கும் தங்களுக்கும் உள்ள பகையை ஷியாக்கள் முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டனர்.

இங்கு ஷியாக்கள் தங்களை யார் என்று அப்பட்டமாக அடையாளப் படுத்திக் கொண்டனர். தங்கள் குரோதத்தையும், கோர முகத்தையும் வெளிப்படுத்திக் கொண்டனர்.

குர்ஆன், ஹதீஸை பின்பற்றுவோர் மீது இந்த ஷியாக்கள் கொண்டிருக்கும் பகைமையை, அதன் ஆழத்தை இன்னும் தெளிவாக வரலாற்று ரீதியாக இந்தச் சந்தர்ப்பத்தில் விளக்கி, ஈரானிய மற்றும் ஏனைய ஷியாக்கள் இஸ்லாமியர்களா? அல்லது யூதர்களா? என்பதைப் படம் பிடித்துக் காட்டுவது நமது கடமையாகும்.

இதன் மூலம் ஈரான் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி என்று வர்ணித்து மக்களை நரகப் பாதைக்கு வளைத்துப் போடும் அநியாயத்திலிருந்து காக்க முடியும். அத்துடன் இங்குள்ள சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைக் கூறிக் கொள்வோர் எப்படி ஷியாக்களின் மறு பதிப்பாக உள்ளனர் என்பதையும் அடையாளம் காட்ட வேண்டியது அவசியமாகின்றது. அதற்காகவே இந்தக் கட்டுரை!

ஏகத்துவத்தின் இந்தத் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ள இந்த ஆய்வாக்கங்கள், ஆதார வளங்கள் அனைத்தும் ஷியாக்களின் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அறிஞர் இஹ்ஸான் இலாஹி லஹீரியின் "ஷியாவும் சுன்னத்தும்'' என்ற நூலிலிருந்து பெறப்பட்டவையாகும்.
ஈரானில் ஏனிந்த வேர் பிடிப்பு

ஷியாயிஸத்தின் பிறப்பிடமாக மட்டுமில்லாமல் வளர்ப்பிடமாகவும் ஈரான் இருப்பதற்குக் காரணம் என்ன?

ஈரான் என்ற பாரசீகப் பேரரசின் சாம்ராஜ்யம் தாக்கப்பட்டதும், தகர்க்கப்பட்டதும் அன்றைய இஸ்லாமியப் பேரரசின் இரண்டாவது ஆட்சித் தலைவராக இருந்த உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் வீரமிக்க கைகளால் தான். இதனால் பாரசீக சக்திகள், பாசி படிந்த உயர் சாதியினர் உமர் (ரலி) அவர்களைப் பழி வாங்கத் துடித்தனர்.

பரம்பரை பரம்பரையாக ஆட்சி செய்து வந்த பாரசீகர்கள் பதவிப் பித்தை விட்டு வெளியேறுவது சாதாரண விஷயமல்ல! அதனால் அவர்கள் பழி வாங்கத் துடிப்பது இயல்பு தான். எனவே இவர்களுக்கு சிந்தனையிலும் செயல்பாட்டிலும் ஒத்த சித்தாந்தத்தைக் கொண்டிருந்த யூதர்கள் இவர்களை அடையாளம் கண்டு இவர்களுடன் கை கோர்த்தனர். அமீருல் முஃமினீன் உமர் (ரலி) அவர்களுக்கு எதிராக இவ்விரு தீய சக்திகளும் ஒன்று சேர்ந்து களம் அமைத்தனர்.
கைதியான அரசிக்குக் கணவரான ஹுசைன் (ரலி)

இப்படி இவர்கள் சதித் திட்டம் தீட்டிக் கொண்டிருந்த வேளையில் பாரசீகத்திலிருந்து கைதியாக வந்த ஷஹ்ர் பானு என்ற பெண்ணை ஹுசைன் (ரலி) அவர்கள் மணமுடிக்கின்றார்கள். இந்தப் பெண் பாரசீக மன்னர் யஸ்தஜ்ரித் என்பவரின் மகளாவார். இந்நிகழ்வு யதார்த்தமாக நடந்த நிகழ்வாகும்.

இதைப் பயன்படுத்திக் கொண்டு, யூதர்களின் முழு ஒத்துழைப்புடன் பாரசீகர்கள் இஸ்லாமிய அரசுக்குள் குழப்பம் விளைவிப்பதற்கு விரிவான முயற்சிகளை எடுத்துக் கொண்டனர்.

உமர் (ரலி) அவர்கள் மரணித்த பின் இஸ்லாமிய அரசின் மூன்றாவது கலீபா உஸ்மான் (ரலி) அவர்களின் காலத்தில் அலீ (ரலி) அவர்களுக்குப் புனிதமேற்றும் பூர்வாங்கப் பணியில் இறங்கினர். அலீ (ரலி) அவர்களுக்கு விலாயத் இருப்பதாக வாதிட்டனர். அலீ (ரலி) அவர்களின் கவனத்திற்கு வராமலேயே இந்தச் சதி வலையைப் பின்னினர்.

பாரசீகர்கள் ஏற்கனவே தங்களை தெய்வீக வழித் தோன்றல்கள் என்றும் தங்களின் நரம்பு நாளங்களில் தெய்வீக ரத்தம் ஓடுவதாகவும் நம்பியவர்கள்.

சாசானியர்களான அவர்களிலிருந்து ஷஹ்ர் பானு என்ற பெண் ஹுசைன் (ரலி) அவர்களுக்கு சம்சாரமாகி விட்ட பின்னர், அலீ (ரலி) அவர்களின் குடும்பத்தினருக்குத் தெய்வீகத் தன்மையைக் கொடுப்பதற்குரிய வழி மிகவும் எளிதானது; இலகுவானது.

பாரசீகர்களைச் சேர்ந்த இந்த மனைவியின் மூலமாக ஹுசைன் (ரலி) அவர்களுக்குப் பிறந்தவர் தான் ஜைனுல் ஆபிதீன் என்ற சின்ன அலீ ஆவார். இவருடைய பூத உடலில் ஓடுவது சாதாரண மனித இரத்தமல்ல! புனித இரத்தம் என்று ஒரு புனித வரலாற்றை உருவாக்கினர்.

இதனால் தான் ஈரானில் பெரும்பான்மையானவர்கள் ஷியாயிஸத்தில் நுழைந்தனர்.

இது தான் ஈரான் ஷியாக்களின் பிறப்பிடமாகவும், வளர்ப்பிடமாகவும் இருப்பதற்குக் காரணமாகும்.

இப்போது ஷியாயிஸம் உருவான வரலாற்றைப் பார்ப்போம்.
ஷியாயிஸம் உதயமான வரலாறு

முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுச் செய்தி என்ற துல்லியமான வெளிச்சம் பூமியெங்கும் பரவத் தொடங்கியதும் புதிய வரலாற்றுப் பக்கங்களை எழுதத் தொடங்கியதும் இறை மறுப்பாளர்கள், இணை வைப்பாளர்கள், குறிப்பாக அரபிய தீபகற்பத்தில் இருந்த யூதர்கள், ஈரானில் உள்ள நெருப்பு வணங்கிகள் ஆகியோரின் உள்ளங்கள் கரியத் தொடங்கின.

இதனால் இஸ்லாத்திற்கு எதிரான சதிகளில் அவர்கள் இறங்கினர்; சூழ்ச்சிகளைச் சுற்றிலும் பின்னினர். ஆனால் அல்லாஹ்வின் ஒளி இத்தனையையும் தாண்டி, சுடர் விட்டுப் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது. இதையே அல்லாஹ் தன் திருமறையில் குறிப்பிடுகின்றான்.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப் படுத்துபவன்.

(அல்குர்ஆன் 61:8)
அப்துல்லாஹ் பின் ஸபா

இஸ்லாம் உதயமானதும் முதன் முதலில் இஸ்லாமிய மார்க்கத்தில் இஸ்லாத்தின் பெயராலேயே யூதக் கருத்தைப் புகுத்தியவன் அப்துல்லாஹ் பின் ஸபா என்பவன் தான்.

இவன் ஒரு யூதன்! இவனுடைய மூதாதையர்களான பனூ குரைளா, பனூ நுளைர், பனூ கயன்காஃ ஆகிய கோத்திரத்தார் இஸ்லாத்தை, அதன் இறைத் தூதரை எதிர்த்துப் படை நடத்தினர். இவர்கள் நடத்திய போர்கள் அனைத்திலும் அடுக்கடுக்காகத் தோல்வியைத் தான் சந்தித்தனர். இதனால் முஸ்லிம்களை அவர்கள் நேருக்கு நேர் களத்தில் சந்திக்கும் காரியத்தைக் கைவிட்டனர்.

ஆனால் திரை மறைவில், முதுகுக்குப் பின்னால் நின்று குரல் வளையை அறுக்கும் கலையைக் கையில் எடுத்தனர்.

இதன்படி யமன் நாட்டைச் சேர்ந்த அப்துல்லாஹ் பின் ஸபாவும் அவனது சதிகார சகாக்களும் ஒரு திட்டம் தீட்டினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரு மகள்களை மணமுடித்தவரும் இஸ்லாமிய ஆட்சித் தலைவர்களில் மூன்றாவது கலீபாவுமான உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சியில் தலைநகர் மதீனாவிற்குள் அந்தத் திட்டத்தை அரங்கேற்றினர்.

தங்கள் காரியத்தை அரங்கேற்றுவதற்கு அலீ (ரலி) அவர்களைக் கவசமாக்கிக் கொண்டு மதீனாவில் குளறுபடிகளையும், குழப்பத்தையும் தோற்றுவித்தனர். மக்களின் மனங்களில் விஷக் கருத்துக்களைத் தூவினார்கள்.

தபூக் போர் நடந்த காலம் மிகவும் கஷ்டமான காலமாகும். "இந்த இக்கட்டான காலத்தில் உதவுபவர் யார்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது உஸ்மான் (ரலி) அவர்கள் ஆயிரம் தீனார்களைக் கொண்டு வந்து நபி (ஸல்) அவர்களிடம் அர்ப்பணித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த நாளுக்குப் பின்னர் (உஸ்மான்) இப்னு அஃப்பான் செய்யும் (பாவமான) காரியம் அவரைப் பாதிக்கச் செய்யாது'' என்று பல தடவை கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸமுரா(ரலி)

நூல்: அஹ்மத் 19713, திர்மிதீ 3632

இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் உஸ்மான் (ரலி) அவர்களைப் பாராட்டியது மட்டுமில்லாமல் அவர்களுக்குச் சுவனத்தையும், வீர மரணத்தையும் கொண்டு சுபச் செய்தி கூறினார்கள்.

இப்படிப்பட்ட உஸ்மான் (ரலி) அவர்கள் மீது முஸ்லிம்களைத் தூண்டி விட்டவர்கள் அப்துல்லாஹ் பின் ஸபாவும், அவனது யூத சகாக்களும் தான்.
யூத இனத்தின் வெற்றி

இவர்கள் தான் இஸ்லாத்தின் அடிப்படை ஏகத்துவக் கொள்கைக்கு எதிரான, இஸ்லாத்திற்குக் கடுகளவும் சம்பந்தமில்லாத கொள்கைகளை முஸ்லிம்களிடம் பரப்பினர்.

தூய இஸ்லாத்திற்குத் துரோகம் இழைத்த இந்தக் கூட்டம் தங்களுக்குச் சூட்டிக் கொண்ட பெயர் தான் ஷியா ஆகும்.

அலீ (ரலி) அவர்களுக்கு ஆதரவானவர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்டனர். (ஆனால் அலீ (ரலி) அவர்கள் இதில் சம்பந்தப்படவில்லை) ஷியா என்றால் சமுதாயத்தினர், சாரார் என்று பொருள். இவர்கள் தான் முஸ்லிம்களை ஒருவரை மற்றொருவருக்கு எதிராக மூட்டி விட்டனர்; ஒருவரை மற்றவருடன் மோத விட்டனர்.

இந்த வகையில் யூதம் வெற்றி கண்டு விட்டது. பாரசீகம் முஸ்லிம்களைத் தோற்கடித்து விட்டது. யூதர்கள் தயாரித்து அனுப்பிய அப்துல்லாஹ் பின் ஸபா அரிய பலனைக் கொடுத்தான்.

யூதர்களிடத்தில் உயர் மரியாதையையும் உரிய இடத்தையும் பெற்றிருந்த அவன், ஷியாக்களிடமும் உயர் மரியாதையையும் உரிய இடத்தையும் பெற்று விடுகின்றான். இந்த அடிப்படையில் தான் ஷியாவின் வேர்கள் யூத மதத்தில் ஆழப் பதிந்தவை என்று கூறுகின்றோம்.
அப்துல்லாஹ் பின் ஸபாவைப் பற்றி அறிஞர்கள்

"குர்ஆன் ஒன்பது பாகங்களில் ஒரு பாகமாகும். அதன் ஞானம் அலீயிடம் உள்ளது என்று இவன் நம்பிக்கை கொண்டிருந்தான். இதை அலீ (ரலி) உறுதியாக மறுத்து விட்டார்கள்'' என்று இமாம் ஜவ்ஸஜானி கூறுகின்றார்.

"இவனது ஊர் யமன் ஆகும். இவன் யூதனாக இருந்து பின்னர் தன்னை முஸ்லிம் என்று பிரகடனம் செய்து கொண்டான். தலைவர்களுக்கு முஸ்லிம்கள் கட்டுப்படாமல் தடுப்பதற்காக அவர்கள் வாழும் ஊர்களைச் சுற்றி வந்து அவர்களிடம் இந்தத் தீமைகளைப் புகுத்தினான். உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் இந்தத் தீய நோக்கத்தில் திமிஷ்க் என்ற ஊருக்குள் நுழைந்தான்'' என்று இப்னு அஸாகிர் தமது தாரீக் எனும் நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

"அப்துல்லாஹ் பின் ஸபாவின் விவகாரங்கள் வரலாற்று நூல்களில் பிரபலமானவையே! அவன் எந்த ஹதீஸையும் இதுவரை அறிவிக்கவில்லை. இதற்குரிய புகழ் அல்லாஹ்வுக்கே! ஸபாயிய்யா என்று அழைக்கப்படும் இவனது ஆதரவாளர்கள் அலீ (ரலி) அவர்களைக் கடவுளாகக் கருதினார்கள். இவர்களை அலீ (ரலி) அவர்கள் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் நெருப்பினால் கொளுத்தினார்கள்'' இவ்வாறு ஹாபிழ் இப்னு ஹஜர் தன்னுடைய லிஸானுல் மீஸானில் தெரிவிக்கின்றார்கள்.

இந்த மேற்கோள்கள் அனைத்தும் சுன்னத் வல் ஜமாஅத்தின் இமாம்கள், ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்துக்களாகும். இது லிஸானுல் மீஸான் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது.

"அப்துல்லாஹ் பின் ஸபா யூதத்திலும், இஸ்லாத்திலும் விலாயத் என்ற கொள்கையை கொண்டிருந்தான்; அலீயை கடவுளாகக் கொண்டிருந்தான்'' என்ற கருத்தை இந்த அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர்.

அப்துல்லாஹ் பின் ஸபா இந்தக் கொள்கையை உடையவன் தான் என்பதை ஷியா இமாம்களும் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் அவனது கொள்கையைச் சரி காண்கின்றனர்.

இவனைப் பற்றி ஷியா இமாம் கஷிய்யி என்பவர் கூறுவதைப் பாருங்கள்.

"அப்துல்லாஹ் பின் ஸபா யூதனாக இருந்து இஸ்லாத்தைத் தழுவினான். அலீயை வலியாக எடுத்துக் கொண்டான். அவன் யூதத்தில் இருக்கும் போது, மூஸா (அலை) அவர்களுக்குப் பின்னர் தோன்றிய யூஷஃ பின் நூனுக்கு இதே விலாயத்தைக் கற்பித்தான். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்த பிறகு இதே விலாயத்தைக் கற்பித்தான்'' என்று அறிஞர்களில் ஒருவர் கூறுகின்றார்.

இவ்வாறு ஷியா இமாம் கஷிய்யி தனது "பிரசித்தி பெற்ற வாழ்க்கைக் குறிப்புகள்'' என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

ஷியா இமாம்களில் ஒருவரான நவ்பக்ஸியும் இதே கருத்தைக் குறிப்பிடுகின்றார்.

(ஷியா வசுன்னத், பக்கம்: 17)

இந்தக் கொள்கையைத் தான் ஷியாக்கள் கொண்டிருக்கின்றார்கள். இதிலிருந்து ஷியாயிஸத்தின் ஆணி வேர் யூத மதம் தான் என்பது நன்கு தெளிவாகின்றது.

அந்த யூத மதம், ஏகத்துவக் கொள்கையை, அந்தக் கொள்கையை உறுதியாகக் கடைப்பிடிக்கும் நபித்தோழர்களை ஒரு போதும் சகித்துக் கொள்ளாது.

ஏகத்துவத்திற்கு எதிரான கருத்துக்களை, ஏகத்துவத்தைப் பின்பற்றிய நபித்தோழர்களுக்கு எதிரான கருத்துக்களை யூதத்தின் கள்ளப் பிள்ளையான ஷியாயிஸம் தனது தாய் மதத்திலிருந்து தன்னகத்தே வடித்து வைத்திருக்கிறது.

அதன் அடிப்படையில் ஷியாயிஸம் எங்கெங்கு புகுந்து இஸ்லாத்தின் அடிப்படையான ஏகத்துவக் கொள்கையைத் தகர்க்கின்றது என்பதை இன்ஷா அல்லாஹ் வரும் இதழ்களில் பார்ப்போம்.
ஷியாக்கள் ஓர் ஆய்வு- 2
ஷியாக்களின் கடவுள் கொள்கை

அபூஉஸாமா

அப்துல்லாஹ் பின் ஸபா என்ற யூதனால் உருவாக்கப்பட்ட ஷியா மதம் பரப்பி வரும் படு பயங்கர விஷச் சிந்தனைகளில் ஒன்று, அல்லாஹ்வுக்கு பதாஃ ஏற்படும் என்ற கருத்தாகும். அதாவது அல்லாஹ்வுக்கு மறதியும், அறியாமையும் ஏற்படும் என்ற நச்சுக் கருத்தாகும். (அல்லாஹ் நம்மைக் காப்பானாக!)

இவர்கள் இட்டுக்கட்டிக் கூறுகின்ற இந்த அபத்தமான, அபாண்டமான சிந்தனையை விட்டும் அல்லாஹ் மிகவும் உயர்ந்தவன்.

கலீனீ என்பவர் ஷியாக்களின் அறிஞர்களில் ஒருவராவார். அவர் தனது அல் காஃபி என்ற நூலில் அல் பதாஃ என்று தலைப்பிட்டு தனிப் பாடமே அமைத்திருக்கிறார்.

இந்தப் பாடத்தில் தன்னுடைய கருத்தையும், தன்னுடைய பாதுகாக்கப் பட்ட (?) இமாம்களிடமிருந்து கிடைத்த பல தரப்பட்ட அறிவிப்புகளையும் அறிவிக்கின்றார்.

"மதுவைத் தடை செய்வதற் காகவும், அல்லாஹ்வுக்கு மறதியும் அறியாமையும் உண்டு என்று உறுதிப்படுத்துவதற்காகவுமே தவிர அல்லாஹ் எந்தவொரு நபியையும் அனுப்பவில்லை'' என்று ரிளா (ஷியாக்களின் எட்டாவது இமாம்) கூற நான் செவியுற்றேன் என ரய்யான் பின் ஸலித் தெரிவிக்கின்றார்.

இவ்வாறு அல் காஃபி ஃபில் உசூல் என்ற நூலில் பதாஃ என்ற பாடத்தில் இடம் பெற்றுள்ளது.

இதற்கு மேற்கொண்டு ஒரு விரிவுரையும் எழுதப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போம்.

அபுல் ஹஸனின் மகன் அபூ ஜஃபர் இறந்த பின்பு அவர்களிடம் இருந்து கொண்டிருந்தேன். "அபூஜஃபர், (அவரது சகோதரர்) அபூமுஹம்மது ஆகிய இருவரும் இந்நேரத்தில் அபுல் ஹஸன் மூஸாவையும், இஸ்மாயீலையும் போல் இருக்கிறார்கள். இவ்விருவரின் சம்பவம் அவ்விருவரின் சம்பவத்தைப் போன்று இருக்கிறது. (அபுல் ஹஸன் மூஸா, இஸ்மாயீல் ஆகிய இருவரில் முதலில் இஸ்மாயீல் இறந்து விடுகின்றார். மூஸா வாழ்ந்து கொண்டிருந்தார். அது போலவே) அபூ ஜஃபர் இறந்த பின்னர் அபூ முஹம்மது வாழ்ந்து கொண்டிருக்கிறார்'' என்று எண்ணி எனக்குள்ளேயே சிந்தித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது நான் பேச ஆரம்பிப்பதற்கு முன்னால் (என்னுடைய மனதில் உள்ளதை அறிந்து கொண்ட) அபுல் ஹஸன், "அபூ ஹாஷிமே! மூஸா எப்படிப்பட்டவர் என்ற விபரம் இஸ்மாயீல் இறந்த பிறகு தான் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்தது. இஸ்மாயீல் உயிருடன் இருக்கும் போது, அதாவது அவர் இறக்கும் வரை அவரைப் பற்றிய விபரம் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் ஆகி விட்டது. இது போன்று தான் (என் மகன்) அபூ முஹம்மது எப்படிப்பட்டவர் என்ற விபரம் அபூஜஃபர் இறந்த பிறகு தான் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்தது. அபூஜஃபர் உயிருடன் இருக்கும் வரை, அதாவது அவர் மரணிக்கும் வரை அவர் எப்படிப்பட்டவர் என்ற விபரம் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் ஆகி விட்டது. இந்த வீணர்கள் ஒத்துக் கொள்ள மறுத்தாலும் சரியே! இதைத் தான் நீங்கள் உங்கள் உள்ளத்தில் எண்ணி சிந்தித்துக் கொண்டிருந்தீர்கள். எனது மகன் அபூமுஹம்மது எனது ஸ்தானத்தை அடைகின்ற எனது வழித்தோன்றல் ஆவார். அவருக்குத் தேவையான ஞானம் அவரிடமே உள்ளது. அவரிடம் இமாமத் என்ற ஆயுதம் இருக்கின்றது'' என்று அபுல் ஹஸன் கூறினார் என அபூஹாஷிம் அல்ஜஃபரி தெரிவிக்கிறார்.

இது ஷியாக்களின் "அல்ஹுஜ்ஜத்' என்ற நூலில் பக்கம் 328ல் பதிவாகி உள்ளது.

தனது மகன் இஸ்மாயீல் என்பவர் இமாமாக ஆவார் என்று ஜஃபர் பின் முஹம்மது அல்பாகிர் என்ற இமாம் முன்னறிவிப்புச் செய்தார். அதாவது தான் இறக்கின்ற வரை தனது மகன் உயிருடன் வாழ்ந்து இமாமாக ஆவார் என்று குறிப்பிட்டார். ஆனால் (அவரது முன்னறிவிப்புக்கு மாற்றமாக) தந்தை உயிருடன் இருக்கும் போதே மகன் இஸ்மாயீல் இறந்து விடுகிறார். "என் மகன் இஸ்மாயீல் விஷயத்தில் (அவன் இறந்த பின்பு) அல்லாஹ்வுக்குத் தெரிகின்ற விபரத்தைப் போன்று வேறு எதிலும் விபரம் தெரியாமல் இருந்ததில்லை'' என்று ஜஃபர் பின் முஹம்மது அல்பாகிர் கூறினார்.

(அதாவது அவரது மகன் இஸ்மாயீல் இறந்த பிறகு தான் அவர் யார்? எப்படிப்பட்ட சிறப்புள்ளவர்? என்ற விபரம் அல்லாஹ்வுக்குத் தெரிய வந்ததாம். இந்தத் தீய சிந்தனையிலிருந்து அல்லாஹ் நம்மைக் காப்பானாக!)

இவ்வாறு நவ்பக்தீ குறிப்பிடுகின்றார். இது பிரகுஷ் ஷியா என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

நாம் இதுவரை கண்ட இந்த அறிவிப்புக்களிலிருந்து நமக்கு உறுதிப்படும் விஷயம் இது தான்.

"இதற்கு முன்பு அல்லாஹ்வுக்குத் தெரியாத ஒரு விபரத்தை இப்போது அவன் தெரிந்து கொள்கிறான்''

இது தான் ஷியாக்களின் கடவுள் கொள்கையாகும்.

ஆனால் அல்லாஹ் தன் ஞானத்தைப் பற்றி அறிவாற்றலைப் பற்றி தனது தூதர் மூஸா நபியின் வாயிலாக பின்வருமாறு தெரிவிக்கிறான்.

"என் இறைவன் தவறிட மாட்டான்; மறக்கவும் மாட்டான்'' என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 20:52

அவனே அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன். அவன் அளவற்ற அருளாளன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 59:22

அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன் என்பதையும், ஒவ்வொரு பொருளையும் அறிவால் அல்லாஹ் சூழ்ந்து விட்டான் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அல்லாஹ்வே ஏழு வானங்களையும் பூமியில் அது போன்றதையும் படைத்தான். அவற்றுக்கிடையே கட்டளைகள் இறங்குகின்றன.

அல்குர்ஆன் 65:12

இந்த வசனங்கள் அல்லாஹ்வின் ஞானத்தைப் பற்றி மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. ஆனால் ஷியாக்களோ அல்லாஹ் மறதியாளன் என்று பறை சாற்றுகின்றனர்.

இதன் மூலம் ஷியாக்களின் முழுத் தோற்றத்தையும் அப்படியே நாம் தெரிந்து கொள்ள முடிகின்றது.

ஷியாக்களின் இமாம் ஜஃபர் பின் முஹம்மது பாகிர் தனது மகனைப் பற்றி ஒரு முன்னறிவிப்புச் செய்கிறார். இமாமாக ஆவார் என்ற அந்த முன்னறிவிப்பு நிறைவேறாமல் தன் மகனின் மரணத்தின் மூலம் தகர்ந்து நொறுங்குகின்றது.

இதனால் அல்லாஹ்வுக்குத் தன் மகனைப் பற்றி விபரம் தெரியவில்லை என்று விபரங்கெட்டு இந்த ஷியா இமாம் உளறுகிறார். அதாவது அல்லாஹ்வுக்கே அறியாமையைப் பறைசாற்றுகிறார்; மறதியைச் சமர்ப்பிக்கிறார்.

இது எவ்வளவு பெரிய இறை மறுப்பு! இப்படிப்பட்ட இந்த ஷியாக்களை எப்படி முஸ்லிம்கள் என்று ஒப்புக் கொள்ள முடியும்? இவர்களை ஷியா முஸ்லிம்கள் என்று அழைப்பது எந்த வகையில் நியாயமாகும்? அல்லாஹ்வுடைய பண்புகளில் விளையாடுவது யாருடைய வேலை? தெளிவாக யூதர்களின் வேலை தான்.

"அல்லாஹ் தேவையுள்ளவன்; நாங்களோ தேவையற்றோர்'' என்று கூறியோரின் கூற்றை அல்லாஹ் செவியுற்று விட்டான். அவர்கள் கூறியதையும் நியாயமின்றி நபிமார்களை அவர்கள் கொலை செய்ததையும் பதிவு செய்வோம். "சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்! இது நீங்கள் செய்த வினை. அடியார்களுக்கு அல்லாஹ் அநீதி இழைப்பவன் அல்லன்'' எனவும் கூறுவோம்.

அல்குர்ஆன் 3:182

அல்லாஹ் வறுமையில் உள்ளவன் என்று திமிர்த்தனமான தீய சொற்களைக் கூறுபவர்கள் யூதர்கள் தான்.

"அல்லாஹ்வின் கை கட்டப் பட்டுள்ளது'' என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்.

அல்குர்ஆன் 5:64

அல்லாஹ்வின் கைகளுக்கு விலங்கு மாட்டுபவர்களும் யூத விலங்குகள் தான். இப்படிப்பட்ட திமிர்த்தனத்தை இந்த ஷியா விஷமிகளும் வாந்தி எடுக்கின்றனர். அல்லாஹ் கூறும் இந்தத் தன்மைகளை வைத்துப் பார்க்கும் போது ஷியாக்கள் யூதர்களைப் போன்றவர்கள் அல்ல! யூதர்கள் தான் என்பது தெளிவாகிறது.

அப்துல் முத்தலிபை அல்லாஹ் தனியொரு சமுதாயமாக எழுப்புவான். அப்போது அரசர்களின் மகிமையும், இறைத்தூதர்களின் அடையாளமும் அவரிடம் இருக்கும். காரணம் அவர் தான் பதாஃ என்ற கொள்கை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவராவார்.

(நூல்: மஸ்அலத்துல் பதாஃ பக்கம் 53, 54, 55)

பாருங்கள்! அப்துல் முத்தலிப் யார்? இஸ்லாத்தின் பார்வையில் இறை நிராகரிப்பாளர்! அவரை தனியொரு சமுதாயம் என்று போற்றுகின்றார்கள் இந்த ஷியாக்கள்.

இப்ராஹீம் ஒரு சமுதாயமாகவும், அல்லாஹ்வுக்குக் கட்டுப் பட்டவராகவும், உண்மை வழியில் நின்றவராகவும் இருந்தார். இணை கற்பிப்பவராக அவர் இருந்ததில்லை.

அல்குர்ஆன் 16:120

ஏகத்துவத்தின் அணையாத ஜோதியாகத் திகழ்ந்த இப்ராஹீம் நபி அவர்களுக்கு அல்லாஹ் அளித்த பட்டத்தை இந்தப் பாவிகள் அப்துல் முத்தலிபுக்குச் சூட்டி மகிழ்கிறார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்களின் பட்டத்தை அப்துல் முத்தலிபுக்குக் கொடுத்ததோடு நிறுத்தவில்லை. இப்ராஹீம் நபியவர்களுக்கு அல்லாஹ் மறுமையில் அளிக்கப் போகும் மாபெரும் மரியாதையையும் இவர்கள் அப்துல்முத்தலிப்புக்கு அளிக்கிறார்கள்.

மறுமையில் அனைவரும் நிர்வாணமாக எழுப்பப்படும் போது முதன் முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

(பார்க்க: புகாரி 3349)

இந்தத் தகுதியை, இதை விட அதிகமான தகுதியை இருட்டில் மறைந்த அப்துல் முத்தலிபுக்குத் தாரை வார்க்கிறார்கள். இதற்குக் காரணம் அவர் தான் பதாஃ என்ற கொள்கையை அறிமுகப்படுத்தியவராம். அதாவது அல்லாஹ்வுக்கு மறதியும், அறியாமையும் உள்ளது என்று கூறியவராம். (இதை எங்கு போய் கண்டுபிடித்தார்கள் என்பது தனி விஷயம்) அதனால் தான் இந்த மரியாதை!

இப்படி அல்லாஹ்வுக்கும் ஏகத்துவத்திற்கும் எதிராகக் களமிறங்கி நிற்கும் இந்த யூத வாரிசுகளை இஸ்லாமியப் புரட்சியாளர்கள் என்று எப்படி மெச்ச முடியும்?

வளரும் இன்ஷா அல்லாஹ்
ஷியாக்கள் ஓர் ஆய்வு-3
மகான்களும் மறைவான ஞானமும்

அபூஉஸாமா

அல்லாஹ்வுடைய பண்புகளில் யூதர்கள் விளையாடுகிறார்கள். அது போன்று அவர்களது வாரிசுகளான ஷியாக்களும் விளையாடுகின்றனர். இதன் விளைவாக அல்லாஹ்வுக்கு அறியாமையும் மறதியும் உள்ளதாக இவர்கள் நம்புகிறார்கள்.

இது போன்ற விளையாட்டை இன்று நம்மை உக்கிரமாக எதிர்க்கின்ற சுன்னத் வல்ஜமாஅத் எனப்படுவோரும் செய்கின்றனர். பெயர் தான் சுன்னத் வல்ஜமாஅத் என்று வைத்துள்ளனர். ஆனால் இவர்களது செயல்பாடுகள் அனைத்தும் ஷியாயிஸத்தை அடிப்படையாகக் கொண்டது தான்.

இந்த சுன்னத் வல் ஜமாஅத்தினரிடம், "நீங்கள் ஏன் அவ்லியாக்களிடம் கேட்கிறீர்கள்? அல்லாஹ்விடம் கேட்கக் கூடாதா?' என்று நாம் கேட்டால் அதற்கு அவர்கள் ஓர் உதாரணத்தைக் கூறுகிறார்கள்.

அல்லாஹ் நீதிபதியைப் போன்றவன். இந்த அவ்லியாக்கள் வக்கீல்களைப் போன்றவர்கள். அதாவது நீதிபதியாகிய அல்லாஹ்விடம் வக்கீல்களாகிய அவ்லியாக்கள் நம்முடைய கோரிக்கையை எடுத்துக் கூறி அவனிடம் உத்தரவு பெற்றுத் தருவார்கள்.

இது தான் இவர்கள் கூறும் உதாரணமாகும்.

இந்த உதாரணத்தில் இவர்கள் கொண்டிருக்கும் கடவுள் கொள்கை அப்படியே பளிச்சிட்டுத் தெரிந்து பல்லிளிக்கின்றது.

நீதிபதிக்கு வழக்கில் சம்பந்தப்பட்டவரைப் பற்றிய விபரம் தெரியாது. அதனால் அவரைப் பற்றி, அவரது தரப்பை எடுத்துச் சொல்ல ஒரு வக்கீல் - வழக்கறிஞர் தேவை.

ஒருவர் குற்றமே செய்திருந்தாலும் வழக்கறிஞர் தன்னுடைய வாதத் திறமையினால் நீதிபதியிடம் தனது கட்சிக்காரரை நல்லவராகச் சித்தரித்து விடுதலை வாங்கிக் கொடுத்து விடுவார். நீதிபதியும் உண்மை தெரியாததால் குற்றவாளிக்கு விடுதலை அளித்து விடுவார்.

இந்த நீதிபதியின் ஸ்தானத்தில் அல்லாஹ்வை வைத்துப் பார்க்கிறார்கள் என்றால் இதற்கு என்ன பொருள்? அல்லாஹ்வுக்கு தன்னுடைய அடியார்களைப் பற்றிய விளக்கம் தெரியாது. அவனுக்கு அறியாமை உள்ளது என்பது தானே இதன் பொருள்!

இவர்கள் இப்படி விளங்கி இருப்பதால் தான் அவ்லியாக்கள் பக்தியிலிருந்து விடுபடவில்லை; விலகவில்லை. அதில் அழுத்தமான பிடிப்புடன் இருக்கிறார்கள்.

இவ்வாறு அல்லாஹ்வின் பண்புகளில் - ஆற்றல்களில் விளையாடுபவர்கள் ஷியாக்கள். அந்த ஷியாக்களின் விளையாட்டைத் தான் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் கையில் எடுத்திருக்கின்றனர்.

ஆனால் அல்லாஹ்வின் மீது உண்மையான நம்பிக்கை கொண்டவர்கள் அவனது பண்புகளில் கடுகளவு கூட குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்வார்கள். அப்படித் தான் நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடிய வண்ணம் தெருக்களில் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் "உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள்'' என்று அவர்கள் (தம்மில்) ஒருவரையொருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகிறவர்களை தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்களிடம் அவர்களுடைய இறைவன், "என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்?'' என்று கேட்கின்றான். அவ்வானவர்களை விட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவன் ஆவான். "அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறித் துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும். உன்னைப் புகழ்ந்து கொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றனர்'' என்று வானவர்கள் கூறுகின்றனர்..... (சுருக்கம்)

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 6408

இந்த ஹதீஸில் அல்லாஹ் மலக்குகளிடம் விசாரிப்பதை வைத்து அல்லாஹ்வுக்கு அறியாமை இருக்கிறது என்று யாரும் விளங்கி விடக் கூடாது என்பதற்காக, அல்லாஹ்வின் மீது "அறியாமை' என்ற சாயல் கூட வந்து விடாமல் நபி (ஸல்) அவர்கள் பார்த்துக் கொள்கிறார்கள். அதனால் தான், வஹுவ அஃலமு - அவன் அடியார்களைப் பற்றி நன்கறிந்தவன் என்ற விளக்கத்தையும் சேர்த்துச் சொல்கிறார்கள்.

அல்லாஹ்வின் பண்புகளில் அவனது அறிவுக்கு, ஆற்றலுக்குக் கடுகளவு கூட பாதகம் வராத அளவுக்குப் பார்க்கின்ற இந்த மார்க்கத்தில் தான் அல்லாஹ்வுக்கு அறியாமையைக் கற்பிக்கும் அபத்தமான உதாரணங்களை சுன்னத் வல்ஜமாஅத் எனப்படுவோர் சேர்த்து அழகு பார்க்கின்றனர் என்றால் இவர்கள் கடவுள் கொள்கை விஷயத்தில் ஷியா விஷத்தையே பக்காவாகக் கடைப்பிடிக்கிறார்கள் என்பது இங்கு உறுதியாகின்றது. இதன் மூலம் இவர்கள் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்ற போர்வையில் இருக்கும் ஷியாக்கள் தான் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இனி ஷியாக்கள் பற்றிய ஆய்வுக்கு வருவோம்.
இமாம்களின் மறைவான ஞானம்?

கடவுள் கொள்கையில் ஷியாக்கள் விளையாடும் அடுத்த விளையாட்டு மறைவானஞானம் சம்பந்தப்பட்டதாகும்.

மறைவான ஞானம் அல்லாஹ்வுக்கு மட்டும் சொந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அவனிடமே அனைத்துக் காரியமும் திருப்பப்படும். எனவே அவனையே வணங்குவீராக! அவனையே சார்ந்திருப்பீராக! நீங்கள் செய்பவற்றை உமது இறைவன் கவனிக்காதவனாக இல்லை.

அல்குர்ஆன் 11:123

வானங்களிலும், பூமியிலும் மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண்மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தில் நடந்து விடும். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 16:77

"அவர்கள் தங்கிய(காலத்)தைப் பற்றி அல்லாஹ்வே நன்கு அறிந்தவன். வானங்கள் மற்றும் பூமியில் மறைவானது அவனுக்கே உரியது. அவன் நன்றாகப் பார்ப்பவன்! நன்றாகக் கேட்பவன். அவனன்றி அவர்களுக்கு எந்தப் பொறுப்பாளரும் இல்லை. அவன் தனது அதிகாரத்தில் யாரையும் கூட்டாக்கிக் கொள்ள மாட்டான்'' என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 18:26

இந்த வசனங்களிலும், இன்னும் இது போன்ற ஏராளமான வசனங்களிலும் மறைவான ஞானம் தனக்கே உரியது என்று ஏக இறைவன் உரிமை கொண்டாடுகின்றான்.

அதாவது இந்தத் தன்மை கடவுளாகிய தனக்கு மட்டுமே உண்டு; இந்தத் தன்மையை தன்னிடமிருந்து யாரும் தட்டிப் பறிக்க முடியாது; யாருக்கும் இந்தத் தன்மையை வழங்கி அவர்களைக் கடவுளாக ஆக்கவும் மாட்டேன் என்று ஆணித்தரமாகக் கூறுகின்றான்.

ஆனால் இந்த ஷியாக்களோ தங்களது இமாம்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாகக் கூறி அவர்களை மனிதர்கள், இறைத் தூதர்கள், மலக்குகளை விட உயர்த்துகின்றனர்.

"தாங்கள் அறிய வேண்டும் என்று நினைத்தால் (எல்லாவற்றையும்) இமாம்கள் அறிந்து கொள்வார்கள்' என்றொரு தலைப்பிட்டு ஷியா இமாம் கலீனி என்பவர் தன்னுடைய நூலான அல்காஃபி என்ற நூலில் குறிப்பிடுவதாவது:

அறிய வேண்டும் என்று நினைக்கும் போது இமாம் கண்டிப்பாக அறிந்து கொள்கிறார். இமாம்கள் தாங்கள் எப்போது மரணமாகப் போகின்றோம் என்பதை அறிவார்கள்.

அல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம் 258

"தங்களின் சுய விருப்பத்தின் படியே இமாம்கள் மரணிக்கிறார்கள்' என்ற தலைப்பின் கீழ் கலீனி தெரிவிப்பதாவது:

மறைவானவற்றையும், தனக்கு இனி என்ன நேரப் போகிறது என்பதை அறியாத இமாம் அல்லாஹ்வின் படைப்பில் ஓர் ஆதாரமிக்கவர் அல்லர்.

அல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம் 196, 258

ஷியாக்கள் அல்லாஹ்வுடைய பண்பை எப்படித் தங்கள் இமாம்களுக்குத் தாரை வார்க்கிறார்கள் என்று பாருங்கள். அல்லாஹ்வுக்குச் சொந்தமான மறைவான ஞானத்தில் அவர்கள் செய்கின்ற விளையாட்டைப் பாருங்கள். அதிலும் குறிப்பாக ஷியா இமாம், தாம் எப்போது மரணிக்கப் போகிறோம் என்பதை அறிந்து கொள்வாராம்.
அற்புத ஆட்சியாளர் சுலைமான் நபி

சுலைமான் நபியவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் தஆலா அளித்த ஆட்சியைப் பற்றி திருக்குர்ஆன் கூறுவதைக் கொஞ்சம் கேளுங்கள்.

தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் கல்வியை அளித்தோம். "நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று அவ்விருவரும் கூறினர்.

தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். "மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட் கொடையாகும்'' என்று அவர் கூறினார்.

ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.

அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது "எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது'' என்று ஓர் எறும்பு கூறியது.

அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார். "என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது நல்லடியார்களில் என்னையும் உனது அருளால் சேர்ப்பாயாக!'' என்றார்.

பறவைகளை அவர் ஆய்வு செய்தார். "ஹுத்ஹுத்' பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார்.

"அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன்; அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்'' (என்றும் கூறினார்).

(அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. "உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்துள்ளேன். ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்'' என்று கூறியது.

அல்குர்ஆன் 27:15-22

பறவைகளின் பேச்சு, எறும்புகளின் பேச்சு ஆகியவற்றை அறியும் ஆற்றல், மனிதர்கள், ஜின்கள் ஆகியோர் அவர்களுக்கு வசப்பட்டிருந்தது என சுலைமான் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் சொரிந்த அருள் மழைகளை, அற்புத நிலைகளை சூரத்துந் நம்ல் என்ற அத்தியாயம் அள்ளித் தெளிக்கின்றது.

உங்கள் போரின் போது உங்களைக் காக்கும் உங்களுக்குரிய கவச ஆடை செய்வதை அவருக்குக் கற்றுக் கொடுத்தோம். நீங்கள் நன்றி செலுத்துவோராக இருக்கிறீர்களா? வேகமாக வீசும் காற்றை ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது நாம் பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி சென்றது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்.

அல்குர்ஆன் 21:80, 81

இந்த வசனங்களில் சுலைமான் நபிக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்ததைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்.

இவ்வளவு மேன்மையைப் பெற்ற சுலைமான் நபியவர்களுக்கு ஹுத்ஹுத் என்ற பறவை எங்கு சென்றது என்ற விபரம் தெரியவில்லை. அவர்களுக்கு மறைவான ஞானம் இருந்திருந்தால் அதைப் பற்றி விசாரித்திருக்க மாட்டார்கள்.

மேலும் அந்தப் பறவை திரும்பி வந்து, "உங்களுக்குத் தெரியாத ஒரு செய்தியைக் கொண்டு வந்துள்ளேன்'' என்று கூறுகின்றது.

தனது கட்டுப்பாட்டில் உள்ள பறவைக்குத் தெரிந்த ஒரு விஷயம் சுலைமான் நபிக்குத் தெரியவில்லை. ஆனால் ஷியாக்களின் இமாம் மறைவான செய்திகள் அனைத்தையும் அறிவார்கள் என்று ஷியாக்கள் நம்புகின்றனர்.

சுலைமான் நபியவர்களின் மரணத்தைப் பற்றி அல்லாஹ் என்ன சொல்கிறான் என்று பார்ப்போம்.

ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும். அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம். தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம்.

அவர் விரும்பிய போர்க் கருவிகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. "தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்'' என்று கூறினோம்.

அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் "நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே'' என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.

அல்குர்ஆன் 34:1, 2, 3

பறவைகளின் பேச்சு, எறும்புகளின் பேச்சு, காற்றின் கட்டுப்பாடு, ஜின்கள் மீது ஆட்சி என்று பேராட்சி செய்த பேரரசர் சுலைமான் (அலை) அவர்கள் தாம் விரும்பியபடி மரணிக்கவில்லை. ஆனால் ஷியாக்களின் இமாம்கள் நினைப்பதை அறிவார்களாம்; விரும்பியபடி மரணிப்பார்களாம். இப்படிக் கதை அளந்துள்ளார்கள் ஷியாக்கள்.

மறைவானவற்றை அறியாத ஒருவர் இமாமே கிடையாதாம்! என்ன நெஞ்சழுத்தம்? உண்மையில் இது யூதர்களின் நெஞ்சழுத்தமாகும். அந்த நெஞ்சழுத்தத்தை இவர்கள் அனந்தரமாகப் பெற்றிருப்பதால் அவற்றை இவர்கள் அப்படியே பிரதிபலிக்கின்றனர்.
இன வாதமும் இறை வாதமும்

கலீனியின் கைச்சரக்கை இன்னும் பாருங்கள்.

தனக்கு ஷியாக்களின் 8வது இமாம் அலீ பின் மூஸா எழுதினார் என அப்துல்லாஹ் பின் ஜுன்துப் அறிவிப்பதாவது:

நாம் அல்லாஹ்வின் பூமியில் அவனது நம்பிக்கை நட்சத்திரங்கள். நம்மிடம் (மக்களுக்கு வரும்) சோதனைகள், மரணங்கள் பற்றிய ஞானங்கள் இருக்கின்றன. அரபியர்கள் தலைமுறை இஸ்லாத்தில் உருவாக்கம் பற்றிய ஞானமும் நம்மிடம் இருக்கிறது.

ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரது உள்ளத்தில் குடியிருப்பது இறை நம்பிக்கையின் தன்மையா? அல்லது நயவஞ்சகத் தன்மையா? என்று நாம் அறிந்து கொள்வோம். நம்முடைய ஷியாக்களின் பெயர்களும் அவர்களது தந்தைமார்களின் பெயர்களும் பதியப்பட்டவர்களாவர். அல்லாஹ் நம்மிடமும் அவர்களிடமும் வாக்குறுதி எடுத்திருக்கிறான்.

அல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம்: 223

இது கலீனி கக்கிய விஷக் கருத்தாகும்.

யூதர்களைப் போன்று தங்கள் ஜாதியை உயர்த்திப் பேசுகின்ற இன வாதம் இந்த வார்த்தைகளில் அப்படியே பிரதிபலிக்கின்றன என்பதை இதைப் பார்த்தவுடனேயே விளங்கிக் கொள்ளலாம்.

இன வாதம் பேசினால் பேசி விட்டுப் போகட்டும் என்று விட்டு விடலாம். ஆனால் இந்த ஷியாக்கள் இறை வாதம் பேசுகின்றார்கள்.

அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

அல்குர்ஆன் 31:34

அல்லாஹ்வின் கைவசத்தில் உள்ள இந்த ஞானத்தைத் தங்கள் இமாம்களுக்கு இருப்பதாகப் பறை சாற்றுகின்றார்கள்.

இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

அல்குர்ஆன் 57:22

மனிதனுக்கு ஏற்படும் சோதனைகள் அனைத்தும் தன்னுடைய பதிவேட்டில் பதிந்து இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான். ஆனால் ஷியாக்களோ அவற்றைத் தங்களது இமாம்கள் பார்த்து விட்டதாகக் கதையடிக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் படித்ததும் கடவுள் கொள்கையில் ஷியாக்கள் இவ்வளவு பெரிய விளையாட்டை விளையாடுகிறார்களா? என்ற அதிர்ச்சியும், ஆச்சரியமும் ஏற்படலாம். ஆனால் இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகின்ற விதத்தில் சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்று கூறிக் கொள்வோர் ஓதும் மவ்லிது கிதாபுகளில், குறிப்பாக முஹய்யித்தீன் மவ்லிது என்ற பாடலில் புதைத்து வைத்திருக்கின்றனர். அதையும் கொஞ்சம் தோண்டிப் பார்ப்போம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்
ஷியாக்கள் ஓர் ஆய்வு -3
மவ்லிது ஓதும் மவ்லவிகள் ஷியாக்களே!

அபூஉஸாமா

ஆன்றோர்கள், சான்றோர்கள் வீற்றிருக்கும் அவையில் முஹய்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி முழங்கும் முழக்கம் இதோ:

எனக்கு ஸலாம் கூறாமல் சூரியன் (தினந்தோறும்) உதிப்பதில்லை. உதிக்கின்ற அந்தச் சூரியன் ஊர், உலகத்தில் நடக்கவிருக்கும் விவரங்களை என்னிடம் தெரிவிக்காது விடுவதில்லை. இவ்வாறு உதிக்கும் சூரியன் மட்டுமல்ல! உதிக்கின்ற ஒவ்வொரு ஆண்டும் என்னிடம் வந்து தன்னுள் நிகழவிருப்பதைத் தெரிவித்து விடுகின்றன. இவ்வாறு மாதங்களும், வாரங்களும், நாட்களும் தமக்குள் நடக்கவிருப்பதை என்னிடம் வந்து அறிவித்து விடுகின்றன. அவை தமக்குள் நடக்க இருக்கும் ரகசியங்களை கொட்டி விடுகின்றன.

என் இறைவனின் கண்ணியத்தின் மீது ஆணையாக! நல்லவர்கள், கெட்டவர்கள் அனைவரும் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றனர். என் சமூகத்தின் முன்னால் நிறுத்தப் படுகின்றனர்.

என் கண்ணொளி என்றென்றும் நிரந்தரமான பதிவேட்டில் பதிந்தே இருக்கின்றது. அல்லாஹ்வின் ஞானக் கடலில் நான் மூழ்கிப் போயிருக்கிறேன். மக்கள் காட்சியளிக்கும் (மறுமை) நாளில் நான் அல்லாஹ்வின் ஆதாரம். நான் நபி (ஸல்) அவர்களின் தனிப் பிரதிநிதி! அவர்களுடைய அடுத்த வாரிசு!

இது தான் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் முழக்கம் என்று முஹ்யித்தீன் மவ்லிது குறிப்பிடுகிறது.

அகில உலகத்தின் ஆட்சி கொடுக்கப்பட்ட இறைத் தூதர் சுலைமான் அவர்களுக்குக் கூட அல்லாஹ் சூரியனை வசப்படுத்திக் கொடுக்கவில்லை. சுழலும் அந்தச் சூரியன் முஹ்யித்தீன் முன்னால் வந்து நின்று ஸலாம் சொல்கிறதாம். அத்துடன் நிற்கவில்லை இந்தக் கப்ஸா புராணம்! மக்கள் எல்லோரும் இவருக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறார்களாம்.

இவர் என்ன? படைப்பினத்தில் அல்லாஹ்வால் முப்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டிருக்கின்றாரா? மக்கள் இவர் முன்னால் நிறுத்தப்படுவதற்கும், அவர்களை இவர் பார்வையிடுவதற்கும் அல்லாஹ்வால் தனி அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறதா?

அதுவும் இவர் இறந்து பல நூறு ஆண்டுகள் பறந்து போனதற்குப் பின்னால் இப்படி ஒரு பார்வையிடலா?

இப்படிப் பிதற்றும் முஹய்யித்தீன் மவ்லிது தனது பொய்யை இத்துடன் நிறுத்தவில்லை. முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் பார்வை, பதிவேட்டில் பதிந்திருக்கிறதாம். இவ்வாறு கொழுப்பேறிய வார்த்தைகளைக் கொப்பளிக்கிறது இந்த மவ்லிது! இதை நோக்கித் தான் நமது விமர்சன வெளிச்சத்தைப் பாய்ச்சுகின்றோம்.

"நான் வானங்கள், பூமியில் உள்ளவற்றை அறிகின்றேன்; சுவனத்தில் உள்ளதையும், நரகத்தில் உள்ளதையும் அறிகின்றேன். இது வரை நிகழ்ந்ததையும், இனி நிகழவிருப்பதையும் நான் அறிவேன்'' என அபூ அப்தில்லாஹ் (ஷியாக்களின் இமாம்) கூறுகின்றார்.

நூல்: அல்காஃபீ ஃபில் உசூல் பக்கம்: 124

இந்த நச்சுக் கருத்தைத் தான் முஹ்யித்தீன் மவ்லிது பறை சாற்றுகின்றது. இதைத் தான் சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்கள் வீடு வீடாகச் சென்று ஓதி வருகின்றனர்.

ஷியாக்களின் இந்த நச்சுக் கருத்து தான் ஷாஹுல் ஹமீது அண்டு சன்ஸ் என்ற பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட மவ்லிதுக் கிதாபுகளில் அச்சுக் கோர்க்கப்பட்டிருக்கின்றது.

ஷியாக்களின் கருத்துக்களையும், அவர்களின் வேர்களான யூதர்களின் கருத்துக்களையும் வாந்தி எடுப்பதன் மூலம் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று கூறிக் கொள்வோர் பக்கா ஷியாவினர் தான் என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகின்றது.

இந்த மவ்லிதில் படிந்திருக்கும் ஷியாக்களின் படிமானங்களையும், அதன் மீது சுன்னத் வல் ஜமாஅத்தினர் கொண்டிருக்கும் பிடிமானங்களையும் இன்னும் தொடர்ந்து பார்ப்போம்.

அபுல் முளஃப்பர் கூறியதாக அபூ மஸ்ஊத் அறிவிப்பதாவது: (இந்தக் குப்பைக்கு அறிவிப்பாளர் வேறு வேண்டிக் கிடக்கிறது!)

"நான் பணியாளர்களுடன் எண்ணூறு தீனார் பணத்தை எடுத்துக் கொண்டு சிரியாவுக்குச் செல்கிறேன்'' என்று ஷைக் ஹம்மாதிடம் விடை பெறும் விதமாக அபுல் முளஃப்பர் தெரிவிக்கின்றார். (சிஷ்யர்கள் பயணம் செய்யும் போது அதை ஷைகுகளிடம் தெரிவிப்பது ஒரு முக்கியமான வழிமுறையாம்)

அதற்கு ஹம்மாத், "நீ பயணம் செய்ய வேண்டாம். அவ்வாறு பயணம் செய்தால் நீ கொல்லப்பட்டு, உன்னுடைய பொருளும் கொள்ளை அடிக்கப்பட்டு விடும்'' என்று தெரிவிக்கின்றார். ஷைகின் இந்த முன்னறிவிப்பைக் கேட்டு மனம் உடைந்து போன அபுல் முளஃப்பர் சென்று கொண்டிருக்கின்றார். வழியில் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவரைக் கண்டு, ஹம்மாத் அவரிடம் கூறியதை அப்படியே தெரிவிக்கின்றார். (அபுல் முளஃப்பருக்கு இது அதிர்ச்சி அளிக்கிறது. ஹம்மாத் தன்னிடம் கூறியதை முஹ்யித்தீன் அப்படியே வார்த்தை பிசகாது கூறுகின்றாரே என்று பிரமித்து விடுகின்றார்)

அப்போது முஹ்யித்தீன் அபுல் முளஃப்பரை நோக்கி, "நீ செல்! வெற்றிகரமாக இலாபம் ஈட்டித் திரும்புவாய். (ஹம்மாது சொன்னது போல் நீ கொல்லப்பட மாட்டாய்) உன்னையும், உனது பொருளாதாரத்தையும் காப்பது என் கடமை'' என்று குறிப்பிடுகின்றார். அது போன்றே அபுல் முளஃப்பர் விரைந்து செல்கின்றார். முதலை விட அதிகமாக முன்னூறு தீனார் லாபம் ஈட்டுகின்றார்.

வியாபாரத்தில் இப்படியொரு லாபத்தை அடைந்த அவர் ஒருநாள் தன் இயற்கைத் தேவையை நிறைவேற்றுவதற்குச் செல்ல நேரிடுகின்றது. தான் சம்பாதித்த அந்தப் பொருளை கவனக்குறைவாக அங்குள்ள மணற்பரப்பில் வைத்து விட்டுச் செல்கின்றார். தன்னுடைய தேவையை நிறைவேற்றி விட்டுத் திரும்பும் போது பணத்தை மறந்து வைத்து விட்டு, தான் தங்கும் வீட்டிற்கு வந்து விடுகின்றார். தூக்கம் மேலிட்டு, தூங்கியும் விடுகின்றார்.

அப்போது ஒரு கனவு காண்கிறார். கனவில் அவர் ஒரு வியாபாரக் கூட்டத்தில் வரும் போது கொள்ளையர்கள் அந்தக் கூட்டத்தைக் கொன்று விடுகின்றனர். இவரையும் ஒருவர் வந்து ஈட்டியால் தாக்கிக் கொன்று விடுகின்றார்.

இவ்வாறு கனவு கண்டதும் திடுக்கிட்டு விழிக்கின்றார். இவ்வாறு விழித்துப் பார்க்கும் போது அவருடைய கழுத்தில் இரத்தக் கறை இருப்பதைப் பார்க்கின்றார். அவரது உடல் தாக்குதலுக்கு உள்ளானது போன்ற கடுமையான வலியையும், வேதனையையும் உணர்கின்றார். உடனே அவருக்குத் தன்னுடைய பணம் நினைவுக்கு வருகின்றது. பணம் வைத்த இடத்தை நோக்கி விரைகிறார். அவர் வைத்த இடத்தில் பணம் அப்படியே இருந்தது. அதை எடுத்துக் கொண்டு பாக்தாத் வந்து சேர்கிறார்.

பாக்தாத் வந்ததும் அவரது உள்ளத்தில், முதன் முதலில் யாரைச் சந்திப்பது? என்ற கேள்வி எழுகின்றது. ஷைக் ஹம்மாதைச் சந்திக்கலாம்; காரணம் அவர் வயதில் மூத்தவர்; அப்துல் காதிர் ஜீலானியைச் சந்திக்கலாம்; காரணம் அவர் சொன்னது தான் சரியாக இருக்கின்றது என்று அபுல் முளஃப்பர் தடுமாறிக் கொண்டிருக்கிறார். எதிரில் ஷைகு ஹம்மாதே வந்து விடுகிறார். அவர் அபுல் முளஃப்பரின் மன ஓட்டத்தை அப்படியே புரிந்து கொண்டு, "நீ முதலில் அப்துல் காதிர் ஜீலானியையே சந்திப்பாயாக! ஏனெனில் அவர் உனக்காக அல்லாஹ்விடம் பதினேழு தடவை முறையிட்டார். (அல்லாஹ் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால்) அவர் அம்முறையீட்டை எழுபது தடவையாக நிறைவு செய்தார். கடைசியில் உன் மீது நேரடியாக, நிஜமாகவே நிகழவிருந்த கொலை, கொள்ளையானது கனவிலும், மறதியிலும் நிகழ்வதாக மாறியது'' என்று ஷைகு ஹம்மாத், தடுமாற்றத்திலிருந்த அபுல் முளஃப்பருக்கு விளக்கினார்.

இது முஹ்யித்தீன் மவ்லிதில் அவரைப் பற்றி அளக்கப்பட்ட கதையாகும். இது உரையாகவும், கவிதையாகவும் அம்மவ்லிதில் இடம் பெற்றுள்ளது.

இங்கு நாம் பார்க்க வேண்டிய விஷயங்கள்:

1. அபுல் முளஃப்பரைப் பார்த்து ஹம்மாத், செல்லாதே என்று கூறுகிறார். இவ்வாறு அவர் கூறியதற்குக் காரணம் அவருக்குப் பதிவேட்டில் உள்ளது தெரிந்திருக்கின்றது.

2. அபுல் முளஃப்பர், ஹம்மாத் ஆகிய இருவருக்கு மத்தியில் மட்டுமே நடந்த விபரத்தை அல்லாஹ் மட்டுமே அறிவான். ஆனால் அதை அப்படியே அப்துல் காதிர் ஜீலானி அறிகிறார்.

3. ஹம்மாத், போகாதே என்று சொன்னார்! நான் சொல்கிறேன், நீ போ! என்று முஹ்யித்தீன் உத்தரவிடுகின்றார். அவரிடம் விதியை மாற்றுவதற்கு உத்தரவாதமும் கொடுக்கின்றார்.

4. இலாபம் ஈட்டி விட்டு, பாக்தாதுக்குள் நுழைந்து யாரைப் பார்ப்பது என்று அபுல் முளஃப்பர் மனதுக்குள் தத்தளிக்கின்றார், தடுமாறுகின்றார். இந்தத் தவிப்பை, அபுல் முளஃப்பரின் உள்ளத்தில் நடக்கும் இந்தப் போராட்டத்தை, எதிரில் வந்த ஹம்மாத் அறிந்து கொண்டு, நீ முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைப் போய் பார் என்று கூறுகிறார்.

ஷைகு ஹம்மாத், ஷைகு முஹ்யித்தீன் ஆகிய இருவரில் ஷைகு முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி தான் மிகவும் உயர்ந்தவர் என்று நிரூபணம் ஆனாலும், இரண்டு பேருமே பதிவேட்டில் உள்ளதை சர்வ சாதாரணமாகப் பார்க்கிறார்கள். உள்ளத்தில் தோன்றுவதையும் அப்படியே பார்க்கிறார்கள். அவற்றை எடுத்துச் சொல்லவும் செய்கிறார்கள்.

மறைவானவற்றை அப்படியே அறிகின்ற இந்த அற்புத ஆற்றல் (?) இவ்விரு ஷைகுகளுக்கும் நிறையவே உள்ளது என்பதை இந்தக் கதையிலிருந்து நாம் மிகச் சாதாரணமாக விளங்கிக் கொள்கிறோம்.

நாம் அல்லாஹ்வின் பூமியில் அவனது நம்பிக்கை நட்சத்திரங்கள். நம்மிடம் (மக்களுக்கு வரும்) சோதனைகள், மரணங்கள் பற்றிய ஞானங்கள் இருக்கின்றன. அரபியர்கள் தலைமுறை இஸ்லாத்தில் உருவாக்கம் பற்றிய ஞானமும் நம்மிடம் இருக்கிறது.

ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரது உள்ளத்தில் குடியிருப்பது இறை நம்பிக்கையின் தன்மையா? அல்லது நயவஞ்சகத் தன்மையா? என்று நாம் அறிந்து கொள்வோம். நம்முடைய ஷியாக்களின் பெயர் களும் அவர்களது தந்தைமார்களின் பெயர்களும் பதியப்பட்டவர்களாவர். அல்லாஹ் நம்மிடமும் அவர்களிடமும் வாக்குறுதி எடுத்திருக்கிறான்.

அல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம்: 223

மறைவான ஞானம் பற்றி ஷியாக்கள் கொண்டிருக்கும் கருத்துக்கள் இவை. இதற்கும் முஹ்யித்தீன் மவ்லிதில் இடம் பெற்றுள்ள இந்தக் கதைகளுக்கும் என்ன வித்தியாசம்?

முஹ்யித்தீன் அப்துல் ஜீலானிக்கும், ஹம்மாதுக்கும் மறைவான ஞானம் இருப்பதாக சுன்னத் வல் ஜமாஅத்தைச் சார்ந்த மவ்லவிகள் சொல்கிறார்கள். அவர்கள் ஓதுகின்ற, தூக்கிப் பிடிக்கின்ற மவ்லிதுக் கிதாபு சொல்கிறது. இதை ஒவ்வொரு ஆண்டும் ரபீஉல் ஆகிர் மாதத்தில் ஓத வேண்டும் என்றும் இந்த மவ்லவிகள் சொல்கிறார்கள். மக்களும் அதை நம்பி இவர்களை ஓத அழைக்கிறார்கள். இவர்களும் போய் ஓதுகின்றனர். அப்படியானால் இவர்கள் யார்? சுன்னத் வல் ஜமாஅத்தினர் அல்ல! பக்கா ஷியாக்கள் தான். யூதர்களின் கள்ளப் பிள்ளையான ஷியாக்களின் பரம்பரை தான் இவர்கள்!

இவர்களுக்கு என்ன நெஞ்சழுத்தம் என்று பாருங்கள்!

உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ்வே அறிவான் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.

கவனத்தில் கொள்க! அவனிடமிருந்து மறைத்துக் கொள்வதற்காக தமது நெஞ்சுகளை அவர்கள் மூடிக் கொள்கின்றனர். கவனத்தில் கொள்க! அவர்கள் தமது ஆடைகளால் மூடிக் கொண்டாலும் அவர்கள் மறைப்பதையும், வெளிப்படுத்துவதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.

அல்குர்ஆன் 11:5

"அல்லாஹ் உங்களுக்குச் செய்த அருளையும், உங்களிடம் அவன் செய்த உடன்படிக்கையையும், "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்று நீங்கள் கூறியதையும் எண்ணிப் பாருங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உள்ளங்களில் இருப்பதை அல்லாஹ் அறிந்தவன்.

அல்குர்ஆன் 5:7

(முஹம்மதே!) உமது கனவில் அவர்களை அல்லாஹ் குறைந்த எண்ணிக்கையினராகக் காட்டியதை எண்ணிப் பாருங்கள்!. அவர்களை அதிக எண்ணிக்கையினராக அல்லாஹ் உமக்குக் காட்டியிருந்தால் தைரியம் இழந்திருப்பீர்கள். இவ்விஷயத்தில் முரண் பட்டிருப்பீர்கள். எனினும் அல்லாஹ் காப்பாற்றினான். உள்ளங்களில் உள்ளவற்றை அவன் அறிந்தவன்.

அல்குர்ஆன் 8:43

(நம்மை) மறுத்தோரின் மறுப்பு உம்மைக் கவலையில் ஆழ்த்த வேண்டாம். அவர்களின் மீளுதல் நம்மிடமே உள்ளது. அவர்கள் செய்ததை அவர்களுக்கு நாம் அறிவிப்போம். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.

அல்குர்ஆன் 31:23

வானங்களிலும் பூமியிலும் உள்ள மறைவானவற்றை அல்லாஹ் அறிபவன். அவன் உள்ளங்களில் உள்ளதையும் அறிந்தவன்.

அல்குர்ஆன் 35:38

கண்களின் (சாடைகள் மூலம் செய்யப்படும்) துரோகத்தையும், உள்ளங்கள் மறைத்திருப்பதையும் அவன் அறிவான்.

அல்குர்ஆன் 40:19

"அல்லாஹ்வின் மீது இவர் இட்டுக்கட்டி விட்டார்'' எனக் கூறுகிறார்களா? (முஹம்மதே!) அல்லாஹ் நாடினால் உமது உள்ளத்தில் முத்திரையிடுவான். அல்லாஹ் பொய்யை அழிக்கிறான். தனது கட்டளைகளால் உண்மையை நிலைக்கச் செய்கிறான். உள்ளங்களில் உள்ளதை அவன் அறிந்தவன்.

அல்குர்ஆன் 42:24

இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். உள்ளங்களில் உள்ளவற்றையும் அவன் அறிந்தவன்.

அல்குர்ஆன் 57:6

வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அவன் அறிவான். நீங்கள் மறைப்பதையும், வெளிப்படுத்து வதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.

அல்குர்ஆன் 64:4

உங்கள் கூற்றை இரகசிய மாக்குங்கள்! அல்லது அதைப் பகிரங்கமாகக் கூறுங்கள்! உள்ளங்களில் உள்ளதையும் அவன் அறிந்தவன்.

அல்குர்ஆன் 67:13

இந்த வசனங்களும் இன்னும் இது போன்ற ஏராளமான வசனங்களும், உள்ளத்தில் உள்ளதை அறியும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு இருப்பதைக் கூறுகின்றன. ஆனால் இந்த ஆற்றலை முஹ்யித்தீனுக்கும், ஹம்மாதுக்கும் தூக்கிக் கொடுக்கின்றனர், மவ்லிது ஓதும் மவ்லவிகள். அப்படியென்றால் இவர்கள் யார்? கடைந்தெடுத்த ஷியாக்கள் தான்.

வளரும் இன்ஷா அல்லாஹ்
ஷியாக்கள் ஓர் ஆய்வு - 5
முஹ்ய்யித்தீனைக் கடவுளாக்கும் மவ்லிதுகள்

அபூஉஸாமா

மறைவான ஞானம் தங்கள் இமாம்களுக்கு உண்டு என்று ஷியாக்கள் நம்புகிறார்கள். அதே போன்று சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்று கூறிக் கொண்டு மவ்லிது ஓதுபவர்களும், மறைவான ஞானம் முஹ்யித்தீனுக்கு உண்டு என்று நம்புகின்றனர். இதற்கு ஆதாரமாக இவர்கள் ஓதி வரும் மவ்லிதுக் கிதாபுகளில் இடம் பெறும் சில சம்பவங்களைக் கடந்த இதழில் பார்த்தோம்.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானிக்கு மறைவான ஞானம் இருப்பதாகக் கூறும் இன்னொரு சம்பவத்தை அதே மவ்லிதுக் கிதாபிலிருந்து பார்ப்போம்.

அப்துல் ஹக் அறிவிப்பதாவது:

நாங்கள் ஷைகிடம் அமர்ந்திருந்தோம். அவர்கள் காலில் செருப்பணிந்து கொண்டு உளூச் செய்து இரண்டு ரக்அத்துக்கள் தொழுதார்கள். பிறகு இரு தடவை பெரும் சப்தமிட்டு விட்டுத் தனது இரு செருப்புக்களை விட்டெறிந்தார்கள். அதன் பின் அப்படியே மவுனமாகி விட்டார்கள். என்ன என்று கேட்பதற்கு யாரும் துணியவில்லை. விடையையும் விளக்கத்தையும் தேடியவாறு நாங்கள் வீற்றிருக்கையில் அந்நிய மொழி பேசும் ஒரு வணிகக் கூட்டம் தங்களது நேர்ச்சையோடு வந்தது.

அவர்கள் கொண்டு வந்த நேர்ச்சைப் பொருட்களில் தங்கமும், ஆடைகளும் இருந்தன.
ஸ்கட்டாக மாறிய செருப்பு ஜோடிகள்

தங்கத்திற்கு ஊடே (முஹ்யித்தீன் இரண்டு முறை சப்தமிட்டு வீசியெறிந்த) செருப்புகளும் வீற்றிருந்தன. ஆச்சரியமடைந்த சிஷ்ய கோடிகள், "இந்த செருப்பு ஜோடிகள் எப்படிக் கிடைத்தன?'' என்று வினவுகின்றார்கள்.

"நாங்கள் வழியில் சென்று கொண்டிருக்கும் வேளையில் அரபியக் கொள்ளையர்கள் எங்களை இடைமறித்துத் தாக்கத் துவங்கினர். எங்களில் சிலரை அவர்கள் கொன்று விட்டனர். எங்களது பொருட்களைக் கொள்ளையடித்தனர். "நாம் ஷைக் முஹ்யித்தீனுக்கு நேர்ச்சை செய்தால் என்ன?' என்று நினைத்து நேர்ச்சை செய்தோம். அவர்களை இரு வார்த்தைகள் கூறி நினைவு கூர்ந்தோம். அவ்வாறு சொல்லி முடிப்பதற்குள், இரு பெரும் பேரிறைச்சலைச் செவியுற்றோம். அவ்வளவு தான்! கொள்ளைக் கூட்டத்தில் ஒருவன், "வாருங்கள்! நம்மீது இறங்கிய சோதனையைப் பாருங்கள்' என்று கூறினான். உடனே நாங்கள் அவர்களைப் பார்த்தோம். அவர்களில் இரு முன்னணி வீரர்கள் பிணமாகக் கிடந்தனர். அவர்களில் ஒவ்வொருவர் மீதும் இந்தச் செருப்புக்களில் ஒவ்வொன்று கிடந்தது'' என்று அந்த வணிகக் கூட்டத்தினர் விளக்கினர்.

(அப்போது தான் ஷைகு எறிந்த செருப்புக்கள் வெறும் செருப்புக்களாகச் செல்லவில்லை. பெரும் ஸ்கட் ஏவுகணையாகப் பறந்திருக்கின்றன என்று சிஷ்ய கோடிகளுக்குப் புரிந்தது.)

இது முஹ்யித்தீன் மவ்லிதுக் கிதாபில் உரை நடையிலும், கவிதை நடையிலும் இடம் பெற்றுள்ளது.

இப்போது இதிலுள்ள அபத்தங்களைப் பார்ப்போம்.

1. எங்கோ ஒரு வணிகக் கூட்டம் சிக்கலில் மாட்டிக் கொண்ட விஷயம், பாக்தாதில் உள்ள முஹ்யித்தீனுக்குத் தெரிகின்றது.

2. உடனே முஹ்யித்தீன் தனது செருப்புக்களைத் தூக்கி எறிகின்றார். அந்தச் செருப்புக்கள் இலக்கையும் அடைந்து விடுகின்றன.

ஒரு பொருளைத் தூக்கி எறியும் போது அதை இயக்குவதற்குரிய மின்சாரம், பேட்டரி, எரி பொருள் போன்ற விசை இல்லையெனில் புவி ஈர்ப்பு விசையின் காரணமாக அது பூமியில் விழுந்து விடும். இந்தச் செருப்பு எப்படிப் பறந்து சென்றது? என்றெல்லாம் இங்கு கேட்கக் கூடாது. அப்படி இந்த ஆலிம்கள் கேட்டிருந்தால் என்றைக்கோ மவ்லிதுக் கிதாபுகள் அடுப்பிற்குள் புகுந்திருக்கும், புகைந்திருக்கும்.

இந்தச் செருப்புக்கள் எப்படித் துல்லியமாக இலக்கை அடைகின்றன? எறியப்படும் செருப்பு இலக்கை அடைய வேண்டுமாயின் அதில் ரேடார் கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு இந்தச் செருப்பில் ரேடார் பொருத்தப்பட்டிருந்ததா?

3. எறியப்பட்ட செருப்புக்கள் எதிரிகளின் தலைவர்களை இனங் கண்டு தாக்கி, அவர்களைக் கொன்றும் விடுகின்றன. கால் செருப்புக்கு ஆளை அடையாளம் கண்டு கொல்லும் இந்த அபார சக்தியும் இருக்கின்றதா?

முஹ்யித்தீன் மவ்லிதில் இடம் பெற்றுள்ள இந்த அபத்தங்கள் எதைக் காட்டுகின்றன? முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைக் கடவுளாகப் படம் பிடித்துக் காட்டுகின்றன.

மறைவான ஞானம் அவருக்கு இருக்கப் போய் தான் வணிகக் கூட்டம் எழுப்பும் அபயக் குரல் அவரது காதுக்கு எட்டுகின்றது. மறைவான ஞானம் மற்றும் எப்போது, எங்கிருந்து அழைத்தாலும் செவியுறும் தன்மை அல்லாஹ்வுக்கு உரிய தனி ஆற்றலாகும். இந்த ஆற்றலை முஹ்யித்தீனுக்கு இந்த மவ்லிதுகள் அப்படியே தூக்கிக் கொடுக்கின்றன.

முஹ்யித்தீன் உடனே செருப்பை அனுப்பி வணிகக் கூட்டத்தைப் பாதுகாக்கவும் செய்கின்றார். இவர் இரட்சகர் அல்லவா? (அல்லாஹ் நம்மைக் காப்பாற்றுவானாக) அதனால் முஹ்யித்தீன் தனது செருப்புக்களைப் பறக்க விட்டு அவர்களைப் பாதுகாக்கிறார். இது போன்ற பாதுகாத்தலும் அல்லாஹ்வின் தனிப் பெரும் ஆற்றலாகும். இந்த ஆற்றல்களை எல்லாம் முஹ்யித்தீனுக்குக் கொடுத்து அவரைக் கடவுளாக்கி அழகு பார்க்கின்றனர்; ஆராதிக்கின்றனர்.

இப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்க்கைக்கு வருவோம்.

நபி (ஸல்) அவர்கள் பனூ சுலைம் குலத்தவர் சிலருடன் எழுபது பேர்களை பனூ ஆமிர் குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்கள் அங்கு சென்ற போது என் தாய்மாமன் (தம்முடன் வந்த தோழர்களிடம்), "நான் உங்களுக்கு முன்னால் போகிறேன். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதரைக் குறித்து நான் எடுத்துரைக்கிறேன். இல்லையென்றால் நீங்கள் என் அருகிலேயே இருங்கள்'' என்று கூறி விட்டுச் சற்று முன்னால் சென்றார். அவர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தார்கள். அவரை எதுவும் செய்யவில்லை. நபி (ஸல்) அவர்களைப் பற்றி அவர் அவர்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டிருந்த போது தங்களில் ஒருவனைப் பார்த்து அவர்கள் சைகை செய்தார்கள். அவன் என் தாய்மாமனைக் குத்திக் கொன்று விட்டான். அவர், "அல்லாஹ் மிகப் பெரியவன். கஅபாவின் அதிபதியின் மீது சத்தியமாக! நான் வெற்றி பெற்று விட்டேன்'' என்று கூறினார். பிறகு அவரது எஞ்சிய தோழர்கள் மீது பாய்ந்து அவர்களையும் கொன்று விட்டார்கள். மலையின் மீதேறிக் கொண்ட கால் ஊனமுற்ற ஒரு மனிதரைத் தவிர! (ஹதீஸின் சுருக்கம்)

நூல்: புகாரி 2801, 3064

நபித்தோழர்களை, அதுவும் குர்ஆன் ஓதத் தெரிந்த நபித்தோழர்களை நபி (ஸல்) அவர்கள் தெரியாமல் தான் அனுப்பி வைக்கின்றனர். அவர்கள் கொல்லப் படுவார்கள் என்று தெரிந்திருந்தால் ஒரு போதும் அவர்களை அனுப்பி வைத்திருக்க மாட்டார்கள்.

இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மறைவான ஞானம் இல்லை என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும். இப்படி ஏராளமான எடுத்துக்காட்டுகளை நபியவர்களின் வாழ்க்கை வரலாற்றிலிருந்து நாம் அடுக்கிக் கொண்டே போகலாம்.
நஞ்சூட்டப்பட்ட ஆடு

யூதப் பெண்ணொருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து சிறிது உண்டார்கள். "அவளைக் கொன்று விடுவோமா?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் வேண்டாம் என்று கூறி விட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.

நூல்: புகாரி 2617

இவ்வாறு சாப்பிட்ட நபி (ஸல்) அவர்கள் மரணப் படுக்கையில் கிடக்கும் போது அந்த விஷத்தின் பாதிப்பு அவர்களுக்குப் பெரிய வேதனையைக் கொடுத்தது. "நான் கைபரில் சாப்பிட்ட உணவின் பாதிப்பை இதுவரை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். அது என்ற நரம்பை அறுத்துக் கொண்டிருக்கும் நேரமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் தமது மரணப் படுக்கையில் குறிப்பிட்டார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

நூல்: புகாரி 4428, அபூதாவூத் 3912

தனக்கு ஆபத்து விளைவித்த அந்த ஆட்டைச் சாப்பிடுவதற்கு முன்னால் நபி (ஸல்) அவர்களால் அதை அறிய முடியவில்லை.

அது போல் காரிகளான தமது 70 தோழர்களின் படுகொலை பற்றியும், எதிரிகளின் சதி மோசடி பற்றியும் நபி (ஸல்) அவர்களால் அறிய முடியவில்லை. அவர்கள் அறிந்திருந்தால் முஹ்யித்தீனைப் போன்று செருப்பை எறிந்து காப்பாற்றாவிட்டாலும் குறைந்த பட்சம் இறைவனிடம் உருக்கமாகப் பிரார்த்தனையாவது செய்திருப்பார்கள். இது தான் உண்மை நிலை!

இதற்கு மாற்றமாக, முஹ்யித்தீன் வணிகக் கூட்டத்திற்கு ஏற்பட்ட ஆபத்தை அறிந்ததாகக் கூறி அவருக்கு மறைவான ஞானம் இருப்பதாக மவ்லிதுக் கிதாபு வாதிடுகின்றது. அது மட்டுமின்றி ஆபத்தில் சிக்கிக் கொண்ட தமது தோழர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் கூட காப்பாற்ற முடியாத போது, இந்த முஹ்யித்தீன் செருப்பைத் தூக்கி வீசி காப்பாற்றி விட்டதாகக் கதை விடுகின்றது.

அதாவது இதன் மூலம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைக் கடவுளாகச் சித்தரிக்கின்றது. இது ஷியாக்களின் வேலை! அந்த வேலையை இந்த மவ்லிதுகள் செய்துள்ளன. இந்த மவ்லிதைத் தான் மவ்லவிகள் வீடு வீடாகச் சென்று ஓதுகின்றனர். (ஆனால் தங்கள் வீடுகளில் இவற்றை ஒரு போதும் ஓத மாட்டார்கள்.)

முஹ்யித்தீனைக் கடவுளாக்கும் மவ்லிதுகளை ஓதும் இவர்கள் யாராக இருக்க முடியும்? கண்டிப்பாக ஷியாக்கள் தான். இதில் வேடிக்கை என்னவென்றால் இவர்கள் தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்வதும், தாங்கள் செய்யும் காரியங்கள் அனைத்தும் நல்லறங்கள் என்று கருதுவதும் தான். இதை வல்ல அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்.

என்னை நினைப்பதை விட்டும் அவர்களின் கண்கள் திரைக்குள் இருந்தன. (உண்மையை) கேட்கவும் இயலாது இருந்தனர்.

என்னையன்றி எனது அடியார்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள (என்னை) மறுப்போர் நினைக்கிறார்களா? (நம்மை) மறுப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயாரித்துள்ளோம்.

"செயல்களில் நஷ்டம் அடைந்தோரைப் பற்றி நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?'' என்று கேட்பீராக!

இவ்வுலக வாழ்க்கையில் அவர்களின் முயற்சி வீணாகி விட்டது. அவர்களோ தாங்கள் அழகிய செயல் புரிவதாக நினைக்கின்றனர்.

அவர்களே தமது இறைவனின் சான்றுகளையும், அவனது சந்திப்பையும் மறுத்தவர்கள். அவர்களின் நல்லறங்கள் அழிந்து விட்டன. எனவே கியாமத் நாளில் அவர்(களின் செயல்)களுக்கு எந்த எடையையும் ஏற்படுத்த மாட்டோம்.

அவர்கள் (என்னை) மறுத்த தற்கும், எனது வசனங்களையும் தூதர்களையும் கேலியாக ஆக்கியதற்கும் இந்த நரகமே உரிய தண்டனை.

நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோருக்கு ஃபிர்தவ்ஸ் எனும் சொர்க்கச் சோலைகள் தங்குமிடங்களாக உள்ளன.

அதிலே நிரந்தரமாக இருப்பார்கள். அங்கிருந்து இடம் பெயர்வதை விரும்ப மாட்டார்கள்.

"எனது இறைவனின் கட்டளைகளுக்காக கடல், மையாக ஆனாலும் எனது இறைவனின் கட்டளைகள் (எழுதி) முடிவதற்கு முன் கடல் முடிந்து விடும். உதவிக்கு அது போன்றதை நாம் கொண்டு வந்தாலும் சரியே'' என்று கூறுவீராக!

"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 18:101-110

வளரும் இன்ஷா அல்லாஹ்
ஷியாக்கள் ஓர் ஆய்வு - 6
முஹம்மது நபிக்குத் தெரியாதது முஹய்யித்தீனுக்குத் தெரிகிறது?

அபூஉஸாமா

ஷியாக்கள் பற்றிய இந்த ஆய்வுத் தொடரில், ஷியாக்களின் கொள்கைகளை அப்படியே உரித்து வைத்திருக்கும் தமிழகத்தின் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்பவர்களைப் பற்றியும், அவர்கள் வேதமாக ஓதி வரும் மவ்லிது கிதாபுகள் எப்படியெல்லாம் இஸ்லாத்திற்கு முரணான வகையில் ஷியாக்களை ஒத்திருக்கின்றன என்பது பற்றியும் பார்த்து வருகிறோம்.

குறிப்பாக முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி அவர்களைக் கடவுள் நிலைக்குக் கொண்டு செல்லும் மவ்லிது வரிகளைக் கடந்த இதழ்களில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் இருக்கும் வரை காஃபிர்கள் என்ற ஒரு சாராரை மட்டும் தான் சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் மதீனா வந்ததும் யூதர்கள், கிறித்தவர்கள், மக்கத்துக் காஃபிர்கள் என்று அவர்களுக்குரிய எதிர்ப்புகள் மும்முனையானது.

இம்மூன்று அணியினரின் எதிர்ப்பும் வெளிப்படையானது. இவர்கள் அல்லாத இன்னொரு மறைமுக அணியும் இருந்தது. அந்த அணி தான் நபி (ஸல்) அவர்கள் எதிர்கொள்வதற்கு மிகவும் சிரமமான அணியாக இருந்தது. அதற்குக் காரணம் நான்காவது அணி என்று அவர்களை எதிரணியில் சேர்க்க முடியவில்லை; நம்பிக்கைக்குப் பாத்திர மான முஸ்லிம்களின் அணியிலும் அவர்களைச் சேர்க்க முடியவில்லை.

ஏன்? இவர்கள் முஸ்லிம்களிடம் வந்தால் தங்களை முஸ்லிம்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டார்கள். காஃபிர்களிடம் போய் தங்களைக் காஃபிர்கள் என்று அடையாளப் படுத்திக் கொண்டார்கள். இது தான் நபி (ஸல்) அவர்கள் சந்தித்த சாராரில் அபாயகரமான அணியினராய் இருந்தனர். இவர்களை எதிர் கொள்வதற்கு நபி (ஸல்) அவர்களுக்கு மிகவும் அவசியமாய் தேவைப்பட்ட ஒன்று, உள்ளத்தில் உள்ளதை அறியும் ஆற்றல்! அல்லாஹ் இந்த ஆற்றலை நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கவில்லை.

உங்களைச் சுற்றியுள்ள கிராம வாசிகளிலும், மதீனாவாசிகளிலும் நயவஞ்சகர்கள் உள்ளனர். அவர்கள் நயவஞ்சகத்தில் நிலைத்துள்ளனர். (முஹம்மதே!) அவர்களை நீர் அறிய மாட்டீர்! நாமே அவர்களை அறிவோம். அவர்களை இரண்டு தடவை தண்டிப்போம். பின்னர் அவர்கள் கடும் வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

அல்குர்ஆன் 9:101

இந்த ஒரு ஞானம் மட்டும் அவர்களுக்கு இருந்திருந்தால் அவர்கள் நயவஞ்சகர்களை இனங்கண்டு களையெடுத்திருப்பார்கள். அதற்குரிய வாய்ப்பை அல்லாஹ் அவர்களுக்கு அளிக்கவில்லை. ஆனால் சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக் கொள்வோர் வேதமாகக் கருதும் முஹய்யித்தீன் மவ்லிதோ, அப்துல் காதிர் ஜீலானிக்கு இந்த ஞானத்தைத் தாராளமாக வழங்கி, பரவசப்படுகின்றது.

முஹ்யித்தீன் மவ்லிதின் திமிர் பிடித்த திரு வாசகங்களைப் பாருங்கள்.

தெளிவான அல்லாஹ்வின் ஆணையின் உறுதிப்பாட்டுடன் நான் கூறுகின்றேன்: பேச வைக்கப்படுகிறேன்; (அதனால்) பேசுகிறேன். வழங்கப்படுகிறேன்; வினியோகிக்கிறேன். கட்டளையிடப்படுகிறேன்; (அதனால்) காரியம் ஆற்றுகிறேன். செலவு செய்ய வைக்கப்படுகிறேன்; (அதனால்) செலவு செய்கிறேன்.

காப்புறுதி என் மீது கட்டளையிடப்பட்டிருக்கின்றது. என்னை வெறுப்பவருக்கும் (என்னைத்) தொடர்தல் உள்ளது. என்னை உண்மைப்படுத்துவதே உங்கள் வியாபாரத்தில் சிறந்தது. நீங்கள் என்னைப் பொய்ப்பிப்பது இறுதி நாளின் விஷமாகும். உங்கள் அழிவிற்குக் காரணமாகும். உங்கள் மறு உலகில் வேதனையாகும்.

ஷரீஅத் என்ற கடிவாளம் இல்லையெனில் நீங்கள் வீட்டில் என்ன சாப்பிடுகிறீர்கள்? உங்கள் வீட்டில் நீங்கள் என்ன செய்கிறீர்கள்? என்பதையெல்லாம் நான் அறிவித்து விடுவேன். நீங்கள் எனது முன்னிலையில் பளிங்குக் கண்ணாடி போல் இருக்கிறீர்கள். அதனால் உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றை அப்படியே பார்க்கிறேன். உங்கள் அந்தரங்கத்தில் உள்ளவற்றை நான் அப்படியே காண்கிறேன்.

இவ்வாறு முஹ்யித்தீன் கூறியதாக அபுல் லதீப் அறிவிக்கின்றார்.

இது தான் முஹ்யித்தீன் மவ்லிதில் இடம் பெறும் வாசகம்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.

அல்குர்ஆன் 5:3

இந்த வசனம் வஹீ நின்று விட்டது என்பதற்கான அல்லாஹ்வின் பிரகடனம். ஆனால் முஹ்யித்தீன் தன்னிடம் அல்லாஹ் பேசுவதாக புருடா விடுகின்றார். (அவ்வாறு மவ்லித் கூறுகின்றது) இவரை நம்பவில்லை எனில் அது உலக அழிவிற்குரிய காரணமாம். மறுமையில் வேதனையாம். இவ்வாறு கதையளக்கின்றது இந்த மவ்லிது!

இது முஹம்மத் (ஸல்) அவர்களின் தூதுத்துவத்தில் முஹ்யித்தீனின் அத்துமீறிய பிரவேசமாகும். நாம் அடிக்கோடிட்டுக் காட்டியிருக்கும் அந்தச் செய்தி முஹ்யித்தீன், அல்லாஹ்வின் அதிகாரத்தில், ஆதிக்கத்தில் வரம்பு மீறி அடியெடுத்து வைப்பதாகும்.

வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அவன் அறிவான். நீங்கள் மறைப்பதையும், வெளிப் படுத்துவதையும் அவன் அறிவான். உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் அறிந்தவன்.

அல்குர்ஆன் 64:4

உள்ளத்தில் உள்ளதை அல்லாஹ்வே அறிவான் என்பதை இந்த வசனம் கூறுகின்றது. 5:7, 8:43, 11:5, 28:69, 31:23, 29:10, 35:38, 39:7, 40:19, 42:24, 57:6, 67:13 ஆகிய வசனங்களும் இதே கருத்தை எடுத்துரைக்கின்றன. இந்தப் பண்புகளைத் தான் முஹ்யித்தீன் தனக்கு இருப்பதாகக் கூறுகின்றார். அல்லது அவரது பெயரால் இந்த மவ்லிது பிதற்றுகின்றது.

உள்ளத்தில் உள்ளதை அறியும் ஆற்றல் ஒரு கடுகளவு கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்திருந்தால் எத்தனையோ எதிரிகளை, இஸ்லாத்தின் விரோதிகளை மிகவும் எளிதில் கண்டுபிடித்துக் கதையை முடித்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு இந்த ஆற்றல் அணுவளவும் கொடுக்கப்படவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருமை மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறப்பட்ட நிகழ்வு இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமாரிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள்.

இவ்வாறே அவர்கள் மேற்கொண்ட (பனூ முஸ்தலிக் என்ற) ஒரு புனிதப் போரின் போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் எனது ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து செல்லப்பட்டும், அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்பட்டும் வந்தேன்.

நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் அந்தப் போர் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கிய போது, இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள். அப்போது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கை கடனை நிறைவேற்று வதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (இயற்கைத்) தேவையை நான் முடித்துக் கொண்ட பின் முகாமை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தேன். (என் கழுத்திலிருந்த யமன் நாட்டு) ழஃபாரி நகர முத்து மாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது.

ஆகவே நான் திரும்பிச் சென்று எனது மாலையைத் தேடலானேன். அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் படையினருடன் சேர விடாமல்) என்னைத் தாமதப்படுத்தி விட்டது. என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைக்கும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு, அதைச் சுமந்து சென்று நான் சவாரி செய்து வந்த என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டி விட்டனர்.

அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெலிந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவையே அவர்கள் உண்பார்கள். ஆகவே சிவிகையைத் தூக்கிய போதும் அதைச் சுமந்த போதும் அது கனமில்லாமல் இருந்ததை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும் நான் வயது குறைந்த இளம் பெண்ணாக இருந்தேன்.

அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பி விட்டு நடக்கலானார்கள். படையினர் சென்ற பிறகு (தொலைந்து போன) எனது மாலை கிடைத்து விட்டது. நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். (அங்கிருந்த அனைவரும் சென்று விட்டிருந்தனர்.) அங்கு அவர்களில் அழைப்பவரோ, பதில் கொடுப்பவரோ எவரும் இருக்கவில்லை.

நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிப் போனேன். நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு படையினர் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் எனது இடத்தில் அமர்ந்திருக்க, என் கண்ணில் உறக்கம் மிகைத்து விட, நான் தூங்கி விட்டேன்.

படை புறப்பட்டுச் சென்றதற்குப் பின்னால் (படையினர் தவற விட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமீ அத் தக்வானீ என்பவர் அங்கு இருந்தார். நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அவர் காலையில் வந்தார். அவர் அங்கே தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னைக்) கண்டார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார். ஆகவே என்னைப் பார்த்ததும் அவர் அடையாளம் புரிந்து கொண்டார்.

அவர் என்னை அறிந்து கொண்டு, "இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் - நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள். மேலும் நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கின்றோம்'' என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். உடனே எனது முகத்திரையால் எனது முகத்தை மறைத்துக் கொண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் "இன்னாலில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்'' என்று கூறியதைத் தவிர வேறெதையும் நான் அவரிடமிருந்து கேட்கவுமில்லை.

பிறகு அவர் விரைவாக தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக் கொள்ள வசதியாக) அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் எழுந்து சென்று அதில் ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அப்போது அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி என் விஷயத்தில்) அழிந்தவர்கள் அழிந்து போனார்கள். என் மீது அவதூறு செய்வதில் பெரும் பங்கு எடுத்துக் கொண்டிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான்.

பிறகு நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அங்கு வந்து சேர்ந்து ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த அவதூறு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நான் நோயுறும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகின்ற பரிவை (இந்த முறை நான் நோய்வாய்ப் பட்டிருந்த போது) அவர்களிடம் காண முடியாமல் போனது எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டு வந்த அந்தத் தீய சொல்லில் ஒரு சிறிதும் நான் நோயிலிருந்து குணமடைந்து வெளியே செல்லும் வரை எனக்குத் தெரியாது. அப்போது நான் மிஸ்தஹின் தாயாருடன் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த மனாஸிஉ என்ற பகுதியை நோக்கிச் சென்றோம்.

நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னர் இவ்வாறு நாங்கள் புறநகர் பகுதிகளுக்குச் சென்று கொண்டிருந்தோம். எங்களுடைய இந்த வழக்கம் முந்தைய அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்கள் அமைப்பதை நாங்கள் தொந்தரவாகக் கருதி வந்தோம்.

நானும் உம்மு மிஸ்தஹும் சென்று கொண்டிருந்தோம். அவர் அபூ ருஹ்ம் பின் முத்தலிப் பின் அப்து மனாஃப் அவர்களின் மகளாவார். அபூபக்ர் (ரலி) அவர்களின் தாயின் சகோதரியான (ஸல்மா) பின்த் ஸக்ர் பின் ஆமிர் தான் உம்மு மிஸ்தஹின் தாயார் ஆவார். மிஸ்தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் முத்தலிப் என்பார் உம்மு மிஸ்தஹின் மகன் ஆவார்.

உம்மு மிஸ்தஹும், நானும் எங்கள் இயற்கைத் தேவைகளை முடித்துக் கொண்டு என் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்தஹ் தன் ஆடையில் இடறிக் கொண்டார். உடனே அவர், "மிஸ்தஹ் நாசமாகட்டும்'' என்று (தன் மகனைச் சபித்தவராகக்) கூறினார். நான், "மிக மோசமான சொல்லைச் சொல்லி விட்டீர். பத்ருப் போரில் கலந்து கொண்ட ஒரு மனிதரையா ஏசுகின்றீர்?'' என்று கூறினேன்.

அதற்கு அவர், "அம்மா! அவர் என்ன சொன்னார் என்று நீங்கள் கேள்விப்படவில்லையா?'' என்று கேட்டார். என்ன சொன்னார்? என்று நான் கேட்க, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன அந்தச் செய்தியை அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு, என் நோய் இன்னும் அதிகரித்து விட்டது.

நான் என் இல்லத்திற்குத் திரும்பி வந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து ஸலாம் கூறி விட்டு, "எப்படி இருக்கிறாய்?'' என்று கேட்டார்கள். அப்போது நான், "என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா?'' என்று கேட்டேன்.

உண்மையிலேயே அப்படி ஒரு செய்தி நிலவுகின்றதா? என்று விசாரித்து என் பெற்றோரிடம் உறுதி செய்து கொள்ள விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதி அளித்தார்கள்.

நான் என் தாய் வீட்டிற்குச் சென்று என் தாயாரிடம், "அம்மா! மக்கள் என்னைப் பற்றி என்ன பேசிக் கொள்கின்றார்கள்'' என்று கேட்டேன். என் தாயார், "அன்பு மகளே! உன் மீது சொல்லப்படும் இந்த விஷயத்தைப் பற்றி பெரிது படுத்திக் கொள்ளாதே! அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, தன் கணவரிடம் பிரியத்துக்குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணொருத்தியைக் குறித்து, அவளுடைய சக்களத்திகள் அதிகமாக வதந்திகள் பேசத் தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமல் இருப்பது மிகவும் குறைவேயாகும்'' என்று கூறினார்கள்.

நான், "சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூய்மையானவன்) இப்படியா மக்கள் பேசிக் கொள்கின்றார்கள்'' என்று (வியப்புடன்) கேட்டேன். அன்றிரவு காலை வரை அழுதேன். என் கண்ணீரும் நிற்கவில்லை. உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்த போதும் அழுதேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (என்னை) பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீதாலிப் அவர்களையும், உஸாமா பின் ஸைத் அவர்களையும் அழைத்தார்கள். அப்போது வஹீ (தற்காலிகமாக) நின்று போயிருந்தது. உஸாமா அவர்கள், நான் நிரபராதி எனத் தாம் அறிந்துள்ளதையும் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீது உள்ளத்தில் தான் கொண்டிருந்த பாசத்தையும் வைத்து ஆலோசனை சொன்னார்கள். "அல்லாஹ்வின் தூதரே! தங்களுடைய துணைவியரிடம் நல்ல குணத்தைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை'' என்று உஸாமா கூறினார்கள்.

அலீ அவர்களோ, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. ஆயிஷா அன்றி பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றார்கள். பணிப் பெண் பரீராவைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள்'' என்று கூறினார்கள்.

ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பரீராவை அழைத்து, "பரீராவே! நீ (ஆயிஷாவிடம்) உனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தும் செயல் எதையாவது பார்த்திருக்கின்றாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு பரீரா, "தங்களை சத்தியத்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர் குழைத்த மாவை அப்படியே போட்டு விட்டு உறங்கிப் போய் விடுவார். வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்று விடும். அத்தகைய கவனக் குறைவான இள வயதுப் பெண் என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக் கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை'' என்று பதில் கூறினார்.

அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறி நின்று அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலைத் தண்டிப்பதற்கு தமக்கு உதவும்படி தோழர்களிடம் கோரினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "முஸ்லிம்களே! என் வீட்டார் விஷயத்தில் வதந்தி கிளப்பி எனக்கு மன வேதனை அளித்த ஒரு மனிதனைத் தண்டித்திட எனக்கு உதவி புரிபவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் வீட்டாரிடம் நான் நல்லதையே அறிவேன். அவர்கள் ஒரு மனிதரை (என் மனைவியுடன் இணைத்து அவதூறு) கூறியுள்ளனர். ஆனால் அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன். என்னோடு தான் அவர் என் வீட்டாரிடம் வந்திருக்கின்றார். (தனியாக வந்ததில்லை)'' என்று கூறினார்கள்.

உடனே பனூ அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்த ஸஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, "அல்லாஹ்வின் தூதரே! அவனைத் தண்டிக்கத் தங்களுக்கு நான் உதவுகின்றேன். அவன் எங்கள் அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் அவனது கழுத்தைத் துண்டித்து விடுகின்றோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக அவன் இருந்தால் என்ன செய்ய வேண்டுமென்று தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். நாங்கள் தங்களது உத்தரவை நிறைவேற்றுகிறோம்'' என்று கூறினார்கள்.

உடனே, கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த ஒருவர் எழுந்தார். அவர் கஸ்ரஜ் குலத்தின் தலைவரான ஸஅத் பின் உபாதா ஆவார். ஹஸ்ஸான் பின் ஸாபித் அவர்களின் தாயார் இவரது குடும்பத்தில் ஒருவரும், இவருடைய தந்தையின் சகோதரரின் மகளும் ஆவார். இவர் அதற்கு முன் நல்ல மனிதராகத் தான் இருந்தார். ஆயினும் குலமாச்சரியம் அவரை உசுப்பி விடவே ஸஅத் பின் முஆத் அவர்களைப் பார்த்து, "அல்லாஹ்வின் மீதாணையாக! தவறாகச் சொல்லி விட்டீர். அவனை நீர் கொல்ல மாட்டீர். அது உம்மால் முடியாது. அவன் உமது குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் அவன் கொல்லப்படுவதை நீர் விரும்ப மாட்டீர்'' என்று கூறினார்.

உடனே, ஸஅத் பின் முஆத் அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து, ஸஅத் பின் உபாதா அவர்களிடம், "நீர் தாம் தவறாகப் பேசினீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். அதனால் தான் நயவஞ்சகர் சார்பாக வாதிடுகின்றீர்'' என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேடை மீது நின்று கொண்டிருக்க அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிடத் தயாராகி விட்டனர். நபி (ஸல்) அவர்கள் மேடையிலிருந்து இறங்கி, அவர்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு தாமும் மௌனமாகி விட்டார்கள்.

அன்றைய நாள் முழுவதும் நான் அழுது கொண்டிருந்தேன். என் கண்ணீரும் நிற்கவில்லை. என்னை உறக்கமும் தழுவவில்லை. காலையானதும் என் தாய், தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ, இரண்டு இரவுகள் ஒரு பகல் முழுக்க, என் ஈரல் பிளந்து விடுமோ என்று எண்ணும் அளவுக்கு அழுதிருந்தேன். என் கண்ணீரும் நிற்கவில்லை. என்னை உறக்கமும் தழுவவில்லை. என் தாய் தந்தையர் என் அருகேயிருக்க நான் அழுது கொண்டிருந்த போது அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து என்னிடம் உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதி அளித்தவுடன் என்னுடன் சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்து கொண்டாள்.

நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ஸலாம் கூறி அமர்ந்து கொண்டார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்ததில்லை. ஒரு மாத காலம் என் விஷயத்தில் அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப் படாமலேயே இருந்து வந்தார்கள்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதிமொழி கூறி இறைவனைப் புகழ்ந்து விட்டு, "நிற்க! ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு கோரி, அவன் பக்கம் திரும்பி விடு, ஏனெனில் அடியான் தனது பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்பு கோரினால் அல்லாஹ் அவனை மன்னிக்கிறான்'' என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்த போது எனது கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருப்பதாக நான் உணரவில்லை. நான் என் தந்தை அபூபக்ர் (ரலி) யிடம், "அல்லாஹ்வின் தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்'' என்று கூறினேன். அதற்கு என் தந்தை, "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரிடம் என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார்கள்.

நான் என் தாயார் (உம்மு ரூமான்) இடம், "அல்லாஹ்வின் தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள்'' என்று கூறினேன். அதற்கு என் தாயார், "அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரிடம் என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார்கள்.

அதற்கு நான், "நானோ வயது குறைந்த இளம் பெண் ஆவேன். குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவளும் ஆவேன். இந்நிலையில் அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கள் என்னைப் பற்றி பேசிக் கொண்ட இந்தச் செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனத்தில் பதிந்து போய் அதை உண்மையென்று நீங்கள் நம்பி விட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ஆகவே, நான் குற்றமற்றவள் என்று உங்களிடம் சொன்னால் நீங்கள் அதை நம்பப் போவதில்லை. நான் குற்றம் ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் - நான் குற்றமற்றவள் என்று அல்லாஹ்வுக்குத் தெரியும் - (நான் சொல்வதை உண்மையென்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் நபி யூசுஃப் (அலை) அவர்களின் தந்தை நபி யஃகூப் (அலை) அவர்களையே உவமையாகக் கருதுகின்றேன். (இதைச்) சகித்துக் கொள்வதே நல்லது. நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்பு கோர வேண்டும் (அல்குர்ஆன் 12:18)'' என்று கூறினேன்.

நான் அப்போது குற்றமற்றவள் என அல்லாஹ் அறிவான் (அந்த அல்லாஹ்) நான் குற்றமற்றவள் என நிச்சயம் அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் வேறு பக்கமாகத் திரும்பிப் படுத்துக் கொண்டேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! என் விஷயத்தில் (மக்களால்) ஓதப்படுகின்ற வஹீ - வேத வெளிப்பாட்டை (திருக்குர்ஆனில்) அல்லாஹ் அருளுவான் என்று நான் நினைத்தும் பார்த்திருக்கவில்லை. அல்லாஹ் என் தொடர்பாக ஏதேனும் பேசுகின்ற அளவுக்கு நான் உயர்ந்தவள் அல்ல என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, "என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் ஏதேனுமொரு கனவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது உறக்கத்தில் காண்பார்கள்' என்று தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை. வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை. அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது திருக்குர்ஆன் வசனங்கள் அருளப்படத் தொடங்கி விட்டன. உடனே (வஹீ வரும் நேரத்தில்) ஏற்படும் கடுமையான சிரம நிலை நபிகளாருக்கு ஏற்பட்டது. அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து சின்னஞ்சிறு முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. அவர்கள் மீது அருளப் பட்ட (இறைச்) சொற்களின் பாரத்தினால் தான் இந்தச் சிரம நிலை ஏற்பட்டது.

அந்த நிலை அல்லாஹ்வின் தூதரை விட்டு விலகியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே பேசிய முதல் வார்த்தையாக, "ஆயிஷா! அல்லாஹ் உன்னை குற்றமற்றவள் என அறிவித்து விட்டான்'' என்று கூறினார்கள்.

உடனே என் தாயார், "அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல்'' என்று என்னிடம் கூறினார்கள். அதற்கு நான், "மாட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து அவனுக்கே நன்றி செலுத்துவேன்'' என்று கூறினேன்.

அப்போது அல்லாஹ், "(ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தாம்'' என்று தொடங்கும் (அல்குர்ஆன் 24:11-20) பத்து வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவு படுத்தி அல்லாஹ் இதை அருளினான்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 2661

1. ஆயிஷா (ரலி) அவர்களின் கழுத்தணி காணாமல் போய் அதை அவர்கள் தேடிச் செல்கிறார்கள்

2. ஒட்டகத்தில் தம்முடன் ஆயிஷா (ரலி) பயணிக்கவில்லை என்ற விபரம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரியாமல் போனது.

3. ஆயிஷா (ரலி) மீது அவதூறு கிளம்பியதும் உண்மை நிலவரம் தெரியாமல் தமது மனைவியைப் பற்றி அலீ (ரலி) அவர்களிடமும், உஸாமா (ரலி) அவர்களிடமும் நபி (ஸல்) அவர்கள் ஆலோசனை செய்கிறார்கள். அதற்கு அலீ (ரலி), ஆயிஷா (ரலி) அவர்களை விவாகரத்துச் செய்து விடுமாறு கூறுகிறார்கள்.

4. நபி (ஸல்) அவர்கள் தமது மனைவி பற்றி பரீரா (ரலி)யிடம் ஆலோசனை செய்கிறார்கள்.

5. நபி (ஸல்) அவர்கள் பள்ளிக்கு வந்து மிம்பரில் நின்று இது தொடர்பாக விசாரித்த போது, அன்சாரிகளில் உள்ள அவ்ஸ், கஜ்ரஜ் என்ற இரு அணியினர் மோதிக் கொள்ளத் துவங்கினார்கள்.

5. இன்னின்ன தகவல் உன்னைப் பற்றி வந்துள்ளது என்று நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறி, பாவ மன்னிப்புத் தேடுமாறு கூறுகிறார்கள்.

6. ஆயிஷா (ரலி) அவர்களைத் தூய்மைப்படுத்தும் வசனம் இறங்கும் வரை நபி (ஸல்) அவர்களும், ஆயிஷா (ரலி) அவர்களும் பெரும் மனக் கஷ்டத்திற்கு உள்ளானார்கள்.

நபித்தோழர்கள் இரு அணியினராகப் பிரிந்து வெட்டிக் கொள்ள முனைகின்ற அளவுக்கு ஆயிஷா (ரலி) மீது அவதூறு கூறப்பட்ட விவகாரம் முற்றிப் போனது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உள்ளத்தில் உள்ளதை அறியும் ஆற்றல் ஒரு நொடிப் பொழுது இருந்திருக்குமானால் அவர்கள் இவ்வளவு பெரிய சோதனைக்கு உள்ளாகியிருக்க வேண்டியிருக்குமா? ஆனால் அவர்களுக்கு அந்த ஆற்றல் இல்லை. அதனால் தான் இந்த வேதனையை அனுபவித்தார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பிட்டுக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு எங்கோ உள்ள முஹ்யித்தீன், தனக்கு முன்னால் உள்ளவரின் உள்ளத்தை அப்படியே கண்ணாடியில் உள்ளதைப் போல் பார்க்கிறாராம். அதாவது, அல்லாஹ்வின் தூதருக்குத் தெரியாதது, முஹ்யித்தீனுக்குத் தெரியும் என்பது தான் இவர்களது நம்பிக்கை.

இதிலிருந்தே இவர்கள் ஷியாக்களை விடப் பன்மடங்கு வழி கெட்டவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்
ஷியாக்கள் ஓர் ஆய்வு -7
இறைத் தூதர்களை இழிவுபடுத்தும் ஷியாக்கள்

அபூஉஸாமா

அல்லாஹ்வின் பண்புகளில் விளையாடுவது யூதர்களுக்குக் கைவந்த கலை! அந்த வேலையை அவர்களது வாரிசுகளான ஷியாக்களும் செய்கிறார்கள்.

இதே விளையாட்டை சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயர் தாங்கிகளும் செய்கிறார்கள். அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இவர்களது மவ்லிதுக் கிதாபுகள் திகழ்கின்றன. மவ்லிதுகளில் முஹ்யித்தீனுக்கு மறைவான ஞானத்தைக் கொடுத்து, அவரைக் கடவுளாக்கி அழகு பார்க்கின்றனர் என்பதை வரிசையாகப் பார்த்தோம்.

இது யூத, ஷியா, சு.ஜ. அணியினர் இறைக் கொள்கையில் விளையாடும் விளையாட்டுக்கள் ஆகும். இந்த அணியினர் இறைத் தூதர் குறித்த கொள்கை விஷயங்களில் காட்டுகின்ற விளையாட்டைப் பார்ப்போம்.

அல்லாஹ்வின் வசனங்களை மறுப்பது, அல்லாஹ்வின் கட்டளைகளை நிலைநாட்டுகின்ற இறைத்தூதர்களை இழிவுபடுத்துவது, அவர்களைக் கொலை செய்வது போன்றவையெல்லாம் யூதர்களுக்கு சகஜமான ஒன்று! இதைத் திருக்குர்ஆன் மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.

"மூஸாவே! ஒரே (வகையான) உணவைச் சகித்துக் கொள்ளவே மாட்டோம். எனவே எங்களுக்காக உமது இறைவனிடம் பிரார்த்தனை செய்வீராக! பூமி விளைவிக்கின்ற கீரைகள், வெள்ளரிக்காய், பூண்டு, பருப்பு, வெங்காயம் ஆகியவற்றை அவன் எங்களுக்கு வெளிப் படுத்துவான்'' என்று நீங்கள் கூறிய போது, "சிறந்ததற்குப் பகரமாகத் தாழ்ந்ததை மாற்றிக் கேட்கிறீர்களா? ஏதோ ஒரு நகரத்தில் தங்கி விடுங்கள்! நீங்கள் கேட்டது உங்களுக்கு உண்டு'' என்று அவர் கூறினார். அவர்களுக்கு இழிவும், வறுமையும் விதிக்கப்பட்டன. அல்லாஹ்வின் கோபத்திற்கும் ஆளானார்கள். அல்லாஹ்வின் வசனங்களை மறுப்போராக அவர்கள் இருந்ததும், நியாயமின்றி நபிமார்களைக் கொன்றதும் இதற்குக் காரணம். மேலும் பாவம் செய்து, வரம்பு மீறிக் கொண்டே இருந்ததும் இதற்குக் காரணம்.

அல்குர்ஆன் 2:61

இறைத் தூதர்களை இழிவுபடுத்தும் யூதர்களின் இந்தச் செயல்பாட்டை, இவர்களது வாரிசுகளான ஷியாக்களும் செய்கின்றனர்.

யூசுப் தம்மார் வழியாக கலீனீ அறிவிப்பதாவது:

நாங்கள் அபூஅப்துல்லாஹ் உடன் ஓர் அறையில் ஷியா ஜமாஅத்தினர் சகிதமாக அமர்ந்திருந்தோம். அப்போது அவர், "ஓர் உளவாளி நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்'' என்று கூறினார். உடனே நாங்கள் வலப் பக்கமும், இடப் பக்கமும் திரும்பிப் பார்த்து விட்டு, "உளவாளி யாரும் இல்லையே!'' என்று சொன்னோம். அதற்கு அவர், "கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கட்டமைப்பின் நாயன் மீது ஆணையாக! நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில் இருந்திருந்தால் இவ்விருவரை விட நான் தான் அறிந்தவன் என தெரிவித்திருப்பேன். இவ்விருவருக்கும் தெரியாதவற்றை அவர்களிடம் தெரிவித்திருப்பேன். ஏனெனில் மூஸாவும், கிழ்ரும் நடந்து முடிந்தவை பற்றிய ஞானம் மட்டுமே அளிக்கப்பட்டிருந்தனர். அடுத்து நடப்பவை, கியாமத் நாள் வரை நடக்கவிருப்பவை பற்றிய ஞானம் அவ்விருவருக்கும் வழங்கப் படவில்லை'' என்று பதிலளித்தார்.

கலீனீ மீண்டும் அறிவிப்பதாவது:

"வானங்கள், பூமியில் உள்ள வற்றை நான் நன்கு அறிகிறேன். சுவனத்தில் உள்ளதையும், நரகத்தில் உள்ளதையும் நான் நன்கு அறிகிறேன். நடந்ததையும், நடக்கவிருப்பதையும் நான் நன்கு அறிகிறேன்'' என்று அப்துல்லாஹ் கூறினார்.

நூல்: அல்காஃபி ஃபில் உசூல்

பாகம்: 1, பாடம்: நடந்தவற்றை அறிகின்ற இமாம்கள்

"நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில் இருந்திருந்தால் இவ்விருவரை விட நான் தான் அறிந்தவன் என தெரிவித் திருப்பேன்'' என்று ஷியா இமாம் கூறுகின்றார். இதிலிருந்து ஷியாக்களின் திமிர்த்தனத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இவரது இந்த வார்த்தைகளின் வக்கிரத்தைத் தெரிந்து கொள்ள திருக்குர்ஆனிலும், ஹதீஸிலும் இடம் பெறும் மூஸா, கிழ்ர் ஆகியோர் தொடர்பான சம்பவத்தை முழுமையாக நாம் பார்ப்பது அவசியம்.

மூஸா, கிழ்ர் சம்பவம்

அவ்வூரார் அநீதி இழைத்த போது அவர்களை அழித்தோம். அவர்களை அழிப்பதற்கு ஒரு காலக்கெடுவையும் ஏற்படுத்தினோம்.

"இரண்டு கடல்கள் சந்திக்கும் இடத்தை அடையும் வரை சென்று கொண்டே இருப்பேன். அல்லது என் பயணத்தை நீண்ட காலம் தொடர்வேன்'' என்று மூஸா தமது ஊழியரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

இரண்டு கடல்கள் சங்கமம் ஆகும் இடத்தை அவ்விருவரும் அடைந்த போது தமது மீனை மறந்தனர். அது கடலைப் பிளந்து தனது பாதையை அமைத்துக் கொண்டது.

அவ்விருவரும் கடந்து சென்ற போது "காலை உணவைக் கொண்டு வாரும்! இந்தப் பயணத்தில் பெரும் சிரமத்தை அடைந்து விட்டோம்'' என்று தமது ஊழியரிடம் (மூஸா) கூறினார்.

"நாம் அப்பாறையில் ஒதுங்கிய போது கவனித்தீரா? நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது'' என்று (ஊழியர்) கூறினார்.

"அதுவே நாம் தேடிய இடம்'' என்று (மூஸா) கூறினார். இருவரும் பேசிக் கொண்டே வந்த வழியே திரும்பினார்கள்.

(அங்கே) நமது அடியார்களில் ஒருவரைக் கண்டனர். அவருக்கு நம் அருளை வழங்கினோம். நாமே கல்வியையும் கற்றுக் கொடுத்தோம்.

"உமக்குக் கற்றுத் தரப்பட்டவற்றில் நல்லதை நீர் எனக்குக் கற்றுத் தருவதற்காக நான் உம்மைப் பின் தொடரலாமா?'' என்று அவரிடம் மூஸா கேட்டார்.

"என்னிடம் பொறுமையாக இருக்க உமக்கு இயலாது; உமக்குத் தெரியாத விஷயத்தில் உம்மால் எவ்வாறு பொறுமையாக இருக்க இயலும்?'' என்று (அந்த அடியார்) கூறினார்.

"அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்! உமது எந்தக் கட்டளைக்கும் மாறு செய்ய மாட்டேன்'' என்று (மூஸா) கூறினார்.

"நீர் என்னைப் பின்பற்றினால் நானாக உமக்கு இது பற்றிய விளக்கத்தைக் கூறும் முன் என்னிடம் கேட்கக் கூடாது'' என்று (அந்த அடியார்) கூறினார்.

இருவரும் நடந்தனர். இருவரும் ஒரு கப்பலில் ஏறியவுடன் (அந்த அடியார்) அதில் ஓட்டை போட்டார். "இதில் உள்ளவர்களை மூழ்கடிப்பதற்காக நீர் ஓட்டை போடுகிறீரா? மிகப் பெரிய காரியத்தைச் செய்து விட்டீரே'' என்று (மூஸா) கூறினார்.

"என்னுடன் உம்மால் பொறுமையாக இருக்க முடியாது என நான் உமக்குக் கூறவில்லையா?'' என்று (அந்த அடியார்) கேட்டார்.

"நான் மறந்ததற்காக என்னைப் பிடித்து விடாதீர்! என் விஷயத்தில் சிரமத்தை ஏற்படுத்தி விடாதீர்!'' என்று (மூஸா) கூறினார்.

இருவரும் நடந்தனர். ஓர் இளைஞனைக் கண்ட போது (அந்த அடியார்) அவனைக் கொன்றார். "எந்த உயிரையும் கொல்லாத ஒரு தூய உயிரைக் கொன்று விட்டீரே! தகாத காரியத்தைச் செய்து விட்டீரே'' என்று (மூஸா) கூறினார்.

"நீர் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என உம்மிடம் நான் கூறவில்லையா?'' என்று (அந்த அடியார்) கேட்டார்.

"இதன் பிறகு எதைப் பற்றியேனும் நான் உம்மிடம் கேட்டால் என்னுடன் நீர் உறவு வைக்க வேண்டாம். என்னிடமிருந்து (போதுமான) சமாதானத்தைப் பெற்று விட்டீர்'' என்று (மூஸா) கூறினார்.

அவ்விருவரும் நடந்தனர். முடிவில் ஒரு கிராமத்தாரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டனர். அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டனர். அங்கே விழுவதற்குத் தயாரான நிலையில் ஒரு சுவரைக் கண்டனர். உடனே (அந்த அடியார்) அதை (தூக்கி) நிறுத்தினார். "நீர் நினைத்திருந்தால் இதற்குக் கூலியைப் பெற்று இருக்கலாமே'' என்று (மூஸா) கூறினார்.

"இதுவே எனக்கும் உமக்கும் இடையே பிரிவாகும். உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றுக்கான விளக்கத்தை உமக்குக் கூறுகிறேன்.

அந்தக் கப்பல் கடல் தொழில் செய்யும் சில ஏழைகளுக்குரியது. அவர்களுக்குப் பின்னே ஓர் அரசன் இருக்கிறான். அவன் (பழுதில்லாத) ஒவ்வொரு கப்பலையும் அபகரித்து எடுத்துக் கொள்வான். எனவே அதைப் பழுதாக்க நினைத்தேன்.

அந்த இளைஞனின் பெற்றோர் நம்பிக்கை கொண்டிருந்தனர். "அவன் அவ்விருவரையும் (இறை) மறுப்பிலும் வழி கேட்டிலும் தள்ளி விடுவான்'' என்று அஞ்சினோம்.

"அவ்விருவரின் இறைவன் அவனுக்குப் பதிலாக அவனை விடச் சிறந்த தூய்மையான நெருங்கி உறவாடக் கூடியவனைப் பகரமாகக் கொடுப்பான்'' என நினைத்தோம்.

அந்தச் சுவர் அந்நகரத்தில் உள்ள இரண்டு அனாதைச் சிறுவர்களுக்கு உரியது. அதன் கீழே அவ்விருவருக்கும் உரிய புதையல் இருந்தது. அவ்விருவரின் தந்தை நல்லவராக இருந்தார். "எனவே அவ்விருவரும் பருவமடைந்து அவர்களுக்குரிய புதையலை எடுத்துக் கொள்ள வேண்டும்'' என்று உமது இறைவன் நாடினான். இது உனது இறைவனின் அருள். இதை நான் என் இஷ்டப்படி செய்யவில்லை. உம்மால் பொறுமையாக இருக்க முடியாதவற்றுக்கான விளக்கம் இதுவே!'' (என்றார்)

அல்குர்ஆன் 18:59-82

இந்த வசனங்கள் மூஸா (அலை), கிழ்ர் தொடர்பான சம்பவத்தைப் பற்றிக் கூறுகின்றன. புகாரியில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸ் இந்த வசனங்களுக்கு விளக்கமாக அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்கள் கூறியதாக எங்களுக்கு உபை பின் கஅப் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) அறிவித்தார்கள்:

(ஒரு முறை) நபி மூசா (அலை) அவர்கள் பனூ இஸ்ராயீல் மக்களிடையே (உரையாற்றியபடி) நின்று கொண்டிருந்த போது அவர்களிடம், "மக்களிலேயே மிகவும் அறிந்தவர் யார்?'' என்று வினவப்பட்டது. அதற்கு மூசா (அலை) அவர்கள் "நானே மிகவும் அறிந்தவன்'' என்று பதிலளித்து விட்டார்கள். ஆகவே, அவர்களை அல்லாஹ் கண்டித்தான். ஏனெனில், மூசா (அலை) அவர்கள் "(இதைப் பற்றிய) அறிவு அல்லாஹ்வுக்கே உண்டு'' என்று சொல்லாமல் விட்டு விட்டார்கள்.

எனவே அல்லாஹ் "இரு கடல்கள் சங்கமிக்கும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் உம்மை விட அதிகமாக அறிந்தவர்'' என்று அறிவித்தான். மூசா (அலை) அவர்கள் "என் இறைவா! அவரை நான் சந்திக்க என்ன வழி?'' என்று கேட்டார்கள். அதற்கு, "கூடை ஒன்றில் ஒரு மீனை எடுத்துக் கொண்டு செல்லுங்கள்! நீங்கள் அம்மீனை எங்கே தொலைத்து விடுகிறீர்களோ அங்கே தான் அவர் இருப்பார்'' என்று அவர்களிடம் கூறப்பட்டது.

அவ்வாறே மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளர் யூஷஉ பின் நூன் என்பாரையும் அழைத்துக் கொண்டு ஒரு கூடையில் மீனைத் தூக்கிக் கொண்டு நடந்தார்கள். இருவரும் ஒரு பாறைக்கருகில் வந்து சேர்ந்த போது அங்கு இருவரும் தலை வைத்து உறங்கினர். கூடையிலிருந்த மீன் மெல்ல நழுவி கடலில் (சுரங்கம் போன்று) பாதை அமைத்துவிட்(டுச் சென்று விட்)டது. மூசா (அலை) அவர்களுக்கும், அன்னாருடைய உதவியாளருக்கும் (அந்தப் பாதை) வியப்பாய் அமைந்தது. இந்நிலையில் அன்றைய மீதிப் பொழுதிலும், இரவிலும் அவர்கள் (தொடர்ந்து) நடந்தனர்.

மறுநாள் பொழுது விடிந்த போது மூசா (அலை) அவர்கள் தம் உதவியாளரிடம் "நமது காலைச் சிற்றுண்டியை கொண்டு வாரும்! நாம் இந்தப் பயணத்தில் மிகவும் களைப்படைந்து விட்டோம்'' என்றார்கள். தமக்குக் கட்டளையிடப் பட்டிருந்த இடத்தைக் கடக்கும் வரை மூசா (அலை) அவர்கள் எந்தக் களைப்பையும் உணரவில்லை. அவர்களுடைய உதவியாளர் "நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தோமே! பார்த்தீர்களா? அங்கே தான் நான் அந்த மீனை மறந்து (தவறவிட்டு) விட்டேன். அதனை நான் (உங்களிடம்) கூறுவதை ஷைத்தான் தான் எனக்கு மறக்கடித்து விட்டான். (அவ்விடத்தில் அது, கடலில் செல்ல) விந்தையான விதத்தில் தனது பாதையை அமைத்துக் கொண்டது'' என்றார். மூசா (அலை) அவர்கள், "நாம் தேடி வந்த இடம் அது தான்'' என்று கூறினார்கள்.

பிறகு இருவரும் தமது காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்த வழியே) திரும்பிச் சென்றனர். இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறைக்கு வந்த போது அங்கே, முழுவதுமாக ஓர் துணியால், அல்லது தமது ஆடையால் தம்மைப் போர்த்தியபடி ஒரு மனிதர் (கிழ்ர்) இருந்தார். மூசா (அலை) அவர்கள் அவருக்கு சலாம் (முகமன்) சொல்ல, அம்மனிதர், "உங்களுடைய (இந்த) வட்டாரத்தில் (அறியப்படாத) சலாம் (உங்களுக்கு மட்டும்) எவ்வாறு (தெரியும்?)'' என்று கேட்டார். அதற்கு மூசா (அலை) அவர்கள், "நான் தான் மூசா'' என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், "இஸ்ரவேலர்களின் (இறைத்தூதரான) மூசாவா?'' என்று கேட்டார்.

மூசா (அலை) அவர்கள், "ஆம்' என்று பதிலளித்துவிட்டு, "உங்களுக்கு (இறைவனால்) கற்றுத் தரப்பட்டுள்ள அறிவிலிருந்து எனக்கும் (சிறிது) நீங்கள் கற்றுத் தருவதற்காக உங்களைப் பின் தொடர்ந்து வரட்டுமா?'' என்று கேட்டார்கள்.

அதற்கு கிழ்ர் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம், "நிச்சயமாக உங்களால் என்னுடன் பொறுமையுடன் இருக்க முடியாது. மூசாவே! அல்லாஹ் எனக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு என்னிடம் உள்ளது. அதை நீங்கள் அறிய மாட்டீர்கள். அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தந்த ஓர் அறிவு உங்களிடம் உள்ளது. அதை நான் அறிய மாட்டேன்'' என்று கூறினார்கள்.

அதற்கு மூசா (அலை) அவர்கள், "அல்லாஹ் நாடினால் என்னை நீங்கள் பொறுமை யாளனாகக் காண்பீர்கள். எந்த விஷயத்திலும் உங்களுக்கு நான் மாறு செய்ய மாட்டேன்'' என்றார்கள்.

இருவரும் மரக்கலம் ஏதும் தங்களிடம் இல்லாததால் கடற்கரை ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த போது ஒரு மரக்கலம் அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள், தங்கள் இருவரையும் (மரக்கலத்தில்) ஏற்றிச் செல்லுமாறு மரக்கலக்காரர்களிடம் கோரினர். (மரக்கல உரிமையாளர் களால்) கிழ்ர் (அலை) அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளப் பட்டார்கள். எனவே, அவர்கள் இருவரையும் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிக் கொண்டனர்.

அப்போது ஒரு சிட்டுக் குருவி வந்து மரக்கலத்தின் விளிம்பின் மீது விழுந்து, (தனது சின்னஞ் சிறு அலகால்) கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது மூசா (அலை) அவர்களிடம் கிழ்ர் (அலை) அவர்கள் "மூசாவே! உம்முடைய அறிவும், என்னுடைய அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து இந்தச் சிட்டுக்குருவி கொத்தியெடுத்த (நீரின்) அளவில் தான் உள்ளது'' என்று கூறினார்கள்.

(சற்று நேரம் கழிந்ததும்) கிழ்ர் (அலை) அவர்கள் அந்த மரக்கலத்தின் (அடித்தளப்) பலகைகளில் ஒன்றை வேண்டுமென்றே கழற்றி (அந்த இடத்தில் முளைக் குச்சியை அறைந்து) விட்டார்கள். (இதைக் கண்ட) மூசா (அலை) அவர்கள் "நம்மைக் கட்டணம் ஏதுமில்லாமல் ஏற்றிக் கொண்ட மக்களின் மரக்கலத்தை வேண்டுமென்றே பின்னப்படுத்தி விட்டீர்களே!'' என்று கேட்டார்கள். அதற்கு கிழ்ர் (அலை) அவர்கள், "என்னுடன் உங்களால் பொறுமையுடன் இருக்க முடியாது என்று நான் (முன்பே) சொல்ல வில்லையா?'' என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், "நான் மறந்து போனதற்காக என்னைத் தண்டித்து விடாதீர்கள்'' என்று கூறினார்கள்.

(அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:) முதல் தடவை மூசா (அலை) அவர்கள் பொறுமையிழந்தது மறதியினாலாகும்.

(பிறகு இருவரும் மரக்கலத்தில் இருந்து வெளியேறி கடலோரமாக) நடந்து போய்க் கொண்டிருக்கும் போது ஒரு இளைஞன் சில இளைஞர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிழ்ர் (அலை) அவர்கள் அவனது உச்சந் தலையைத் திருகி தலையைத் தனியே எடுத்து விட்டார்கள். உடனே மூசா (அலை) அவர்கள் "ஒரு பாவமும் செய்யாத உயிரையா நீங்கள் பறித்து விட்டீர்கள்? அவன் வேறெந்த உயிரையும் பறிக்கவில்லையே!'' என்று கேட்டார்கள். அதற்கு கிழ்ர் (அலை) அவர்கள், "நீங்கள் என்னுடன் பொறுமையாக இருக்க முடியாது என்று (முன்பே) நான் உங்களிடம் சொல்லவில்லையா?'' என்று கேட்டார்கள். மீண்டும் இருவரும் (சமாதானமாகி) நடந்தார்கள்.

இறுதியில் ஓர் ஊருக்கு வந்தார்கள். அவ்வூர் மக்களிடம் உண்ண உணவு கேட்டார்கள். ஆனால், அவ்வூரார் அவ்விருவரையும் உபசரிக்க மறுத்து விட்டனர். இந்நிலையில் அவ்வூரில் சாய்ந்தபடி கீழே விழயிருந்த சுவர் ஒன்றை அவர்கள் இருவரும் கண்டார்கள். (அதைக் கண்ட) கிழ்ர் (அலை) அவர்கள் அச்சுவரைத் தமது கரத்தால் செப்பனிட்டார்கள். மூசா (அலை) அவர்கள், "நீங்கள் நினைத்தால் இதற்குக் கூலி பெற்றுக் கொண்டிருக்கலாமே!'' என்றார்கள். கிழ்ர் (அலை) அவர்கள், "இது தான் நானும் நீங்களும் பிரிய வேண்டிய கட்டம்'' என்று கூறினார்கள்.

(இந்த நிகழ்ச்சியைக் கூறி முடித்த பின்) நபி (ஸல்) அவர்கள், "மூசா பொறுமையாக இருந்திருப்பார் என்றால் அவ்விருவர் பற்றிய (நிறைய) விஷயங்களை (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து) நமக்கு எடுத்துரைக்கப்பட்டிருக்குமே! என நாம் விரும்பினோம்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 122

இந்தச் சம்பவத்தில் "மூசாவே! உம்முடைய அறிவும், என்னுடைய அறிவும் அல்லாஹ்வின் அறிவிலிருந்து இந்தச் சிட்டுக்குருவி கொத்தியெடுத்த (நீரின்) அளவில் தான் உள்ளது'' என்ற கிழ்ரின் உதாரணம் இங்கு மிகவும் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டிய விஷயம்!

அல்லாஹ் தான் மிகவும் தெரிந்தவன்; அறிந்தவன் என்று கூறுவதற்குப் பதிலாக, "நானே மிக அறிந்தவன்' என்று மூஸா (அலை) கூறி விட்டார்கள். உண்மையில் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தில் அன்றைய தினம் மூஸாவைத் தவிர்த்து அறிவில் சிறந்தவர் வேறு யாருமில்லை தான். அதனால் யதார்த்தமாக, தன்னை அறிந்தவர் என்று குறிப்பிட்டது சரியானது தான். என்றாலும் இதில் ஆணவம் தொனிக்கின்றது. இது அல்லாஹ்வுக்குப் பிடிக்கவில்லை.

அதனால் அவர்களை கிழ்ரைச் சந்திக்கச் செய்கின்றான். அவ்வாறு சந்திக்கச் செல்கின்ற போது வழியில் அவர்களுக்கு மறதி ஏற்படுகின்றது. இந்த மறதியை அல்லாஹ்வே அவர்களுக்குக் கொடுத்து, இவ்வாறு மறதி உடையவர் எவ்வாறு மிகவும் அறிந்தவராக முடியும்? என்பதை உணர்த்துகின்றான். இதற்குப் பின்னால், மூஸா (அலை) அவர்கள் தாம் குறிப்பிட்ட அந்த வார்த்தைக்காக மிகக் கடுமையான முறையில், திரும்பத் திரும்ப கிழ்ர் அவர்களால் கண்டிக்கப்படுகிறார்கள்.

தாங்கள் இருவரும் கற்ற கல்வி, இந்தச் சிட்டுக் குருவி தனது அலகினால் கடலில் அள்ளிய தண்ணீரின் அளவு தான் என்பதை மூஸாவிடம் கிழ்ர் அவர்கள் அடக்கத்துடன் தெரிவிக்கின்றார்கள்.

ஆணவத்தை, அகந்தையை அடித்து நொறுக்குகின்ற இந்தச் சம்பவத்திலிருந்து அடக்கத்தை, பணிவைப் பெறுவதற்குப் பதிலாக ஷியாக்கள் மேலும் ஆணவத்தைப் பெறுகிறார்கள். இதிலிருந்து தங்களின் மூலம் யூதயிஸம் தான் என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றனர்.
கழுதைக்குத் தெரியாது கற்பூர வாசனை

தவ்ராத் சுமத்தப்பட்டு பின்னர் அதைச் சுமக்காமல் (அதன் படி நடக்காமல்) இருந்தார்களே அவர்களது உதாரணம் ஏடுகளைச் சுமக்கும் கழுதையைப் போன்றது. அல்லாஹ்வின் வசனங்களைப் பொய்யெனக் கருதுவோருக்குரிய உதாரணம் மிகவும் கெட்டது. அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்டமாட்டான்.

அல்குர்ஆன் 62:5

இந்த வசனப்படி யூதர்கள் பொதி சுமக்கும் கழுதைகள்! தான் சுமக்கும் சுவடிகளிலிருந்து அவை எதையும் அறிவதில்லை. இது யூதர்களின் நிலை! ஷியாக்களும் அதே நிலையைத் தான் பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கும் குர்ஆனின் இந்தப் போதனைகள் புரியவில்லை.

அதனால் தான் படிப்பினையும், பாடமும் பெற வேண்டிய இந்தச் சம்பவத்தின் மூலம் அதற்கு நேர் மாற்றமான ஒரு விஷக் கருத்தை அள்ளி வைக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் பண்புகளிலேயே விஷச் சிந்தனையைக் கலக்கும் இவர்கள், அவனது தூதரின் விஷயங்களில் விஷத்தைக் கலக்காமல் இருப்பார்களா?

இதைப் போன்ற கருத்து ஷாதுலிய்யா ராத்திபு கிதாபுகளிலும் உள்ளது. அதை இனி பார்ப்போம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்
ஷியாக்கள் ஓர் ஆய்வு -8
ஷியாக்களை மிஞ்சும் ஷாதுலிய்யாக்கள்

அபூஉஸாமா

அல்லாஹ்வை மனிதர்களின் நிலைக்கு இறக்குவது அல்லது மனிதர்களை அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்துவது யூதர்களின் கெட்ட குணங்களாகும்.

"உஸைர் அல்லாஹ்வின் மகன்'' என்று யூதர்கள் கூறுகின்றனர். "மஸீஹ் அல்லாஹ்வின் மகன்'' என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

அவர்கள் அல்லாஹ்வையன்றி தமது மத போதகர்களையும், பாதிரிகளையும், மர்யமின் மகன் மஸீஹையும் கடவுள்களாக்கினர். ஒரே கடவுளை வணங்குமாறு தான் அவர்கள் கட்டளையிடப்பட்டனர். அவனைத் தவிர வணக்கத் திற்குரியவன் வேறு யாருமில்லை. அவர்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் அவன் தூயவன்.

அல்குர்ஆன் 9:30, 31

அல்லாஹ்வுக்குப் பிள்ளை இருப்பதாகக் கூறுவது, அவனை சராசரி மனித நிலைக்கு இறக்குவதாகும். உஸைரையும், ஈஸாவையும் அல்லாஹ்வின் பிள்ளைகள் என்று கூறுவது அவ்விருவரையும் அல்லாஹ்வின் நிலைக்கு உயர்த்துவதாகும். இந்நிலைகளை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.

இதை யூத, கிறித்தவர்கள் அன்றிலிருந்து இன்று வரை செய்து கொண்டிருக்கின்றனர். அதே காரியத்தை யூதத்தின் செல்லப் பிள்ளைகளான ஷியாக்களும் செய்து வருகின்றனர்.

எப்போதும், எல்லாவற்றையும் அறியும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் சொந்தம். இதை யூதர்கள் உஸைருக்கும், கிறித்தவர்கள் ஈஸாவுக்கும் தூக்கிக் கொடுக்கின்றனர். அதனால் தான் இவ்விருவரையும் கடவுளாக்கினர். அதே பண்புகளை ஷியாக்களும் தங்களுடைய இமாம்களுக்குக் கொடுப்பதன் மூலம், யூதர்களின் பணியை ஷியாக்களும் கச்சிதமாகச் செய்கின்றனர். காரணம் ஷியாயிஸம் என்பது யூதத்தின் செல்லப் பிள்ளை!
ஷாதுலிய்யா சங்கம்

ஷியாக்களின் அந்தப் பணியை சுன்னத் வல் ஜமாஅத் எனும் ஷியா வாரிசுகள் அப்படியே அரங்கேற்றுகின்றனர். இவ்வாறு ஷியாக்களின் அலுவல்களை அன்றாடம் நிறைவேற்றிக் கொண்டு, தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொள்வது தான் வேடிக்கையாகும்.

ஷியாக்களின் செயல்களை அரங்கேற்றும் இவர்கள், தங்களுக்குள் பல சங்கங்களை வைத்துக் கொண்டு, "இந்த அரங்கேற்றப் பணியில் எங்களை மிஞ்சியவர் வேறு யாருமில்லை; விமோசனத்திற்கும், விடுதலைக்கும் ஒரே வழி எங்கள் சங்கம் தான்' என்று ஒவ்வொருவரும் மார்தட்டிக் கொள்வார்கள். அந்த சங்கங்களின் பெயர் தான் தரீக்கா என்பதாகும்.

முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானியைக் கடவுளாகவும், கதாநாயகராகவும் கொண்டு செயல்படும் சங்கத்திற்கு காதிரிய்யா என்று பெயர். காஜா முஹ்யித்தீனைக் கடவுளாகக் கொண்டு செயல்படும் சங்கத்தின் பெயர் ஜிஷ்திய்யா. இது போன்று அபுல் ஹஸன் ஷாதுலியைக் கடவுளாகவும் கதாநாயகராகவும் கொண்டு செயல்படும் சங்கத்தின் பெயர் ஷாதுலிய்யா.

அல்லாஹ்வின் பண்புகளை இந்தக் கடவுளர்களுக்கு, கதாநாயகர்களுக்குத் தூக்கிக் கொடுப்பதில் இவர்களுக்குப் பேரானந்தம், பெருமகிழ்ச்சி!

அல்லாஹ்வின் பண்புகளை இவ்வளவு தாராளமாக தங்கள் கதாநாயகர்களுக்கு, தெய்வீகக் காதலர்களுக்கு அள்ளிக் கொடுப்பதில் காதிரிய்யா தான் முன்னிலையில் நிற்கிறது என்று இந்தத் தொடரைப் படிப்பவர்கள் கருதலாம். ஏனெனில் இதுவரை முஹ்யித்தீன் மவ்லிதுகளில் உள்ள சங்கதிகளை மட்டுமே பார்த்து வந்துள்ளோம்.

ஆனால் காதிரிய்யாவை மிஞ்சும் வகையில் ஷாதுலிய்யா தரீக்கா அமைந்துள்ளது என்பதை இதைப் படிப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். அந்த அளவுக்கு ஷாதுலிய்யா சங்கம் - தரீக்கா தங்கள் தலைவர்களைக் கடவுளாக்கி மகிழ்கிறார்கள்.

அசல் ஷியாக்களை இந்த ஷாதுலிய்யாக்கள் அசத்தலாகவே பிரதிபலிக்கிறார்கள். இவர்களின் ஷியாயிஸத்தை நாம் நன்கு தெளிவாக அடையாளம் காட்டக் கடமைப்பட்டிருக்கிறோம்.

மற்ற எல்லா தரீக்காக்களை, சங்கங்களை விடவும் இந்த ஷாதுலிய்யா சங்கம் மிகவும் ஆபத்தானது. காரணம், மற்ற தரீக்காக்கள் எல்லாம் ஷரீஅத்தை விட்டு சற்று தாண்டி விட்டது போன்றும், தங்களது தரீக்கா மட்டுமே முழுமையாக ஷரீஅத்தை ஒட்டி அமைந்தது போன்றும் ஒரு தோற்றத்தை இவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதனால் இவர்களது முகத்திரையை முழுமையாகக் கிழித்தாக வேண்டும்.

சுன்னத் வல் ஜமாஅத் என்று ஒரு முதல் போர்வை - அதற்குள் ஷாதுலிய்யா என்று மற்றொரு போர்வை - அதற்கும் உள்ளே ஒளிந்து கிடப்பது பக்கா ஷியா என்பதை உலகுக்குப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.

காதிரிய்யாவை விட இந்தத் தரீக்கா கேடு கெட்டது என்பதற்கு ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

"எனது பாதங்கள், எல்லா அவ்லியாக்களின் பிடரி மீதும் இருக்கின்றன'' என்று தங்கள் எஜமானாகிய அல்லாஹ்விடம் அனுமதி பெற்றுத் தாங்கள் கூறினீர்கள். அவ்வாறு தங்கள் பாதத்தை அனைவரும் மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்டனர். எல்லா அவ்லியாக்களை விடவும் உயர்ந்து விட்ட முஹய்யித்தீனே!

இவ்வாறு யாகுத்பா என்ற மவ்லிதில் இடம் பெற்றுள்ளது.

அதாவது, எல்லா அவ்லியாக்களின் பிடரி மீதும் தனது பாதங்கள் இருப்பதாக முஹ்யித்தீன் கூறினார் என்று இந்தக் கதை கூறுகிறது.

அவராவது எனது கால்கள் பிடரிகளில் இருக்கின்றன என்று தான் சொல்கிறார். ஆணவம் பிடித்த இந்த ஷாதுலிய்யா சொல்வதைக் கேளுங்கள்.

"என்னுடைய பாதம் அல்லாஹ்வுடைய ஒவ்வொரு வலீயின் நெற்றியிலும் இருக்கிறது'' என்று அபுல் ஹஸன் ஷாதுலி கூறுகிறார். இது தொடர்பாக சந்தேகமில்லாத உத்தரவுப்படியே இவ்வாறு கூறுகிறார்.

ஆதாரம்: ஷாதுலிய்யா தரீக்காவின் அவ்ராது, பைத் மற்றும் மவ்லிது தொகுப்புகள், பக்கம்: 122

கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 10:62, 63

ஈமான் கொண்டு, இறைவனை அஞ்சுகின்ற அனைவருமே அல்லாஹ்வின் நேசர்கள் - அவ்லியாக்கள் ஆவர். அந்த அடிப்படையில் ஈமான் கொண்டு, இறைவனை அஞ்சும் அத்தனை முஃமின்களின் நெற்றியிலும் இவருடைய பாதங்கள் இருக்கின்றன என்று ஷாதுலிய்யா சங்கம் கூறுகிறது.

தங்களை உயர் பிறவியினராகக் கருதுபவர்கள் யூதர்கள். தங்களை உயர் பிறவியினராகக் கருதுபவர்கள் ஷியாக்கள். அந்த வேலையை அபுல் ஹஸன் ஷாதுலி அழகாகவே செய்கிறார்.

இப்படி ஒரு வழிகேட்டில் உள்ள இந்தக் கூட்டம் தான், இந்தத் தரம் கெட்ட தரீக்காவினர் தான் தங்களை மற்ற தரீக்காக்களை விட உயர்ந்ததாக, ஷரீஅத்துடன் ஒன்றியதாக நிலை நிறுத்தப் பார்க்கிறார்கள். எனவே இவர்களையும் நாம் முழுமையாக அடையாளம் காட்ட வேண்டியது அவசியமாகும்.

இந்தப் பின்னணியைக் கொண்ட இவர்கள், ஷியாக்களைப் பின்பற்றி, தங்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாகக் கூறுகிறார்கள். அதை இப்போது அலசுவோம்.

மறைவான ஞானம் தங்களுக்கு இருப்பதாக ஷியா இமாம்கள் கூறுவதை இங்கு மீண்டும் ஒருமுறை நினைவு கூர்கிறோம்.

தனக்கு ஷியாக்களின் 8வது இமாம் அலீ பின் மூஸா எழுதினார் என அப்துல்லாஹ் பின் ஜுன்துப் அறிவிப்பதாவது:

நாம் அல்லாஹ்வின் பூமியில் அவனது நம்பிக்கை நட்சத்திரங்கள். (மக்களுக்கு வரும்) சோதனைகள், மரணங்கள் பற்றிய ஞானங்கள் நம்மிடம் இருக்கின்றன. அரபியர்கள் தலைமுறை இஸ்லாத்தில் உருவாக்கம் பற்றிய ஞானமும் நம்மிடம் இருக்கிறது.

ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரது உள்ளத்தில் குடியிருப்பது இறை நம்பிக்கையின் தன்மையா? அல்லது நயவஞ்சகத் தன்மையா? என்று நாம் அறிந்து கொள்வோம். நம்முடைய ஷியாக்களின் பெயர்களும் அவர்களது தந்தைமார்களின் பெயர்களும் பதியப்பட்டவர்களாவர். அல்லாஹ் நம்மிடமும் அவர்களிடமும் வாக்குறுதி எடுத்திருக்கிறான்.

அல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம்: 223

இது ஷியாக்களின் திமிர் பிடித்த வாசகங்களாகும். இப்போது அவர்களின் வாரிசுகளான ஷாதுலிய்யாக்களின் சொல்லைப் பாருங்கள்.

"பார்வைக்கு எட்டிய தொலைவு வரையில் உள்ள ஓர் ஏடு எனக்கு வழங்கப் பட்டிருக்கிறது. அதில் இறுதி நாள் வரை உள்ள என்னுடைய தோழர்கள், தோழர்களுடைய தோழர்கள் ஆகியோரின் பெயர்கள் பதியப்பட்டிருக்கின்றன. கொழுந்து விட்டெரியும் நரகத்திலிருந்து விடுதலையை நான் வேண்டுகிறேன். ஷரீஅத் என்ற கடிவாளம் மட்டும் என் நாவின் மீது இல்லையெனில் எவ்விதத் தாமதமும் இன்றி இறுதி நாள் வரை நிகழவிருப்பவற்றை, நிகழ்வுகளை, சம்பவங்களை உங்களுக்கு நான் அறிவித்து விடுவேன்'' என்று அபுல் ஹஸன் ஷாதுலி தெரிவிக்கின்றார்.

ஷியாக்களின் அதே ஆணவம் அப்படியே இங்கு ஷாதுலியாரின் வார்த்தையில் கொப்பளிப்பதை நாம் பார்க்க முடிகிறது.

இங்கு இவர் மூன்று விஷயங்களைக் குறிப்பிடுகிறார்.

1. இறுதி நாள் வரை வரப் போகிற இவர்களது பக்த கோடிகளின் பட்டியல் இவருக்குத் தெரியுமாம்.

2. அத்துடன் அவர்களுக்கு நரகத்திலிருந்து விடுதலை வேண்டுவாராம். மறு வார்த்தையில் சொல்ல வேண்டுமாயின் மற்ற சங்கத்திலிருந்து விலகி இவரது சங்கத்தில் வந்து சேர்ந்தால் அவர்களுக்கு நரகத்திலிருந்து விடுதலை வாங்கிக் கொடுப்பதாகக் குறிப்பிடுகிறார்.

எப்படி மற்ற சங்கத்தில் அதாவது தரீக்காவில் உள்ள ஆட்களைத் தங்கள் சங்கத்திற்கு இழுப்பதற்கு ஆசை காட்டியிருக்கிறார் என்று பாருங்கள்.

3. கியாமத் நாள் வரை நடைபெறும் விஷயம் இவருக்குத் தெரியுமாம். ஆனால் ஷரீஅத்தின் கடிவாளம் பிடித்து இழுப்பதால் தான் அதை அவர் அவிழ்த்து விடவில்லையாம்.

இம்மூன்று விஷயங்களிலும் தனக்கு மறைவான ஞானம் இருப்பதாக இவர் வாதிடுகின்றார். அதாவது அல்லாஹ்வுக்குரிய மறைவான ஞானத்தை அறியும் ஆற்றல் தனக்கு இருப்பதாக வாதிடுகிறார்.

ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் தனது தூதரிடம் சொல்லச் சொல்கிறான்.

"அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! "குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?'' என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 6:50

"அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறை வானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

அல்குர்ஆன் 7:188

நூஹ் (அலை) அவர்களையும் இவ்வாறு கூறச் செய்கின்றான்.

"என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். உங்கள் கண்கள் இழிவாகக் காண்போருக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன்'' (எனவும் கூறினார்.)

அல்குர்ஆன் 11:31

நபி (ஸல்) அவர்களால் கியாமத் நாளின் அடையாளங்களைத் தான் சொல்ல முடிந்ததே தவிர உறுதியாக இந்த நாள் தான் என்று அவர்களால் சொல்ல முடியவில்லை.

வஹீயின் தொடர்பில் இருந்த அவர்களாலேயே அதைச் சொல்ல முடியவில்லை. ஆனால் இவர்களோ சர்வ சாதாரணமாக, கியாமத் நாள் வரை உள்ள விஷயங்களை அறிந்திருப்பதாகக் கதை அளக்கின்றனர்; காதில் பூச்சுற்றுகின்றனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் மறைவான ஞானத்தை அறிய மாட்டார்கள் என்று ஆயிஷா (ரலி) தெளிவாக அடித்துச் சொல்கிறார்கள். (பார்க்க: புகாரி 4855)

இது தான் அல்லாஹ்வின் தூதருடைய உண்மை நிலை எனும் போது, மற்றவர்களுக்கு இது போன்ற ஞானம் இருக்கிறது என்று கற்பனை செய்து பார்க்க முடியுமா? நிச்சயமாக முடியாது.

ஆனால் ஷியாக்களும், இந்த ஷாதுலிய்யாக்களும் தங்களுக்கு மறைவான ஞானம் இருப்பதாகக் கற்பனை செய்யவில்லை, உறுதியாகவே நம்புகின்றனர். இப்படி நம்புகிறவர்கள் ஒரு போதும் முஸ்லிம்கள் கிடையாது என்பதை மேற்கண்ட வசனங்கள் மூலம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

இன்ஷா அல்லாஹ் இன்னும் வரும்
ஷியாக்கள் ஓர் ஆய்வு - 9
அர்ஷை அவமதிக்கும் ஷாதுலிய்யா கலீபா

அபூஉஸாமா

ஷரீஅத்தில் முழுப் பிடிப்பும், பேணுதலும் கொண்ட ஒரே தரீக்கா என்று தம்பட்டம் அடித்துக் கொள்ளும் இந்த ஷாதுலிய்யாக்கள், மறைவான ஞானம் தங்களுக்கு இருப்பதாக வாதிடுவன் மூலம் தாங்களும் ஷியாக்களின் வாரிசு என்பதைத் தெளிவுபடுத்துகின்றனர். இந்த விபரங்களைக் கடந்த இதழில் கண்டோம். தரீக்காக்களிலேயே மிகவும் கேடு கெட்ட தரீக்கா ஷாதுலிய்யா தரீக்கா என்பதைக் கீழ்க்காணும் விபரங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

தெளிவான மது ரசம் என்னும் ரகசிய ஞான பானத்தை நான் பருகி விட்டேன். சத்தியமாக நான் அதன் போதையில் உள்ளேன். என்னிடம் அதை எதிர்த்து வாதிப்பவர் எவருமில்லை.

அதை எனக்குப் புகட்டியவர் வேறு யாருமல்லன். நண்பன் (அல்லாஹ்) தான். போதை ஏறிய பின் நான் இப்பூவுலகில் பார்க்கும் போது, எங்கும் அவன் மட்டுமே பொதுவாக இலங்குவதைப் பார்க்கிறேன். வேறெதையும் நான் பார்க்கவில்லை.

எனக்கு ஒரு கூட்டு இருப்பதைக் காணவில்லை. அல்லாஹ்வை நான் பார்க்கும் போதெல்லாம் எனக்கு எந்தத் திடுக்கமும் இல்லை.

ஆகாய நட்சத்திரத்திற்கு மேல் உள்ளவற்றையும், பூமியில் அதள பாதாளத்திற்குக் கீழ் உள்ளவற் றையும் நான் பார்த்து விட்டேன். என் பார்வையில் படாதவை எதுவுமில்லை. அர்ஸும் குர்ஸும் என் முடிவுக்குக் கட்டுப்பட்டவை.

ஒளியும் நான் தான். ஒளிகளும் நான் தான். அந்தரங்கமும் ரகசியமும் நான் தான். நானே சூரியன். என் ஒளியில் பிரகாசிப்பது தான் சந்திரன்.

இவை ஷாதுலிய்யா தரீக்காவின் அவ்ராது, பைத் மற்றும் மவ்லிதுத் தொகுப்புகள் என்று நூலில் 176ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ள உளறல்களாகும்.

இலக்கிய போதையல்ல! யதார்த்த போதையே!

இந்த உளறல்களைக் கொட்டியிருப்பவரின் பெயர் முஹம்மது ஃபாஸி! இவர் தான் ஷாதுலிய்யா தரீக்காவின் முக்கியத் தூண்.

ஏதோ அல்லாஹ் அவருக்கு வழங்கிய ரகசிய ஞானத்தை, மது பானத்துடன் ஒப்பிட்டு இலக்கிய நடையில் பேசுகிறார் என்று இதை எடுத்துக் கொள்ள முடியாது. இவர் யதார்த்தமாகவே தண்ணியடித்த போதையில் பேசுவது போன்று தான் பேசுகிறார். அல்லது புத்தி பேதலித்துப் போய் புலம்புகிறார்.

தண்ணியடித்தவனுக்குத் தான் தலை, கால் புரியாது. தாய்க்கும் தாரத்திற்கும் வேறுபாடு தெரியாது. அதே நிலையை இவர் அடைந்து விட்டார் போல் தோன்றுகிறது.

ரகசிய ஞானம் எனும் மதுபானத்தை அருந்தி விட்டேன் என்று கூறி மறைவான ஞானம் தனக்கு வழங்கப்பட்டதாகப் பிதற்றுகின்றார்.

காணும் பொருள் எல்லாம் இவருக்குக் கடவுளாகத் தெரிகிறதாம். அல்லாஹ் ஒளியானவன் என்பதால் காணும் பொருளெல்லாம் ஒளியாகவே தெரிகின்றது.

இந்தக் கவிதை வரிகள் வரை, அல்லாஹ்வையும் தன்னையும் தனித்தனியாகத் தான் வைத்துப் பேசுகிறார்.

எனக்கு ஒரு கூட்டு இருப்பதைக் காணவில்லை. அல்லாஹ்வை நான் பார்க்கும் போதெல்லாம் எனக்கு எந்தத் திடுக்கமும் இல்லை.

இங்கு இவர் மெதுவாகத் தன்னை அல்லாஹ்வுடன் சங்கமிக்கச் செய்கிறார். தானும் அல்லாஹ்வும் ஒன்று தான் என்ற அத்வைதக் கருத்தை மெதுவாகத் திணிக்கிறார்.

ஆகாய நட்சத்திரத்திற்கு மேல் உள்ளவற்றையும், பூமியில் அதள பாதாளத்திற்குக் கீழ் உள்ளவற்றையும் நான் பார்த்து விட்டேன். என் பார்வையில் படாதவை எதுவுமில்லை. அர்ஸும் குர்ஸும் என் முடிவுக்குக் கட்டுப்பட்டவை.

ஒளியும் நான் தான். ஒளிகளும் நான் தான். அந்தரங்கமும் ரகசியமும் நான் தான். நானே சூரியன். என் ஒளியில் பிரகாசிப்பது தான் சந்திரன்.

என்று கூறுவதன் மூலம், தானும் அல்லாஹ்வும் ஒன்று தான் என்று தெளிவாகக் கூறி விடுகின்றார். இந்தக் கவிதை வரிகளை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள்.

நல்ல, ஒரு புத்தி சுவாதீனமுள்ள, மறுமையில் நம்பிக்கையுள்ள ஒரு முஸ்லிம் இப்படிச் சொல்ல முடியுமா? ஒருவன் தன்னையே கடவுள் என்று கூறினால் அவனுக்கு என்ன தண்டனை? நரகம் தான் என்று கீழ்க்கண்ட வசனம் தெளிவாகப் பிரகடனப்படுத்துகின்றது.

"அவனன்றி நான் தான் வணக்கத்திற்குரியவன்'' என்று கூறுபவனுக்கு நரகத்தையே கூலியாக வழங்குவோம். அநீதி இழைத்தோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

அல்குர்ஆன் 21:29

அதனால் புத்தி சுவாதீனமுள்ள, சுய சிந்தனையுள்ள எந்த ஒரு முஸ்லிமும் இவ்வாறு பேச மாட்டான்.

ஒன்று, இந்தப் பாஸி என்பவன் பைத்தியமாக இருக்க வேண்டும். அல்லது தண்ணியடித்திருக்க வேண்டும். அல்லது உண்மையிலேயே தன்னைக் கடவுளாகக் கருதியிருக்க வேண்டும்.

இவரது பக்தர்கள் வரைந்து தள்ளியிருக்கும் வரலாற்றுத் துணுக்குகளிலிருந்து பார்த்தால் இவர் பைத்தியக்காரராகத் தெரியவில்லை. தண்ணியடித்தவராகவும் தெரியவில்லை. எனவே, இந்தப் பாசி திட்டமிட்டு, தெரிந்து கொண்டே தன்னைக் கடவுளாக்கியிருக்கிறார். அதாவது, ஷியாக்களின் இமாம்களைப் போன்று இவரும் தன்னைக் கடவுள் நிலைக்கு உயர்த்தியிருக்கிறார். மறைவான ஞானம் பற்றி ஷியாக்கள் கூறுவதை மீண்டும் நினைவு படுத்துகிறோம்.

நாம் அல்லாஹ்வின் பூமியில் அவனது நம்பிக்கை நட்சத்திரங் கள். நம்மிடம் (மக்களுக்கு வரும்) சோதனைகள், மரணங்கள் பற்றிய ஞானங்கள் இருக்கின்றன. அரபியர்கள் தலைமுறை இஸ்லாத்தில் உருவாக்கம் பற்றிய ஞானமும் நம்மிடம் இருக்கிறது.

ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவரது உள்ளத்தில் குடியிருப்பது இறை நம்பிக்கையின் தன்மையா? அல்லது நயவஞ்சகத் தன்மையா? என்று நாம் அறிந்து கொள்வோம். நம்முடைய ஷியாக்களின் பெயர் களும் அவர்களது தந்தைமார்களின் பெயர்களும் பதியப்பட்டவர்கள் ஆவர். அல்லாஹ் நம்மிடமும் அவர்களிடமும் வாக்குறுதி எடுத்திருக்கிறான்.

அல்காஃபி ஃபில் உசூல், கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம்: 1, பக்கம்: 223

இப்போது மீண்டும் ஒரு முறை ஷாதுலிய்யாவின் வார்த்தைகளைப் படியுங்கள்.

ஆகாய நட்சத்திரத்திற்கு மேல் உள்ளவற்றையும், பூமியில் அதள பாதாளத்திற்குக் கீழ் உள்ளவற்றையும் நான் பார்த்து விட்டேன். என் பார்வையில் படாதவை எதுவுமில்லை. அர்ஸும் குர்ஸும் என் முடிவுக்குக் கட்டுப்பட்டவை.

என்ன ஆணவமும், அகந்தையும் இருந்தால் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவார் என்று சிந்தித்துப் பாருங்கள்.
மலக்குகளுக்குத் தெரியாத ரகசியம்

அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்!'' என்று கேட்டான்.

"நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன்'' என்று அவர்கள் கூறினர்.

"ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக!'' என்று (இறைவன்) கூறினான். அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது, "வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா?'' என (இறைவன்) கேட்டான்.

அல்குர்ஆன் 2:31-33

வானங்களில், பூமியில் உள்ள ரகசியங்கள் அனைத்தும் தனக்கு மட்டுமே தெரியும்; மலக்குகளுக்குக் கூட தெரியாது என்று அல்லாஹ் சொல்கிறான். இந்தப் பாசியோ தனக்கு அனைத்தும் தெரியும் என்று பெருமையடிக்கிறார்.
ஜின்களுக்கும் தெரியாது

அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் "நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே'' என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.

அல்குர்ஆன் 34:14
இறைத் தூதர்களுக்கும் தெரியாது

"அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! "குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?'' என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 6:50
யாருக்கும் தெரியாத ரகசியம்

"வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 27:65

வானங்கள், பூமியில் உள்ள அனைத்தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்.

வானத்திற்கு மேல் உள்ள ரகசியங்கள் எனப்படுபவை சாதாரணமான விஷயங்கள் அல்ல! அவற்றை எந்தவொரு சாதாரண மனிதனும் பார்க்க முடியாது. அதனால் தான் அல்லாஹ் இதைச் சிலாகித்துச் சொல்கிறான்.

தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான். அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா? ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார்.

அல்குர்ஆன் 53:10-18

இப்படிப்பட்ட மிகச் சிறப்பு மிக்க அதிசயங்களையும், அற்புதங் களையும் முகவரி இல்லாத இந்தப் பேர்வழிகள் தங்களுக்குத் தெரியும் என்று கூறுகிறார்கள் என்றால் அதற்கு அடிப்படைக் காரணம், இந்தப் பொய்களையும் நம்புவதற்கு, சுய சிந்தனையை இழந்த ஒரு கூட்டம் இருப்பதால் தான்.

இந்த இழி நிலையிலிருந்து நம்மைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! இந்த ஷைத்தானின் சதிவலையில் இனியும் யாரேனும் வீழ்ந்து விடாமல் காப்பதே இந்தத் தொடரின் லட்சியம்! அதற்காகத் தான் இந்த அறியாமைக் கருத்துக்களையும், ஆணவக் கருத்துக்களையும் இங்கே தொடர்ந்து அடையாளம் காட்டி வருகிறோம்.

ரகசிய ஞானம் எனும் மது ரச பாôனம் என்பதெல்லாம் ஏமாற்று, பசப்பு வார்த்தைகள். உண்மையில் இது ஷியாயிஸம் தரும் விஷ பானமாகும். இதைப் பருகி நம்மை நாமே அழித்து விடக் கூடாது.

பொதுவாக நாம் ஓர் உண்மையை விளங்கிக் கொள்ள வேண்டும். தரீக்கா என்று சொல்லி விட்டாலே அது ஷியா தான். காரணம் எல்லாத் தரீக்காக்களுமே சங்கிலித் தொடராகச் சென்று முடிவது அலீ (ரலி)யிடம் தான்.
இரண்டில் இல்லாத ரகசிய ஞானம்?

ரகசிய ஞானம்! யாருக்கும் இல்லாத ரகசிய ஞானம் என்று பாட்டுப் படிப்பது ஷியாக்கள் தான். அந்தப் பாட்டைத் தான் சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறும் இந்தத் தரீக்காக்களும் படிக்கின்றன. இவ்வாறு படிப்பதற்கு ஓர் அடிப்படைக் காரணமும் உண்டு.

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு மூல ஆதாரங்களில் இல்லாத ரகசிய ஞானம் அலீ (ரலி) அவர்களுக்கு இருப்பதாக அன்னார் வாழும் போதே கிளம்பி விட்டது. அலீ (ரலி) அவர்களின் வாழ்நாளிலேயே அவர்களிடம் நேரடியாக இது பற்றிக் கேட்கப் பட்டு விட்டது.

அபூ ஜுஹைஃபா (ரலி) அறிவித்தார்: நான் அலீ (ரலி) அவர்களிடம், "(நபியவர்களின் குடும்பத்தினராகிய) உங்களிடம் குர்ஆனில் இல்லாத ஏதேனும் (செய்தி) உள்ளதா?'' என்று கேட்டேன். அதற்கு அலீ (ரலி) அவர்கள், "வித்துக்களைப் பிளந்தவனும் உயினங்களை உருவாக்கிய வனுமான அல்லாஹ்வின் மீது சத்தியமாக! குர்ஆனில் இருப்பதைத் தவிர வேறெதுவும் (நபியின் குடும்பத்தாராகிய) எங்களிடம் இல்லை. இறை வேதத்தில் ஒரு மனிதருக்கு வழங்கப்படும் விளக்கத்தையும் இந்த ஏட்டில் உள்ளவற்றையும் தவிர'' என்று கூறினார்கள். நான் "இந்த ஏட்டில் என்ன இருக்கிறது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "இழப்பீடு (தொடர்பான விளக்கங்கள்), போர்க் கைதியை விடுவித்தல், இறைமறுப்பாளனுக்காக ஒரு முஸ்லிம் கொல்லப்படக் கூடாது ஆகிய விஷயங்கள் இதிலுள்ளன'' என்றார்கள்.

(அறிவிப்பாளர் சுஃப்யான் இப்னு உயைனா (ரஹ்) சில வேளைகளில் "மக்களிடம் இல்லாத ஏதேனும் ஒன்று உங்களிடம் உள்ளதா?'' என்று அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்கள் கேட்டார்கள் என அறிவித்தார்.)

நூல்: புகாரி 6903

அலீ (ரலி) அவர்கள் அன்றே இந்த வாசலை அடைத்து விட்டார்கள்; ஆப்பு வைத்து விட்டார்கள். இருப்பினும் யூத மதம் தனது கைப்பிள்ளையான ஷியாயிஸத்தைப் புகுத்தி இந்த வழிகேட்டின் வாசலைத் திறந்து விட்டது. அது இன்னும் தொடர்ந்து நரகத்தின் வாசலுக்கு இழுத்துச் செல்கின்றது. அல்லாஹ் நம்மைக் காப்பானாக!
ஃபாஸிக்காக ஆடும் அல்லாஹ்வின் அர்ஷ்

அர்ஸும் குர்ஸும் என் முடிவுக்குக் கட்டுப்பட்டவை.

இந்தப் பாஸியின், பாவியின் தடித்த நாவில் வெடித்துச் சிதறும் அணுகுண்டைப் பாருங்கள். அல்லாஹ்வுடைய அச்சம் கடுகளவு இருப்பவன் கூட இவ்வளவு பெரிய கொடிய, அக்கினி வார்த்தைகளைச் சொல்ல மாட்டான். இந்த ஃபாஸி தன்னைக் கடவுளாகக் பாவித்ததன் காரணமாகத் தான் அபாயகரமான அணுகுண்டு வார்த்தைகளை வெடிக்கிறார்.

யூதமும், அதன் கள்ளப் பிள்ளையும் தான் அல்லாஹ்வின் விஷயத்தில் அதிபயங்கரமான வார்த்தைகளைச் சொல்லத் தயங்க மாட்டார்கள்.

"அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது'' என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்.

அல்குர்ஆன் 5:64

யூதர்கள் கூறியது போன்ற ஒரு பயங்கரமான சுடு சொல்லை, இந்தப் பாஸி சொல்கிறார்.

அர்ஷும் குர்ஸும் இவருடைய முடிவுக்குக் கட்டுப்பட்டதாம். அதாவது, இவருடைய கட்டளைக்கு, காட்டுகின்ற கை விரலுக்குத் தக்க ஆட்டம் போடுமாம். இது தான் இந்தப் பாசி பிடித்த பாஸியின் கருத்து.

தொடரும் இன்ஷா அல்லாஹ்
ஷியாக்கள் ஓர் ஆய்வு - 10
மலக்குகளை மட்டம் தட்டும் ஷியாக்கள்

அபூஉஸாமா

அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் இழிவுபடுத்துகின்ற யூதர்கள், மலக்குகளையும் இழிவுபடுத்தத் தவறவில்லை. இறைத் தூதர்களுக்கு மத்தியில் ஒருவரை உயர்த்தி, இன்னொருவரைத் தாழ்த்தி வேறுபாடு கற்பிப்பது போன்று மலக்குகளான இறைத் தூதர்களுக்கு மத்தியிலும் வேறுபாடு கற்பிக்கின்றது யூத இனம்!

இதைக் கீழ்க்கண்ட ஹதீஸ் நமக்கு உணர்த்துகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு) வந்திருக்கும் செய்தி (யூத அறிஞராயிருந்த) அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்களுக்கு, அவர்கள் ஒரு (தோட்ட) நிலத்தில் பழம் பறித்துக் கொண்டிருந்த சமயம் எட்டியது. உடனே அவர்கள் நபி (ஸல்) அவர்கüடம் வந்து, "தங்கüடம் நான் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகிறேன். அவற்றை ஓர் இறைத்தூதர் மட்டுமே அறிவார்'' என்று கூறினார்கள். பிறகு, "1. இறுதி நாüன் அடையாளங்கüல் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசிகள் உண்ணும் முதல் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையின் சாயலில், அல்லது தாயின் சாயலில் இருப்பது எதனால்?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "சற்று முன்பு தான் ஜிப்ரீல் எனக்கு இவற்றைக் குறித்து தெரிவித்தார்'' என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் சலாம் அவர்கள், "ஜிப்ரீலா?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "ஆம்'' என்று பதிலüக்க, "வானவர்கüலேயே ஜிப்ரீல் தாம் யூதர்களுக்குப் பகைவராயிற்றே!'' என்று அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார்'' எனும் இந்த (2:97ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.... (சுருக்கம்)

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 4480

அல்லாஹ்வுக்கும், அவனது வானவர்களுக்கும், அவனது தூதர்களுக்கும், ஜிப்ரீலுக்கும், மீகாயீலுக்கும் யார் எதிரியாக இருக்கிறாரோ, அத்தகைய மறுப்போருக்கு அல்லாஹ்வும் எதிரியாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 2:98

இந்த வசனத்தில் இவர்களை இறை மறுப்பாளர்கள் என்று தெளிவுபடுத்தி, யார் ஜிப்ரீலுக்கு எதிரியோ அவர் தனக்கும் எதிரி என்று அல்லாஹ் பிரகடனப் படுத்துகின்றான்.

மலக்குகளை மட்டம் தட்டும் இந்த வழக்கம் யூதர்களின் ஈனப் புத்தியும் இழிவான பண்புமாகும்.

நூலைப் போல சேலை

தாயைப் போல பிள்ளை; நூலைப் போல சேலை என்று சொல்வது போன்று யூத மதத்தின் கள்ளப் பிள்ளையான ஷியா மதமும் அந்த வேலையை அப்படியே செய்கின்றது.

"காதில் (இறைச் செய்தி) அறிவிக்கப்படுவோரும் நம்மில் இருக்கிறார்கள். கனவில் செய்தி அறிவிக்கப்படுவோரும் நம்மில் இருக்கிறார்கள். தட்டையில் விழும் மணியோசை போல் இறை அறிவிப்பு ஓசையைச் செவியுறுவோரும் நம்மில் உள்ளனர். ஜிப்ரயீல், மீகாயீலை விடப் பிரம்மாண்டமான தோற்றமுள்ள மலக்குகள் வரக் கூடியவர்களும் நம்மிடம் இருக்கிறார்கள்'' என அபூ அப்துல்லாஹ் கூற நான் செவியுற்றேன்.

நூல்: பஸாயிருத் தரஜாத்

ஜிப்ரயீலை விட, மீகாயீலை விட சிறந்த மலக்குகள் இவர்களிடம் வருகிறார்களாம். இந்த ஷியாக்களுக்கு என்ன திமிர் பாருங்கள்.

ஜிப்ரயீல் (அலை) அவர்களை அல்லாஹ் ஓர் உயர்ந்த இடத்தில் வைத்துப் பேசுகின்றான். அவர்களுக்கு மாபெரும் கண்ணியத்தையும் மகத்துவத்தையும் அளித்திருக்கின்றான். நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அருளும் ஜிப்ரீல் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் பல்வேறு இடங்களில் சிறப்பித்துக் கூறுகின்றான்.

இது மரியாதைக்குரிய தூதரின் (ஜிப்ரீலின்) சொல்லாகும். வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதி பெற்றவர். வானவர்களின் தலைவர்; அங்கே நம்பிக்கைக்குரியவர்.

அல்குர்ஆன் 81:19-21

அஷ்ஷுஃரா அத்தியாயத்தின் 193வது வசனத்தில் நம்பிக்கைக்குரிய உயிர் என்று நற்சான்று வழங்குகின்றான்.

அல்லாஹ் தன் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களை விண்ணுலகப் பயணத்திற்கு அழைத்த போது, அவர்களுக்குத் தன்னுடைய அற்புதங்களைக் காட்டினான். அந்த வரிசையில் ஜிப்ரீல் (அலை) அவர்களை நபி (ஸல்) அவர்கள் சந்திக்கும் காட்சியை வெகுவாக சிறப்பித்துக் கூறுகின்றான்.

அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான். அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா? ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார்.

அல்குர்ஆன் 53:5-14

வானவர்களில் அவருக்கு மேலானவர் இல்லை என்பதை இந்த வசனங்களும் 26:192, 2:253, 5:110, 16:102 ஆகிய வசனங்களும் எடுத்துக் காட்டுகின்றன.

ஆனால் ஷியாக்களோ ஜிப்ரீலை விட சிறந்த மலக்கும் தங்களிடம் வருவதாகக் கூறுகின்றனர். இங்கு ஜிப்ரயீல் (அலை) அவர்களை மட்டும் இவர்கள் மட்டம் தட்டவில்லை. நபி (ஸல்) அவர்களையும் சேர்த்தே மட்டம் தட்டுகின்றனர் இந்த ஷியா ஷைத்தான்கள்.

முஹம்மதுக்கு வந்தவர் ஜிப்ரயீல்! அதாவது அவரது தரத்திற்கு ஜிப்ரயீல் வந்திருக்கிறார். எங்கள் இமாமுக்கு வந்தவர் ஜிப்ரயீலை விட, மீகாயீலை விட உயர்ந்தவர். அதாவது எங்கள் இமாமின் தரத்திற்குத் தக்க சிறந்த மலக்கு வந்திருக்கிறார் என்று கூற வருகின்றனர். இதன் மூலம் நபி (ஸல்) அவர்களின் தரத்தையும் காலில் போட்டு மிதிக்கின்றனர்.

ஷியாக்களின் இமாம்கள் நபிமார்களை விட உயர்ந்தவர்கள் என்பது ஷியாக்களின் நம்பிக்கை! அதைப் பற்றிய விளக்கம் இன்ஷா அல்லாஹ் பின்னர் இடம் பெறவுள்ளது. இப்போது ஜிப்ரயீல் தொடர்பாக இவர்கள் கொண்டிருக்கும் மட்டரகமான சிந்தனையை மட்டும் பார்ப்போம்.

ஜிப்ரயீலை யாருக்குப் பிடிக்காது? யூதர்களுக்குப் பிடிக்காது. அதனால் யூதர்களின் கள்ளப்பிள்ளையான ஷியாக்களுக்கும் பிடிக்கவில்லை. எனவே தான் ஜிப்ரயீலை விட சிறந்த மலக்கு வருகிறார் என்ற பொய் தத்துவத்தை உதிர்க்கின்றனர்.

இந்தச் சிந்தனையைத் தான் சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்ற பெயர் தாங்கிகளும் கொண்டிருக்கிறார்கள். ஷியாக்களின் கொள்கையைப் பிரதிபலித்து, ஜிப்ரயீலை மட்டம் தட்டுகிறார்கள்.

மண் கேட்ட படலம்

ஆதம் (அலை) அவர்களைப் படைக்க அல்லாஹ் எண்ணிய போது, ஜிப்ரீல் (அலை) அவர்களை பூமிக்கு அனுப்பி மண் எடுத்து வருமாறு பணித்தானாம். ஜிப்ரீல் (அலை) அவர்கள் பூமிக்கு வந்து மண் எடுக்க முற்பட்ட போது, பூமி மண் தர மறுத்ததாம். தோல்வியோடு ஜிப்ரீல் (அலை) திரும்பி விடுகிறார்களாம். அடுத்து மீகாயில் (அலை) அவர்களை அல்லாஹ் அனுப்ப, மீகாயிலும் தோல்வியுடன் திரும்பிச் சென்றார்களாம். மூன்றாவதாக இஸ்ராஃபீலை அனுப்பிய போது, அவர்களும் வெறுங்கையுடன் திரும்பி விட்டார்களாம். இறுதியாக மலக்குல் மவ்தை அல்லாஹ் அனுப்ப, பூமியின் மறுப்பைப் பொருட்படுத்தாமல் அவர் மண் எடுத்துச் சென்றாராம். அதனால் தான் மனித உயிர்களைப் பறிக்கின்ற பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டதாம்.

இப்படியொரு கதை சுன்னத் வல் ஜமாஅத் ஆலிம்களால் பல மேடைகளில் பேசப்பட்டு வருகிறது. இவர்கள் வெளியிடும் நூற்களிலும் இந்தக் கதை இடம் பெற்றுள்ளது.

அல்லாஹ்வின் மார்க்கத்தை விடுத்து வேறு ஒன்றையா தேடுகின்றனர்? வானங்களிலும், பூமியிலும் உள்ளவை விரும்பியோ, விரும்பாமலோ அவனுக்கே அடி பணிகின்றன. அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

அல்குர்ஆன் 3:83

இந்த வசனத்திற்கும் இது போன்ற ஏராளமான வசனங்களுக்கும் மாற்றமாக, பூமி அல்லாஹ்வின் உத்தரவுக்குக் கட்டுப்படவில்லை என இந்தக் கதையில் கூறப்படுகின்றது. இது ஒரு புறமிருக்க, மலக்குகளில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றுள்ள ஜிப்ரீல், மீகாயில், இஸ்ராபீல் ஆகிய மூவரும் அல்லாஹ்வின் உத்தரவை விட பூமியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு தோல்வியோடு திரும்பினார்கள் என்றால் இதை நம்ப முடிகின்றதா?

மலக்குகள் அல்லாஹ்வின் உத்தரவுக்கு எதிராக ஒரு போதும் செயல்பட மாட்டார்கள்; மாறு செய்வது அவர்களின் இயல்புக்கே அப்பாற்பட்டது என்றெல்லாம் திருக்குர்ஆனின் வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன.

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.

திருக்குர்ஆன் 16:49, 50

"'அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்'' எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.

திருக்குர்ஆன் 21:26, 27

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.

திருக்குர்ஆன் 66:6

சிறப்புக்குரிய வானவர்கள் அல்லாஹ்வின் கட்டளையைச் செயல்படுத்தாமல் எப்படித் திரும்பிச் சென்றிருக்க இயலும்? இறை உத்தரவுக்கு முரணாக உள்ள பூமியின் உத்தரவுக்கு எப்படி அடிபணிந்திருக்க முடியும்?

இறை உத்தரவுக்கு மலக்குகள் மாறு செய்ய மாட்டார்கள் என்று தெளிவாக்கும் திருக்குர்ஆன் வசனங்களுக்கு இந்தக் கதை முரண்படுகிறது.

மண் எடுத்து வரச் சொன்னவன் சர்வ உலகத்தையும் படைத்து அதிகாரம் செய்யும் வல்ல அல்லாஹ். இந்தக் கதையில் அவனது உத்தரவு மதிப்பற்றதாக ஆக்கப்படுகின்றது.

அந்தப் பணியைச் செய்து முடிக்க அனுப்பப்பட்டவர்களும் சாதாரணமானவர்கள் அல்லர். இறைவனின் உத்தரவை அப்படியே செய்து முடிக்கும் இயல்பும், அதற்குரிய திறனும் கொடுக்கப்பட்ட மிகச் சிறந்த வானவர்கள். இந்தக் கதையில் வானவர்கள் இறை உத்தரவை மீறி விட்டார்கள் என்று காட்டப்படுகின்றது.

யூதர்களைப் போன்று ஒரு மலக்கை உயர்த்தி, மற்றொரு மலக்கை மட்டம் தட்டுகிறார்கள். மண்ணைப் பிடுங்கி வருவதற்குக் கூட இவருக்குத் தகுதியில்லை என்று கூறி ஜிப்ரயீலை மட்டம் தட்டுகிறார்கள். இந்தக் கதைகளை ஆதரிக்கும் மவ்லவிகள் தங்களை சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக் கொள்வது தான் கேலிக் கூத்து.

இத்துடன் இவர்கள் நிற்கவில்லை. ஜிப்ரயீல் (அலை) அவர்களை ஒரு பாவியாகவும் நினைத்துப் பாடலும் பாடுகிறார்கள்.

என்னை அச்சுறுத்தும் அளவுக்கு அநீதி இழைக்கப் பட்டால், "தலைவர்களுக்கெல்லாம் தலைவரே! என் ஊன்றுகோலே!' என்று நான் உங்களை அழைப்பேன். என் குற்றங்களுக்காக ரஹ்மானிடம் பரிந்துரைப்பவராக நீங்கள் ஆகி விடுங்கள். என் கற்பனையிலும் தோன்றாத உதவிகளை எனக்குச் செய்யுங்கள். என்றென்றும் நிரந்தரமான திருப்தியான பார்வையுடன் என்னைக் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் அருளால் எனது குறைகளைக் காலா காலம் மறைத்து விடுங்கள். (சுப்ஹான மவ்லிது)

இவ்வாறு ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பற்றிப் பாடியதாக சுப்ஹான மவ்லிதில் கூறபட்டுள்ளது.

மலக்குகளின் தலைவர், வலிமை மிக்கவர் என்று அல்லாஹ்வால் புகழ்ந்து பாராட்டப்பட்ட ஜிப்ரீல் (அலை) அவர்களையே அச்சுறுத்தி அநீதி இழைத்திட மற்றவர்களால் முடியும் என்று இந்த மவ்லிது வரிகள் கூறுகின்றன.

மேலும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தவறிழைக்கக் கூடியவர் என்றும் குறைகள் உடையவர் என்றும் இந்த வரிகள் கூறுகின்றன. ஜிப்ரீல் (அலை) அவர்கள் தவறிழைப்பார்கள் என்று கூறினால் அவர்கள் கொண்டு வந்த வஹீயிலும் தவறிழைத்திருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை இது ஏற்படுத்தி விடாதா?

இந்தத் தவறுகளையெல்லாம் விட்டு ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபியவர்களிடம் பாதுகாப்பு தேடுவதாகக் கூறுவது தான் இதில் கொடுமை!

மனிதர்களுக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் கூட நபி (ஸல்) அவர்களை அழைத்துப் பிரார்த்திக்குமாறு அல்லாஹ் கூறவில்லை. தன்னிடம் மட்டுமே உதவி தேட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர் வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!)

அல்குர்ஆன் 2:186

அல்லாஹ்வை அழைத்துப் பிரார்த்திக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் மூலமாக இந்த வசனத்தில் மக்களுக்கு அறிவிக்கச் சொல்கின்றான். மனிதர்கள் கூட நபி (ஸல்) அவர்கள் உள்ளிட்ட யாரிடமும் உதவி தேடக் கூடாது. அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட வேண்டும் எனும் போது, இந்தச் செய்தியைக் கொண்டு வந்த ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உதவி தேட வேண்டிய அவசியம் என்ன?

ஆக, ஜிப்ரீல் (அலை) அவர்களை பலவீனராகவும், தவறிழைக்கக் கூடியவராகவும் சித்தரித்து, அவர்கள் இறைவனுக்கு மாறு செய்ததாகக் காட்டுவது தான் இந்த மவ்லிதுகளின் நோக்கம் என்பது தெளிவாகின்றது. மவ்லிதை இயற்றியவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் மீதுள்ள வெறுப்பு இங்கு அம்பலமாகின்றது.

ஜிப்ரீல் (அலை) அவர்களை முஃமின்கள் யாரும் வெறுக்க முடியாது. அப்படி வெறுப்பவர் உண்மை முஃமினாக இருக்க முடியாது. யூதர்கள் தான் ஜிப்ரீல் (அலை) அவர்களை வெறுப்பார்கள் என்பதை மேலே நாம் இடம் பெறச் செய்துள்ள புகாரி 4480வது ஹதீஸில் காணலாம். இதனால் தான் ஜிப்ரீலின் எதிரி தனக்கும் எதிரி என்று அல்லாஹ் தன் திருமறையில் பிரகடனம் செய்கின்றான்.

ஆக இந்த அளவுக்கு அல்லாஹ்வினால் அந்தஸ்தும் மரியாதையும் வழங்கப்பட்ட ஜிப்ரீல் (அலை) அவர்களை இந்த மவ்லிதுகள் எவ்வளவு மட்டரகமாக நடத்துகின்றன என்பதைப் பார்க்கும் போது, இந்த மவ்லிதுகள் யூதர்களின் கைவரிசையில் உருவான கைச்சரக்கு தான் என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இப்போது சொல்லுங்கள்! சுன்னத் வல்ஜமாஅத் என்று கூறிக் கொண்டிருக்கும் இந்த மவ்லவிகள் யார்? இவர்களும் கடைந்தெடுத்த பக்கா ஷியாக்கள் தான். பகிரங்க பரேலவிகள், நரகத்திற்கு அழைத்துச் செல்லும் முகவர்களான இவர்களைப் பின்பற்றினால் என்ன ஆகும் என்று சிந்தியுங்கள்.

வளரும் இன்ஷா அல்லாஹ்
ஷியாக்கள் ஓர் ஆய்வு - 10
கடவுளாக மாறிய ஷாதுலிய்யா கலீஃபா

அபூஉஸாமா

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் 7:54

அர்ஷ் என்பது அல்லாஹ்வின் ஆசனமாகும். இதை மேற்கண்ட வசனத்திலும், 9:129, 10:3, 13:2, 17:42, 21:22, 23:86, 23:116, 25:59, 27:26, 32:4, 39:75, 40:7, 40:15, 43:82, 57:4, 81:20 ஆகிய வசனங்களிலும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

இதில் 9:129, 23:86 ஆகிய வசனங்களில் மகத்தான அர்ஷ் என்றும், 23:116 வசனத்தில் கண்ணியமிக்க அர்ஷ் என்றும், 17:42, 81:20 ஆகிய வசனங்களில் அர்ஷின் நாயன் என்று அர்ஷுடன் தன்னை இணைத்தும் வல்ல அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்.

இப்படிப்பட்ட அர்ஷைத் தான் பாசியும், தூசியும் படிந்த பாஸி, தனக்குக் கட்டுப்பட்டது என்று கூறுகிறார். இதிலிருந்து இவரது அகந்தையையும், ஆணவத்தையும் தெரிந்து கொள்ளலாம். இந்த அகந்தையும், ஆணவமும் யூத, ஷியாயிஸத்தின் பிறவிக் குணங்களாகும். இந்தப் பாஸியும் அந்த வகையறாக்களில் உள்ளவர் என்பதால் அவர் அந்தக் குணத்தைப் பிரதிபலிக்கின்றார்.

அல்லாஹ் தனது குர்ஆனில் அர்ஷுக்கு வழங்கும் மரியாதையை மேலே குறிப்பிட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அர்ஷுக்கு அளிக்கும் மரியாதையைப் பாருங்கள்.

"அல்லாஹ்வின் மீதும் அவனுடைய தூதரின் மீதும் நம்பிக்கை கொண்டு, தொழுகையை நிலை நிறுத்தி ரமளானில் நோன்பும் நோற்ற மனிதரை சொர்க்கத்தில் புகச் செய்வது அல்லாஹ்வின் மீது கடமையாகி விட்டது. அவர் இறை வழியில் அறப்போர் புரிந்தாலும் சரி அல்லது அவர் பிறந்த பூமியில் உட்கார்ந்து கொண்டாலும் சரி'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மக்களுக்கு இந்த நற்செய்தியை அறிவிக்கலாமா?'' என்று (நபித் தோழர்கள்) கேட்டதற்கு அவர்கள், "சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன. அவற்றை அல்லாஹ், தன் பாதையில் அறப்போர் புரிபவர்களுக்காகத் தயார்படுத்தி வைத்துள்ளான். இரண்டு படித்தரங்களுக்கிடையே வானத்திற்கும், பூமிக்கும் இடையில் உள்ளது போன்ற தொலைவு உள்ளது. நீங்கள் அல்லாஹ்விடம் கேட்டால் ஃபிர்தவ்ஸ் என்னும் (சொர்க்கத்தின்) படித்தரத்தையே கேளுங்கள். ஏனெனில் அதுவே சொர்க்கத்தின் மிகச் சிறந்த படித்தரமும் மிக உயர்ந்த படித்தரமும் ஆகும்'' என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளரான யஹ்யா இப்னு சாலிஹ்) கூறினார்:

மேலும், "அதற்கு மேலே கருணையாளனின் அர்ஷு - சிம்மாசனம் இருக்கிறது. இன்னும் அதிலிருந்தே சொர்க்கத்தின் ஆறுகள் பாய்கின்றன'' என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனக் கருதுகிறேன்.

மற்றோர் அறிவிப்பாளரான முஹம்மத் இப்னு ஃபுலை (ரலி) தம் தந்தையிடமிருந்து, "அதற்கு மேலே ரஹ்மானின் அர்ஷு இருக்கிறது'' என்று அவர்கள் கூறினார்கள் என (சந்தேகமின்றி) அறிவித்தார்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2790

இப்படிப்பட்ட ஃபிர்தவ்ஸ் என்ற சுவனத்திற்கு மேல் அர்ஷ் உள்ளது. அல்லாஹ்வின் அர்ஷ் உள்ள காரணத்தினாலேயே அந்த பிர்தவ்ஸ் எனும் சுவர்க்கத்தை நீங்கள் கேளுங்கள் என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் அர்ஷின் மகத்துவத்தை உணர்த்துகிறார்கள். அத்தகைய மாண்புமிகு அர்ஷ் தனக்குக் கட்டுப்படுகின்றது என்று பாஸி விஷம் கக்குகிறார்.

சுவனம் என்பது ஒரு முஃமினுக்குக் கிடைக்கும் மாபெரும் பாக்கியமாகும். அந்தச் சுவனத்திலும் அர்ஷுக்குக் கீழே உள்ள சுவனத்தில் இடம் கிடைப்பது மாபெரும் மகத்தான அருட் கொடையாகும். இப்படி அர்ஷுக்குக் கீழ் இடம் கிடைப்பது பாக்கியம் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்ல இந்த ஃபாஸியோ, மகத்தான அர்ஷ் தனக்குக் கீழ் உள்ளது என்று கூறத் துணிகிறார் என்றால் இவர் நிச்சயமாக யூத, ஷியாக்களின் மறு பிறவி தான் என்பதில் கடுகளவு கூட சந்தேகமில்லை.

நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டிருந்த போது யூதர் ஒருவர் வந்து "அபுல் காசிமே! உங்கள் தோழர்களில் ஒருவர் என் முகத்தில் அறைந்து விட்டார்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் "யார்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் "அன்சாரிகளில் ஒருவர்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் "அவரைக் கூப்பிடுங்கள்'' என்று உத்தரவிட்டார்கள். அவர் வந்து சேர்ந்தவுடன் "இவரை நீர் அடித்தீரா?'' என்று கேட்டார்கள். அந்த அன்சாரி "இவர் கடை வீதியில் "மனிதர்கள் அனைவரையும் விட மூஸாவுக்கு மேன்மையை அளித்தவன் மீது சத்தியமாக!' என்று ஆணையிட்டுக் கூறிக் கொண்டிருந்ததைச் செவியுற்றேன். உடனே நான் "தீயவனே! முஹம்மதை விடவா (மூஸா மேன்மை வாய்ந்தவர்)?' என்று கேட்டேன். என்னைக் கோபம் ஆட்கொண்டு விட இவரின் முகத்தில் அறைந்து விட்டேன்'' என்று கூறினார்.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் "நபிமார்களுக்கிடையே ஒருவரை மற்றொருவரை விட உயர்த்திப் பேசாதீர்கள். ஏனெனில் மறுமை நாளில் மக்கள் அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள். அப்போது பூமி பிளந்து வெளிப்படுத்துபவர் களில் முதலாவது நபராக நான் இருப்பேன். அப்போது நான் மூஸாவை அர்ஷின் கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருப்பவராகக் காண்பேன். "மூர்ச்சையடைந்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தாரா? அல்லது (தூர்சீனா மலையில் இறைவனின் ஒளியை அவர் கண்ட போது அவர் அடைந்த) முதல் மூர்ச்சை கணக்கிலெடுக்கப்பட்டு (அதுவே போதும்; இப்போது மூர்ச்சையடையத் தேவையில்லையென்று அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டு) விட்டதா? என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத்அல்குத்ரீ(ரலி)

நூல்: புகாரி 2412

இறைத் தூதர்களில் மிக முக்கியமான மாபெரும் இறைத் தூதர் மூஸா (அலை) அவர்கள், மறுமை நாளில் அர்ஷின் கால்களில் ஒன்றைப் பிடித்துக் கொண்டு நிற்பார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த அர்ஷை, அனாமதேய ஃபாஸி தனக்குக் கீழ் இருப்பதாகக் கூறி அவமரியாதை செய்கிறார்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு விருந்தில் இருந்தோம். அப்போது முன்னங்கால் (இறைச்சி) ஒன்று நபி (ஸல்) அவர்களிடம் நீட்டப்பட்டது. அது அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. நபி (ஸல்) அவர்கள் வாயால் பற்றிக் கொண்டு அதிலிருந்து சிறிது உண்டார்கள்.

பிறகு அவர்கள் கூறியதாவது: "நான் மறுமை நாளில் மக்களின் தலைவன் ஆவேன். (மறுமை நாளில்) அல்லாஹ் (மக்களில்) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எவரைக் கொண்டு ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தொயுமா? பார்ப்பவர் அந்த மக்களைப் பார்க்க முடியும். (தம்மை) அழைப்பவர்களை அவர்களும் செவியேற்பார்கள். சூரியன் அவர்களுக்கு அருகில் வரும். அப்போது மக்கள் சிலர் (மற்ற மக்களை நோக்கி) "நீங்கள் எத்தகைய (துன்பகரமான) நிலையில் இருக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு எத்தகைய (ஆபத்தான) நிலை நேர்ந்திருக்கிறது என்பதையும் உணர்ந்து உங்களுக்கு உங்களுடைய இறைவனிடம் பரிந்துரை செய்பவரைப் பார்க்க மாட்டீர்களா?'' என்று கேட்பார்கள். மக்கள் சிலர் "உங்கள் தந்தை ஆதம் (அலை) அவர்கள் (உங்களுக்காகப் பரிந்துரை செய்வார்கள்)'' என்று கூறுவார்கள். எனவே மக்கள் ஆதம் (அலை) அவர்களிடம் சென்று "ஆதமே! நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள். உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான். உங்களுக்குள் தன்(னால் உருவாக்கப்பட்ட) உயிரை ஊதினான். வானவர்களை உங்களுக்குச் சிரம் பணியும் படி உத்தரவிட்டான். அவ்வாறே அவர்களும் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள். உங்களை சொர்க்கத்தில் குடியமர்த்தினான். நீங்கள் உங்களுடைய இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்துரை செய்ய மாட்டீர்களா? நாங்கள் இருக்கும் நிலையையும் எங்களுக்கு நேர்ந்திருக்கும் நிலையையும் நீங்கள் பார்க்க வில்லையா?'' என்று கேட்பார்கள்.

அதற்கு ஆதம் (அலை) அவர்கள் "(நான் செய்த தவறின் காரணத்தால்) என் இறைவன் என் மீது கோபமுற்றான். அதற்கு முன் அதைப் போன்று அவன் கோபித்ததில்லை. அதற்குப் பிறகும் அதைப் போல் அவன் கோபம் கொள்ள மாட்டான். மரத்திலிருந்து (உண்ண வேண்டாமென்று) என்னைத் தடுத்தான். நான் (அவனுக்கு) மாறு செய்தேன். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலையிலுள்ளேன். (எனவே!) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள். நீங்கள் நூஹ் (அலை) அவர்களிடம் செல்லுங்கள்'' என்று கூறுவார்கள்.

உடனே மக்கள் நூஹ் (அலை) அவர்களிடம் சென்று "நூஹே! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு (சட்டங்களுடன் அனுப்பப்பட்ட) முதல் இறைத் தூதர் ஆவீர்கள். உங்களை அல்லாஹ் "நன்றி செலுத்தும் அடியார்'' என்று குறிப்பிட்டுள்ளான். நாங்கள் இருக்கும் அவல நிலையை நீங்கள் பார்க்கவில்லையா? எங்களுக்கு நேர்ந்துள்ள நிலையை நீங்கள் காணவில்லையா? எங்களுக்காக உங்களுடைய இறைவனிடம் பரிந்துரைக்க மாட்டீர்களா?'' என்று கேட்பார்கள்.

அதற்கு அவர்கள் "என் இறைவன் இன்று என் மீது கோபமுற்றுள்ளான். இதற்கு முன் அவன் இதைப் போல் கோபித்ததில்லை. இதற்குப் பிறகும் இதைப் போல் கோபம் கொள்ள மாட்டான். என்னையே நான் காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் (இறுதி) நபி (ஸல்) அவர்களிடம் செல்லுங்கள்'' என்று கூறுவார்.

மக்கள் என்னிடம் வருவார்கள். நான் அர்ஷுக்குக் கீழே ஸஜ்தாச் செய்வேன். அப்போது "முஹம்மதே! உங்கள் தலையை உயர்த்துவீராக! பரிந்துரை செய்யுங்கள். (உங்கள்) பரிந்துரை ஏற்றுக் கொள்ளப்படும். கேளுங்கள். அது உங்களுக்குத் தரப்படும்'' என்று சொல்லப்படும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3340

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அர்ஷுக்குக் கீழ் ஸஜ்தாச் செய்வதன் மூலம் அர்ஷின் மகிமையை நமக்கு உணர்த்துகிறார்கள். ஆனால் ஷாதுலிய்யா கலீபாவான ஃபாஸியோ, அர்ஷ் தனக்குக் கீழ் தான் உள்ளது என்று கூறுவதன் மூலம் இறைத் தூதர் (ஸல்) அவர்களையும் சேர்த்தே இழிவுபடுத்துகிறார்.

நபி (ஸல்) அவர்கள் துன்பம் நேரும் போது "லா இலாஹ இல்லல்லாஹுல் அழீமுல் ஹலீம். லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வல்அர்ளி வ ரப்புல் அர்ஷில் அழீம்'' என்று பிரார்த்திப்பார்கள். (பொருள்: கண்ணியம் மிக்கவனும், பொறுமை மிக்கவனுமாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. வானங்கள் மற்றும் பூமியின் அதிபதியும் மாபெரும் அர்ஷின் அதிபதியுமான அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை.)

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 6345

சோதனையான கட்டத்தின் போது நபி (ஸல்) அவர்கள் ஓதுகின்ற இந்த துஆவில் அர்ஷின் நாயன் என்று கூறுகின்றார்கள். வானங்கள் மற்றும் பூமியின் அதிபதி என்பதற்குச் சமமான மற்றொரு புகழ் வார்த்தையாக அர்ஷின் நாயன் என்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அந்த அளவுக்குச் சிறப்பு வாய்ந்த மகத்துவமிக்க அர்ஷ், ஷாதுலிய்யா தரீக்காவின் பாதிரி ஃபாஸியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றால் அல்லாஹ்வே அவரது கட்டுப்பாட்டில் உள்ளவன் என்றாகி விடாதா?

அல்லாஹ்வின் அந்தஸ்தைக் குறைத்துக் கூறுவதன் மூலம், தான் ஒரு யூத, ஷியா வம்சாவளி, வழித்தோன்றல் என்று தெளிவாக உணர்த்துகின்றார். இவரையும் ஒரு கூட்டம் வலியுல்லாஹ் என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றது என்றால் இவர்கள் எப்படி சுன்னத் வல் ஜமாஅத்தாக இருக்க முடியும்? நிச்சயமாக இவர்களும் ஷியாக்கள் தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்படும் அர்ஷின் அந்தஸ்து மற்றும் மரியாதையைத் தெரிந்த எந்த ஓர் இறை விசுவாசியும் ஃபாஸியின் திமிர் பிடித்த வார்த்தைகளை ஜீரணிக்க மாட்டான். இந்தக் கருத்துக்கள் அடங்கிய ஷாதுலிய்யா பைத்தை நடுச்சந்தியில் வைத்துக் கொளுத்தாமல் விட மட்டான். அவ்வளவு சாபக்கேடான கவிதை வரிகளை ஷாதுலிய்யா தரீக்காவின் தனி வேதமான மவ்லிது தெரிவிக்கின்றது.

ஷாதுலிய்யாவின் பலான ஆசாமி ஃபாஸி இத்துடன் நிற்கவில்லை. அர்ஷ் தனக்குக் கட்டுப்படுகின்றது என்று மட்டும் சொல்லி நிறுத்தி விடவில்லை. அதன் அர்த்தத்தை அடுத்த வரியிலேயே போட்டு உடைக்கின்றார்.

ஒளியும் நான் தான். ஒளிகளும் நான் தான். அந்தரங்கமும் ரகசியமும் நான் தான். நானே சூரியன். என் ஒளியில் பிரகாசிப்பது தான் சந்திரன்.

அர்ஷ் தன் கட்டுப்பாட்டில் உள்ளது என்று ஏன் சொல்கிறார்? என்று நாம் திகைக்க வேண்டிய அவசியமே இல்லை. அர்ஷின் மீது இவர் ஏறி அமர்ந்து விட்டால் அர்ஷ் தானாகவே இவரது கட்டுப்பாட்டில் வந்து விடுகின்றது அல்லவா?

அதாவது இவர் அல்லாஹ்வுடன் இரண்டறக் கலந்து விடுகின்றார். அதனால் தான் ஒளியும், ஒளிகளும் நான் தான் என்று கூறுகின்றார். அல்லாஹ்வும் இவரும் சங்கமமாகி விட்டால் அர்ஷ் இவரது கட்டுப்பாட்டில் வந்து விடுமல்லவா? அதைத் தான் இங்கு கூறுகிறார். அல்லாஹ் தூய்மையானவன். இந்த இணை வைப்புக் கவிதையிலிருந்து நம்மைக் காப்பானாக!

இந்த அபத்தத்தையும் அபாண்டத்தையும் நாம் எப்படிச் சகித்துக் கொள்வது என்றே தெரியவில்லை. எவ்வளவு பெரிய துணிச்சல் என்று பாருங்கள்.

அல்லாஹ், வானங்கள் மற்றும் பூமியின் ஒளியாவான். அவனது ஒளிக்கு உவமை ஒரு மாடம். அதில் ஒரு விளக்கு உள்ளது. அவ்விளக்கு ஒரு கண்ணாடிக்குள் உள்ளது. அக்கண்ணாடி ஒளி வீசும் நட்சத்திரம் போன்றுள்ளது. பாக்கியம் பொருந்திய ஸைத்தூன் (ஒலிவ) மரத்திலிருந்து அது எரிக்கப்படுகிறது. அது கீழ்த்திசையைச் சேர்ந்ததுமன்று. மேல் திசையைச் சேர்ந்ததுமன்று. நெருப்பு படா விட்டாலும் அதன் எண்ணையும் ஒளி வீசுகிறது. (இப்படி) ஒளிக்கு மேல் ஒளியாகவுள்ளது. தான் நாடியோருக்கு அல்லாஹ் தனது ஒளியை நோக்கி வழி காட்டுகிறான். மனிதர்களுக்காக உதாரணங்களை அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

அல்குர்ஆன் 24:35

இந்த வசனத்தில் அல்லாஹ் தன்னை எப்படிக் கூறுகின்றானோ அது போன்றே ஃபாஸி என்ற ஷைத்தானும் கூறுவதாக ஷாதுலிய்யா பைத் கூறுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை வர்ணிக்கும் வார்த்தை வடிவங்களைப் பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுவதற்காக இரவில் எழுந்ததும் "இறைவா! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவை அனைத்தையும் நிர்வகிப்பவன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி அவற்றிலுள்ளவற்றின் உரிமை உனக்கே உரியது. உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒளி நீயே! உனக்கே புகழ் அனைத்தும். வானங்கள் பூமிக்கு அரசன் நீயே! உனக்கே புகழ் அனைத்தும். நீ உண்மையாளன். உன் வாக்குறுதி உண்மை. உன்னுடைய சந்திப்பு உண்மை. உன்னுடைய கூற்று உண்மை. சொர்க்கம் உண்மை. நரகம் உண்மை. நபிமார்கள் உண்மையாளர்கள். முஹம்மது உண்மையாளர். மறுமை நாள் உண்மை. இறைவா! உனக்கே கட்டுப்பட்டேன். உன்னையே நம்பினேன். உன் மீது உறுதியான நம்பிக்கை வைத்துள்ளேன். உன்னிடமே திரும்புகிறேன். உன்னிடமே நீதி கேட்பேன். எனவே நான் முந்திச் செய்த, பிந்திச் செய்கின்ற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த பாவங்களை மன்னித்து விடு. நீயே முற்படுத்துபவன்; பிற்படுத்துபவன். உன்னைத் தவிர வணக்கத்திற்கு உரியவன் வேறு யாரும் இல்லை. உன்னுடைய உதவியின்றி நன்மை செய்யும் ஆற்றலோ தீமையிலிருந்து விடுபடும் ஆற்றலோ இல்லை'' என்று கூறிவார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி 1120

அல்லாஹ் தனது குர்ஆனில் எவ்வாறு தன்னைப் பற்றிக் கூறுகின்றானோ அது போன்ற வார்த்தைகளை நபி (ஸல்) அவர்களும் கூறி, மனம் ஒன்றி ஒருமைப்படுத்திக் கூறி தமது பிரார்த்தனைகளை அவன் முன் சமர்ப்பிக்கிறார்கள்.

திருக்குர்ஆனும், நபிமொழியும் அல்லாஹ்வைப் பற்றிக் கூறும் இந்த வர்ணனைகளை ஃபாஸி என்ற ஷாதுலிய்யா கலீபா அப்படியே தனக்குப் பொருத்திப் பார்க்கிறார்.

"அவனன்றி நான் தான் வணக்கத்திற்குரியவன்'' என்று கூறுபவனுக்கு நரகத்தையே கூலியாக வழங்குவோம். அநீதி இழைத்தோருக்கு இவ்வாறே கூலி வழங்குவோம்.

அல்குர்ஆன் 21:29

தன்னையே கடவுள் என்று கூறும் இந்த சாயிபாபாக்களுக்கு அல்லாஹ் வழங்கும் பரிசு நரகம் தான் என்று இந்த வசனம் தெளிவாக அறிவிக்கின்றது.

இப்படிப்பட்ட இந்த வார்த்தைகளைத் துணிந்து யார் சொல்வார்கள்? யூத வர்க்கம் தான்.

"அளவற்ற அருளாளன் பிள்ளையை ஏற்படுத்திக் கொண்டான்'' என்று அவர்கள் கூறுகின்றனர். அபாண்டத்தையே கொண்டு வந்து விட்டீர்கள். அளவற்ற அருளாளனுக்குப் பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதிடுவதால் வானங்கள் வெடித்து, பூமி பிளந்து மலைகள் நொறுங்கி விடப் பார்க்கின்றன. பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளும் அவசியம் அளவற்ற அருளாளனுக்கு இல்லை. வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.

அல்குர்ஆன் 19:88-93

யூதர்களின் ஏகபோக வாரிசுகளான ஷியாக்களும் அல்லாஹ்வின் தன்மைகளை மனிதர்களுக்கு வழங்கி அழகு பார்ப்பவர்கள் என்பதைக் கடந்த இதழ்களில் கண்டோம். அதைத் தான் இந்த ஷாதுலிய்யாக்கள் எதிரொலிக்கின்றனர்.

திருக்குர்ஆனின், திருத்தூதரின் கட்டளைகளை உணர்ந்தவர்கள் இது போன்ற அகம்பாவமான வார்த்தைகளை ஒரு போதும் சொல்ல மாட்டார்கள்.

அல்லாஹ்வை அவமதிப்பது, அவனுடைய இடத்தில் தன்னைக் கொண்டு வந்து நிறுத்துவது அனைத்துமே இறைவனுக்கு இணை கற்பிக்கும் ஷிர்க் மற்றும் குஃபர் ஆகும். இந்த இணை வைப்பையும், இறை மறுப்பையும் தான் ஷாதுலிய்யா கட்சியினர் அவ்ராதுத் தொகுப்புகளில் ஓதிக் கொண்டிருக்கின்றனர்.

ஷாதுலிய்யா பக்தர்களே! நாம் சுவனத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் இந்த அவ்ராதுத் தொகுப்புகளைத் தீயில் போட்டு விட்டு, குர்ஆன் ஹதீஸ் கூறும் தூய பாதையின் பக்கம் திரும்ப வேண்டும். இல்லையேல் நரகத் தீயில் நிரந்தரமாக வெந்து சாக வேண்டும்.

அல்லாஹ் நம் அனைவரையும் காப்பானாக!
ஷியாக்கள் ஓர் ஆய்வு - 11
நபிமார்களை இழிவுபடுத்துதல்

அபூஉஸாமா

அல்லாஹ்வுக்கு அறியாமையைக் கற்பித்து, அவனது கண்ணியத்திற்குக் களங்கத்தை ஏற்படுத்திய ஷியாக்கள், மலக்குகளின் கண்ணியத்திற்குக் களங்கம் ஏற்படுத்தியதையும், அவர்களையும் மட்டம் தட்டி எழுதியிருப்பதையும் கண்டோம்.

அல்லாஹ்விடமும் அவனது மலக்குகளிடமுமே விளையாட்டுக் காட்டும் இந்த ஷியா எனும் இறை மறுப்பாளர்கள் அவனது தூதர்களிடம் விளையாட்டுக் காட்டாமல் இருப்பார்களா? நிச்சயம் காட்டுவார்கள். அல்லாஹ்வின் தூதர்களிடம் அவர்கள் காட்டியிருக்கும் விளையாட்டை, விஷமிக்க சேட்டைகளை நாம் இங்கே பார்ப்போம்.

அல்லாஹ் எனது விலாயத்தை (இறை நேசப் பதவியை) வானத்தில் உள்ளவர்களிடமும் (மலக்குகள்), பூமியில் உள்ளவர்களிடமும் காண்பித்தான். அதைச் சிலர் ஒப்புக் கொண்டனர்; சிலர் மறுத்தனர். யூனுஸ் நபி அதை ஒப்புக் கொள்ள மறுத்து விட்டார். அதனால் அவர் அதை ஒப்புக் கொள்கின்ற வரை அவரை அல்லாஹ் மீன் வயிற்றில் சிறை வைத்து விட்டான்.

நூல்: பஸாயிருத் தரஜாத்

ஷியாக்களின் திமிரை, தீவிர இறை மறுப்பை இங்கே தெளிவாகக் காணலாம்.
இறைக் கோபமும் சிறை வாசமும்

அல்லாஹ், தனது தூதர் யூனுஸ் அவர்களை எதற்காக மீன் வயிற்றில் சிறை வைத்தான்?

அதைத் திருக்குர்ஆனிலிருந்து பார்ப்போம்.

எல்லா இறைத் தூதர்களையும் போலவே யூனுஸ் நபி தமது சமுதாயத்தாரிடம் சத்தியத்தைப் போதிக்கிறார்கள். மக்கள் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.

எனவே அந்தச் சமுதாயத்தின் மீது வேதனை நிச்சயமானது. இறை வேதனை வரும் போது இறைத் தூதர்கள் அந்த ஊரை விட்டும் வெளியேறி விடுவர். அந்த அடிப்படையில் யூனுஸ் நபியும் வெளியேறி விடுகின்றார்.

ஆனால் அந்தச் சமுதாயத்தினர் வேதனை வருமுன் திருந்தி விட்டனர். உலக வரலாற்றில் வேதனை வரு முன் இவ்வாறு திருந்திய சமுதாயம் யூனுஸ் நபியின் சமுதாயம் மட்டும் தான் என்று சொல்ல வேண்டும். இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் வெகுவாகப் பாராட்டிச் சொல்கிறான்.

(கடைசி நேரத்தில்) நம்பிக்கை கொண்டு, அந்த நம்பிக்கை பயன் அளித்த யூனுஸ் சமுதாயம் தவிர வேறு ஊர்கள் இருக்கக் கூடாதா? அவர்கள் நம்பிக்கை கொண்ட போது இவ்வுலக வாழ்க்கையில் இழிவு தரும் வேதனையை அவர்களை விட்டும் நீக்கினோம். அவர்களுக்குக் குறிப்பிட்ட காலம் வரை வசதி வழங்கினோம்.

அல்குர்ஆன் 10:98

தமது பிரச்சாரத்தை ஏற்காத மக்கள் அழிந்து போயிருப்பார்கள் என்று எதிர்பார்த்து வந்த யூனுஸ் நபிக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. வேரறுந்த மரங்களாக வீழ்ந்து கிடப்பார்கள் என்று எண்ணியிருந்த யூனுஸ் நபியின் கண் முன்னால் சீராக, சிறந்த மக்களாக அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்தனர். இதைக் கண்ட யூனுஸ் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் மீதே கோபம் கொண்டார்கள்.

அதனால் அங்கிருந்து வெளியேறினார்கள். கடலை நோக்கிச் சென்று கப்பலில் பயணமாகின்றார்கள். இதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்குகின்றது.

யூனுஸ் தூதர்களில் ஒருவர். நிரப்பப்பட்ட கப்பலை நோக்கி அவர் ஒளிந்தோடிய போது, அவர்கள் சீட்டுக் குலுக்கினர். தோற்றவர்களில் அவர் ஆகி விட்டார். இழிந்தவராக இருக்கும் நிலையில் அவரை மீன் விழுங்கியது. அவர் (நம்மை) துதிக்காது இருந்தால் அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அதன் வயிற்றிலேயே தங்கியிருப்பார். அவரை நோயுற்றவராக வெட்ட வெளியில் எறிந்தோம். அவர் மீது (நிழல் தருவதற்காக) சுரைக் கொடியை முளைக்கச் செய்தோம். அவரை ஒரு லட்சம் அல்லது (அதை விட) அதிகமானோருக்குத் தூதராக அனுப்பினோம். அவர்கள் நம்பிக்கை கொண்டனர். குறிப்பிட்ட காலம் வரை அவர்களுக்கு வசதிகளை அளித்தோம்.

அல்குர்ஆன் 37:139-148

தன்னிடமே கோபம் கொண்டு சென்ற யூனுஸ் மீது அல்லாஹ் கொண்ட கோபத்தைப் பின்வரும் வசனத்தில் தெரிவிக்கின்றான்.

மீனுடையவர் (யூனுஸ்) கோபித்துக் கொண்டு சென்றார். "அவர் மீது நாம் சக்தி பெற மாட்டோம்' என்று நினைத்தார். "உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீ தூயவன். நான் அநீதி இழைத்தோரில் ஆகி விட்டேன்'' என்று இருள்களிலிருந்து அவர் அழைத்தார்.

அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். கவலையிலிருந்து அவரைக் காப்பாற்றினோம். இவ்வாறே நம்பிக்கை கொண்டோரைக் காப்பாற்றுவோம்.

அல்குர்ஆன் 21:87. 88

யூனுஸ் நபி அனுபவித்த சிறைவாசம், மேன்மையும் மேலாண்மையும் மிக்க அல்லாஹ்வின் மீது அவர் கொண்ட கோபத்தினால் தான் என்று திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்கின்றது. ஆனால் இந்த ஷியா விஷமோ அலீயின் விலாயத்தை யூனுஸ் நபி ஏற்க மறுத்ததால் தான் என்று கூறுகின்றது. இது அப்பட்டமான இறை மறுப்பில்லையா?

இது ஒரு புறம் என்றால், இவ்வாறு கூறுவதன் மூலம் யூனுஸ் நபியை விட அலீ (ரலி) அவர்களை உயர்த்திக் காட்டி இறை மறுப்பின் உச்சக்கட்டத்திற்குச் செல்கிறது ஷியாயிஸம்.
தூதர்களுக்கு மேலான ஷியா இமாம்கள்?

அலீ (ரலி) அவர்களை இறைத் தூதர்களுக்கு மேலாக உயர்த்துவதுடன் இவர்கள் நிற்கவில்லை. தங்களது பன்னிரெண்டு இமாம்களையும் இறைத் தூதர்களுக்கு மேலாக உயர்த்தி மகிழ்கின்றார்கள்.

யூசுப் தம்மார் வழியாக கலீனீ அறிவிப்பதாவது:

நாங்கள் அபூஅப்துல்லாஹ் உடன் ஓர் அறையில் ஷியா ஜமாஅத்தினர் சகிதமாக அமர்ந்திருந்தோம். அப்போது அவர், "ஓர் உளவாளி நம்மைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்'' என்று கூறினார். உடனே நாங்கள் வலப் பக்கமும், இடப் பக்கமும் திரும்பிப் பார்த்து விட்டு, "உளவாளி யாரும் இல்லையே!'' என்று சொன்னோம். அதற்கு அவர், "கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கஅபாவின் இறைவன் மீது ஆணையாக! கட்டமைப்பின் நாயன் மீது ஆணையாக! நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில் இருந்திருந்தால் இவ்விருவரை விட நான் தான் அறிந்தவன் என தெரிவித்திருப்பேன். இவ்விருவருக்கும் தெரியாதவற்றை அவர்களிடம் தெரிவித்திருப்பேன். ஏனெனில் மூஸாவும், கிழ்ரும் நடந்து முடிந்தவை பற்றிய ஞானம் மட்டுமே அளிக்கப்பட்டிருந்தனர். அடுத்து நடப்பவை, கியாமத் நாள் வரை நடக்கவிருப்பவை பற்றிய ஞானம் அவ்விருவருக்கும் வழங்கப் படவில்லை'' என்று பதிலளித்தார்.

கலீனீ மீண்டும் அறிவிப்பதாவது:

"வானங்கள், பூமியில் உள்ளவற்றை நான் நன்கு அறிகிறேன். சுவனத்தில் உள்ளதையும், நரகத்தில் உள்ளதையும் நான் நன்கு அறிகிறேன். நடந்ததையும், நடக்கவிருப்பதையும் நான் நன்கு அறிகிறேன்'' என்று அப்துல்லாஹ் கூறினார்.

நூல்: அல்காஃபி ஃபில் உசூல்

பாகம்: 1, பாடம்: நடந்தவற்றை அறிகின்ற இமாம்கள்

"நான் மூஸாவுக்கும் கிழ்ருக்கும் மத்தியில் இருந்திருந்தால் இவ்விருவரை விட நான் தான் அறிந்தவன் என தெரிவித்திருப்பேன்'' என்று ஷியா இமாம் கூறுகின்றார். இதிலிருந்து ஷியாக்களின் திமிர்த்தனத்தை நாம் தெரிந்து கொள்ளலாம்.

யூனுஸ் நபியை விட அலீ உயர்ந்தவர் என்று கூறிய ஷியாக்கள், ஒரு படி மேலே சென்று மூஸா, கிழ்ர் ஆகியோரை விட தங்கள் இமாம்கள் மேலானவர்கள் என்று தூக்கி நிறுத்துகின்றார்கள்.

இங்கு இவர்களது நெஞ்சழுத்தத்தையும், இறை மறுப்பின் ஆழத்தையும் நாம் உணரலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிக மிகத் தன்னடக்கத்துடன், தம்மை மூஸாவுடன் மட்டுமல்ல, யூனுஸ் நபியை விடவும் உயர்த்தக் கூடாது என்று கட்டளையிடுகின்றார்கள்.

யூனுஸ் நபி அல்லாஹ்வின் முடிவில் கோபம் கொண்டதால், அவரைப் போன்று ஆகி விடாதீர் என்று முஹம்மத் (ஸல்) அவர்களை நோக்கி அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்!

அல்குர்ஆன் 68:48

அல்லாஹ்வின் மீது கோபம் கொண்டது யூனுஸ் நபிக்கு ஒரு குறை! இந்தக் குறை அவர்களுக்கு ஏற்பட்டதால் மக்கள் அவரைக் குறைவாக எண்ணி விடக் கூடாது என்பதற்காகவும், இதை வைத்துக் கொண்டு தம்மை யூனுஸ் நபியை விட உயர்த்தி விடக் கூடாது என்பதற்காகவும் நபி (ஸல்) அவர்கள் இந்த முன்னெச்சரிக்கையை விடுக்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர், (என்னைப் பற்றி) நான் யூனுஸ் பின் மத்தா அவர்களை விடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 3415, முஸ்லிம் 4376

இறைத் தூதர்களுக்கு இடையில் ஏற்றத் தாழ்வு காட்டுவதை கடுமையாகக் கண்டிக்கும் நபி (ஸல்) அவர்கள், மூஸா நபியவர்களுக்கு மறுமையில் கிடைக்கும் மரியாதையையும் மாண்பையும் நமக்குத் தெளிவுபடுத்தியுள்ளார்கள். மறுமை நாளில் அனைவரும் மூர்ச்சையாகி எழும் போது மூஸா நபியவர்கள் அர்ஷைப் பிடித்துக் கொண்டு நிற்பார்கள் என்று கூறியுள்ளார்கள்.

இப்படிப்பட்ட மூஸா நபியவர்களைத் தான் இந்த ஷியா விஷக் கிருமிகள், தங்கள் பன்னிரெண்டு இமாம்களை விட உயர்த்திக் கூறுகின்றார்கள்.

ஐம்பது நேரத் தொழுகைகளை ஐந்து நேரமாகக் குறைப்பதற்குக் காரணமாக இருந்தவர்கள் மூஸா (அலை) அவர்கள். கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பது போல் இந்த இறை மறுப்பாளர்களுக்கு எங்கே மூஸா நபியின் அருமை புரியப் போகின்றது.

இவர்கள் முஸ்லிம்களாக இருந்தால் அல்லவா மூஸா நபியவர்களால் இந்தச் சமுதாயத்திற்கு விளைந்த அருட்கொடை விளங்கும்? இவர்கள் கடைந்தெடுத்த காஃபிர்கள் என்பதால் இவர்களுக்கு இது விளங்கப் போவதில்லை.

நபி (ஸல்) அவர்கள் யூனுஸ் நபியை விடவும் தம்மை உயர்த்தாதீர்கள் என்று கூறியுள்ளார்கள். ஆனால் இந்த ஷியா பாவிகளோ இந்தக் கட்டளையைப் புறந்தள்ளி விட்டு அலீ (ரலி) அவர்களை யூனுஸ் நபியை விடவும் உயர்த்துகின்றார்கள். தங்கள் இமாம்களை மூஸா, கிழ்ரை விடவும் உயர்த்துகின்றார்கள். இன்னும் ஒரு படி மேலே போய் முஹம்மது (ஸல்) அவர்களை விடவும் அலீயை உயர்த்துகின்றார்கள்.

அதை இப்போது பார்ப்போம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்
ஷியாக்கள் ஓர் ஆய்வு தொடர் - 12
ஜிப்ரயீலை மட்டம் தட்டும் ஷியாக்கள்

அபூஉஸாமா
ஓங்கிய வாள்! தாங்கிய ஜிப்ரீல்!

கைபர் போரின் போது அலீ (ரலி) அவர்கள் கண் வலியினால் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

அலீ (ரலி) அவர்கள் கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டிருந்தார்கள். அவர்களுக்குக் கண் வலி ஏற்பட்டிருந்தது. நான் அல்லாஹ்வின் தூதருடன் (போருக்குச்) செல்லாமல் பின்தங்கி விட்டேனே என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். எந்த நான் காலை வேளையில் கைபரை நபி (ஸல்) அவர்கள் வெற்றி கொண்டார்களோ அந்த நான் மாலை நேரம் வந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன் என்றோ, அத்தகைய ஒரு மனிதர் இந்தக் கொடியைப் பிடித்திருப்பார் என்றோ அல்லது, அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் நாளை இந்தக் கொடியைத் தரப் போகிறேன் என்றோ சொல்லி விட்டு, அவருக்கு அல்லாஹ் வெற்றியப்பான் என்று கூறினார்கள். நாங்கள் எதிர்பார்க்காத நிலையில் அலீ (ரலி) அவர்கள் வந்து எங்களுடன் இருக்கக் கண்டோம். உடனே மக்கள், இதோ, அலீ அவர்கள்! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்கடம் கொடியைக் கொடுக்க, அவர்களுக்கு அல்லாஹ் வெற்றியத்தான். அறிவிப்பவர்: சலமா பின் அக்வஃ (ரலி)

நூல்: புகாரி 2975

அப்போரில் அலீ (ரலி) அவர்கள் யூதர்களின் மன்னன் மர்ஹப் என்பவனைக் கொலை செய்து வீழ்த்தி விடுகிறார்கள். (முஸ்லிம் 3696)

இது தான் கைபர் போரில் நடந்த உண்மை நிகழ்வு! ஆனால் இந்த நிகழ்வுக்கு ஷியாக்கள் எப்படி தெய்வீகச் சாயம் பூசுகின்றார்கள் என்று பாருங்கள்!

கைபர் போர் அலீ (ரலி) கையினால் வெற்றி கண்டது. அப்போரில் அவர் யூதர்களின் மன்னன் மர்ஹபைக் கொன்றதும் நபி (ஸல்) அவர்களிடம் நற்செய்தி கூற ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் நற்செய்தி தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் வினவிய போது ஜிப்ரயீல் (அலை) அவர்கள் அளித்த பதில் இதோ:

அல்லாஹ்வின் தூதரே! மர்ஹபாவைக் கொல்வதற்கு அலீ (ரலி) வாளை உயர்த்திய மாத்திரத்திலேயே அலீயின் கையை அந்தரத்தில் பிடித்து வைக்கும்படி இஸ்ராபீல், மீகாயீல் ஆகிய இரு மலக்குகளுக்கு அல்லாஹ் உத்தரவிட்டு விட்டான். ஏனெனில் அவர் தனது முழு சக்தியையும் பயன்படுத்தி வாளை வீசினால் பூமியின் அடுக்குகளுக்குள் பாய்ந்து பூமி தலைகீழாகப் புரண்டு விடும். அதனால் தான் அவ்விரு மலக்குகளுக்கும் இப்படி உத்தரவிட்டு விட்டான்.

அத்துடன், ஜிப்ரயீலே! பூமியின் அதள பாதாளத்திற்கு விரைக! வாளின் வீச்சு பூமியின் பாதாளத்தில் பாய்ந்து விடாமல் தடுத்து நிறுத்துக! என்று அல்லாஹ் எனக்கும் ஓர் உத்தரவு போட்டான். உடனே நான் வந்து அலீயின் வாளைத் தடுத்து நிறுத்திப் பிடித்துக் கொண்டிருந்தேன்.

நான் ஏற்கனவே இதற்கு முன்பு லூத் நபியின் சமுதாயம் வாழ்ந்த மதாயின் நகரங்களை என் இறக்கைகளில் ஒன்றால் தூக்கி வைத்திருந்தேன். அவை ஏழு நகரங்கள். அந்நகரங்களில் உள்ள கோட்டைகளின் அடித்தளங்கள் ஏழாவது பூமி வரை பிடிமானம் கொண்டிருந்தன. அவற்றை ஸஹர் நேரம் வரை தாங்கிப் பிடித்திருந்தேன். அல்லாஹ் உத்தரவிட்டதும் அந்நகரங்களை தலைகீழாகப் புரட்டினேன். ஆனால் அவை எனக்கு அறவே பாரமாகத் தெரியவே இல்லை. அலீயின் வாளோ எனக்கு மிகவும் பாரமாக இருந்தது.

இது தான் நபி (ஸல்) அவர்களிடம் ஜிப்ரயீல் தெரிவித்த விளக்கத்தின் சாராம்சமாகும்.

இவ்வாறு புர்ஸீ அறிவிப்பதாக ஜஸாயிதி கூறுகின்றார்.

நூல்: அல் அன்வாருன் நுஃமானியா

ஸஃபிய்யா (ரலி) அவர்களின் முகத்தில் காயத் தழும்பு இருந்தது. (ஸஃபிய்யா அவர்களை இந்தப் போருக்குப் பின்னர் தான் நபியவர்கள் திருமணம் முடித்தார்கள்) அதை நபி (ஸல்) அவர்கள் விசாரித்த போது ஸஃபிய்யா (ரலி) தெரிவித்ததாவது:

கைபர் கோட்டையை அலீ கைப்பற்ற வந்த போது அது அவருக்கு மிகச் சிரமமானது. அதனால் அவர் கோட்டையை ஓர் உலுக்கு உலுக்கினார். கோட்டை மேல் இருந்தவர்கள் அனைவரும் கீழே விழுந்து விட்டனர். கட்டில் மீது அமர்ந்திருந்த நான் அவர்கள் மீது விழுந்தேன். அப்போது கட்டில் என் மீது விழுந்து இந்தக் காயம் ஏற்பட்டு விட்டது.

இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அளித்த பதில்:

ஸஃபிய்யாவே! அலீ கோபப்பட்டு கோட்டையை உலுக்கியதும், அலீயின் கோபத்தைக் கண்டு அல்லாஹ்வும் கோபப்பட்டு வானங்களை ஓர் உலுக்கு உலுக்கினான். வானங்கள் அனைத்தும் குலுங்கின. மலக்குகள் பயந்து முகங்குப்புற விழுந்து விட்டனர்.

அலீயின் தெய்வீகத் துணிச்சலுக்கு இந்தச் சம்பவம் போதுமானது.

இரவு நேரத்தில் கைபர் கோட்டையின் கதவை அடைப்பதற்கு மட்டும் நாற்பது பேர் தேவைப்பட்டனர். அலீ கோட்டைக்குள் நுழைந்த போது அதிகத் தாக்குதல் காரணமாக கேடயம் அவரது கையிலிருந்து பறந்து விட்டது. உடனே கோட்டையின் கதவை அவர் கழற்றி விட்டார். அது அவருடைய கையில் கேடயமாகத் திகழ்ந்தது. கடைசியில் அல்லாஹ் கைபர் கோட்டையை அலீ வெற்றி கொள்ளச் செய்தான்.

நூல்: அல் அன்வாருன் நுஃமானியா

புர்ஸீ என்ற இந்தப் புறம்போக்கு, ஜிப்ரயீல் மீகாயீலை எப்படி மட்டம் தட்டி, அலீயை உயர்த்துகின்றார் என்று பாருங்கள்.

(அவர்) வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு உரியவனிடத்தில் தகுதிபெற்றவர்.

அல்குர்ஆன் 81:20

ஜிப்ரயீலின் வலிமையை அல்லாஹ் சிலாகித்து, சிறப்பித்துச் சொல்கிறான். இந்த ஷியா ஷைத்தான்கள் ஜிப்ரயீலை விட அலீ வலிமையானவர் என்று குறிப்பிடுகின்றனர்.

ஒரு வாள் என்பது இரண்டு அல்லது மூன்று அடி நீளமிருக்கும். இந்த வாள் பூமியில் புகுந்து அதள பாதாளத்தைப் புரட்டி விடுமாம். புரூஸி சொல்கின்ற இந்தப் போலிக் கதையில் புராணங்கள் தோற்று விடும்.

இந்த மூன்றடி வாள் ஜிப்ரயீலின் இறக்கையில் பாரமாக இருக்கின்றது.

வானங்களையும், பூமியையும் படைத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். (அவன்) வானவர்களை இரண்டிரண்டு, மும்மூன்று நான்கு நான்கு சிறகுகளைக் கொண்ட தூதர்களாக அனுப்புவான். அவன் நாடியதைப் படைப்பில் அதிகமாக்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 35:1

மலக்குகளின் இறக்கைகளைப் பற்றி அல்லாஹ் பெருமையாகச் சொல்கின்றான் என்றால் அந்த இறக்கைகளுக்கு ஒரு பிரம்மாண்டம் இருப்பதால் தான்.

இதை நாம் புகாரியில் இடம் பெற்றுள்ள ஹதீஸிலும் பார்க்கலாம்.

நான் ஆயிஷா (ரலி) அவர்கடம், அப்படி (நபியவர்கள் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை) என்றால், பிறகு அவர் (நம் தூதரின் பக்கம்) நெருங்கி, அருகே வந்தார். அந்நெருக்கத்தின் அளவு (வளைந்த) வில்லின் இரு முனைகளைப் போல் அல்லது அதை விடச் சமீபமாக இருந்தது என்னும் (53:8,9) இறை வசனம் எங்கே? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அது (குர்ஆனில் அவர் நெருங்கி அருகே வந்தார் என்பதில் அவர் என்பது) ஜிப்ரீல் (அலை) அவர்களைக் குறிக்கின்றது. ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்கடம் ஒரு மனிதரின் உருவில் வருவார்கள். இந்த முறை அவர்கள் வந்தது அவர்களுடைய உண்மையான உருவம் எதுவோ அந்த உருவத்திலாகும். அதனால் தான் அவர் அடிவானத்தையே அடைத்துக் கொண்டார் என்று பதிலத்தார்கள்.

அறிவிப்பவர்: மஸ்ரூக்

நூல்: புகாரி 3235

அடிவானத்தை அடைத்து நிற்கின்ற, அகன்ற, அற்புத இறக்கைகளுக்கு அலீயின் வாள் கனக்கிறதாம். ஜிப்ரயீலுக்கு அது வலிக்கிறதாம். பொய்யன் புரூஸி எப்படிக் காதில் பூச்சுற்றுகின்றார் என்று பாருங்கள்.

மனிதனால் ஒரு பேரீச்ச மரத்தைக் கூட தன்னந்தனியாகக் கழற்ற முடியாது. இது தான் உண்மை! யதார்த்தம்! ஆனால் இந்த ஷியாக்களோ, கோட்டையையே அலீ உலுக்கினாராம். அதனால் கோட்டை குலுங்கியதாம். இதனைத் தொடர்ந்து அல்லாஹ்வும் வானத்தை உலுக்கினானாம். எப்படி நா கூசாமல் புளுகித் தள்ளுகிறார்கள் என்று பாருங்கள்.

இவ்விரு பொய் சம்பவங்களின் மூலம் புருஸீ நிலை நிறுத்த முயல்வது, அலீ (ரலி) அவர்களுக்கு தெய்வத் தன்மை, தெய்வீக சக்தி இருக்கின்றது என்பதைத் தான்.

இந்து மதப் புராணங்களில் வரும் தெய்வீகக் கோட்பாட்டை, மனிதனைக் கடவுளாக்கும் கோட்பாட்டை அலீயின் மீது திணித்து அவரைக் கடவுளாக்குகின்றனர்.

இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்? (அல்குர்ஆன் 9:30)

வளரும் இன்ஷா அல்லாஹ்
ஷியாக்கள் ஓர் ஆய்வு தொடர் - 13
மாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்

அபூஉஸாமா

ஷியாக்களின் நூலான அல்அன்வாருன் நுஃமானியா என்ற நூலில் இடம் பெற்ற இரண்டு செய்திகளைக் குறிப்பிட் டிருந்தோம். இந்த இரண்டு செய்திகளிலும், அலீ (ரலி) அவர்களுக்கு தெய்வீகத் தன்மையைக் கொடுப்பதுடன் நிற்காமல், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட அலீயை மிக அதிகமாக உயர்த்துகின்றனர் ஷியாக்கள்.

ஜிப்ரீல் (அலை) அவர்கள் அலீ (ரலி) அவர் களைப் பாராட்டுகின்ற விதம், வர்ணிக்கின்ற வர்ணனைகள் அனைத் தும், நபி (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்தவர் என்று பறை சாற்றும் வகையில் அமைந்துள்ளன.

அது போல் நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி)யிடம், அலீயைப் பற்றித் தெரிவித்ததாக இந்நூலில் கூறப்படும் கருத்துக்கள், தம்மை விட அலீ உயர்ந்தவர், அலீ கோபப்பட்டால் அல்லாஹ் கோபப்படுவான்; அவர் கோட்டையை உலுக்கினால் அல்லாஹ் வானத்தை உலுக்குவான்; அந்த அளவுக்கு அலீ உயர்ந்தவர் என்று குறிப்பிடுவது போல் அமைந்திருக்கின்றன.

இப்படித் தான் இந்த ஷியா ஷைத்தான் அந்தச் செய்திகளில் எழுதி வைத்துள்ளான்.

ஷியாக்களின் வேலையே அலீயை உயர்த்தி, நபிமார்கள், மலக்குமார்கள் அத்தனை பேரையும், நபி (ஸல்) அவர்கள் உட்பட அத்தனை பேரையும் மட்டம் தட்டுவது தான்.

வெளிப்படையில் பார்க்கும் போது நபி (ஸல்) அவர்களை உயர்த்துவது போல் தோன்றும். ஆனால் உள்ளுக்குள் தாக்குவது தான் இவர்களது வேலை.

இது தொடர்பாக நிஃமத்துல்லாஹ் அல்ஜஸாயிரி என்பவன் கூறுவதைக் கேளுங்கள்.

தலைமுறை தலைமுறையாய் தொடரும் ஹதீஸ்களின் அடிப்படையில் நம்முடைய நபி தான் மற்ற நபிமார்களை விடச் சிறந்தவர்கள் என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு கிடையாது. இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் அலீ, தூய்மையான (?) ஷியா இமாம்கள் ஆகியோர் நபிமார்களை விடச் சிறந்தவர்களா என்பதில் தான் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. ஆனால் ஷியா இமாம்களின் பாட்டனார் முஹம்மது (ஸல்) அவர்கள் விஷயத்தில் எந்தக் கருத்து வேறுபாடும் நிலவவில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அலீ மற்றும் இமாம்களை விடச் சிறந்தவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

உலுல் அஸ்ம் என்ற தரத்தில் உள்ள நபிமார்களைத் தவிர மற்ற நபிமார்களை விட இந்த இமாம்கள் சிறந்தவர்கள் என்று ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்.

உலுல் அஸ்ம் தரத்திலுள்ள நபிமார்களும் இந்த இமாம்களும் சமமானவர்கள் என்று வேறு சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.

பிந்திய காலத்து அறிஞர்கள் நமது இமாம்கள், உலுல் அஸ்ம் நபிமார்களை விடச் சிறந்தவர்கள் என்ற கருத்துக் கொண்டிருக்கின்றனர். அது தான் சரியான கருத்தாகும்.

நூல்: ஜஸாயிர் எழுதிய அல் அன்வாருன் நுஃமானியா, பக்கம்: 128

நிஃமத்துல்லாஹ் (லஃனத்துல்லாஹ்) ஜஸாயிர் என்பவன், நபிமார்களை விடத் தங்கள் இமாம்கள் சிறந்தவர்கள் என்று கூறத் துணிந்திருக்கின்றான். நபி (ஸல்) அவர்களுக்கு விதிவிலக்குக் கொடுத்து அவர்களுக்குக் கண்ணியம் சேர்த்திருக்கிறான் என்று நாம் நினைக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல! இந்த விதிவிலக்கை அவன் வேண்டா வெறுப்பாகவே கொடுத்திருக்கிறான். இதை முல்லா முஹம்மது பாக்கிர் என்பவன் எழுதிய பிஹாருல் அன்வார் என்ற நூலில் இடம் பெறும் செய்தியிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் அலீயை நோக்கி, அலீயே! எனக்குக் கிடைக்காததெல்லாம் உனக்குக் கிடைத்திருக்கிறது. ஃபாத்திமா உன் மனைவி! ஃபாத்திமாவைப் போன்று எனக்கு மனைவி இல்லை. உனக்கு ஃபாத்திமா மூலம் இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அவ்விருவர் போல் எனக்குப் பிள்ளைகள் இல்லை. கதீஜா உன் மனைவியின் தாயார். எனக்கு அவரைப் போன்று அன்பான மாமியார் இல்லை. நான் உனது அன்பாளன். உன் போன்ற அன்பாளன் எனக்கு இல்லை. உறவு முறையில் ஜஃபர் உன் சகோதரர். ஜஃபர் போன்ற சகோதரர் எனக்கு இல்லை. மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வரும் ஹாஷிமி கிளையைச் சார்ந்தவருமான ஃபாத்திமா உனது தாயார். (அலீயின் தாயார் பெயர் ஃபாத்திமா) அவர் போன்ற தாயாரை நான் அடைவது எப்போது? என்று கூறினார்கள்.

நூல்: பிஹாருல் அன்வார், பக்கம்: 129

பொய்யன் முஹம்மது பாக்கிர் அளக்கும் இந்தச் சம்பவம் தெரிவிப்பது என்ன?

நபி (ஸல்) அவர்களை விட அலீ பன்மடங்கு உயர்ந்தவர்; பல்வேறு கிடைப்பதற்கரிய பாக்கியங்களைப் பெற்றவர் என்று சித்தரித்து நபி (ஸல்) அவர்களை மட்டம் தட்டுகின்றான். அவர்களது தரத்தை அலீயின் தரத்திற்குக் கீழே தாழ்த்தியிருக்கிறான். எனவே ஜஸாயிர் என்பவன், நபிமார்களை விட ஷியா இமாம்கள் உயர்ந்தவர்கள் என்பதிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு விதிவிலக்குக் கொடுத்திருப்பது வெறும் வேஷம் தான்.

முஃபீத் என்ற ஷியாக்களின் தலைவன் தெரிவிக்கின்றான்.

(ஹுதைபாவே!) என்னிடம் குறுக்கிட்ட மனிதரை நீ பார்த்தாயா? என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஆம் என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவர் ஒரு வானவர். இந்த நேரத்திற்கு முன்னர் பூமியில் அவர் இறங்கியதே கிடையாது. அலீக்கு ஸலாம் சொல்ல வேண்டும் என்று கண்ணியமிக்க அல்லாஹ்விடம் அவர் அனுமதி கேட்டார். அல்லாஹ் அவருக்கு அனுமதி கொடுத்ததும் அலீக்கு வந்து ஸலாம் சொன்னார் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா

நூல்: முஃபீத் எழுதிய அல் ஆமாலி

இந்த மலக்கு நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்ல வருகிறார் என்றால் அது நபி (ஸல்) அவர்களுக்குரிய மரியாதை எனலாம். ஆனால் அவர் அலீக்கு ஸலாம் சொல்ல வருகின்றார். அதை நபி (ஸல்) அவர்கள் பார்த்து ஹுதைபாவிடம் தெரிவிக்கின்றார்கள் என்றால், நபி (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்த பதவியில் இருப்பது போலவும், நபியவர்கள் அலீக்கு தனிச் செயலாளர் போலவும் இவன் சித்தரிக்கின்றான்.

நபி (ஸல்) அவர்களை இந்த முஃபீத் என்ற ஷியா ஷைத்தான் எந்தத் தரத்தில் கொண்டு நிறுத்துகிறான் என்று பாருங்கள். எந்தத் தகுதியை அவர்களுக்குக் கொடுக்கிறான் என்று பாருங்கள்.

ஷியா என்பது பொய் என்ற புற்று நோயைப் பின்னணியாகக் கொண்டது. அந்தப் புற்று நோய் எப்படிப் பன்மடங்காக விரிந்து வேகமாகப் பரவுகின்றது என்று பார்ப்போம்.

தமது தோழர்களின் கூட்டத்தில் அமர்ந்திருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி அலீ (ரலி) வந்த போது, ஆதமின் படைப்பையும், நூஹின் ஞானத்தையும், இப்ராஹீமின் சகிப்புத் தன்மையையும் காண விரும்புவோர் அலீயைப் பார்த்துக் கொள்ளட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். இவ்வாறு தன் தந்தை வழியாக அபூ இஸ்ஹாக் அறிவிக்கின்றார். இதை முஃபீத், தனது ஆமாலி நூலில் 132ம் பக்கத்தில் குறிப்பிடுகின்றான். ஷியா ஷைத்தான்களுக்கு அலீயைப் புகழ்ந்து அழகு பார்க்க வேண்டும். அந்தப் புகழை நபி (ஸல்) அவர்களின் பெயரைப் பயன்படுத்தி அரங்கேற்றுகின்றனர்.

தன்னை விட அலீ தான் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களே சொல்வது போன்ற ஒரு போலித் தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

வளரும் இன்ஷா அல்லாஹ்


ஷியாக்கள் ஓர் ஆய்வு தொடர் - 14
மாநபியை மட்டம் தட்டும் ஷியாக்கள்
அலீக்கு வந்த வஹீ?

அபூஉஸாமா

மலக்குகள் மற்றும் இறைத் தூதர்களை அவமதிப்பது யூதர்களின் இரத்தத்தில் ஊறிய ஒரு கொடிய உணர்வு. அந்த உணர்வைத் தங்கள் இரத்தமாகக் கொண்டவர்கள் தாம் ஷியாக்கள். அதனால் தான் அவர்கள் வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்களை அவமதிக்கிறார்கள் என்பதைக் கடந்த தொடரில் கண்டோம்.

அது போல் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்களையும் அவமதிக்கிறார்கள்; மட்டம் தட்டுகிறார்கள். அலீயை உயர்த்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தாழ்த்துகிறார்கள். அந்தப் பட்டியலில் இடம் பெறும் ஒரு செய்தியைப் பாருங்கள்.

கைபர் வெற்றியை அறிவிக்கையில் அபூராஃபி கூறியதாவது: (கைபரை நோக்கி) அலீ சென்றார். அப்போது நானும் அவருடன் இருந்தேன். காலையில் அவர் வெற்றியடைந்து மக்களுக்கு மத்தியில் நீண்ட நேரம் நின்றார். தன்னுடைய இறைவனுடன் அலீ ரகசியமாக உரையாடுகின்றார் என மக்கள் பேசிக் கொண்டனர். கொஞ்ச நேரம் அவ்வாறு நின்றதும் வெற்றி கொண்ட நகரத்தின் பொருட்களை எடுக்கும்படி உத்தரவிட்டார். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் உத்தரவிட்டபடியே அலீ மக்களிடம் நின்றார். அல்லாஹ், அலீயிடத்தில் ரகசியமாக உரையாடுகின்றான் என்று மக்களில் ஒரு சிலர் பேசிக் கொண்டனர் என்று சொன்னேன். ஆம்! அபூராஃபியே! தாயிப் நாளின் போதும், தபூக்கின் கணவாய் நாளின் போதும் ஹுனைன் நாளின் போதும் அல்லாஹ் அலீயிடம் ரகசியமாக உரையாடினான் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நூல்: பஸாயிருத் தரஜாத்

ஷியா இமாம்களால் அறிவிக்கப்படும் செய்தி இது!

இத்துடன் மற்றொரு செய்தியையும் இங்கு பார்ப்போம்.

என்னைப் போன்ற ஒருவரை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன். அவரை வைத்து அல்லாஹ், கைபரை வெற்றி கொள்ளச் செய்வான். சாட்டை தான் அவருடைய வாள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் மக்களிடம் தெரிவித்ததும் மக்களுக்கு அவர் மீது மரியாதை ஏற்பட்டது. மறுநாள் காலை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அலீயை அழைத்து, நீ தாயிஃபுக்குச் செல் என்று கட்டளையிட்டார்கள். அலீ புறப்பட்டுச் சென்ற பின்னர், நீங்களும் தாயிஃபுக்குச் செல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் உத்தரவிட்டான். நபி (ஸல்) அவர்கள் தாயிஃபுக்குச் சென்ற போது அலீ (ரலி) மலையின் உச்சியில் நின்று கொண்டிருந்தார்கள். அவரை நோக்கி நபி (ஸல்) அவர்கள், நில்லுங்கள் என்று கூறினார்கள். அப்போது ஒரு பேரிறைச்சல் சப்தத்தைச் செவியுற்றோம். அல்லாஹ்வின் தூதரே! இது என்ன? என்று வினவப்பட்டது. அல்லாஹ் அலீயுடன் ரகசியமாக உரையாடுகின்றான் என்று பதிலளித்தார்கள்.

இவ்வாறு அபூஅப்தில்லாஹ் வாயிலாக அறிவிக்கப்படுகின்றது.

நூல்: பஸாயிருத் தரஜாத்

இவ்விரு செய்திகளில் இருபெரும் அற்புதங்களை (?) இந்த யூத வாரிசுகள் அவிழ்த்து விடுகின்றனர்.

1. நபி (ஸல்) அவர்கள் அலீயை தாயிஃபுக்கு அனுப்பி வைத்ததால், அவரைப் பின்தொடர்ந்து நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் அனுப்பி வைக்கின்றான்.

2. அல்லாஹ்வின் தூதரைப் போலவே அலீக்கு வஹீ வருகின்றது. அதிலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ வரும் போது எழாத பேரிறைச்சல், வெடிச் சப்தங்கள், இடி முழக்கங்கள் எல்லாம் அலீக்கு வஹீ வரும் போது ஏற்படுகின்றன என்ற பிரம்மாண்டத்தைக் காட்டுகிறார்கள்.

அதையும் நபி (ஸல்) அவர்களே சொன்னார்கள் என்பது போல் சித்தரித்து, நபி (ஸல்) அவர்களை இரண்டாம் தரத்தில் நிறுத்துகின்றார்கள் இந்த ஷியா பாவிகள்.

முஹம்மத் (ஸல்) அவர்களே முதன்மையானவர்

எள்ளளவு, எள் முனையளவு ஈமான் உள்ள எந்த முஸ்லிமும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட (இப்ராஹீம் நபி தவிர) மனித ஜின் இனத்தில் மேலானவர், அல்லது அவர்களுக்கு நிகரானவர் இருக்கின்றார் என்று ஒரு போதும் நம்ப மாட்டார். இந்த ஷியாக்களோ அலீயை நபிக்கு இணையானவர் என்ற வட்டத்தைத் தாண்டி மேலானவர் என்ற நிலையை ஏற்படுத்தியிருக்கின்றனர். இது திருக்குர்ஆனுக்கு நேர் எதிரான கருத்தாகும்.

நம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர்.

அல்குர்ஆன் 33:6

இப்படியோர் உயர் தகுதியைப் பெற்ற முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இரண்டாம் தகுதியைக் கொடுப்பவர்கள் எப்படி முஸ்லிமாக இருக்க முடியும்?

அகிலத் தூதர்

(முஹம்மதே!) நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் மனிதர்கள் அனைவருக்குமே உம்மை அனுப்பியுள்ளோம். அல்குர்ஆன் 34:28

(பொய்யையும் உண்மையையும்) பிரித்துக் காட்டும் வழி முறையை அகிலத்தாருக்கு எச்சரிக்கை செய்யக் கூடியதாக தனது அடியார் மீது அருளியவன் பாக்கியமானவன்.

அல்குர்ஆன் 25:1
அகிலத்தின் அருட்கொடை

(முஹம்மதே!) அகிலத்தாருக்கு அருளாகவே உம்மை அனுப்பியுள்ளோம்.

அல்குர்ஆன் 21:107

இவையெல்லாம் முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த மனித குலத்திலேயே சிறந்தவர்கள் என்பதற்குரிய அல்குர்ஆனின் அழகிய சான்றுகளாகும்.
மனித குலத் தலைவர்

நான் மறுமை நால் மக்கன் தலைவன் ஆவேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 3340)

முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித குலத் தலைவர் என்பதை விளக்குவதுடன், அவர்கள் ஏனைய நபிமார்களை விடவும் சிறந்தவர் என்பதையும் இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. இம்மாபெரும் தகுதியைப் பெற்ற முஹம்மத் (ஸல்) அவர்களைத் தான் இந்த ஷியாக்கள் அலீயை விடத் தாழ்த்தி மட்டம் தட்டுகிறார்கள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

இந்த உம்மத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை விட வேறு யாரையும் உயர்த்துபவன் ஒரு முஃமினாக இருக்க முடியாது. ஷியாக்கள் இன்னோர் அக்கிரமத்தையும் இங்கு நிலைநாட்டுகின்றனர். அது, அலீக்கும் வஹீ வருகின்றது என்று அவர்கள் குறிப்பிடுவதாகும்.

இந்த நம்பிக்கை கொண்டவன் ஒருபோதும் முஃமினாக, இறை நம்பிக்கையாளனாக இருக்க முடியாது. ஏனெனில் இது குர்ஆன், ஹதீசுக்கு நேர் எதிரான சிந்தனையும் கருத்துமாகும்.

4:163, 12:3, 13:30, 16:123, 17:73, 17:86, 35:31, 42:7, 42:13, 42:53 இன்னும் இது போன்ற வசனங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதைப் பற்றிக் கூறுகின்றன.
வஹீயில் பங்காளி இல்லை

யாரேனும் ஜிப்ரீலுக்கு எதிரியாக இருந்தால் (அது தவறாகும்.) ஏனெனில் அவரே அல்லாஹ்வின் விருப்பப்படி இதை (முஹம்மதே!) உமது உள்ளத்தில் இறக்கினார்.

அல்குர்ஆன் 2:97

ஜிப்ரயீல் (அலை) அவர்கள், முஹம்மத் (ஸல்) அவர்களின் உள்ளத்தில் இந்தத் திருக்குர்ஆனை இறக்கியதாக இந்த வசனம் கூறுகின்றது.

முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 33:40

முஹம்மது நபி (ஸல்) அவர்கள் தாம் இறுதி நபி என்று திருக்குர்ஆன் அறுதியிட்டுக் கூறுகின்றது. முஹம்மத் (ஸல்) அவர்களின் வஹீயில் எந்தப் பங்காளியும் இல்லை என்று அடித்துச் சொல்கின்றது.
இறுதித் தூதர்

தாம் இறைத் தூதர், தம்மைத் தவிர வேறு யாருக்கும் தூதுச் செய்தியில் பங்கும் இல்லை, பாகமும் இல்லை என்று நபி (ஸல்) அவர்களும் தெளிவுபடுத்துகின்றார்கள்.

பனூ இஸ்ராயீல்களை நிர்வகிப்பவர்களாக இறைத் தூதர்கள் இருந்தனர். இறைத் தூதர் ஒருவர் இறக்கும் போதெல்லாம் மற்றோர் இறைத் தூதர் அவருக்குப் பதிலாக வருவார். மேலும், எனக்குப் பின் எந்த இறைத் தூதரும் (வரப் போவது) இல்லை. ஆயினும், இனி (எனக்குப் பின்) கலீபாக்கள் (பிரதிநிதிகள்) நிறையப் பேர் தோன்றுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 3455
கடைசிக் கல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது நிலையும் எனக்கு முன்பிருந்த இறைத்தூதர்கன் நிலையும் ஒரு வீட்டைக் கட்டி அதை அழகாக அலங்கரித்து, ஒரு மூலையில் ஒரு செங்கல் அளவிற்குள்ள இடத்தை மட்டும் விட்டு விட்ட ஒரு மனிதரின் நிலை போன்றதாகும். மக்கள் அதைச் சுற்றிப் பார்த்து விட்டு ஆச்சரியமடைந்து, இந்தச் செங்கல் (இங்கே) வைக்கப்பட்டிருக்கக் கூடாதா? என்று கேட்கலானார்கள். நான் தான் அந்தச் செங்கல். மேலும், நான் தான் இறைத் தூதர்கல் இறுதியானவன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 3535

தம்மைக் கடைசியாக வைக்கப்பட்ட செங்கலுக்கு உவமையாக்கி, தமக்குப் பிறகு நபி வரப் போவதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

மேற்கண்ட வசனங்கள், ஹதீஸ்கள் அனைத்துமே அலீ (ரலி) அவர்களுக்கோ அல்லது வேறு யாருக்குமோ வஹீ வருகின்றது என்று நம்புபவன் இறை மறுப்பாளன் என்பதைத் தெளிவாகத் தெரிவிக்கின்றன.

அலீயிடம் ஜிப்ரீல் வருவாரா?

அலீக்கு வஹீ வர வேண்டுமாயின் அது ஜிப்ரீல் வழியாகத் தான் வர வேண்டும். நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் வருகையளித்து வஹீ அறிவிக்கும் ஜிப்ரீல் அலீக்கு வருவாரா? ஒரு போதும் வர மாட்டார்.

திருக்குர்ஆன் 53வது அத்தியாயத்தில் நபி (ஸல்) அவர்கள், ஜிப்ரயீலைச் சந்தித்த அந்தச் சந்திப்பை மாபெரும் ஓர் அற்புதம் என்று அல்லாஹ் கூறுகின்றான். அந்த ஜிப்ரயீல், அலீயிடம் வருகின்றார்; வஹீ அறிவிக்கின்றார் என்று சொன்னால் அதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

இந்த நாசகர்கள் இவ்வாறு சொல்வதில் ஆச்சரியமில்லை. இவர்களது இமாம்களுக்கே ஜிப்ரயீல், மீகாயீல் போன்ற மலக்குகள் வருகையளிக்கின்றார்கள் என்று இவர்கள் சொல்வதைக் கடந்த இதழ்களில் கண்டுள்ளோம். எனவே அலீயிடம் ஜிப்ரயீல் வருகின்றார் என்று இவர்கள் சொல்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

அதிலும் அல்லாஹ் அலீயிடம் உரையாடுகின்றான் என்று சொல்வது இறை மறுப்பின் உச்சக்கட்டமாகும்.

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 42:51

அல்லாஹ் கூறுகின்ற இந்த மூன்று வரையறைகளைத் தாண்டி அல்லாஹ் அலீயிடம் ரகசியமாக உரையாடுகின்றான் என்று சொல்கின்றனர். இதற்கு அரபியில், யுனாஜீ என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர் இந்தக் குறுமதியாளர்கள். ஒருவர் மற்றொருவருடன் ரகசியம் பேசும் போது இந்த வார்த்தை பயன்படுத்தப்படும்.

அலீயுடன் அல்லாஹ் ரகசியம் பேசுகின்றான் என்று இவர்கள் கூறுவதன் மூலம் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறும் வரையறையை அவனே மீறி விட்டான் என்று அல்லாஹ்வின் மீதே ஓர் அபாண்டத்தைச் சொல்கின்றனர். அத்துடன், இந்த உயர் தகுதியை முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு வழங்காமல் அலீக்கு மட்டும் அல்லாஹ் வழங்கியிருக்கிறான் என்றும் சொல்ல வருகின்றார்கள்.

முஹம்மத் (ஸல்) அவர்களுடன் அல்லாஹ் மேற்கண்ட மூன்று வரையறையுடன் தான் பேசியிருக்கின்றான். இது தான் உண்மை! இந்த வரையறைக்கு அப்பாற்பட்டு அலீயிடம் அல்லாஹ் ரகசியமாக உரையாடினான் என்று பகிரங்கப் பொய்யைக் கூறி, இதன் மூலம் முஹம்மத் (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்தவர் என்ற கருத்தை ஷியாக்கள் நிலைநாட்டுகின்றனர்.

இந்த அடிப்படையில் ஷியாக்கள் கடைந்தெடுத்த காஃபிர்கள் என்பதில் சந்தேகமில்லை. இவர்களைக் காஃபிர்கள் என்று நாம் மட்டுமல்ல! தமிழகத்தைச் சேர்ந்த சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் உலமாக்களும் சொல்கின்றனர்.

ஆனால் அந்த சு.ஜ. உலமாக்களும் அதே கொள்கையைத் தான் கொண்டிருக்கிறார்கள் என்பதை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.
ஷியாக்கள் ஓர் ஆய்வு தொடர் - 15
யா குத்பாவை எழுதியவன் ஒரு காஃபிரே!

அபூஉஸாமா
இரட்டை வேடம் போடும் உலமாக்கள்

அலீயிடம் அல்லாஹ் ரகசியமாக உரையாடினான் என்று பகிரங்கப் பொய்யைக் கூறி, இதன் மூலம் முஹம்மத் (ஸல்) அவர்களை விட அலீ உயர்ந்தவர் என்ற கருத்தை ஷியாக்கள் நிலைநாட்டுகின்றனர். இதைக் கடந்த இதழில் பார்த்தோம்.

இந்த ஷியாக்களைக் காஃபிர்கள் என்று நாம் மட்டுமல்ல! தமிழகத்தைச் சேர்ந்த சுன்னத் வல் ஜமாஅத் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொள்ளும் உலமாக்களும் சொல்கின்றனர்.

ஆனால் அந்த சு.ஜ. உலமாக்களும் ஷியாக்கள் கொண்டுள்ள அதே கொள்கையைத் தான் கொண்டிருக்கிறார்கள் என்பதை இப்போது பார்ப்போம்.

(அல்லாஹ்வுக்கும் உங்களுக்குமிடையே நடைபெற்ற உரையாடலை) நீங்கள் செவியுற்றுக் கொண்டிருக்கும் போதே, காப்பாற்றிக் கரை சேர்க்கும் மகத்தான ரட்சகரே! (என்னை நெருங்கி என்னுடன்) ஒன்றியவராகி விடுவீராக! இப்பிரபஞ்சத்தில் பளீரென்று பிரகாசிக்கும் நிலையில் நீரே எனது கலீபாவாக இருக்கிறீர் என்ற இறைவனின் உரையாடல் நிச்சயமாக உம்மை வந்தடைந்தது. முஹ்யித்தீனே! (இறைவனாலேயே) மகத்தான ரட்சகர் என்று அழைக்கப்பட்டதன் மூலம் நீங்கள் மகத்துவமிக்க திருநாமம் ஒன்றைத் தான் சூட்டப்பட்டு விட்டீர்!

இது, யாகுத்பா என்ற மவ்லிதில் இடம் பெறும் கவிதையின் பொருளாகும்.

இக்கவிதையில் இந்தக் கவிஞன் சொல்ல வரும் விஷயங்களைக் காண்போம்.

1. அல்லாஹ் அப்துல் காதிர் ஜீலானியுடன் நேரடியாகப் பேசினான். அதுவும் அவர் காதால் கேட்கும் அளவுக்குப் பேசினான்.

2. அப்துல் காதிர் ஜீலானி, கவ்துல் அஃலம் - மகத்தான ரட்சகராக இருக்கிறார்.

3. மகத்தான ரட்சகர் என்ற பட்டத்தையும் மனிதர்களாக அவருக்குச் சூட்டவில்லை. அல்லாஹ்வே அவருக்கு இந்தப் பட்டத்தை வழங்கி விட்டான்.

4. மனிதன் இறைவனுடன் ஒன்றி விட முடியும்.

5. இவை அனைத்தையும் அல்லாஹ்வே அவரை நோக்கிக் கூறினான்.

இவ்வளவு கருத்துக்களும் இந்தக் கவிதை வரிகளில் மறைமுகமாக அல்லாமல் நேரடியாகவே சொல்லப்படுகின்றது.

இதில் சொல்லப்படும் எல்லாக் கருத்துக்களும் இஸ்லாத்தின் அடிப்படையையே தகர்த்து விடக் கூடியவையாக உள்ளன.

அல்லாஹ் அப்துல் காதிர் ஜீலானியுடன் நேருக்கு நேர் பேசினான் என்ற கருத்தை எடுத்துக் கொள்வோம். சராசரி முஸ்லிமும் இதை நம்பத் துணிய மாட்டான். நபிமார்களின் தொடரை, நபி (ஸல்) அவர்களுடன் நிறைவுபடுத்தி, கடைசி ஹஜ்ஜின் போது, இந்த மார்க்கத்தை நிறைவு படுத்தி விட்டதாக அல்லாஹ் பிரகடனம் செய்கிறான்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். அல்குர்ஆன் 5:3

நபி (ஸல்) அவர்களுடன் இந்த மார்க்கம் முழுமை பெற்ற பின் வேறு எவருடன், எதற்காக இறைவன் பேச வேண்டும்? நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு எவருடனாவது இறைவன் பேச வேண்டுமென்றால் இந்த உம்மத்திலேயே மிக உயர்ந்த இடத்தைப் பெற்ற அபூபக்ர் (ரலி) அவர்களுடன் பேசியிருப்பானே!

உமரின் நாவில் அல்லாஹ் சத்தியத்தைப் போட்டிருக்கிறான்; அதைக் கொண்டு அவர் பேசுகிறார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூல்: அபூதாவூத் 2573, இப்னுமாஜா 105

இந்த உயர்ந்த அந்தஸ்து பெற்ற உமர் (ரலி) அவர்களுடன் இறைவன் பேசவில்லையே! எவ்வளவோ பிரச்சனைகள் ஏற்பட்ட நேரத்திலும் அல்லாஹ் அவர்களுடன் பேசவில்லையே!

நபிமார்கள், ரசூல்மார்கள் நீங்கலாக உள்ள முன்னோர், பின்னோர் அனைவரிலும் இளைய தலைமுறையினரின் தலைவர்கள் அபூபக்ரும், உமரும் ஆவர் என்பது நபிமொழி.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: திர்மிதீ 3597, இப்னுமாஜா 97

அபூபக்ரையும், உமரையும் சுட்டிக் காட்டி நான் உங்களுடன் வாழும் நாட்களை அறிய மாட்டேன். எனக்குப் பின் இவ்விருவரையும் பின்பற்றி நடங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபா (ரலி)

நூற்கள்: திர்மிதீ 3596, இப்னுமாஜா 94

இப்படி நபி (ஸல்) அவர்களால் சிலாகித்துச் சொல்லப்பட்ட இந்த இரு நல்லடியார்களிடம் கூட அல்லாஹ் உரையாடவில்லை. ஆனால் இந்த இருவரின் தரத்திற்கு ஏணி வைத்தாலும் எட்டாத நிலையில் உள்ள ஒருவருடன் பேசினான் என்பதை ஒரு முஸ்லிம் எப்படி நம்ப முடியும்?

எப்படியாவது அவரை நபியவர்களுக்குச் சமமாக ஆக்கி, பிறகு அவர்களை விடவும் மேலான நிலையில் உயர்த்துவதே இக்கவிஞனின் நோக்கம். இவருடன் அல்லாஹ் நேரடியாக உரையாடியதாகக் கூறுவதன் மூலம் அவரை நபியுடன் சமப்படுத்துகின்றான். மகத்தான ரட்சகரே'' என்று அல்லாஹ் இவரை அழைத்ததாகக் கூறுவதன் மூலம் நபியை விடவும் இவரை உயர்த்துகின்றான். ஏனெனில் நபியவர்களைக் கூட அல்லாஹ், மகத்தான ரட்சகரே' என்று அழைக்கவில்லை.

இறைவன் அப்துல் காதிர் ஜீலானியுடன் பேசினான் என்று கதை கட்டியதன் மூலம் நபி (ஸல்) அவர்களுக்குப் பின், அப்துல் காதிர் ஜீலானி நபியாகத் திகழ்ந்தார்கள் என்று காட்டுவதற்காக யூதர்கள் இயற்றியதே இந்தப் பாடல் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

மிர்ஸா குலாம் என்பவன் தன்னை நபியென்று பிதற்றிய போது, தனக்கு வஹீ வருகின்றது என்று உளறிய போது, அதற்கு எதிராக வரிந்து கட்டிக் கொண்டு எதிர்த்த உலமாக்கள், அவனையும் அவனை நம்பியவர்களையும் காஃபிர்கள் என்று ஃபத்வா கொடுத்த உலமாப் பெருமக்கள் அதே நச்சுக் கருத்தை எப்படிப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்?

அப்துல் காதிர் ஜீலானியை நபியாகச் சித்தரிக்கும் இந்த யாகுத்பா பாட்டை எழுதியவனும், இதை நம்பியவர்களும் காஃபிர்கள் என்று ஃபத்வா அளிக்காதது மட்டுமின்றி, தங்களுக்குக் கிடைக்கின்ற சில்லறைகளுக்காக வீடுகளில் போய் பாடி விட்டு வரவும் எப்படித் துணிகிறார்கள்?

யாகுத்பாவை ஆதரிப்பவர்களுக்கும் காதியானிகளுக்கும் கொள்கையில் என்ன வித்தியாசம் இருக்கின்றது? இந்த நச்சுக் கருத்து இவர்களின் கண்களுக்குத் தவறாகத் தெரியாமல் போனது ஏன்?

காதியானிகள் காஃபிர்கள் என்று இந்த உலமாக்கள் ஒட்டு மொத்தமாக மார்க்கத் தீர்ப்பு வழங்கியிருக்கின்றனர். ஆனால் யாகுத்பாவை எழுதிய கவிஞன், முஹ்யித்தீனுக்கு வஹீ வருகின்றது என்று சொல்கின்றான். இவனை சுன்னத் வல் ஜமாஅத் என்று கூறிக் கொள்ளும் ஆலிம்கள் கண்டு கொள்வதில்லை. இந்தக் கவிதையை எதிர்த்து கடுகளவு கூட ஆட்சேபம் தெரிவிக்காமல் மவுன விரதம் பூண்டிருக்கிறார்கள். காரணம் என்ன?

இந்தப் பாடல்களை பலப் பல வீடுகளில் படியேறிப் பாடுவதால் இவர்களுக்குப் படியளக்கப்படுகின்றது. கைகளில் கைமடக்கு கொடுக்கப்பட்டு பைகள் நிரப்பப்படுகின்றன. இந்த அற்பக் காசுக்காக, சொற்ப ஆதாயத்திற்காக இவர்கள் மார்க்கத்தை விலை பேசி விற்கின்றார்கள்.

அல்லாஹ் அருளிய வேதத்தை மறைத்து அதை அற்ப விலைக்கு விற்போர், தமது வயிறுகளில் நெருப்பைத் தவிர (வேறு எதையும்) சாப்பிடுவதில்லை. கியாமத் நாளில் அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களைத் தூய்மைப் படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.

அல்குர்ஆன் 2:174

இந்த ஆலிம்கள் தங்களுடைய வயிறுகளில் நெருப்பை நிரப்பிக் கொள்கிறார்கள். அதனால் தான் இந்தக் கவிஞனின் விஷ வரிகளை இவர்கள் கண்டு கொள்வதில்லை.

பொய்யன் மிர்ஸா குலாமுக்கு ஒரு நீதி, இந்தப் புறம்போக்குக் கவிஞனுக்கு ஒரு நீதி என அநீதி பாராட்டுகின்றார்கள். மிர்ஸா குலாமை காஃபிர் என்று ஃபத்வா கொடுத்தது போன்று இந்தக் கவிஞனையும் காஃபிர் என்று ஃபத்வா கொடுக்க மறுக்கின்றார்கள். இதிலிருந்து இவர்கள் பக்கா ஷியாக்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

முஹம்மது (ஸல்) அவர்களைத் தாக்கி முஹ்யித்தீனை உயர்த்துதல்

கவ்துல் அஃலம் அவர்கள் நிலைத்திருக்கும் காலமெல்லாம் நபியின் மீது அல்லாஹ் அருள் புரிவானாக!

இதுவும் யாகுத்பாவில் இடம்பெறும் கவிதை வரியாகும்.

நபியின் புகழ் நிலைத்திருக்கும் காலமெல்லாம் அல்லாஹ், அப்துல் காதிர் ஜீலானிக்கு அருள் புரியட்டும் என்று இவன் பாடியிருந்தால், நபியை உரிய விதத்தில் மதிக்கிறான் என்று கருதலாம். இந்தக் கவிஞன் விஷயத்தையே தலைகீழாக மாற்றுகின்றான்.

அப்துல்காதிர் ஜீலானியின் புகழ் நிலைத்திருப்பதால் தான் நபிக்கே அல்லாஹ் அருள் புரிய வேண்டுமாம்.

உண்மையான முஸ்லிமை விட்டு விடுவோம். அரைகுறை முஸ்லிமாவது இதை ஏற்க முடியுமா?

நபியவர்களின் மதிப்பைக் குறைப்பதே இக்கவிஞனின் உண்மையான நோக்கம். நச்சுக் கருத்தை, நாசகார விஷத்தைக் கொண்ட இவை கவிதை வரிகள் அல்ல! நரக நெருப்புப் பொறிகள்!

கண்மணி நாயகம், உயிரினும் மேலான உத்தம நபி என்று இவர்கள் சொல்வதெல்லாம் வெளி வேஷம்; வெற்றுக் கோஷம்!

நபி புகழ் பாடுகின்றோம் என்று இவர்கள் குறிப்பிடுவது நடிப்பும் நாடகமும் ஆகும். இவர்கள் நபி (ஸல்) அவர்களை மதிக்கிறோம் என்று சொல்வது பகிரங்க நயவஞ்சகமாகும். இதற்குச் சான்று தான் இந்தக் கவிதை வரிகள்.

இந்த ஆலிம்கள் ஷியாக்கள் என்பதால் தான் இப்படி நபி (ஸல்) அவர்களை மட்டம் தட்டுகிறார்கள். இவர்கள் தங்களை சுன்னத் வல் ஜமாஅத் என்று குறிப்பிடுவது பொய்யும் போலியுமாகும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

ஷியாக்கள் ஓர் ஆய்வு தொடர் - 16

இறந்தவர் உயிர் திரும்புவாரா?

அபூஉஸாமா

தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர்க்கும் இடையேயுள்ள விவகாரம் வாய்க்கால் வரப்பு தகராறல்ல! சொத்து பத்துத் தகராறல்ல! கொடுக்கல் வாங்கல் அல்ல! சுருக்கமாகச் சொன்னால் சொந்த விவகாரங்கள் அல்ல! பின்னர் என்ன?

இறந்தவர்கள் திரும்ப வருவர்; மாண்டவர் மறு உயிர் பெற்று மீண்டு வருவர் என்று அவர்கள் நம்புகின்றனர். நாம் அதை மறுக்கிறோம். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் இவ்வாறு நம்புவது இணை வைப்பு, இறை மறுப்பு என்று அடித்துச் சொல்கிறோம்.

இந்தக் கழிவுகெட்டக் கசடுக் கொள்கையின் வேர்ப்பிடிப்பு எங்கே உள்ளது என்று கண்டுபிடிக்க நாம் கஷ்டப்படத் தேவையில்லை. ஷியாயிஸம் என்ற விஷத்தில் தான்.

இந்த விஷத்தின் வேர்ப்பிடிப்பு யூதயிஸம். இது சீயோனிஸ சிந்தனையும் சித்தாந்தமும் ஆகும். அதாவது யூத மதத்தின் சித்தாந்தமாகும். இறந்தவர்கள் மீண்டும் உயிர் பெற்று வருவார்கள் என்பது யூதர்களின் நம்பிக்கை!

ஷியாக்களின் ரஜ்அத்' கொள்கை

அப்துல்லாஹ் பின் ஸபஃ என்பவன் தான் ரஜ்அத் எனப்படும் கொள்கையைத் தோற்றுவித்தான். முஹம்மது நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) ஆகியோர் இறுதி நாளுக்கு முன் உயிருடன் திரும்ப வருவர் என்ற விஷக் கருத்தைத் தூவினான். அதன் பின்னர் அலீயுடன் 11 இமாம்களையும் சேர்த்து மொத்தம் 12 இமாம்களும் மறு உயிர் பெற்று வருவார்கள் என்று ஷியா ஷைத்தான்கள் அந்தப் பட்டியலை விரித்துக் கொண்டனர்.
யார் அந்தப் பனிரெண்டு இமாம்கள்?

1. அபுல் ஹஸன் அலீ பின் அபீதாலிப்

2. அபூமுஹம்மது பின் அல்ஹஸன் பின் அலீ (அல் ஜகீ)

3. அபூஅப்துல்லாஹ் அல் ஹுஸைன் பின் அலீ (ஸய்யித் அஷ்ஷுஹதாஃ - ஷுஹதாக்களின் தலைவர்)

4. அபூமுஹம்மது அலீ பின் அல்ஹுஸைன் (ஜைனுல் ஆபிதீன்)

5. அபூஜஃபர் முஹம்மது அலீ பின் அலீ (அல்பாகிர்)

6. அபூஅப்துல்லாஹ் ஜஃபர் பின் முஹம்மது (அஸ்ஸாதிக் - இவர் தான் பூரியான் ஃபாத்திஹாவின் கதாநாயகர்)

7. அபூஇப்ராஹீம் மூஸா பின் ஜஃபர் (அல்காழிம்)

8. அபுல் ஹஸன் அலீ பின் மூஸா (அர்ரிளா)

9. அபூஜஃபர் முஹம்மது பின் அலீ (அல்ஜவாத்)

10. அபூஹஸன் அலீ பின் முஹம்மது (அல்ஹாதீ)

11. அபூமுஹம்மது அல்ஹஸன் பின் அலீ (அல் அஸ்கரி)

12. அபுல் காஸிம் முஹம்மது பின் அல்ஹஸன் (அல் மஹ்தி)

இந்த 12 என்ற எண்ணிக்கை, யூதயிஸத்தின் பிரதிபலிப்பு தான் என்பதை மூஸா (அலை) அவர்களின் வரலாற்றைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.

இந்த 12 பேரும் திரும்ப உயிர் பெற்று வருவார்கள் என்று சாதாரணமாகச் சொல்லவில்லை. நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக நபி (ஸல்) அவர்கள் மீது பொய்யை இட்டுக்கட்டி இந்தச் சித்தாந்தத்தை நுழைக்கின்றார்கள்.

இந்த 12 பேரும் இறுதி நாள் வருவதற்குள் திரும்ப வருவார்கள்; திரும்ப வந்து இவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஆட்சியுரிமையை மீட்பார்கள். பறித்தவர்களைப் பழிவாங்குவார்கள்.

இப்படி இவர்களது விஷம சரித்திரம் நீள்கிறது.

ஷியாக்களின் ஆதாரம்

இதற்கு இவர்கள் காட்டுகின்ற ஆதாரங்கள் என்ன?

இவர்களின் முதல் முக்கிய ஆதாரம் 2:243 வசனமாகும்.

இவர்கள் வைக்கும் இரண்டாவது ஆதாரம் 28:85 வசனம்.

மூன்றாவது ஆதாரம் 40:11 வசனம்.

இந்த விளக்கங்களை ஷியாக்களின் குர்ஆன் விளக்கவுரை நூலான தஃப்ஸீர் அல்கிம்மியில் நாம் பார்க்கின்றோம்.

முதல் ஆதாரம்

மரணத்திற்கு அஞ்சி தமது ஊர்களை விட்டு வெளியேறியோரை நீர் அறியவில்லையா? அவர்கள் ஆயிரக்கணக்கில் இருந்தனர். "செத்து விடுங்கள்!'' என்று அவர்களுக்கு அல்லாஹ் கூறினான். பின்னர் அவர்களை உயிர்ப்பித்தான். மனிதர்கள் மீது அல்லாஹ் அருளுடையவன். எனினும் மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை.

அல்குர்ஆன் 2:243

இது மூஸா (அலை) அவர்களது காலத்தில் அல்லது அவர்களுக்குப் பிந்திய காலத்தில் நடந்த சம்பவம். சுருக்கமாகச் சொன்னால் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்கு முன்பு நடந்த சம்பவம். இதே போன்று நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நிகழவுமில்லை. அவ்வாறு நிகழவும் செய்யாது என்று திருக்குர்ஆன் தெளிவாகத் தெரிவித்து விட்டது. முடிவில் அவர்களில் யாருக்கேனும் மரணம் வரும் போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.

அல்குர்ஆன் 23:99, 100

திருக்குர்ஆனின் இந்த வசனங்களின்படி, முஹம்மத் (ஸல்) அவர்களின் சமுதாயத்தில் கியாமத் நாள் வரை எவரும் உயிர் பெற்றுத் திரும்ப வரமாட்டார்கள் என்பது தெளிவாகின்றது.

இதில் ஒரேயொரு விதிவிலக்கு உண்டென்றால் இறுதிக் காலத்தில் பெரும் சோதனையாக வரும் தஜ்ஜால், ஒரு மனிதனை உயிர்ப்பிப்பது மட்டும் தான். இதுவும் ஒரு முறை தான் அவனால் முடியும். இரண்டாவது இந்தக் காரியத்தைச் செய்ய முடியாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தி விட்டார்கள்.

இதன் பின்னரும் 2:243 வசனத்தை ஆதாரமாகக் கொண்டு வந்து நிறுத்துகின்றார்கள் என்றால் இவர்கள் குர்ஆனை ஆதாரமாகக் கொண்டு வந்து நிறுத்தவில்லை. இந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட யூதர்களின் சிந்தனையைத் தான் ஆதாரமாக நிறுத்துகின்றார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

இரண்டாவது ஆதாரம்

(முஹம்மதே!) உமக்கு இந்தக் குர்ஆனை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே மீண்டும் சேர்ப்பவன். "நேர் வழியைக் கொண்டு வந்தவன் யார்? தெளிவான வழி கேட்டில் உள்ளவன் யார்? என்பதை என் இறைவன் நன்கறிந்தவன்'' என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 28:85

இந்த வசனம் குறிப்பிடுவது, மக்காவைத் துறந்து மதீனா சென்ற நபி (ஸல்) அவர்கள் மீண்டும் மக்காவை வெற்றி கொள்வார்கள் என்பதைத் தானே தவிர, இறந்து மீண்டும் உயிர் பெற்று வருவதையல்ல.

மூன்றாவது ஆதாரம்

"எங்கள் இறைவா! எங்களை இரண்டு தடவை மரணிக்கச் செய்தாய். இரண்டு தடவை உயிர்ப்பித்தாய். எங்கள் குற்றங்களை நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். தப்பிக்க வழி ஏதும் உள்ளதா?'' என்று அவர்கள் கேட்பார்கள்.

அல்குர்ஆன் 40:11

"இரு முறை எங்களை உயிர்ப்பிக்கச் செய்தாய்; இரு முறை மரணிக்கச் செய்தாய் என்று குற்றமிழைத்தோர் மறுமையில் கதறுவார்கள்'' என இவ்வசனம் கூறுகிறது.

இரு முறை உயிர்ப்பித்தல் என்பது நமக்கு விளங்குகிறது. இந்த உலகத்தில் ஒரு முறை பிறக்கிறோம். மரணித்த பிறகு அழிக்கப்பட்ட பிறகு மறுபடியும் இறைவன் எழுப்புகிறான்.

ஆனால் ஒரு முறை தான் நாம் மரணிக்கிறோம் எனும் போது இரண்டு முறை மரணிக்கச் செய்தாய் என்று எப்படிக் கூற முடியும்? இதைத் திருக்குர்ஆன் 2:28 வசனம் தெளிவாக விளக்குகிறது. இவ்வசனத்தில் மனிதன் படைக்கப்படுவதற்கு முன் இருந்த நிலைமையைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது "நீங்கள் மரணித்தவர்களாக இருந்தீர்கள், உங்களை உயிர்ப்பித்தான்; பின்னர் மரணிக்கச் செய்து மீண்டும் உயிர்ப்பிப்பான்'' என்று கூறுகிறான்.

படைக்கப்படாமல் இருந்த அந்த நிலையைத் தான் முதல் மரணம் என்று அல்லாஹ் கூறுகிறான். இதே அடிப்படையில் தான் இரு முறை மரணிக்கச் செய்தாய் என்று குற்றமிழைத்தோர் மறுமையில் கூறுகிறார்கள்.

இதை ஷியாக்கள் தங்களது 12 இமாம்கள் உயிர் பெற்று வருவார்கள் என்ற கொள்கைக்கு ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். ஆனால் இந்த வசனமோ குற்றவாளிகளைப் பற்றிப் பேசுகின்றது. இதிலிருந்தே ஷியாக்களின் புரட்டுத்தனத்தைப் புரிந்து கொள்ளலாம்.

ஆக, இந்த மூன்று ஆதாரங்களுமே ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல! நிராகரிக்கத்தக்கவை!

நாம் இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் ஷியாக்களின் இந்தக் கொள்கையைத் தான் சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோர் கொண்டிருக்கின்றனர்.

யூத மற்றும் ஷியாயிஸத்தின் கொள்கைகளைத் தான் இவர்கள் பின்பற்றுகிறார்கள் என்பதற்கு ஒரு நடைமுறை எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

குத்பிய்யத் என்ற குருட்டு நம்பிக்கை

குத்பிய்யத் என்பது விளக்கை அணைத்துக் கொண்டு, இருட்டில் உட்கார்ந்து முஹ்யித்தீனை ஆயிரம் தடவை அழைத்து திக்ர் செய்வதற்குப் பெயராகும். யாகுத்பா என்ற பாடலில் இது இடம்பெறுகின்றது.

"எவர் ஒருவர் தனிமையில் அமர்ந்தவராகவும், தனது உறக்கத்தைக் களைந்தவராகவும், உறுதியான நம்பிக்கையுடனும் என் திருநாமத்தை ஆயிரம் தடவைகள் அழைப்பாரோ அவர் (என்னை) அழைத்த காரணத்திற்காக விரைந்தோடி வந்து நான் அவருக்கு மறுமொழி சொல்வேன். எனவே, யா அப்துல் காதிர் முஹ்யித்தீனே என்று அவர் அழைக்கட்டும்''

இந்த குத்பிய்யத் தமிழகம், கேரளம் போன்ற மாநிலங்களிலும் இலங்கை போன்ற நாடுகளிலும் நடைபெறுகின்றது. தமிழக முஸ்லிம்கள், கேரள முஸ்லிம்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கும் இது நடைபெறுகின்றது. இந்த குத்பிய்யத்தின் போது முஹ்யித்தீன் ஆஜராகின்றார் என்றே நம்புகிறார்கள். ஆம்! முஹ்யித்தீன் ரஜ்அத்' அடிப்படையில் உயிர் பெற்றுத் திரும்ப வருகின்றார் என்றே உறுதியாக நம்புகின்றனர்.

முஹ்யித்தீனை அழைத்துப் பிரார்த்திப்பதையும் அவர் வருகையளிக்கின்றார் என்ற நம்பிக்கையையும் தகர்க்கும் விதமாகவே காயல்பட்டிணத்தில் 1985ஆம் ஆண்டில் சகோதரர் பி.ஜே.வுக்கும் ஜலீல் முஹைதீன் என்பவருக்குமிடையே முபாஹலா நடைபெற்றது. இந்த முபாஹலா மூலம், முஹ்யித்தீன் வருகை பற்றிய நம்பிக்கை எந்த அளவுக்கு இந்த சுன்னத் வல் ஜமாஅத்தினரிடம் ஊடுறுவிப் போய் இருக்கின்றது என்று உணர்ந்து கொள்ளலாம்.
அதே தாக்கம்! அதே ஆதாரம்!

அப்போதைய தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த மயிலாடுதுறை அருகிலுள்ள கிளியனூர் அல்மத்ரஸா ரஹ்மானிய்யாவில் அதன் முதல்வர் மறைந்த அப்துஸ்ஸலாம் அவர்களுக்கும், சகோதரர் பி.ஜே.வுக்கும் இடையே ஒரு விவாதம் நடைபெற்றது. அந்த விவாதத்தின் போது, "குத்பிய்யத் என்ற திக்ரு நடைபெறுகின்றது; அதில் முஹ்யித்தீன் வந்து ஆஜராகின்றார் என்று முஸ்லிம்கள் நம்புகின்றனர். இதற்கு ஆதாரம் இருக்கின்றதா?'' என்று பி.ஜே. கேட்டார்.

"ஆம்! அதற்குக் குர்ஆனிலேயே ஆதாரம் இருக்கின்றது'' என்று அப்துஸ்ஸலாம் சொன்னதும், சரியான ஆதாரம் கிடைக்கப் போகின்றது என்றெண்ணி அருகில் இருந்தவர்கள் பரபரப்புடனும், பரவசத்துடனும் அவரது பதிலை எதிர்பார்த்தனர். அப்போது அவர் பின்வரும் வசனத்தை முன்வைத்தார்.



"அதன் ஒரு பகுதியால் அவரை (கொல்லப்பட்டவரை) அடியுங்கள்!'' என்று கூறினோம். இவ்வாறே அல்லாஹ் இறந்தோரை உயிர்ப்பிக்கிறான். நீங்கள் விளங்குவதற்காக தனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுகிறான். (அல்குர்ஆன் 2:73)

அதற்கு பி.ஜே., "நீங்கள் கூறும் இந்த வசனத்தில் - அது கூறுகின்ற நிகழ்வில் - சம்பந்தப்பட்டவர் உயிர் மற்றும் உடலுடன் சேர்த்து வந்தாரா? அல்லது உயிர் மட்டும் வந்ததா?'' என்று கேட்டார். அதற்கு அப்துஸ்ஸலாம் (ஒரு சிறிய தயக்கம், தடுமாற்றத்திற்கு பிறகு) உயிர், உடலுடன் சேர்த்துத் தான் வந்தார்'' என்று பதிலளித்தார்.

"உயிர், உடலுடன் முஹ்யித்தீன் வந்து விட்டால் தான் பிரச்சனையே இல்லையே! முஹ்யித்தீனை நாம் நேரில் பார்த்து நாமே உறுதி செய்து கொள்ளலாமே! பிரச்சனையே அவர் உடல் இல்லாமல் உயிருடன் மட்டும் வருகின்றார் என்பது தான்'' என்று பி.ஜே. கூறியதும் இதற்கு அப்துஸ்ஸலாம் அவர்களிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை.

(குறிப்பு: அப்துஸ்ஸலாம் அவர்கள் மரணிக்கின்ற போது தமது மகனாரை நோக்கி, அவர்களை (தவ்ஹீதுவாதிகளை) தாக்கிப் பேச வேண்டாம். நாம் அபூஹனீபா சொன்னார், அபூயூசுப் சொன்னார் என்று சொல்கிறோம். ஆனால் அவர்கள் அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள் என்று சொல்கின்றனர்' என்றக் கருத்துப்படக் கூறியுள்ளார்கள்.)

இறந்தவர் இவ்வுலகிற்கு ஒரு போதும் திரும்ப வரப் போவதில்லை என்பதற்குரிய ஆதாரத்தை இன்ஷா அல்லாஹ் நாம் பின்னர் பார்க்கவிருக்கின்றோம்.

நாம் இங்கு பார்க்கவிருக்கும் விஷயம் சுன்னத் வல் ஜமாஅத்தினரிடமும் இருக்கும் ரஜ்அத்' கொள்கையைத் தான். இதற்கு ஷியாக்கள் தங்கள் ஆதாரத்தை யூத மதத்திலிருந்து நிறுவுகின்றார்கள். இவர்களும் அதே ஆதாரத்தை, அதே தாக்கத்தில் எடுத்து வைக்கின்றார்கள் என்பதைக் குறிப்பிடவே இந்த எடுத்துக்காட்டு!

வளரும் இன்ஷா அல்லாஹ்
ஷியாக்கள் குறித்து இந்த இணைய தளத்தில் உள்ள இதர விஷயங்கள்

? ஷியா பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களை ஏற்றுக் கொள்வதில்லை. இது பற்றிக் கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் மது அருந்தியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது அவதூறு கூறினார்கள் என்று புகாரி, முஸ்லிமில் ஹதீஸ் உள்ளது. எனவே தான் ஆயிஷா (ரலி) அவர்களை வெறுக்கிறோம் என்று கூறுகின்றனர். இது பற்றி விளக்கவும்.

இஸ்மாயீல் ஷெரீஃப், பெரம்பூர்

நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ் இது தான்.

நபி (ஸல்) அவர்கள், (தம் துணைவியார்) ஸைனப் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந்து அங்கு தேன் சாப்பிடுவது வழக்கம். ஆகவே, நானும் ஹஃப்ஸாவும், "நபி (ஸல்) அவர்கள் நம்மில் யாரிடம் முதலில் வந்தாலும், "தங்களிடம் கருவேலம் பிசினின் வாடை வருகிறதே, பிசின் சாப்பிட்டீர்களா?' என்று கேட்டு விட வேண்டும்'' என்று எங்களுக்குள் கூடிப் பேசி முடிவு செய்து கொண்டோம். எங்களில் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் வந்த போது, முன்பு பேசி வைத்திருந்த படி கூறினோம். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு குறையும் நடந்திடவில்லை. ஸைனப் பின் ஜஹ்ஷிடம் (அவரது அறையில்) தேன் அருந்தினேன். இனிமேல் ஒருபோதும் அவ்வாறு செய்ய மாட்டேன்'' என்று கூறினார்கள். ஆகவே, "நபியே! (முஹம்மதே!) உமக்கு அல்லாஹ் அனுமதித்ததை உமது மனைவியரின் திருப்தியை நாடி ஏன் விலக்கிக் கொள்கிறீர்?'' என்று தொடங்கி, "நீங்கள் இருவரும் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடினால் (அதுவே நல்லது)'' என முடியும் (66:1-4) வசனங்களை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 5267

இந்தச் சம்பவத்தில் நபி (ஸல்) அவர்கள் மது குடித்ததாகக் ஆயிஷா (ரலி) கூறவில்லை. மாறாக "மகாஃபீர்' எனப்படும் கருவேலம் பிசின் சாப்பிட்டீர்களா? என்று தான் கேட்கின்றார்கள். இதில் எந்த அவதூறும் இல்லை. மேலும் நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாகத் தான் கேட்கின்றார்கள். இது எப்படி அவதூறு கூறுவதாகும்?

இதன் பிறகு நபி (ஸல்) அவர்கள் தேன் அருந்துவதைத் தமக்குத் தாமே தடுத்துக் கொண்டதும், அல்லாஹ் அதைக் கண்டித்து வசனம் அருளியதையும் இந்த ஹதீஸ் குறிப்பிடுகின்றது.

நபி (ஸல்) அவர்கள் தேன் அருந்தாமல் ஹராமாக்கிக் கொள்ளக் காரணமாக இருந்ததற்காக ஆயிஷா (ரலி), ஹஃப்ஸா (ரலி) ஆகியோரையும் அல்லாஹ் கண்டித்து வசனம் அருளியுள்ளான்.

நபி (ஸல்) அவர்கள் மீது ஆயிஷா (ரலி) அவர்கள் அவதூறு கூறினார்கள் என்றால் அதையும் அல்லாஹ் இந்த வசனங்களில் கண்டித்திருப்பான். நபி (ஸல்) அவர்களும் இதற்காக ஆயிஷா (ரலி) அவர்களைக் கடுமையாகக் கண்டித்திருப்பார்கள். ஆனால் அவ்வாறு கண்டித்ததாக எந்தச் செய்தியும் இல்லை. தமக்கு மரணம் ஏற்படுகின்ற வரை ஆயிஷா (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் மிகவும் நேசித்த செய்திகள் ஹதீஸ்களில் உள்ளன. ஆயிஷா (ரலி) அவர்களின் மடியில் தான் நபி (ஸல்) அவர்களது உயிர் பிரிந்தது என்றும் ஹதீஸ்கள் உள்ளன.

நபி (ஸல்) அவர்களே இது குறித்து எதுவும் கூறாதிருக்கும் போது, ஷியாக்கள் ஆயிஷா (ரலி)யை வெறுப்பதற்கு இது காரணம் இல்லை என்பதைத் தெளிவாக அறியலாம்.

அலீ (ரலி) அவர்கள் மீது கொண்ட அளவு கடந்த மதிப்பின் காரணமாக மற்ற நபித்தோழர்களைத் திட்டுவது ஷியாக்களின் கொள்கையில் உள்ளதாகும்.

ஆயிஷா (ரலி) அவர்களை மட்டுமல்ல! நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு அலீ (ரலி) அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை வழங்காமல் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி-அன்ஹும்) ஆகியோர் ஆட்சிப் பொறுப்பை வகித்ததால், இந்த மூன்று கலீஃபாக்களையும், இவர்களுடன் இருந்த ஏனைய நபித்தோழர்களையும் "காஃபிர்கள்' (இறை மறுப்பாளர்கள்) என்று கூறுகின்றனர். இந்த நபித்தோழர்களைத் திட்டுவது இறைவனிடத்தில் நன்மையைப் பெற்றுத் தரும் என்றும் கருதுகின்றனர்.

நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித்தோழர்களும் மதம் மாறி விட்டனர் என்று ஷியாக்களின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸலிம் இப்னு கைஸ் அல் ஆமிரீ தனது நூலில் பக்கம் 92ல் கூறுகிறார்.

மிக்தாத் இப்னுல் அஸ்வத், அபூதர் அல்கிபாரி, ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித் தோழர்களும் காபிர்களாகி விட்டனர்.

நூல்: கிதாபுர்ரவ்லா மினல் காபி

பாகம் 8, பக்கம் 245

அபூபக்ரும், உமரும், அலீ (ரலி) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்பு கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும் மலக்குகளின் சாபமும் எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும்.

நூல்: கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 2 பக்கம் 246

(அபூபக்ருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸார்கள் மட்டும் அபூபக்ருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றோர் அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர்.

நூல்: கிதாபுர்ரவ்லா மினல் காபி பக்கம் 296

எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர். அலீ என்ற ஒரு நபரைத் தவிர, அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார்.

நூல்: கிதாபுஷ்ஷியா வஸ் ஸுன்னா என்ற சின்ன ஏடு

இப்படி நபித்தோழர்களைக் கேவலப்படுத்தும் சங்கதிகள் ஏராளம். ஒரு சில உதாரணங்களை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளோம்.

திருக்குர்ஆனில் யூதர்களும், கிறித்தவர்களும் கண்டிக்கப்படும் வசனங்கள் யாவும் நபித்தோழர்கள் குறித்தே இறங்கியதாக இவர்களின் தப்ஸீர்கள் கூறுகின்றன.

எனவே ஆயிஷா (ரலி) அவர்களை ஷியாக்கள் வெறுப்பதற்கு தேன் தொடர்பான சம்பவம் காரணமல்ல. அந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் மது அருந்தியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் கூறவும் இல்லை.

? மத்ஹபுகளில் மொத்தம் நான்கு பிரிவுகள் உள்ளன. ஆனால் சமீப காலமாக ஷியா முஸ்லிம் என்று கூறக் காண்கிறோம். ஷியா முஸ்லிம்கள் என்பவர்கள் யார்? அவர்களுக்கும், மத்ஹபுகளுக்கும் என்ன வித்தியாசம்?

மு.கா. அஹ்மத், மதுரை

ஷியாக்களுக்கும் மத்ஹபுகளுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்ப்பதற்கு முன்னால் மத்ஹப் என்றால் என்ன என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். மத்ஹப் என்றால் போகுமிடம், போக்கிடம் என்பது பொருள். மலஜலம் கழிப்பதற்காகப் போகுமிடம், அதாவது கழிப்பிடம் என்ற பொருளில் தான் இந்தச் சொல் ஹதீஸில் பயன்படுத்தப் பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மத்ஹபுக்குப் போகும் போது தூரமாகச் சென்று விடுவார்கள். (நூல்கள் : அபூதாவூத்1, திர்மிதீ20, நஸயீ 17, அஹ்மத் 326)

ஒருவரது சிந்தனை சென்ற இடம் என்ற கருத்தில் மத்ஹப் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டு பின்னர் சிந்தனை என்ற கருத்து கொள்ளப்பட்டது.

ஷாஃபி மத்ஹப் என்றால் ஷாஃபி இமாமின் சிந்தனை என்று பொருள். மத்ஹபுகள் நான்கு மட்டுமே இருப்பதாகக் கூறுவது தவறு! மத்ஹப் இஸ்ஹாக் இப்னு ராஹவை, மத்ஹப் சுஃப்யானுஸ் ஸவ்ரி, மத்ஹப் ஹஸன் பஷரீ என்று ஏராளமான மத்ஹபுகள் உள்ளன.

இந்த இமாம்கள் கூறிய மார்க்கச் சட்டங்களை அவரது மத்ஹப் என்று ஆரம்ப காலத்தில் கூறி வந்தார்கள். தனது மத்ஹபைத் தான் பின்பற்ற வேண்டும் என்று எந்த இமாமும் கூறவில்லை. ஆனால் பிற்காலத்தில் வந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட மத்ஹபைப் பிடித்துக் கொண்டு, அதை மட்டுமே தாங்கள் பின்பற்ற வேண்டும், அது தான் இஸ்லாத்தின் கொள்கை என்பது போல் மாற்றி விட்டார்கள்.

தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகளிலும் இதர மார்க்கச் சட்டங்களிலும் மத்ஹபுகளில் கருத்து வேறுபாடு காணப்பட்டாலும், கடவுள் கொள்கை அடிப்படையில் மத்ஹபுவாதிகள் முஸ்லிம்கள் என்ற வட்டத்திற்குள் வந்து விடுவார்கள். ஆனால் ஷியாக்கள் எனப்படுவோரின் கடவுள் கொள்கைக்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

அலீ (ரலி) ஆட்சிக் காலத்தில் அவர்களது ஆட்சிக்கு எதிராக காரிஜியாக்கள் புரட்சி செய்த போது, அலீ (ரலி) அவர்களது ஆட்சிக்கு ஆதரவாக ஒரு கூட்டம் செயல்படத் தொடங்கியது. இவர்களே ஷியாக்கள் ஆவர். ஷியா என்றால் ஒரு கூட்டத்தினரைக் குறிக்கும் சொல். அலீ (ரலி) க்கு ஆதரவான கூட்டம் என்பதால் "ஷீயத் அலீ - அலீயுடைய கூட்டத்தினர்' என்று அழைக்கப்பட்டனர். இவ்வாறு தோன்றிய ஷியாக்கள் காலப் போக்கில், அலீ (ரலி) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் கொண்ட அளவுக்கதிகமான பிரியத்தால் அவர்களைக் கடவுள் நிலைக்குக் கொண்டு சென்று விட்டனர். நபி (ஸல்), அலீ, ஃபாத்திமா, ஹஸன், ஹுசைன் (ரலி-அன்ஹும்) ஆகிய ஐவருக்கும் தெய்வத் தன்மை இருப்பதாக ஷியாக்கள் நம்புகின்றனர்.

அலீ (ரலி) அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய நபித்துவம் தான், அவர்கள் சிறு வயதினராக இருந்ததால் நபி (ஸல்) அவர்களிடம் வழங்கப் பட்டது என்பதும் ஷியாக்களின் நம்பிக்கையாகும்.

நபி (ஸல்) அவர்கள் இறந்த பிறகு அலீ (ரலி) அவர்களிடம் ஆட்சிப் பொறுப்பை வழங்காமல் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி-அன்ஹும்) ஆகியோர் ஆட்சிப் பொறுப்பை வகித்ததால், இந்த மூன்று கலீஃபாக்களையும், இவர்களுடன் இருந்த ஏனைய நபித்தோழர்களையும் "காஃபிர்கள்' (இறை மறுப்பாளர்கள்) என்று கூறுகின்றனர். இந்த நபித்தோழர்களைத் திட்டுவது இறைவனிடத்தில் நன்மையைப் பெற்றுத் தரும் என்றும் கருதுகின்றனர்.

சமாதி வழிபாடு, தரீக்கா, ஷைஹ், முரீது என சமுதாயத்தில் நிலவி வரும் எண்ணற்ற வழிகேடுகளுக்கு அடிப்படையாக அமைந்திருப்பது ஷியாயிஸம் தான். ஷாதுலிய்யா, காதிரிய்யா போன்ற தரீக்காக்கள் அனைத்தும் சங்கிலி தொடராகச் சென்று அலீ (ரலி) அவர்களிடம் போய் முடிவடையும். இந்த வழிகேடுகள் ஷியாக்களிடமிருந்து வந்தவை என்பதே இதற்குக் காரணம்.

இப்படி இஸ்லாத்திற்கு எள்ளளவும் சம்பந்தமில்லாத, இஸ்லாத்தின் அடிப்படைக்கே முரணான கொள்கைகளை உடையவர்கள் தான் ஷியாக்கள்.

? ஷியாயிஸம் என்பது இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா? விளக்கவும்.

எஸ்.எம். இல்யாஸ், திருமங்கலக்குடி

ஷியாயிஸம் என்பது இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கொள்கையாகும். இன்னும் சொல்லப்போனால் அது ஒரு தனி மதம் என்று கூட சொல்லலாம்.

நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) அவர்களை உயர்வானவர்களாகச் சித்தரிப்பவர்கள் ஷியாக்கள். மேலும் அபூபக்ர், உமர், உஸ்மான் போன்ற கலீஃபாக்களும் நபித்தோழர்களும் காஃபிர்கள் என்பது ஷியாக்களின் நம்பிக்கை.

ஷியாக் கொள்கை இஸ்லாத்தின் அடிப்படைக்கு மாற்றமானது என்பதைப் புரிந்து கொள்வதற்கு ஷியாக்கள் புனிதமாகப் போற்றும் நூல்களிலிருந்து சிலவற்றை இங்கு தருகின்றோம்.

"தொழுகைகளைப் பேணிக் கொள்ளுங்கள்! நடுத்தொழுகையையும் பேணிக் கொள்ளுங்கள்'' என்பது திருக்குர்ஆன் வசனம். இதற்கு விளக்கம் கூறப் புகுந்த ஷியாக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ், ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகின்றார்கள்.

(ஐந்து) தொழுகைகள் என்பது ரசூல் (ஸல்), அலீ (ரலி), ஃபாத்திமா (ரலி), ஹஸன் (ரலி), ஹுஸைன் (ரலி) ஆகிய ஐவராவர். நடுத் தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது அலீ (ரலி) ஆவார்.

அய்யாஷி தப்ஸீர் பாகம் 1, பக்கம் 128, நூருஸ்ஸகைன் பாகம் 1, பக்கம் 238

ஷியாக்களின் மற்றொரு தப்ஸீரில், நபி (ஸல்) அவர்கள் ருகூவு, ஸஜ்தா செய்ய நான் பார்த்திருக்கிறேன். அப்போது அவர்கள், இறைவா! உன் அடியார் அலீயின் பொருட்டால் அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக! என்று துஆ செய்தார்கள் என இப்னு மஸ்ஊது (ரலி) கூறினார்களாம்.

அல் புர்ஹான் ஃபீ தப்ஸீரில் குர்ஆன் பாகம் 4, பக்கம் 226

"நான் மூஸா (அலை), கிழ்ரு (அலை) ஆகியோர் முன்னிலையில் இருந்திருந்தால் அவ்விருவரை விட நான் மிகவும் அறிந்தவன் என்று பிரகடனம் செய்திருப்பேன்'' என்று அலீ (ரலி) கூறினார்களாம். ஷியாக்களில் புகாரி இமாமைப் போல் மதிக்கப் படும் குலைனீ என்பவர் தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார்.

அல் உஸுலுல் காபி கிதாபுல் ஹுஜ்ஜத் பாகம் 1, பக்கம் 261

"உம்மைக் கொண்டே இறைவன் ஆதமை மன்னித்தான். உம்மைக் கொண்டே யூசுப் நபியை பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றினான். உம்மைக் கொண்டே அய்யூப் நபியைச் சோதித்தான்'' என்று அலீ (ரலி) அவர்களை நோக்கி ஸல்மான் பார்ஸீ (ரலி) கூறினார்களாம்.

அல் புர்ஹான் முன்னுரை பக்கம் 27

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்று இறைவனை நெருங்கிய போது "முஹம்மதே! திரும்பிப் பாரும்'' என்றானாம் இறைவன். திரும்பிப் பார்த்தால் அங்கே அலீ (ரலி) நிற்கின்றார்களாம்.

தஃப்ஸீருல் புர்ஹான் பாகம் 2, பக்கம் 404

எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப் படாத சிறப்புக்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்குத் தெரியாமல் நடந்திராது, நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலீ (ரலி) கூறினார்கள்.

அல்உஸுலு மினல் காபி பாகம் 19, பக்கம் 197

அலீ (ரலி) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பது நமது கொள்கையாகும். இதை நம்பாதவன் நம்மைச் சேர்ந்தவனல்லன் என்று பாகிர் இமாம் கூறினார்களாம்.

காஷானியின் கிதாபுஸ்ஸாயி பாகம் 1 பக்கம் 837

நபி (ஸல்) அவர்களை விட அலீ (ரலி) உயர்ந்தவர்கள் என்பது இவர்களின் கொள்கை என்பதற்கு இவை சான்றுகளாகத் திகழ்கின்றன.

நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித்தோழர்களும் மதம் மாறி விட்டனர் என்று ஷியாக்களின் கொள்கை பரப்புச் செயலாளர் ஸலிம் இப்னு கைஸ் அல் ஆமிரீ தனது நூலில் பக்கம் 92ல் கூறுகிறார்.

மிக்தாத் இப்னுல் அஸ்வத், அபூதர் அல்கிபாரி, ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித்தோழர்களும் காபிர்களாகி விட்டனர்.

கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 8, பக்கம் 245

அபூபக்ரும், உமரும், அலீ (ரலி) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்பு கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும், மலக்குகளின் சாபமும், எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும்.

கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 2 பக்கம் 246

(அபூபக்ருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸார்கள் மட்டும் அபூபக்ருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றோர் அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர்.

கிதாபுர்ரவ்லா மினல் காபி பாகம் 296

எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர். அலீ என்ற ஒரு நபரைத் தவிர, அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார்.

கிதாபுஷ்ஷியா வஸ்ஸுன்னா என்ற சின்ன ஏடு

அல்லாஹ்வும், அவனது தூதர் (ஸல்) அவர்களும் புகழ்ந்துரைத்த நபித்தோழர்களைப் பற்றி தரக்குறைவாகவும், காஃபிர்கள் என்றும் திட்டுவது ஷியாக்களின் கொள்கை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

இவை தவிர ஷியாக்களின் இமாம்கள் எனப்படும் 12 பேரைப் பற்றிய இவர்களின் நம்பிக்கையும் ஷியாக்கள் இஸ்லாத்திற்குத் துளியும் சம்பந்தமில்லாத கொள்கையுடவர்கள் என்பதை நிரூபிக்கின்றன.

ஷியாக்களின் பன்னிரெண்டு இமாம்களும் தாங்கள் எப்போது மரணிப்போம் என்பதை அறிவார்கள். அவர்கள் விரும்பிய நேரத்தில் மரணிப்பார்கள்.

அல் உஸுலு மினல் காபி பக்கம் 258

இந்தப் பனிரெண்டு இமாம்களிடமும் மலக்குகள் வந்து எல்லா விபரங்களையும் கூறிச் செல்வார்களாம்.

அல் உஸுலுமினல் காபி பக்கம் 398

இந்தப் பனிரெண்டு இமாம்களிடமும் விஷேசமான ஞானம் உள்ளதாம், அதை மலக்குகளும் நபியும் கூட அறிய முடியாதாம்.

அல் உஸுலுமினல் காபி பக்கம் 402

எந்த மனிதனின் பேச்சாயினும், பறவைகள் மிருகங்கள் மற்றும் உயிரினங்களின் பேச்சாயினும் அனைத்தையும் பனிரெண்டு இமாம்களும் அறிவர்.

குர்புல் இஸ்ஸாத் பக்கம் 146

பன்னிரு இமாம்களில் ஒருவராகிய ஜஃபர் சாதிக் அவர்கள் (பூரியான் பாத்தியா நாயகர்) "வானம் பூமியில் உள்ள அனைத்தையும் நான் அறிவேன், நடந்ததையும் நடக்கவிருப்பதையும் நான் அறிவேன்'' என்றார்களாம்.

அல்உஸுலு மினல் காபி, பாகம் 1, பக்கம் 261

இறந்தவர்களை உங்களால் உயிர்ப்பிக்க இயலுமா? குஷ்ட ரோகிகளையும், பிறவிக் குருடரையும் உங்களால் குணப்படுத்த முடியுமா? என்று அபூஜஃபர் அவர்களிடம் கேட்ட போது முடியுமே என்றார்களாம்.

கிதாபுல் ஹுஜ்ஜா மினல் காபி, பாகம் 1, பக்கம் 470

"யார் அலீயை அறிந்து கொள்கிறாரோ அவரை நான் நரகில் புகுத்த மாட்டேன். அவர் எனக்கு மாறு செய்திருப்பினும் சரியே, எனக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் அலீயை அறியாதவர்களை நான் சுவர்க்கத்தில் சேர்க்க மாட்டேன்'' என்று அல்லாஹ் அலீ (ரலி) யைப் பற்றி கூறினானாம்.

பஹ்ரானியின் புர்ஹான் எனும் தப்ஸீர் முன்னுரை பக்கம் 23

அல்லாஹ்வின் பெயராலேயே இப்படிப் பொய் கூறுபவர்களே ஷியாக்கள்.

அல்லாஹ்வின் பெயராலும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் பெயராலும் இது போல் அவர்கள் அரங்கேற்றிய பொய்கள் ஏராளம். இவர்களது வெறி எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் "வரவேண்டியவர்'' என்றொரு கற்பனைப் பாத்திரத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். அல் காயிம் என்று இவர்களால் குறிப்பிடப்படக் கூடிய ஒருவர் வருவாராம், அவர் செய்யும் காரியங்கள் என்ன தெரியுமா?

காயிம் வந்து ஹுஸைனைக் கொலை செய்தவர்களின் சந்ததிகளை அவர்கள் முன்னோர் செயலுக்காக கொன்று குவிப்பார்.

தப்ஸீர் சாபி பாகம்1, பக்கம் 172

காயிம் வந்து ஆயிஷாவைத் திரும்ப எழுப்பி அவர்களைச் சவுக்கால் அடிப்பார். பாத்திமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார்.

தப்ஸீர் ஸாபி பாகம் 2, பக்கம் 108

இத்தகைய கேடுகெட்ட கொள்கைக்காரர்களே ஷியாக்கள். ஷியாக்களைப் பற்றி எழுத வேண்டும் என்றால் இங்கு பக்கங்கள் போதாது. அந்த அளவுக்கு இவர்களிடம் மவ்ட்டீகங்களும் மூட நம்பிக்கைகளும் மண்டிக் கிடக்கின்றன. இவர்களுக்கும், இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ள இவையே போதுமான ஆதாரங்களாகும்.

ஷியாக் கொள்கையில் பற்றுடையவர் அறிவிப்பின் நிலை

இவரது ஹதீஸ்களை ஏற்கக் கூடாது என்ற கருத்துடையவர்கள் கூறும் முதல் காரணம், "இவர் ஷியாக் கொள்கையில் தீவிரப் பற்றுள்ளவராக இருந்தார்'' என்பது தான்.

இப்னு ஹிப்பான், இப்னு மயீன் உள்ளிட்ட சில அறிஞர்கள், "இவர் ஷியாக் கொள்கையில் பற்று கொண்டவராக இருந்தார்' என்று கூறியுள்ளனர். எனவே இதன் காரணமாக இவர் அறிவிக்கும் ஹதீஸ் பலவீனமானது என்று சிலர் வாதிக்கின்றனர்.

இந்த வாதம் ஏற்கத்தக்கதல்ல! ஏனெனில் எத்தகைய கொள்கை உடையவர் என்ற அடிப்படையில் ஒருவரது நம்பகத்தன்மையை ஹதீஸ் கலை வல்லுநர்கள் எடை போடுவதில்லை. அவரது நாணயம், நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் தான் நம்பகத்தன்மையை எடை போடுவார்கள்.

ஹதீஸ் கலை வல்லுனர்களால் நம்பகமானவர் என்று முடிவு செய்யப்பட்டவர்களில் பலர் ஷியாக்களாகவும், கத்ரியாக்களாகவும், முர்ஜியாக்களாகவும் இன்னும் பல தவறான கொள்கையுடையவர்களாகவும் இருப்பதை சர்வ சாதாரணமாகக் காணலாம்.

இதனால் தான் இவரைப் பற்றி இப்னு மயீன் அவர்கள் கூறும் போது, "இவர் பழுதில்லாதவர்; ஆயினும் ஷியாக் கொள்கையுடையவர்'' என்று குறிப்பிடுகிறார்கள்.

"இவர் ஷியாக் கொள்கையுடையவர் என்பதால் இவரைக் குறை கூறியுள்ளனர். ஆனால் இவரது அறிவிப்புக்களைப் பொறுத்த வரை இவரை உண்மையாளர் என்று வர்ணித்துள்ளனர்' என்று கதீப் அவர்கள் கூறுகிறார்கள்.

ஹஸன் பின் இத்ரீஸ் அவர்கள் பின்வரும் நிகழ்ச்சியைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.

அலீ பின் குராப் பற்றி அப்துல்லாஹ் பின் அம்மாரிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், "அவர் ஹதீஸில் ஈடுபாடு உள்ளவராகவும், ஹதீஸ் ஞானமுள்ளவராகவும் இருந்தார்'' என்று விடையளித்தார்கள். "அவர் பலவீனமானவர் இல்லையா?'' என்று நான் கேட்டேன்.

அதற்கவர்கள், "அவர் ஷியாக் கொள்கையுடையவராக இருந்தார். ஹதீஸ் பற்றி ஞானமுள்ள ஒருவர் பொய்யராக இல்லாத போது, ஷியாக் கொள்கை அல்லது கத்ரியாக் கொள்கையுடையவர் என்ற காரணத்துக்காக அவரது ஹதீஸ்களை நான் விட்டு விட மாட்டேன். மூஸிலியை விடச் சிறந்தவராக இருக்கும் ஒருவர் ஹதீஸ் பற்றி ஞானமில்லாதவராக இருந்தால் அவர் வழியாக எதையும் நான் அறிவிக்கவும் மாட்டேன்'' என்று விடையளித்தார்கள்.

இப்னு கானிவு அவர்கள் இவரைப் பற்றிக் கூறும் போது, "இவர் நம்பகமானவர்; ஷியாக் கொள்கை உடையவர்'' என்று குறிப்பிட்டார்கள்.

ஒருவரது கொள்கை எது என்பது ஹதீஸ் துறையில் கவனிக்கப் படுவதில்லை என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

புகாரியில் ஷியாக்கள்

இதை இன்னும் உறுதிப்படுத்திட புகாரியில் இடம் பெற்ற ஷியாக்கள் சிலரை இங்கே சுட்டிக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.

புகாரி இமாமின் ஆசிரியரான உபைதுல்லாஹ் பின் மூஸா என்பவர் ஷியாக் கொள்கையுடையவராக இருந்தார். அத்துடன் மிகவும் நம்பகமானவராகவும் இருந்தார். இதன் காரணமாக புகாரி இமாம் அவர்கள் இவர் வழியாக ஏராளமான ஹதீஸ்களைத் தமது நூலில் பதிவு செய்துள்ளனர்.

அவை வருமாறு: 8, 126, 127, 354, 520, 865, 1139, 1140, 1330, 1915, 2006, 2341, 2518, 2700, 3359, 3632, 4039, 4043, 4053, 4150, 4251, 4512, 4706, 4839, 4904, 4917, 4928, 4979, 4990, 5054, 5152, 5541, 5836, 6154, 6536, 6744, 6864, 6908, 6920, 7063, 7311, 7511.

இது போல் அதீ பின் ஸாபித் அன்ஸாரி என்பவரும் ஷியாக் கொள்கையுடையவராக இருந்தார்; அத்துடன் நம்பகமானவராகவும் இருந்தார். இவரது கொள்கையைக் கவனிக்காமல் நம்பகத்தன்மையை மட்டும் கவனத்தில் கொண்டு இமாம் புகாரி அவர்கள் இவர் வழியாகப் பல ஹதீஸ்களைத் தமது நூலில் பதிவு செய்துள்ளனர். அவை வருமாறு:

55, 769, 964, 989, 1382, 1674, 1884, 2398, 2474, 2727, 3213, 3255, 3282, 3783, 4050, 4124, 4222, 4225, 4414, 5351, 5397, 5516, 5881, 6048, 6115, 6195, 7546.

இவரைப் போலவே அவ்ஃப் பின் அபீஜமீலா என்பவரும் ஷியாக் கொள்கையுடையவராக இருந்தார். அதே நேரத்தில் நம்பகத்தன்மை உடையவராகவும் இருந்தார். இவர் வழியாகப் பின்வரும் ஹதீஸ்களை இமாம் புகாரி அவர்கள் தமது நூலில் பதிவு செய்துள்ளனர்.

47, 344, 348, 547, 599, 1143, 2225, 3275, 3345, 3404, 3915, 3947, 4425, 4674, 4799, 4849, 5010, 5198, 6075, 6546, 6669, 7047, 7099, 7112

இது போன்று முஹம்மத் பின் ஃபுளைல் பின் கஸ்வான் என்பவரும் நம்பகமானவராகவும், அதே சமயம் ஷியாக் கொள்கையுடையவராகவும் இருந்தார். இவர் வழியாகவும் பல ஹதீஸ்களை புகாரி இமாம் தமது நூலில் பதிவு செய்துள்ளனர். அவை வருமாறு:

38, 595, 1300, 1728, 2041, 2064, 2544, 2963, 3821, 4022, 4170, 4268, 5374, 5483, 6460, 6682, 7079, 7563

இன்னும் இவர்களைப் போன்று வேறு சில ஷியாக்களின் அறிவிப்புகளும் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒருவர் ஷியாக் கொள்கை உடையவர் என்பதற்காக ஒரு ஹதீஸைப் பலவீனமானது என்று கூறுவதாக இருந்தால் மேற்கண்ட ஹதீஸ்கள் அனைத்தைப் பற்றியும் அவ்வாறு கூற வேண்டும். அப்படி எந்த அறிஞரும் கூறவில்லை.

எனவே அலீ பின் குராப் என்பவர் ஷியாக் கொள்கையுடையவர் என்றாலும் அவர் நம்பகமானவர்; உண்மையாளர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதைக் காரணம் காட்டி இவரது அறிவிப்புகளை நிராகரிக்க முடியாது.
ஷீஆக்களின் மறுபிரவேசம்

அறிஞர் பீஜே அவர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும். அல்ஜன்னத்தில் நீங்கள் எழுதிய ஷீஆக்களின் மறுபிரவேசம் என்ற ஆய்வுக் கட்டுரை அதன் முக்கியத்துவம் கருதி அண்மையில் ஏகத்துவத்திலும் மீள் பிரசுரிக்கப்பட்டது.

சில வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் ஷீஆக் கும்பல் தலை காட்டிய போது, இலங்கையில் உள்ள ஜம்இய்யத்து அன்ஸாருஸ் சுன்னா அல்முஹம்மதிய்யா என்ற நிறுவனம் ஷீஆக்களின் மறுபிரவேசம் என்ற உங்கள் ஆய்வுக் கட்டுரையை நுாலாக வெளியிட்டு, இலவசமாக வினியோகித்தது. அதன் ஒரு பிரதி எனக்கு சவுதி அரேபியாவில் கிடைத்தது. அதன் முக்கியப் பகுதியை அனுப்பியுள்ளேன். இதனை இணையத்தில் வெளியிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன். வஸ்ஸலாம்.

இவ்வண்ணம்

மவ்லவி கைஸான் அப்துல் ஜப்பார்.

அழைப்பாளர், நஸீம் ஜாலியாத். ரியாத்.

ஷீஆக்களின் மறுபிரவேசம்

தொழுகை தொடர்பாக வரும் அல்குர்ஆனிய வசனங்களுக்கு விளக்கம் கூறப் புகுந்த ஷீஆக்களின் விரிவுரையாளர்கள் அய்யாஷ், ஹுவைஸீ ஆகிய இருவரும் பின்வருமாறு கூறுகிறார்கள்.

'(ஐந்து) தொழுகைகள் என்பது ரஸுல் (ஸல்), அலி (ரழி), பாதிமா (ரழி), ஹஸன் (ரழி), ஹுஸைன் (ரழி) ஆகிய ஐவராவர். நடுத்தொழுகை என்று விஷேசமாகக் குறிப்பிட்டது, அலி (ரழி) ஆவார்.'

(அய்யாஷி தப்ஸீர் பாகம்- 1 பக்கம்:128 நூருஸ்ஸகலைன் பாகம் - 1 பக்கம்: 238)

இதில், நபியை விட அலியை உயர்த்துகின்றனர்.

ஷீஆக்களின் மற்றொரு தப்ஸீரில்

'நபி (ஸல்) அவர்கள், ருகூவு, ஸஜ்தாச் செய்ய நான் பார்த்திருக்கின்றேன். அப்போது, அவர்கள் 'இறைவா! உன் அடியார் அலியின் பொருட்டால், அவர்களின் கண்ணியத்தினால் என் உம்மத்தின் பாவிகளை மன்னிப்பாயாக' என்று துஆச் செய்தார்கள் என்று இப்னு மஸ்ஊத் (ரழி) கூறினார்கள் என்று இட்டுக்கட்டியுள்ளனர்.

(அல்புர்ஹான் பீ தப்ஸீரில் குர்ஆன் பக்கம் - 1 பக்கம் : 226)

அலியின் பொருட்டால், நபி (ஸல்) அவர்களே துஆச் செய்தார்கள் என்று இட்டுக்கட்டி வம்பளக்கும் இவர்களின் புரட்சி இஸ்லாமியப் புரட்சியா? இன்னுமுள்ளது இது போன்ற குப்பைகள்.

'நான் முஸா (அலை), ஹிழ்று (அலை) ஆகியோர் முன்னிலையில் இருந்திருந்தால், அவ்விருவரை விட நான் மிகவும் அறிந்தவன் என்று பிரகடனம் செய்திருப்பேன்' என்று அலி (ரலி) கூறினார்களாம். ஷீயாக்களில், புகாரி இமாமைப் போல் மதிக்கப்படும் குலைனீ என்பவர் தமது நூலில் இவ்வாறு கூறுகின்றார்.

அல்உஸுல் காபீ கிதாபுல் ஹுஜ்ஜத், பாகம் 1, பக்கம் 261

'உம்மைக் கொண்டே இறைவன் ஆதமை மன்னித்தான். உம்மைக் கொண்டே யூசுப் நபியை பாழுங்கிணற்றிலிருந்து காப்பாற்றினான். உம்மைக் கொண்டே அய்யூப் நபியைச் சோதித்தான்' என்று அலி (ரலி) அவர்களை நோக்கி ஸல்மான் பார்ஸி (ரலி) கூறினார்களாம்.

அல்புர்ஹான் முன்னுரை, பக்கம் 27

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்று இறைவனை நெருங்கிய போது 'முஹம்மதே படைப்பினங்களில் நீர் யாரை விரும்புகின்றீர்? ' என்று இறைவன் கேட்டானாம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அலி' என்றார்களாம். 'முஹம்மதே திரும்பிப் பாரும்' என்றானாம் இறைவன். திரும்பிப் பார்த்தால் அங்கே அலி (ரலி) நிற்கிறார்களாம்.

தஃப்ஸீருல் புர்ஹான், பாகம் 2, பக்கம் 404

ஷீயாக்களின் பன்னிரெண்டு இமாம்களும் தாங்கள் எப்போது மரணிப்போம் என்பதை அறிவார்கள். அவர்கள் விரும்பிய நேரத்தில் மரணிப்பார்கள்.

அல் உஸுலுமினல் காபி, பக்கம் 258

இந்தப் பன்னிரெண்டு இமாம்களிடமும் மலக்குகள் வந்து எல்லா விபரங்களையும் கூறிச் செல்வார்களாம்.

அல் உஸுலுமினல் காபி, பக்கம் 393

இந்தப் பன்னிரெண்டு இமாம்களிடமும் விஷேசமான ஞானம் உள்ளதாம். அதை மலக்குகளும் நபியும் கூட அறிய முடியாதாம்.

மேற்படி நூல் பக்கம் 402

எந்த மனிதனின் பேச்சாயினும், பறவைகள் மிருகங்கள் மற்றும் உயிரினங்களின் பேச்சாயினும் அனைத்தையும் பன்னிரெண்டு இமாம்களும் அறிவர்.

குர்புல் இஸ்னாத், பக்கம் 146

எனக்கு முன் நபிமார்கள் உட்பட எவருக்கும் கொடுக்கப்படாத சிறப்புக்கள் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. நடந்தது எனக்கு தெரியாமல் நடந்திராது. நடப்பவை என்னை விட்டும் மறையாது என்று அலி (ரழி) கூறினார்களாம்.

அல் உஸுலுமினல் காபி, பாகம் 19, பக்கம் 197

பன்னிரு இமாம்களில் ஒருவராகிய ஜஃபர் சாதிக் அவர்கள் (பூரியான் பாத்தியா நாயகர் ) 'வானம் பூமியில் உள்ள அனைத்தையும் நான் அறிவேன். நடந்ததையும் நடக்கவிருப்பதையும் நான் அறிவேன்' என்றார்களாம்.

அல் உஸுலுமினல் காபி, பாகம் 1, பக்கம் 261

இறந்தவர்களை உங்களால் உயிர்ப்பிக்க இயலுமா? குஷ்ட ரோகிகளையும், பிறவிக் குருடரையும் உங்களால் குணப்படுத்த முடியுமா? என்று அபூ ஜஃபர் அவர்களிடம் கேட்ட போது 'முடியுமே' என்றார்களாம்.

கிதாபுல் ஹுஜ்ஜா மினல் காபி, பாகம் 1, பக்கம் 470

அல்லாஹ் அலி (ரழி) அவர்களைப் பற்றிப் பின்வருமாறு கூறினானாம்:

'யார் அலியை அறிந்து கொள்கிறாரோ அவரை நான் நரகில் புகுத்த மாட்டேன். அவர் எனக்கு மாறு செய்திருப்பினும் சரியே. எனக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும் அலியை அறியாதவர்களை நான் சுவர்க்கத்தில் சேர்க்க மாட்டேன்.' அல்லாஹ்வின் பெயராலேயே இப்படிப் பொய் கூறுபவர்களே ஷீயாக்கள்.

பஹ்ரானியின் 'புர்ஹான்' எனும் தப்ஸீர் முன்னுரை பக்கம் 23

'ஷீயாக்களாகிய உங்களில் இருவர் கூட ஏன் ஒருவர் கூட நரகிற்குச் செல்ல மாட்டார்கள்' என்று ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.

அர்ரவ்லா மினல் காபி, பாகம் 8, பக்கம் 78

'ஷீயாவைச் சேர்ந்தவர் எந்த அமலும் செய்யாமல் தன் நன்மையை நிரப்பிக் கொள்வார்.' என்றும் ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.

அர்ரவ்லா மினல் காபி, பாகம் 8, பக்கம் 315

ஷீயாக்களின் எந்தப் பாவமும் பதியப்படுவதில்லை. மழை துளியளவுக்கும், கற்கள், மணல்கள், மரங்கள், முட்கள் எண்ணிக்கை அளவுக்கு பாவம் செய்தாலும் அவை பதியப்படுவதில்லை என்று ஷீயாக்களின் எட்டாவது இமாம் அபுல் ஹஸன் குறிப்பிட்டாராம்.

உயூனு அக்பாரிர் ரிளா, பாகம் 2, பக்கம் 236

'எல்லா நபிமார்களும் முஹம்மத் (ஸல்) அவர்களின் நுபுவத்தை ஏற்றது போல், எல்லா மலக்குகளும் ஜிப்ரீலும் ஏற்றது போல், என்னையும் அவர்கள் ஏற்றுள்ளனர்' என்று அலி (ரழி) கூறினார்களாம்.

அல்உஸுலுல் காபி, பாகம் 1, பக்கம் 197, 198.

ஷீயாக்களின் அடிப்படை எத்தகையது என்பதற்கு இவை தெளிவான சான்றுகள். புரட்சித் தலைவர் குமைனியின் கொள்கை இதுவே! இதோ குமைனியே வாக்குமூலம் தருகிறார்:

பன்னிரெண்டு இமாம்களுக்கும் இருக்கக் கூடிய ஆத்மீகமான அந்தஸ்தை மலக்குகளும், நபிமார்களும் கூட அடைய முடியாது என்பது நமது கொள்கையாகும். ஏனெனில், பன்னிரெண்டு இமாம்களும் இவ்வுலகம் படைக்கப்படுவதற்கு முன்பே ஒளியாக அர்ஷுக்கு அடியில் இருந்தார்கள். மேலும், பன்னிரெண்டு இமாம்களும், மலக்குகளும், நபிமார்களும் அடைய முடியாத விஷேச நிலை அல்லாஹ்வுடன் தங்களுக்கு இருப்பதாகக் கூறியுள்ளனர்.இது நமது அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும்.

விலாயதே பகீஹ் தர் குஸுஸே ஹுகூமதே. இஸ்லாமி, தஹ்ரான் வெளியீடு பக்கம் 58

குமைனியே தனது கொள்கையை இவ்வளவு தெளிவாக அறிவித்த பிறகு அடிப்படையிலேயே இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பிறகு அவர் செய்த புரட்சி எப்படி இஸ்லாமிய புரட்சியாகும்?

அலி (ரழி) அவர்கள் திரும்பவும் இவ்வுலகுக்கு வருவார்கள் என்பது நமது கொள்கையாகும். இதை நம்பாதவன் நம்மைச் சேர்ந்தவனல்லன் என்று பாகிர் இமாம் கூறினார்களாம்.

காஷானியின் கிதாபுஸ்ஸாபி, பாகம் 1, பக்கம் 347

நபி (ஸல்) அவர்களுக்குப் பின் நான்கு நபர்களைத் தவிர எல்லா நபித் தோழர்களும் மதம் மாறிவிட்டனர்

ஷீயாக்களின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ஸலீம் இப்னு கைஸ் அல் ஆமிரீயின் நூலில் பக்கம் 92ல் கூறுகிறார்.

மிக்தாத் இப்னுல் அஸ்வத், அபூதர் அல்கிபாரி, ஸல்மான் பாரிஸீ ஆகிய மூவரைத் தவிர எல்லா நபித் தோழர்களும் காபிர்களாகிவிட்டனர்.

கிதாபுர்ரவ்லா மினல் காபி, பாகம் 8, பக்கம் 245

அபூபக்கரும், உமரும், அலி (ரழி) அவர்களுக்குச் செய்த தீங்குக்கு மன்னிப்புக் கேட்காமலேயே மரணித்தனர். அவ்விருவர் மீதும் அல்லாஹ்வின் சாபமும் மலக்குகளின் சாபமும் எல்லா மக்களின் சாபமும் உண்டாகட்டும்.

கிதாபுர்ரவ்லா மினல் காபி, பாகம் 2, பக்கம் 246

(அபூபக்கருக்கு பைஅத் செய்ததன் மூலம்) அனைவரும் அறியாமைக் காலத்துக்குத் திரும்பினார்கள். அன்ஸாரிகள் மட்டும் அபூபக்கருக்கு பைஅத் செய்யாமல் ஸஃதுக்கு பைஅத் செய்ததன் மூலம் அந்த அறியாமையிலிருந்து விலகினாலும் மற்றொரு அறியாமையில் அவர்கள் வீழ்ந்தனர்.

கிதாபுர்ரவ்லா மினல் காபி, பக்கம் 296

எல்லோரும் பல்வேறு உலக நோக்கம் கருதியே இஸ்லாத்தில் இணைந்தனர். அலி என்ற ஒரு நபரைத் தவிர, அவர் மட்டுமே உணர்ந்து இஸ்லாத்தை ஏற்றார்.

கிதாபுஷ்ஷியா வஸ்ஸுன்னா என்ற சின்ன ஏடு

இப்படி நபித்தோழர்களைக் கேவலப்படுத்தும் சங்கதிகள் ஏராளம். திருக்குர்ஆனில் யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்டிக்கப்படும் வசனங்கள் யாவும் நபித் தோழர்கள் குறித்தே இறங்கியதாக இவர்களின் தப்ஸீர்கள் கூறுகின்றன. விரிவஞ்சி தவிர்க்கின்றோம்.

இஸ்லாத்துடன் சிறிதும் சம்பந்தமில்லாத இந்த வழிகேடுகளின் புரட்சியை இஸ்லாமியப் புரட்சி எனச் சாதிப்போர் சிந்திக்க வேண்டும்.

ஷீயாக்களிடம் 'முத்ஆ' என்றொரு கொள்கை உண்டு. அதாவது, சட்டபூர்வ விபச்சாரம். இதன் மூலம் ஒழுக்க வாழ்க்கையை சீரழித்தவர்கள், சீரழித்துக் கொண்டிருப்பவர்கள் இந்த ஷீயாக்கள்.

ஒரு பெண்ணை சில நாட்களுக்கு மட்டும் வாடகைக்கு பேசிக் கொண்டு அவளுடன் கூடுவதற்குத் தான் 'முத்ஆ' என்பர். இதுபற்றி ஷீயாக்கள் தரும் விளக்கத்தைக் காண்போம்.

ஒரு தடவை மட்டும் உறவு கொள்வதாக ஒப்பந்தம் செய்து கொண்டு 'முத்ஆ' செய்யலாமா? என்று ஷீயாக்களின் பத்தாவது இமாமிடம் கேட்கப்பட்ட போது 'செய்யலாம்' என்றாராம்.

அல்புரூவு மினல் காபி, பாகம் 5, பக்கம் 460

இந்த முத்ஆவுக்கு நான்கு என்ற வரம்பு உண்டா? என்று அலி (ரழி) அவர்களிடம் கேட்ட போது 'ஆயிரம் பெண்களை வேண்டுமானாலும் இவ்வாறு செய்து கொள்! ஏனெனில், இவர்கள் கூலிக்காரர்கள்' என்றார்களாம்.

தஹ்தீபுல் அஹ்காம், பாகம் 7, பக்கம் 259

'ஒரு பெண்ணுடன் ஒப்பந்தம் செய்து கொண்டேன். பிறகு அவளுக்குக் கணவன் இருப்பதாக எனக்கு எண்ணம் தோன்றியது. விசாரித்துப் பார்த்த போது அவளுக்கு கணவன் இருப்பது தெரிய வந்தது' என்று நான் ஜஃபர் சாதிக் அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'நீ ஏன் இதுபற்றி அலட்டிக் கொள்கிறாய் அவள் கூறுவதை நீ நம்ப வேண்டியது தான்' என்று பதிலளித்தார்களாம்.

அல்புரூவு மினல் காபி, பாகம் 5, பக்கம் 462

'மஜுஸி எனும் மதத்தவளுடன் இவ்வாறு முத்ஆ செய்யலாம்' என்று ஜஃபர் சாதிக் கூறினார்களாம்.

தஹ்தீபுல் அஹ்காம், பாகம் 7, பக்கம் 256

'யூத, கிறிஸ்தவப் பெண்களுடன் இப்படி முத்ஆ செய்யலாம்' என்று அபுல் ஹஸன்

(8வது இமாம் கூறினாராம்! அதே நூல் அதே பக்கம்)

விபச்சாரத்தையே தொழிலாகக் கொண்டவளுடனும் இவ்வாறு வாடகை மனைவியை அமைத்துக் கொள்ளலாம். ஏனெனில், அவளை விபச்சாரத்திலிருந்து தடுக்குமாம்.

(அதே நூல் அதே பக்கம்)

இந்த மூடர்கள் விபச்சாரத்திற்கு என்ன தான் அளவுகோள் வைத்துள்ளார்களோ? இதெல்லாம் குமைனியின் இஸ்லாமிய அரசில் உண்டா? என்று கேட்கக் கூடும். நிச்சியம் உண்டு. அங்கே விபச்சாரத்திற்கு சட்டபூர்வ அனுமதி உண்டு. ஆனால், 'முத்ஆ' என்பதாகப் பெயரை மட்டும் மாற்றிக் கொள்ள வேண்டும். சாட்சாத் புரட்சித் தலைவர் குமைனி கூறுவதைக் கேளுங்கள்!

விபச்சாரிகள் உட்பட எந்தப் பெண்ணையும் இவ்வாறு வாடகைக்கு அமர்த்திக் கொள்ளலாம்.

(குமைனியின் தஹ்ரீருல் வஸீலா பக்கம் 292)

விபச்சாரத்துக்கு சட்டபூர்வ அனுமதி அளிக்கும் ஓர் ஆட்சி தான் இஸ்லாமிய ஆட்சியா? இஸ்லாமிய ஆட்சிக்குப் பாடுபடும் இயக்கங்கள் இதைத் தான் செய்யப் போகின்றனவா? என்பதைச் சிந்திக்கட்டும்!

சமாதி வழிபாட்டுக்கு வழிகாட்டியவர்களும் இந்த ஷீயாக்களே!

'ஹுஸைன் (ரழி) அவர்களை ஸியாரத் செய்வது ஏற்றுக் கொள்ளப்பட்ட நூறு ஹஜ்ஜுகளுக்கும், ஏற்றுக் கொள்ளப்;பட்ட நூறு உம்றாவுக்கும் சமமானதாகும்.'

அல்இர்ஷாத் (முபீத் என்பவர் எழுதியது) பக்கம் 252

'யார் ஹுஸைன் மரணித்த பின் அவரது கப்ரை ஸியாரத் செய்கிறாரோ அவருக்குச் சொர்க்கம் உண்டு' என்று நபி (ஸல்) கூறினார்களாம்.

அல் இர்ஷாத் பக்கம் 252

அல்லாஹ்வின் தூதர் பெயரால் இது போல் அவர்கள் அரங்கேற்றிய பொய்கள் ஏராளம். இவர்களது வெறி எந்த அளவுக்குச் சென்று விட்டதென்றால் 'வர வேண்டியவர்' என்றோரு கற்பனைப் பாத்திரத்தை இவர்கள் உருவாக்கியுள்ளனர். 'அல் - காயிம்' என்று இவர்களால் குறிப்பிடப்படக் கூடிய ஒருவர் வருவாராம். அவர் செய்யும் காரியங்கள் என்ன தெரியுமா?

'காயிம்' வந்து ஹுஸைனைக் கொலை செய்தவர்களின் சந்ததிகளை அவர்கள் முன்னோர் செயலுக்காக கொன்று குவிப்பார்.

தப்ஸீர் சாபி, பாகம் 1, பக்கம் 172

காயிம் வந்து ஆயிஷாவைத் திரும்ப எழுப்பி அவர்களைச் சவுக்கால் அடிப்பார். பாத்திமாவின் தாயார் மீது அவதூறு கூறியதற்காக இவ்வாறு நடவடிக்கை எடுப்பார்.

தப்ஸீர் சாபி, பாகம் 2, பக்கம் 108

இத்தகைய கேடுகெட்ட கொள்கைக்காரர்களே ஷீயாக்கள். பொய்களையும், கற்பனைகளையுமே மார்க்கமாகக் கொண்டிருப்பவர்கள் செய்தது இஸ்லாமியப் புரட்சி என்றால் இதை விட வெட்கக் கேடு எதுவுமில்லை. இவர்களின் கற்பனைகள் சிலவற்றையும் காண்போம்.

விபச்சாரம் செய்த ஒரு மன்னன் யானையாக உருமாற்றப்பட்டான். கணவனுக்குத் துரோகம் செய்த பெண்ணொருத்தி முயலாக மாற்றப்பட்டாள். பேரீத்தம் பழங்களைத் திருடிக் கொண்டிருந்தவன் வாத்தாக மாற்றப்பட்டான். யெமன் நாட்டில் சுங்க அதிகாரியாகப் பணியாற்றியவன் நட்சத்திரமாக மாற்றப்பட்டு விட்டான். கோள் சொல்லித் திரிந்தவன் தேளாக மாற்றப்பட்டு விட்டான். இப்படியெல்லாம் ஏராளமான மௌடீகங்களை நபியின் பெயரால் இவர்கள் அரங்கேற்றினார்கள்.

ஷீயாக்களின் இலலுஷ்ஷராயிஃ எனும் நூலில் 485 ஆம் பக்கத்தில் இது இடம் பெற்றுள்ளது.

இது போன்ற மூடத்தனங்களுடன் ஆயத்துல்லாஹ் எனும் ஷீயாத் தலைவருக்கு இவர்கள் அளித்து வரும் மரியாதை இருக்கிறதே: சாயி பாபாவுக்கு அவர் பக்தர்கள் செய்யும் மரியாதையும் மிஞ்சி விடும். இவர்கள் தான் இஸ்லாமிய புரட்சியாளர்களா? சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கட்டும்!

ஷியாக் கொள்கை ஓர் ஆய்வு வீடியோ ஆடியோ

ஹுசைன் என்னை சேர்ந்தவர் என்பதன் பொருள் என்ன

20.10.2011. 06:35
அல்குர்ஆனும் முரண்படும் ஹதீஸ்களும்
அல்குர்ஆனும் முரண்படும் ஹதீஸ்களும்

(ஏப்ரல் 2007) (தொடர் 1)

அப்பாஸ் அலீ எம்.ஐ.எஸ்.சி.

சில வருடங்களுக்கு முன்னால் நமது அனைத்து முயற்சிகளும் இணை வைப்பு மற்றும் பித்அத்தான காரியங்களை ஒழிப்பதற்காக முடுக்கி விடப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில் எதிர் கொள்கையில் இருந்தவர்கள் நமது பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக பல முயற்சிகளை எடுத்தார்கள். இதையெல்லாம் முறியடித்து மக்களை வென்றெடுத்தோம், அல்ஹம்து லில்லாஹ்!

ஆனால் நம்முடன் சேர்ந்து இக்கொள்கையைப் பரப்பியவர்கள் இன்று நமது சொற்பொழிவுகளுக்கும் செயல்பாடுகளுக்கும் முட்டுக் கட்டையாக மாறியுள்ளனர். இயக்க வெறியும், பொறாமையும், குரோதக் கண்ணோட்டமும் இவர்களைத் தூண்டிவிட்டு குராஃபிகளுக்கு வேலையில்லாமல் இவர்களைச் சதி செய்ய வைக்கிறது.

குர்ஆன், ஹதீஸ் இந்த இரண்டை மாத்திரம் சொன்னால் தான் மக்கள் தம்மை அங்கீகரிப்பார்கள் என்பதை உணர்ந்துள்ள இவர்கள் ஹதீஸைப் பாதுகாக்கிறோம் என்ற போர்வையில் நம்மை வசை பாடுகிறார்கள். விதிவிலக்காக நல்லெண்ணத்துடன் நமது கருத்தை விமர்சிப்பவர்களும் இருக்கலாம்.

"அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறையும் இல்லாத ஹதீஸாக இருந்தாலும் அதற்குச் சரியான எந்த ஒரு விளக்கமும் கொடுக்க இயலாத வகையில் அது குர்ஆனுடன் மோதுமானால் அந்த ஹதீஸை நிறுத்தி வைக்க வேண்டும்' என்ற அடிப்படையை நாம் கூறி வருகிறோம். இதன் அடிப்படையில் புகாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ள மிகச் சில ஹதீஸ்கள் குர்ஆனுக்கு முரண்படுவதால் அதை ஏற்கக் கூடாது என்று எழுதி வருகிறோம்.

இதை அங்கீகரிக்காதவர்கள் நாம் கூறிய இந்த அடிப்படை, யாரும் கூறாத ஒன்று; ஹதீஸ் கலையில் இப்படி ஒரு விதியே இல்லை; மனோ இச்சைப்படி ஹதீஸை மறுப்பதற்காக இந்த வழிகளைத் திறந்து விடுகிறார்கள் என்று கூறி தங்களது அறியாமையை வெளிப்படுத்தினார்கள்.

விரலை ஒடித்தாலும் ஹதீஸைச் செயல்படுத்துவோம்; அவ்ஸில் தூக்கிப் போட்டாலும் ஹதீஸைச் செயல் படுத்துவோம்; தாய், தந்தையர் பேசாவிட்டாலும் பரவாயில்லை ஹதீஸ் தான் எங்களுக்கு முக்கியம் என்று கூறி நிரூபித்துக் காட்டிய இந்த ஜமாஅத்தைப் பார்த்து ஹதீஸை மறுக்கிறார்கள் என்ற அவதூறு இவர்களால் சமீபத்தில் கிளப்பி விடப்பட்டுள்ளது. இந்த விமர்சனம் வேரில்லாத மரம் என்பதைப் பின்வரும் சான்றுகளின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
திருக்குர்ஆன் மனோ இச்சையைப் பின்பற்றச் சொல்கிறதா?

மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

அல்குர்ஆன் (16:44)

ஹதீஸிற்கும், குர்ஆனிற்கும் உள்ள நெருக்கமான தொடர்பை இவ்வசனம் எடுத்துரைக்கிறது. நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய அனைத்தும் குர்ஆனிற்கு விளக்கமாக இருக்குமே தவிர ஒரு போதும் குர்ஆனுடன் முரண்படாது. குர்ஆனிற்கு முரண்படும் செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றாக இருக்க முடியாது என்பதால் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கூறுவதற்கு இறைவனுடைய இந்த வாக்கே போதுமானது.

அல்லாஹ்விடமிருந்து குர்ஆன் மட்டும் வரவில்லை; நபி (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் உபதேசித்த கருத்துக்கள், செயல்பாடுகள், அங்கீகாரம் ஆகிய அனைத்தும் அவனிடமிருந்து வந்தவையே! இதைப் பின்வரும் வசனம் உணர்த்துகிறது.

அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

அல்குர்ஆன் (53:4)

குர்ஆனும், நபி (ஸல்) அவர்கள் அறிவித்த செய்திகளும் அல்லாஹ்வின் கருத்துக்கள் என்பதால் இந்த இரண்டுக்கும் மத்தியில் முரண்பாடு வராது. அல்லாஹ் அல்லாதவர்களின் கருத்துக்களில் முரண்பாட்டைக் காணலாம். ஆனால் அல்லாஹ்வின் கருத்துக்களில் முரண்பாடே வராது என்று பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.

அல்குர்ஆன் (4:82)

இதன் முன்னும், பின்னும் இதில் தவறு வராது. புகழுக்குரிய ஞானமிக்கோனிடமிருந்து அருளப்பட்டது.

அல்குர்ஆன் (41:42)

குர்ஆன் கூறும் இந்த அடிப்படைக்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்களின் பெயரால் ஒரு செய்தி வந்தால் இந்த முரண்பாடே அது தவறான செய்தி என்பதற்குப் போதுமான சான்றாகி விடும். தன் பெயரால் அறிவிக்கப்படும் இது போன்ற செய்திகளை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நபி (ஸல்) அவர்களே தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் எனக் கருதப்படும் ஒரு செய்தியை என்னிடமிருந்து யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்களில் ஒருவராவார்.

அறிவிப்பவர்: சமுரா பின் ஜுன்தப் (ரலி)

நூல்: முஸ்லிம் (1)

திருக்குர்ஆன் கூறும் இக்கருத்தைக் கூறிய நாம் மனோஇச்சையைப் பின்பற்றுவர்கள் என்றால் குர்ஆன் மனோஇச்சையைப் பின்பற்றச் சொல்கிறது என்ற மாபாதகக் கருத்தை இவர்கள் தங்களை அறியாமல் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.
நபித்தோழர்கள் ஹதீஸை மறுத்தார்களா?

குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை நபியவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற விதியை யாரும் கூறியதில்லை; அதன் அடிப்படையில் செயல்படவுமில்லை என விமர்சனம் செய்கிறாôகள்.

ஹதீஸைப் பாதுகாப்பதைப் போல் காட்டிக் கொள்ளும் இந்த மேதைகள் ஹதீஸைப் படிக்காததே இந்த விபரீத விமர்சனத்திற்குக் காரணம்! நாம் கூறும் இந்த அடிப்படையில் நமக்கு முன்பே நபித்தோழர்கள் செயல்பட்டு வந்ததைப் பின்வரும் செய்திகளின் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.


உமர் (ரலி) அவர்கள் கடைப்பிடித்த வழிமுறை

ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: (என் கணவர்) அபூஅம்ர் பின் ஹப்ஸ் அவர்கள் என்னை ஒட்டுமொத்த தலாக் சொல்லி விட்டார். அப்போது அவர் வெளியூரில் இருந்தார். பின்னர் அவருடைய பிரதிநிதி தோல் நீக்கப்படாத கோதுமையை எனக்கு அனுப்பி வைத்தார். அதைக் கண்டு நான் எரிச்சலடைந்தேன். அதற்கு அந்தப் பிரதிநிதி "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் உனக்கு (ஜீவனாம்சம், தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை (இது ஒரு உதவியாகத் தரப்பட்டது தான்)'' என்று கூறினார். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், "அவர் உனக்கு (ஜீவனாம்சம், தங்கும் வசதி) எதையும் தர வேண்டியதில்லை'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: பாத்திமா பின்த் கைஸ்(ரலி)

நூல்: முஸ்லிம் (2953)

அபூஇஸ்ஹாக் அவர்கள் கூறியதாவது: நான் அஸ்வத் பின் யஸீத் அவர்களுடன் பெரிய பள்ளிவாசலில் அமர்ந்திருந்தேன். எங்களுடன் ஷஅபீ அவர்களும் இருந்தார்கள். அப்போது ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் தொடர்பான ஹதீஸை ஷஅபீ அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களுக்கு உறைவிடமும் இல்லை; ஜீவனாம்சமும் இல்லை என அறிவித்தார்கள்'' (என்பது தான் அந்த ஹதீஸ். அங்கிருந்த) அஸ்வத் (ரலி) அவர்கள் ஒரு கையளவு சிறு கற்களை அள்ளி அவர் மீது எறிந்து விட்டுப் பின்வருமாறு கூறினார்கள்: உமக்குக் கேடு தான். இது போன்ற செய்திகளை அறிவிக்கின்றீர்களே? உமர் (ரலி) அவர்கள், "ஒரு பெண்ணின் சொல்லுக்காக நாம் அல்லாஹ்வின் வேதத்தையும் நபியின் வழிமுறையையும் கைவிட மாட்டோம். ஃபாத்திமா பின் கைஸ் (உண்மையிலேயே) நினைவில் வைத்துள்ளாரா? அல்லது மறந்து விட்டாரா என்று நமக்குத் தெரியவில்லை. மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு உறைவிடமும் ஜீவனாம்சமும் உண்டு. வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் பகிரங்கமான வெட்கக் கேடான செயலை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள் (65:1) என்று கூறியுள்ளான்'' என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஇஸ்ஹாக் (ரஹ்)

நூல்: முஸ்லிம் (2963)

ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்கள் தம் கணவனால் தலாக் விடப்பட்ட போது அவர்களுக்கு ஜீவனாம்சம் மற்றும் இருப்பிட வசதியை ஏற்படுத்தித் தருவது ஃபாத்திமா (ரலி) அவர்களின் கணவருக்கு கடமையில்லை என்று நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் கூறியதாக சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஃபாத்திமா (ரலி) அவர்களே குறிப்பிடுகிறார்கள்.

ஆனால் தலாக் விடப்பட்ட பெண்ணுக்கு ஜீவனாம்சம் மற்றும் இருப்பிட வசதியை கணவன் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று குர்ஆனில் உள்ளது; எனவே குர்ஆனிற்கு மாற்றமாக நபி (ஸல்) கூறியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் உமர் (ரலி) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை மறுக்கிறார்கள்.

ஃபாத்திமா (ரலி) அவர்களின் நம்பகத்தன்மையில் உமர் அவர்கள் எள்ளவும் சந்தேகம் கொள்ளவில்லை. குர்ஆனும் நபி (ஸல்) அவர்களின் கூற்றும் ஒருபோதும் மோதாது என்பது உறுதியான விஷயம். எனவே மறதியாக ஃபாத்திமா அவர்கள் தான் மாற்றிச் சொல்லியிருக்க வேண்டும் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இந்த சம்பவத்தில் உமர் (ரலி) அவர்கள் என்ன வாதத்தை முன்வைத்தாரோ அதைத் தான் நாமும் கூறிக் கொண்டிருக்கிறோம்.

உமர் ஹதீஸை மறுத்து விட்டார். அவர் குர்ஆன் மட்டும் போதும் என்று சொல்பவர்களுக்குக் குறிப்பெடுத்துக் கொடுத்து விட்டார். இவர் வழிகெட்டக் கூட்டத்தைச் சார்ந்தவர் என்றெல்லாம் இந்த ஹதீஸ் பாதுகாவலர்கள் (?) நம்மை விமர்சனம் செய்ததைப் போல் விமர்சனம் செய்வார்களா?

சுருக்கமாக இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்றால் எந்த ஒரு கருத்தைக் கூறினாலும் அது சரியா தவறா? என்ற ஆய்வுக்குள் செல்ல மாட்டோம். அந்தக் கருத்தை இதற்கு முன்னால் யாராவது சொன்னார்களா என்றே கேட்போம் என்கிறார்கள்.

இந்த நிகழ்வுகளைக் கூட நாம் இங்கு குறிப்பிடுவது, சஹாபாக்களின் நடைமுறைகள் மார்க்க ஆதாரம் என்பதற்காக அல்ல. முன்னோர்கள் யாராவது சொல்லியிருந்தால் தான் சரி என மத்ஹப் வாதிகள் சென்ற பாதையில் இன்றைக்குச் சென்று கொண்டிருக்கிற இவர்களுக்கு முன்னோர்களும் நமது வழிமுறையை கடைபிடித்துள்ளார்கள் என்று உரைப்பதற்காகத் தான் இதைக் கூறுகிறோம். குர்ஆன் ஹதீஸை மட்டும் பின்பற்றும் கொள்கையில் இருப்பவர்களுக்கு நாம் முதலில் காட்டிய குர்ஆன் வசனமே நம்பிக்கை கொள்வதற்குப் போதுமானது.

குர்ஆனுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கப்படும் செய்தி முரண்பட்டால் நபி (ஸல்) அவர்கள் அதைக் கண்டிப்பாகக் கூறியிருக்க மாட்டார்கள். மாறாக அந்தச் செய்தியை அறிவித்தவர்கள் நல்லவர்களாக இருந்தாலும் மனிதன் என்ற அடிப்படையில் அவர்களிடமிருந்து தான் தவறு ஏற்பட்டிருக்கும் என்ற இந்த நியாயமான கருத்தை உமர் அவர்கள் மட்டுமல்லாமல் ஏராளமான ஹதீஸ்களை நம் சமுதாயத்திற்குத் தந்த அறிவுச் சுடர் ஆயிஷா (ரலி) அவர்களும் முன் வைத்துள்ளார்கள்.
அறிவுச் சுடர் ஆயிஷா (ரலி) அவர்களின் வழிமுறை

உமர் (ரலி) அவர்கள் (கத்தியால்) குத்தப்பட்ட போது அவர்களிடம் "சகோதரரே! நண்பரே!'' எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் (வீட்டினுள்) நுழைந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் "ஸுஹைபே! எனக்காகவா நீங்கள் அழுகிறீர்கள்? "இறந்தவருக்காக அவரது குடும்பத்தார் அழும் சில அழுகையின் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் அல்லவா?'' என்றார்கள்.

உமர் (ரலி) அவர்கள் இறந்த போது (அவர்கள் இறப்பதற்கு முன் கூறிய) அந்தச் செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ் உமர் (ரலி) அவர்களுக்கு அருள் புரிவானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! (எவரோ) ஒருவர் அழுவதின் காரணமாக இறை நம்பிக்கையாளரை அல்லாஹ் வேதனை செய்வான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறவில்லை. மாறாக குடும்பத்தார் சப்தமிட்டு அழுவதன் காரணத்தினால் இறை மறுப்பாளர்களுக்கு அல்லாஹ் வேதனையை அதிகப்படுத்துகிறான் என்றே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என்று சொல்லி விட்டு, "அல்லாஹ்வே சிரிக்கவும் வைக்கிறான். அழவும் வைக்கிறான் (53:43); ஒருவரின் சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார் (35:18) (என்று கூறும்) குர்ஆனே உங்களுக்குப் போதும்'' என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் (1694)

உர்வா பின் அஸ்ஸுபைர் அவர்கள் கூறியதாவது: "இறந்தவருக்காக அவருடைய குடும்பத்தார் அழுவதன் காரணமாக இறந்தவர் மண்ணறையில் வேதனை செய்யப்படுகிறார்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் என ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இப்னு உமர் தவறாக விளங்கிக் கொண்டார். (நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவேயில்லை) "இறந்தவர் தன் (வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவத்தின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரது குடும்பத்தாரோ இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்'' என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இ(ப்னு உமர் அறிவிருத்திருப்ப)து எப்படியிருக்கிறதென்றால் (குறைஷித் தலைவர்களான) இணை வைப்பாளர்கள் பத்ருப் போரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த பாழுங்கிணற்றுக்கருகே நின்று கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் "உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?'' என்று கேட்க) "நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தாக இப்னு உமர் தவறாகவே விளங்கிக் கொண்டார்.

"நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மை என்று இப்போது அவர்கள் அறிகிறார்கள்'' என்று தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியுறுகிறார்கள் என்று சொல்லவில்லை). பிறகு (இறந்தவர்கள் நாம் பேசுவதை செவியுறுவதில்லை என்ற தமது கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வரும்) வசனங்களை ஓதினார்கள்.

(நபியே) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது

(27:80)

(நபியே) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியுறச் செய்ய முடியாது

(35:22)

அறிவிப்பவர்: உர்வா பின் அஸ்ஸுபைர் (ரலி)

நூல்: முஸ்லிம் (1697)

உமர் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகியோரின் கூற்று ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டிய போது, "பொய்யர்களாகவோ பொய்ப்பிக்கப் பட்டவர்களாகவோ இல்லாத இருவர் சொன்ன ஹதீஸை நீங்கள் என்னிடம் கூறுகிறீர்கள். செவி (சில நேரங்களில்) தவறாக விளங்கி விடுகிறது'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: காசிம் பின் முஹம்மத் (ரஹ்)

நூல்: முஸ்லிம் (1693)

உமர் (ரலி) அவர்களும், அவர்களுடைய மகன் இப்னு உமர் அவர்களும் பிரபலமான நபித் தோழர்கள். குடும்பத்தினர் அழுவதால் இறந்தவர் வேதனை செய்யப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இவர்கள் கூறும் ஹதீஸ் ஒருவரது பாவச் சுமையை மற்றவர் சுமக்க முடியாது என்று கூறும் குர்ஆனிற்கு மாற்றமாக இருப்பதால் இந்த ஹதீஸை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள். மாறாக நல்ல மனிதர்களாக விளங்கும் இந்த இருவரிடத்தில் தான் தவறு வந்திருக்கும் என ஆயிஷா (ரலி) அவர்கள் முடிவு செய்கிறார்கள்.

மேலும் குர்ஆனிற்கு முரண்பாடாக அவர்கள் அறிவித்த செய்திக்கு முரண்படாத வகையில் விளக்கமும் கொடுக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களின் ஆயிரக்கணக்கான பொன்மொழிகளைச் சமுதாயத்திற்கு வழங்கிய ஆயிஷா (ரலி) அவர்கள் இந்தக் கருத்தைக் கூறியதற்காக "அவர்கள் ஹதீஸை மறுத்து விட்டார்கள்'' என்று இவர்கள் சொல்ல முன்வருவார்களா? இவர்கள் முன்வந்தாலும் ஒரு போதும் நமது உள்ளம் அதை ஏற்றுக் கொள்ளாது. இதே கோணத்தில் ஆயிஷா (ரலி) அவர்கள் இன்னொரு ஹதீஸையும் அணுகியுள்ளார்கள்.

இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து "சகுனம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கிறது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அவர்கள் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள்'' என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழும் பார்த்து விட்டு, "அபுல்காசிமிற்கு (நபி (ஸல்) அவர்களுக்கு) இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக! இப்படி நபி (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக "அறியாமைக் கால மக்கள் சகுனம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள்'' என்று தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லி விட்டு "இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது'' (57:22) என்ற வசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹஸ்ஸான் (ரஹ்)

நூல்: அஹ்மத் (24894)



ஆயிஷா (ரலி) அவர்கள் மறுத்த இந்தச் செய்தி புகாரியில் 2858, 5093, 5753, 5772 ஆகிய எண்களிலும் முஸ்லிமில் 4127, 4128 ஆகிய எண்களிலும் இடம் பெற்றுள்ளது. யாருக்கு எப்போது துன்பம் வரும் என்பதை அல்லாஹ் முடிவு செய்து விட்டான். அல்லாஹ் நாடினால் தான் துன்பம் ஏற்படும் என்று குர்ஆன் கூறுகிறது. "வீடு, பெண், கால்நடை இவற்றினாலும் துன்பம் வரும்; எனவே இம்மூன்றிலும் சகுனம் பார்க்கலாம்'' என்று அபூஹுரைரா அறிவித்த ஹதீஸ் கூறுகிறது. இந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்பதால் இதை நபி (ஸல்) கூறவில்லை என்பதே ஆயிஷா (ரலி) அவர்களின் வாதம்.

இந்த மூன்று செய்திகளிலும் ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் பெயரால் சொல்லப்பட்ட செய்தி தவறு என்பதைக் குர்ஆனுடைய வசனங்களை மேற்கொள் காட்டி விளக்கியுள்ளார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் மேற்சொன்ன செய்திகளை மறுத்துள்ளதால் தான் நாமும் இந்தச் செய்திகளை மறுக்கிறோம் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அதை நபியவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள் என்ற அடிப்படையில் அந்த ஹதீஸை ஏற்கக்கூடாது என்று நாம் கூறும் அடிப்படையில் நபித் தோழர்களும் செயல்பட்டுள்ளார்கள் என்பதற்காகத் தான் இந்தச் செய்திகளைக் கூறியுள்ளோம்.
ஹதீஸ் கலையில் இவ்விதி உண்டா?

குர்ஆனைப் படிக்காத ஒருவர், "குர்ஆனில் அல்ஹம்து சூரா இல்லை' என்று சொல்வதோடு மட்டுமல்லாமல் "அல்ஹம்து சூரா குர்ஆனில் உள்ளது தான்' என்று சொல்பவர்களைப் பார்த்து, "யாரும் சொல்லாத கருத்தை இவர்கள் கூறுகிறார்கள்' என்று பேசினால் எவ்வளவு அறியாமையோ அது போல குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற கருத்து ஹதீஸ் கலையில் யாரும் கூறாத கருத்து என்று இவர்கள் கூறுவதும் அறியாமை தான்.

இவர்கள் ஹதீஸ் கலையை முறையாகப் படிக்காததால் ஹதீஸ் கலையில் இல்லை என்று ஆகிவிடுமா? ஒன்று, இரண்டு என்றில்லாமல் அதிகமான ஹதீஸ் கலை நூற்களில் இவ்விதி இடம் பெற்றிருக்கிறது. ஹதீஸ் கலைக்கு முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படும் நூற்களில் இவ்விதி இடம்பெற்றும் கூட இவர்கள் ஏன் இப்படி செத்துப் போன வாதங்களை வைக்கிறார்கள் என்று புரியவில்லை. தெரிந்து கொண்டே மறைக்கிறார்களா? அல்லது அறியாமை இருளில் சிக்கித் தவிக்கிறார்களா?
இமாம் ஷாஃபியின் கூற்று

"ஒரு ஹதீஸ் நம்பத்தன்மையைப் பெறுவதற்கான நிபந்தனைகள் முழுமையாக இருந்தால் அதைக் குர்ஆனுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது கட்டாயமா?'' இமாம் ஷாஃபி அவர்கள், "கட்டாயமில்லை. ஏனென்றால் அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்படாமல் இருந்தால் தான் அதன் நிபந்தனைகள் முழுமையடையும்'' என்று கூறியுள்ளார்கள்.

நூல்: அல்மஹ்சூல், பாகம்: 4, பக்கம்: 438
இமாம் குர்துபீயின் கூற்று

ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அதை செயல்படுத்தக் கூடாது.

நூல்: தஃப்சீருல் குர்துபீ, பாகம்: 12, பக்கம்: 213
இமாம் ஜுர்ஜானியின் கூற்று

ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவென்றால் அதிலே மட்டரகமான வார்த்தைகள் இருக்காது. அதன் அர்த்தம் குர்ஆன் வசனத்திற்கு முரண்படாமல் இருக்கும்.

நூல்: அத்தஃரீஃபாத், பாகம்: 1, பக்கம்: 113
இமாம் சுயூத்தியின் கூற்று

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று விளக்கம் கொடுக்க முடியாத வகையில் அறிவிற்கு அது மாற்றமாக இருப்பதாகும். அல்லது உறுதியான குர்ஆனுடைய கருத்திற்கு எதிராக அந்தச் செய்தி அமைந்திருக்கும். நடைமுறைக்கும், இயல்பான சூழ்நிலைக்கும் ஒத்துவராத செய்தியும் இந்த வகையில் அடங்கும்.

நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 276
இமாம் இப்னுல் கய்யுமின் கூற்று

இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்வதற்கான அடையாளங்களில் ஒன்று குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு ஹதீஸ் முரண்படுவதாகும்.

நூல்: அல்மனாருல் முனீஃப், பக்கம்: 80

இட்டுக்கட்டப்பட்ட செய்தி குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு முரண்படுவது பற்றிய பகுதி: குர்ஆனுடைய தெளிவான கருத்திற்கு ஹதீஸ் முரண்படுவது, அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதற்கான அடையாளங்களில் ஒன்று.

நூல்: நக்துல் மன்கூல், பாகம்: 2, பக்கம்: 218
இமாம் அபூபக்கர் சர்ஹஸீயின் கூற்று

ஹதீஸ் அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்பட்டால் அது ஏற்றுக் கொள்ளப்படாது. செயல்படுத்துவதற்கு அது ஆதாரமாகவும் ஆகாது.

நூல்: உசூலுஸ்ஸர்ஹசீ, பாகம்: 1, பக்கம்: 364

இந்த விதி பின்வரும் புத்தகங்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை (நபி (ஸல்) அவர்களுக்குச் சம்பந்தமில்லாத ஹதீஸ் என்பதை அறிவதற்கு) நான்கு முறைகள் இருக்கிறது. முதலாவது அல்லாஹ்வுடைய வேதத்திற்கு முரண்படும் செய்தியாகும்.

நூல்: கஷ்ஃபுல் அஸ்ரார், பாகம்: 4, பக்கம்: 492

(செய்தியின் கருத்தை வைத்து நபி (ஸல்) அவர்களுக்கு சம்பந்தமில்லாத செய்தி என்று முடிவு செய்யும்) முதல் வகையை நான்கு முறைகளில் (அறியலாம் அதில்). ஒன்று அந்த ஹதீஸ் குர்ஆனிற்கு முரண்பாடாக அமைவதாகும்.

நூல்: ஷரஹுத் தல்வீஹ் அலத் தவ்ளீஹ், பாகம்: 2, பக்கம்: 368
இமாம் இப்னு ஜவ்ஸியின் கூற்று

"சிந்தனைக்கு மாற்றமாக அல்லது (ஆதாரப்பூர்வமாக) பதிவு செய்யப்பட்ட செய்திக்கு மாற்றமாக அல்லது அடிப்படைக்கே மாற்றமாக ஒரு ஹதீஸைக் கண்டால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று புரிந்து கொள்'' என்று சொன்னவர் எவ்வளவு அழகாகச் சொன்னார்.

நூல்: தர்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 277

எதைக் கண்டால் கற்கும் மாணவனின் தோல் சிலிர்த்து அவரது உள்ளம் பெரும்பாலும் அதை (ஏற்றுக் கொள்வதை) விட்டும் விரண்டோடுமோ அதுவே மறுக்கப்பட வேண்டிய செய்தி.

நூல்: தத்ரீபுர்ராவீ, பாகம்: 1, பக்கம்: 275
அர்ரபீஉ பின் ஹய்ஸமின் கூற்று

சில ஹதீஸ்கள் இருக்கின்றன. பகலின் ஒளியைப் போல் அதற்கும் ஒளி உண்டு. அதன் மூலமே (அது சரியானது என்பதை) அறிந்து கொள்ளலாம். இன்னும் சில ஹதீஸ்கள் இருக்கின்றன. இரவின் இருளைப் போல் அதற்கும் இருள் உண்டு. அதன் மூலமே (அது தவறானது என்பதை) அறிந்து கொள்ளலாம்.

நூல்: மஃரிஃபத்துல் உலூமில் ஹதீஸ், பாகம்: 1, பக்கம்: 62
விதியை செயல்படுத்திய மேதைகள்

குர்ஆனிற்கு ஹதீஸ் முரண்பட்டால் அந்த ஹதீஸை ஏற்கலாகாது என்ற இந்த விதி அறிஞர்களின் ஏடுகளில் எழுத்தளவில் மட்டும் உள்ளதல்ல. அறிவிப்பாளர் தொடரை அலசிப் பார்த்து ஹதீஸின் தரத்தை முடிவு செய்யும் இந்த அறிவு ஜீவிகள் அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாமல் இருந்து ஆனால் செய்தியில் குர்ஆனிற்கு மாற்றமான கருத்துக்களைக் கொண்ட ஹதீஸாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

புகாரி, முஸ்லிம் போன்ற சிறந்த நூற்களில் அந்த ஹதீஸ் இடம் பெற்றிருந்தாலும் செய்தியில் தவறு வருகின்ற போது அறிவிப்பாளர் தொடரை இந்த நியாயவான்கள் பொருட்படுத்தவில்லை. இவ்வாறு நடந்து கொண்ட இந்த இமாம்கள் வழிகேடர்களா? ஹதீஸைப் பாதுகாக்கப் புறப்பட்டவர்களா? அல்லது அழிப்பதற்காகக் கிளம்பியவர்களா?
இமாம் இஸ்மாயீலீ அணுகிய முறை

சஹீஹுல் புகாரிக்கு முஸ்தக்ரஜ் என்று சொல்லப்படும் ஹதீஸ் தொகுப்பு நூலைத் தொகுத்தவர் இஸ்மாயீலீ என்று சொல்லப்படும் அறிஞர். கல்வி மேதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு விரிவுரை தரும் போது இந்த அறிஞரின் கூற்றைப் பல இடங்களில் பதிவு செய்கிறார். புகாரியில் விமர்சிக்கப்பட்ட ஹதீஸ்களுக்குப் பதிலாக இந்த அறிஞரின் கூற்றை இப்னு ஹஜர் எடுத்துக் காட்டாமல் இருந்ததில்லை. இப்படிப்பட்ட அறிஞர் நாமெல்லாம் அறிந்து வைத்திருக்கும் அறிவிப்பாளர் தொடரில் குறையில்லாத புகாரியில் இடம் பெற்ற ஒரு ஹதீஸை எப்படிக் குறை காணுகிறார் என்று பாருங்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும், புழுதியும் படிந்திருக்கும். அப்போது அவர்களிடம் இப்ராஹீம் (அலை) அவர்கள் "நான் உங்களிடம் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று கூறவில்லையா?'' என்று கேட்பார்கள்.

அதற்கு அவர்களின் தந்தை "இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன்'' என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் "இறைவா! மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெது (எனக்கு) அதிகம் இழிவு தரக்கூடியது?'' என்று கேட்பார்கள்.

அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம் "நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன்'' என்று பதிலளிப்பான்.

பிறகு "இப்ராஹீமே! உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறது என்று பாருங்கள்'' என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (3350)

இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸிற்கு விளக்கம் கொடுக்கையில் பின்வருமாறு இஸ்மாயீலீ அவர்களின் கூற்றைப் பதிவு செய்கிறார்.

இஸ்மாயீலீ அவர்கள் இந்த ஹதீஸின் கருத்தில் சிக்கல் இருப்பதாகக் கருதி இதனுடைய நம்பகத் தன்மையில் குறை கூறியுள்ளார். அவர் இந்த ஹதீஸைப் பதிவு செய்துவிட்டு (பின்வருமாறு) கூறுகிறார்:



அல்லாஹ் வாக்கு மீற மாட்டான் என்று இப்ராஹிம் (அலை) அவர்கள் திட்டமாக அறிந்திருந்தார்கள். இதை அவர்கள் விளங்கியிருக்கும் போது தனது தந்தைக்கு ஏற்பட்டதைத் தனக்கு ஏற்பட்ட இழிவாக அவர்கள் எப்படி எடுத்திருப்பார்கள்? "இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர். சகிப்புத் தன்மை உள்ளவர்'' என்ற இந்த இறைவனுடைய வெளிப்படையான கூற்றிற்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்று இஸ்மாயீலீ அல்லாமல் மற்றவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

நூல்: ஃபத்ஹுல்பாரீ, பாகம்: 8, பக்கம்: 500

மேற்கண்ட ஹதீஸை அறிஞர்கள் விமர்சிக்கும் போது அதன் அறிவிப்பாளர் தொடரைப் பற்றி அவர்கள் பேச்சையே எடுக்கவில்லை. மாறாக அல்லாஹ் வாக்கு மீறுவான் என்று இப்ராஹிம் நபி எண்ணுவது இறைத் தூதரின் தன்மைக்கு மாற்றமானது என்பதனால் இது ஆட்சேபனைக்குரியது என்கின்றனர். மேலும் தனது தந்தை அல்லாஹ்வின் எதிரி என்று தெளிவானவுடன் இப்ராஹிம் தன் தந்தையிடமிருந்து விலகிக் கொண்டார் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இந்த ஹதீஸ் அவர்கள் விலகவில்லை; மறுமையிலும் தன் தந்தைக்காக வாதாடுவார்கள் என்ற அர்த்தத்தைக் கொடுக்கிறது.

எனவே இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று நாம் கூறுகின்ற அடிப்படையில் நின்று இந்த அறிஞர்கள் முடிவு செய்துள்ளார்கள். சொல்லுகின்ற கருத்து நியாயமானதா என்று சிந்திக்காமல் எந்த இமாமாவது இப்படிக் கூறியுள்ளாரா? என்று கேட்டுத் துடித்துக் கொண்டிருக்கும் மத்ஹபை நோக்கி வந்த வழியே செல்லக் கூடியவர்களே! இப்போது உங்கள் உள்ளம் குளிர்ந்து விட்டதா?
இமாம் மாலிக் மற்றும் குர்துபீயின் வழிமுறை

கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் கடைசி ஹஜ்ஜின் போது வந்து "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுடைய ஹஜ் என்னும் கடமை என் தந்தைக்கு விதியாகி விட்டது. அவர் முதிர்ந்த வயதுடையவராகவும் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றனர்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (1854)

இந்த ஹதீஸை இமாம் மாலிக் அவர்கள் நிராகரித்ததை குர்துபீ அவர்கள் அங்கீகரித்து பின்வருமாறு கூறுகிறார்கள்.

குர்துபீ கூறுகிறார்: மாலிக் அவர்கள் கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணி அறிவிக்கும் ஹதீஸ் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கு முரண்படுகிறது என்று கருதுகிறார். ஆகையால் அவர் குர்ஆனுடைய வெளிப்படையான கருத்திற்கே முன்னுரிமை கொடுத்துள்ளார். குர்ஆனுக்குள்ள அங்கீகாரத்தைக் கவனித்தால் குர்ஆனிற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

நூல்: பத்ஹுல்பாரீ, பாகம்: 4, பக்கம்: 70

ஹஜ் செய்வதற்கு சக்தி பெற்றவர்களுக்குத் தான் ஹஜ் கடமை என்று திருக்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இந்த ஹதீஸில் சம்பந்தப்பட்டப் பெண்மணி வாகனத்தில் கூட உட்கார இயலாத வயதான தன் தந்தைக்கு ஹஜ் கடமையானதாகக் கூறியுள்ளார். இதனால் இமாம் மாலிக் அவர்கள் இந்த ஹதீஸை பின் தள்ளிவிட்டு குர்ஆனுக்கு முன்னுரிமை தருகிறார்கள்.

இந்த ஹதீஸ் ஆதாரப் பூர்வமானது என்பதில் நமக்கு மறுப்பில்லை, குர்ஆனுக்கு முரண்படாத வகையில் இதற்கு நாம் விளக்கம் தர முடியும். இளமையில் ஒருவருக்கு ஹஜ் கடமையாகி அதை நிறைவேற்றாமலே தள்ளாத வயதை அடைந்தால் அவர் மீது இருந்த ஹஜ் செய்யும் கடமை நீங்காது என்பதை மாலிக் இமாம் கவனிக்கத் தவறி விட்டார்கள்.

குர்ஆனுக்கு நேரடியாக ஒரு ஹதீஸ் முரண்பட்டால் குர்ஆனுக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற நம்முடைய அடிப்படைக் கொள்கை தான் மாலிக் இமாம் அவர்களின் கொள்கையாகவும் இருந்தது என்பதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்

அப்படி முன்னுரிமை வழங்குவது முழுக்க முழுக்க சரி தான் என்று இமாம் குர்துபீ அவர்கள் ஒப்புதல் தருகிறார்கள். இந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர்களில் ஒருவரின் மீது கூட குறை கூற முடியாது. அனைவரும் பலரால் சிலாகித்துச் சொல்லப்பட்டவர்கள். இப்படிப்பட்டவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறி பின்தள்ளுவதால் ஹதீஸின் மீது அவருக்கு அக்கறை இல்லை என்று பொருளா?
இமாம் இப்னு தைமியாவின் வழிமுறை

இப்னு தைமியா அவர்கள் அனைவராலும் போற்றப்படும் மிகச் சிறந்த அறிஞர். இந்த அறிஞர் நம்மையெல்லாம் மிஞ்சுகின்ற வகையில் குர்ஆனிற்கு முரண்பட்டால் ஹதீஸை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் நின்று ஹதீஸ்களை விமர்சனம் செய்துள்ளார்.

1. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கையைப் பிடித்து கூறினார்கள்: கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் சனிக்கிழமை பூமியைப் படைத்தான். பூமியிலே ஞாயிற்றுக்கிழமை மலையைப் படைத்தான். திங்கட்கிழமை மரங்களைப் படைத்தான். செவ்வாய்க்கிழமை உலோகங்களைப் படைத்தான். புதன்கிழமை ஒளியைப் படைத்தான். வியாழக்கிழமை பூமியிலே உயிரினங்களை பரவச் செய்தான். வெள்ளிக்கிழமை அஸருக்குப் பின் வெள்ளிக்கிழமையின் கடைசி நேரமான அஸர் மற்றும் இரவுக்கு மத்தியில் கடைசி படைப்பாக ஆதமைப் படைத்தான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் (4997)

படைப்பின் துவக்கம் சனிக்கிழமையில் இருந்து அதன் இறுதி வெள்ளிக்கிழமையாக இருந்தால் திட்டமாக இவ்வுலகம் ஏழு நாட்களில் படைக்கப்பட்டதாகி விடும். இக்கருத்து குர்ஆன் அறிவிக்கும் செய்திக்கு மாற்றமானதாகும். ஹதீஸ் கலையில் நுன்னறிவுள்ளவர்கள் இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸில் குறை உள்ளதென நிரூபித்துள்ளார்கள்.

நூல்: மஜ்மூஉ ஃபதாவா இப்னி தய்மியா, பாகம்: 4, பக்கம்: 34

வானம் பூமியை ஆறு நாட்களில் படைத்ததாக திருமறைக் குர்ஆன் சொல்லும் போது இந்த ஹதீஸ் ஏழு நாட்களில் படைத்ததாகக் கூறுகிறது. எனவே இது ஒரு குறை. இது அல்லாமல் அறிவிப்பாளர் தொடரிலும் குறை உள்ளது என்பதே இப்னு தைமியா அவர்களுடைய கூற்றின் சாராம்சம். இது அல்லாமல் வேறு கோணங்களிலும் இந்த ஹதீஸ் குறை காணப்பட்டுள்ளது என்ற வார்த்தை இதுவும் குறை கூறுவதற்குரிய ஒரு வழி முறை தான் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

2. நபித்தோழர்களைத் திட்டுகின்ற ராஃபிளா கூட்டத்தைச் சார்ந்தவர்கள் பாவமன்னிப்புக் கோரினால் அல்லாஹ் அவர்களுடைய பாவமன்னிப்பை ஏற்க மாட்டான் என்பதற்குப் பின்வரும் ஹதீஸை ஒரு கூட்டம் சான்றாகக் காட்டுகிறது.

எனது தோழர்களைத் திட்டுவது மன்னிக்கப்படாத பாவம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதே அந்த ஹதீஸ். இந்த ஹதீஸை இப்னு தைமியா அவர்கள் இரு கோணங்களில் விமர்சனம் செய்கிறார். அதில் ஒன்று இது குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற விதியின் அடிப்படையில் உள்ளது.

இந்த ஹதீஸ் இரு விதங்களில் பொய்யானதாகும். ஒன்று ஹதீஸ் கலை அறிஞர்களின் ஏகோபித்த கருத்துப்படி இது பொய்யான செய்தியாகும். இது குர்ஆனிற்கும், சுன்னாவிற்கும், ஏகோபித்த கருத்திற்கும் முரண்படுகிறது. ஏனென்றால் அல்லாஹ் தன்னுடைய வேதத்தில் இரு வசனங்களில் இவ்வாறு கூறுகிறான். "தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான்''

(4:48 & 4:116)

மேலும், "தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (39:53) என்றும் கூறுகிறான்.

நூல்: மஜ்மூஉ ஃபதாவா இப்னி தைமியா, பாகம்: 2, பக்கம்: 185

இப்னு தைமியா அவர்கள் அறிவிப்பாளர் தொடரில் குறையுள்ள செய்தியைத் தான் இவ்வாறு அணுகியுள்ளார் என்று கூறி இவ்விதியைப் புறக்கணிக்கக் கூடாது. அறிவிப்பாளர் தொடரில் குறை காணப்படாத செய்திகளுக்கும் இவ்விதியை இமாம்கள் பொருத்தியுள்ளார்கள் என்பதை முன்பே பார்த்தோம். உதாரணத்திற்காக இரண்டை மட்டும் கூறியுள்ளோம். இது போன்று ஹதீஸின் கருத்தை வைத்துப் பல செய்திகளை இப்னு தைமியா அவர்கள் விமர்சனம் செய்துள்ளார்கள்.
இமாம் இப்னுல் கய்யுமின் வழிமுறை

ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றுள்ள மேலுள்ள ஹதீஸை இப்னு தைமியா அவர்கள் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்று கூறியதைப் போல இப்னுல் கய்யும் அவர்களும் கூறியுள்ளார்கள். இப்னு தைமியாவை விட ஒரு படி மேலே சென்று "இட்டுக்கட்டப்பட்ட செய்திக்கு ஒப்பு'' என்று கூறியுள்ளார்.

அல்லாஹ் பூமியை சனிக்கிழமை படைத்தான் என்று அபூஹுரைரா அவர்கள் அறிவிக்கும் தவறு நிகழ்ந்து விட்ட செய்தி இதைப் (இட்டுக்கட்டப்பட்ட செய்தியைப்) போன்றதாகும். இது சஹீஹு முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது. ஏனென்றால் வானம் பூமி அவ்விரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றை ஆறு நாட்களில் படைத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இந்த ஹதீஸ் மொத்தம் ஏழுநாட்களில் படைத்ததாகக் கூறுகிறது.
இமாம் புல்கீனீயின் வழிமுறை

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கம் இருக்கிறதே (அதில் தகுதியானோர் நுழைவார்கள்). அல்லாஹ் தன் படைப்புகளில் யாருக்கும் அநீதி இழைப்பதில்லை. அவன் தான் நாடியவர்களை நரகத்திற்காகப் படைப்பான். அவர்கள் நரகத்தில் போடப்படும் போது இன்னும் இருக்கிறதா? என்று மும்முறை கேட்கும். இறுதியில் இறைவன் அதில் தனது பாதத்தை வைக்க அது நிரம்பிவிடும். அதன் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். போதும் போதும் போதும் என்று அது கூறும்.

அறிவிப்பவர்: அபஹுரைரா (ரலி),

நூல்: புகாரி (7449)

இந்த ஹதீஸில் உள்ள அறிவிப்பாளர் அனைவரும் பலரால் புகழ்ந்து சொல்லப்பட்டவர்கள். இவர்களை யாரும் எவ்விதத்திலும் குறை காண முடியாது. மறுமை நாளில் சிலரைப் படைத்து அவர்களை நரகத்திற்குள் அல்லாஹ் கொண்டு செல்வான் என்ற கருத்தை இந்த ஹதீஸிலிருந்து சிலர் விளங்குகிறார்கள். குற்றம் புரியாதவர்களை அல்லாஹ் நரகத்திற்குள் செலுத்துவது, "உமது இறைவன் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான்' (18:49) என்ற குர்ஆன் வசனத்திற்கும் ஷைத்தான் மற்றும் அவனைப் பின்பற்றுபவர்களைக் கொண்டு அல்லாஹ் நரகத்தை நிரப்புவான் (38:85) என்று கூறும் குர்ஆன் வசனத்திற்கும் மாற்றமாக இந்த ஹதீஸ் இருப்பதினால் சில அறிஞர்கள் இதை மறுத்துள்ளார்கள். இக்கருத்தை இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலில் பதிவுசெய்துள்ளார்.

இமாம்களில் ஒரு கூட்டத்தினர் இதை மாற்றப்பட்ட செய்தி என்று கூறியுள்ளார்கள். "நரகம் இப்லீஸ் மற்றும் அவனைப் பின்பற்றுபவர்களால் நிரம்பும்' என்று அல்லாஹ் கூறியிருப்பதை ஆதாரமாக வைத்து இந்தச் செய்தி தவறு என்று இப்னுல்கய்யும் உறுதியாகக் கூறியுள்ளார். இவ்வாறே நமது ஆசிரியர் புல்கீனீ அவர்களும் "உமது இறைவன் யாருக்கும் அநீதியிழைக்க மாட்டான்' என்ற அல்லாஹ்வின் கூற்றை ஆதாரமாக வைத்து இந்த அறிவிப்பை மறுத்துள்ளார்.

நூல்: ஃபத்ஹுல்பாரீ, பாகம்: 13, பக்கம்: 437

இந்த அறிஞர்களின் கூற்றை இமாம் அல்பானீ மற்றும் இப்னுல்கய்யும் அவர்களும் அங்கீகரித்து தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.

நூல்: அஸ்ஸஹீஹா, பாகம்: 6, பக்கம்: 39
அறிவீனர்களின் வழிமுறையல்ல; அறிஞர்களின் வழிமுறை

இப்னு ஹஜர் அவர்கள் புகாரிக்கு விளக்கவுரை எழுதியதைப் போல் ஜைனுத்தீன் என்ற இப்னு ரஜப் என்ற அறிஞரும் புகாரிக்கு விளக்கவுரை கொடுத்துள்ளார். அறிவிப்பாளர் தொடரில் குறை காணப்படாத திர்மிதி அவர்களால் சஹீஹானது என்று சொல்லப்பட்ட பின்வரும் ஹதீஸை அறிஞர்கள் குர்ஆனிற்கு முரண்படுகிறது என்ற காரணத்தினால் மறுத்துள்ளார்கள் என்ற தகவலை இப்னு ரஜப் தனது நூலில் பதிவு செய்கிறார்.

நாய் மற்றும் மற்றவைகள் கடந்து செல்வதினால் தொழுகை முறிந்து விடும் என்ற கருத்தில் வரும் ஹதீஸை அறிஞர்கள் மறுக்கிறார்கள். "ஒருவன் மற்றவனின் சுமையை சுமக்க மாட்டான்' (6:164) என்ற இறைவனது கூற்றுக்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்றும் கூறுகிறார்கள்.

நூல்: ஃபத்ஹுல் பாரீ லிஇப்னி ரஜப், பாகம்: 3, பக்கம்: 342

இக்கட்டுரை ஒரு சுருக்கம் மட்டும் தான். இங்கு குறிப்பிடப்படாத இன்னும் பல தகவல்கள் உள்ளன. வேறு பல கோணங்களிலும் இந்த விமர்சனத்திற்குப் பதில் உள்ளது. தேவை ஏற்பட்டால் அதையும் சமுதாயத்திற்குத் தெளிவுபடுத்தத் தயாராக உள்ளோம். எல்லாம் வல்ல இறைவன் இந்த உண்மையை உரியவர்களுக்கு உணர வைப்பானாக!

19.10.2011. 23:16
அல்லாஹ் உருவமற்றவனா?
அல்லாஹ் உருவமற்றவனா?

அபூஉஸாமா

பொதுவாகவே உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் ஒரு வழக்கம் உண்டு. ஒரு வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்துவது, அதே வார்த்தையை இலக்கியமாக பயன்படுத்துவது.

உதாரணமாக, அதிகமாகப் பேசுபவர்களைப் பார்த்து, ‘அவருக்கு வாய் நீளம்‘ என்று கூறுவார்கள். வாய் நீளம் என்றால் வாயின் அளவு நீளமாக இருக்கும் என்பது அதன் நேரடிப் பொருள். என்றாலும் இந்த இடத்தில் அந்த அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. அவர் அதிகம் பேசக் கூடியவர் என்ற கருத்தில் இந்த சொற்றொடர் பயன்படுத்தப் படுகின்றது. இவ்வாறு பயன்படுத்தப்படுவது எல்லா மொழிகளுக்கும் பொதுவான, உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும்.

அனைத்து மொழிகளிலும் உள்ள இந்த வழக்கிற்கு அரபு மொழியும் விதிவிலக்கல்ல. சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் அருளப்பட்ட திருக் குர்ஆனிலும் இந்த நடைமுறை கையாளப்பட்டுள்ளது.

ஆனால் திருக்குர்ஆனில் உள்ள இந்த மொழி வழக்கைப் புரிந்து கொள்வதில் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஏற்பட்ட குளறுபடியின் காரணமாக பல்வேறு விஷயங்களில் சர்ச்சை ஏற்படுகின்றது. அதில் ஒன்று தான் இறைவனின் தோற்றம் பற்றிய சர்ச்சையாகும்.

அல்லாஹ்வின் முகம், கைகள், பார்வை என்று திருக்குர்ஆனிலும், ஹதீஸிலும் கூறப்பட்டுள்ள வார்த்தைகளுக்கு உண்மையில் முகம் என்று பொருள் கொடுப்பதா? அல்லது இலக்கியமாக, முகம் என்பது திருப்தியையும், பார்வை என்பது கண்காணிப்பையும் குறிக்கும் என்று பொருள் கொடுப்பதா? என்பதில் முஸ்லிம்களிடம் நீண்ட காலமாக சர்ச்சை இருந்து வருகின்றது.

எந்த வார்த்தையாக இருந்தாலும் அதற்கு முதலில் அகராதிப் பொருள், அதாவது அதன் நேரடிப் பொருளைத் தான் கொடுக்க வேண்டும். நேரடிப் பொருள் கொடுக்க வழியில்லாத பட்சத்தில் மட்டுமே மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும். இது எல்லா மொழியிலும் உள்ள விதியாகும். அரபு மொழிக்கும் இது தான் சட்டமாகும்.

திருடுபவன், திருடுபவள் ஆகிய இருவரின் கைகளை வெட்டி விடுங்கள்! இது அவர்கள் செய்ததற்குரிய கூலியும், அல்லாஹ்வின் தண்டனையுமாகும். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 5:38

இந்த வசனத்தில் கையை வெட்டுங்கள் என்று கூறப்படுகின்றது. இதற்கு நேரடிப் பொருளைத் தான் கொடுக்க வேண்டும். கையை வெட்டுங்கள் என்றால் அவனது பலத்தைக் குறைத்தல் என்று மாற்றுப் பொருள் கொடுக்கக் கூடாது.

உமது கையைக் கழுத்தில் கட்டப் பட்டதாகவும் ஆக்காதீர்! ஒரேயடியாக அதை விரித்தும் விடாதீர்! (அவ்வாறு விரித்தால்) இழிவடைந்தவராக வறுமைப்பட்டு, அமர்ந்து விடுவீர்!

அல்குர்ஆன் 17:29

இந்த வசனத்தில் ‘கழுத்தில் கையைக் கட்டிக் கொள்ளாதே’ என்று கூறப்படுவதற்கு, நேரடிப் பொருள், கொடுத்தால் பொருந்தாது. இது போன்ற கட்டங்களில், அந்த வார்த்தை எந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதைக் கவனித்து, முன் பின் வாசகங்களை ஆராய்ந்து பொருள் கொள்ள வேண்டும். இந்த இடத்தில் பொருளாதாரம் பற்றி பேசப்படுகின்றது. எனவே கையைக் கழுத்தில் கட்டிக் கொள்ளாதே என்பது கஞ்சத்தனம் செய்யாதே என்ற கருத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம். அதாவது புறச்சான்றின் அடிப்படையில் வார்த்தையின் அர்த்தத்தை முடிவு செய்ய வேண்டும். இதற்கு அரபியில் கரீனா என்று பெயர்.

இந்த அடிப்படையைப் புரிந்து கொண்டு அல்லாஹ்வின் உருவம் குறித்த விஷயத்திற்கு வருவோம்.

தெளிவான அரபி மொழியில் இந்த வேதத்தை இறக்கியுள்ளோம் என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே அரபு மொழி வழக்கில் மற்ற வார்த்தைகளை எப்படிப் பொருள் கொள்வோமோ அதே அளவுகோலைத் தான் அல்லாஹ்வின் உருவம் குறித்த வசனங்களுக்கும் கொள்ள வேண்டும்.

ஒரு வசனத்தில் அல்லாஹ்வின் முகம் என்று கூறப்படுமானால், முதலில் அதன் நேரடிப் பொருளைப் பார்க்க வேண்டும். அது பொருந்தாத சமயத்தில் அந்த வசனத்தின் முன் பின் விஷயங்களைக் கருத்தில் கொண்டு அதற்குத் தக்க மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும்.

இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்.

அல்குர்ஆன் 55:27,28

இந்த இடத்தில் உலகிலுள்ள எல்லாப் பொருட்களும் அழிந்து விடும், அவனது திருமுகம் மட்டுமே நிலைத்து நிற்கும் என்று கூறப்படுகின்றது. இதற்கு மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அல்லாஹ்வின் முகம் என்ற நேரடிப் பொருள் தான் இதற்குக் கொடுக்க வேண்டும்.

அதே சமயம் கீழ்க்கண்ட வசனத்தைப் பாருங்கள்.

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக! அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது. அவர்களே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 30:38

இந்த வசனத்தில் அல்லாஹ்வின் முகத்தை நாடி தர்மம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த இடத்தில் அல்லாஹ்வின் முகம் என்பதற்கு நேரடிப் பொருள் கொடுக்க முடியாது. எனவே அல்லாஹ்வின் திருப்தியை நாடி என்று பொருள் கொள்ள வேண்டும்.

இந்த அடிப்படையைப் புரிந்து கொள்ளாததால் தான் அல்லாஹ்வின் உருவம் குறித்த விஷயத்தில் முஸ்லிம்களிடம் ஏற்பட்டுள்ள எல்லா குழப்பங்களுக்கும் காரணம்.

அல்லாஹ்வின் முகம், கைகள், பார்வை என்று இடம் பெறும் அனைத்து வசனங்களுக்கும் நேரடிப் பொருள் கொடுக்காமல் மாற்றுப் பொருள் கொடுத்து, அதன் காரணமாக அல்லாஹ்வுக்கு உருவமே கிடையாது என்று ஒரு சாரார் வாதிக்கின்றனர்.

அல்லாஹ்வின் உறுப்புகள் குறித்து இடம் பெறும் வசனங்களுக்கும், ஹதீஸ்களுக்கும் நேரடிப் பொருள் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று கூறி அதன் மூலம் இஸ்லாத்தில் முரண்பாடு இருப்பது போன்ற தோற்றத்தை ஒரு சாரார் ஏற்படுத்துகின்றனர்.

எனவே இது குறித்து ஒரு தெளிவான விளக்கத்தைப் பெற்றாக வேண்டும். அதற்காகவே இந்தத் தொடர். அல்லாஹ் எங்கிருக்கின்றான்? அவனுக்கு உருவம் உள்ளதா? அந்த உருவத்தை அனைவரும் பார்க்க முடியுமா? யாருக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்? யாருக்குக் கிடைக்காது? என்பன போன்ற விளக்கங்களை இதில் தரவுள்ளோம்.
உருவமற்ற இறைவனா?

‘உலக மக்கள் யாவருக்கும் உரிமையானவர்; உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர்’

இவை நாகூர் ஹனீஃபாவின் வரிகளாகும். இஸ்லாமிய கடவுள் கொள்கையைப் புரியாததால் இவ்வாறு இறைவனை உருமற்றவன் என்று கூறியிருக்கின்றார். இதற்கு அவர் மட்டும் காரணமாக இருக்க மாட்டார். ஆய கலைகள் அறுபத்து நான்கையும் படித்தால் தான் மார்க்கத்தை விளங்க முடியும் என்று பறை சாற்றும் ஆலிம்களும் காரணமாவர்.

அவர்கள் தான் அல்லாஹ் உருவமற்றவன் என்ற கருத்தைக் கொண்டிருக்கின்றார்கள். இந்த வகையில் இஸ்லாமிய கடவுள் கொள்கையில் இவர்கள் சுத்த சூன்யங்களாக - அறியாமை மையங்களாக உள்ளார்கள். இறைவன் பற்றிய விபரத்தை விளங்குவதில் இவர்களே இப்படி இருட்டில் இருக்கையில் நாகூர் ஹனீபாவைக் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லை.

ஆனால் நிச்சயமாக அல்லாஹ்வுக்கென்று ஒரு தனித் தோற்றம் இருக்கின்றது. இதற்கு அல்குர்ஆனிலிருந்தே நாம் ஏராளமான சான்றுகளைக் காட்டலாம்.
திருமுகம் கொண்ட திருவாளன் அவன்

இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்.

அல்குர்ஆன் 55:27,28

இந்த வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ்வுக்கென்று ஒரு முகம் உள்ளது என்பதை அறிந்தோம். இது மட்டுமன்றி வேறு பல வசனங்களிலும் ஹதீஸ்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழ்ந்தார்கள். பிறகு தஜ்ஜாலை நினைவு கூர்ந்து சொன்னார்கள்.

நான் அவனைக் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். எந்த இறைத் தூதரும் அவனைக் குறித்து தன் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. நூஹ் (அலை) அவர்கள் தம் சமுதாயத்தினரை அவனைக் குறித்து எச்சரித்தார்கள். ஆயினும் நான் அவனைப் பற்றி வேறெந்த இறைத் தூதரும் தன் சமுதாயத்திற்குச் சொல்லாத ஒரு விபரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். அவன் ஒற்றைக் கண்ணன் என்பதையும், அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 3057

(மேலும் பார்க்க: புகாரி 3337, 3440, 4403, 6173, 7127, 7131, 7407 மற்றும் முஸ்லிம் 247)

இந்த ஹதீஸ்கள் அல்லாஹ்வுக்கு இரண்டு கண்கள் இருப்பதை எடுத்துரைக்கின்றன.

தனது கணவர் பற்றி உம்மிடம் தர்க்கம் செய்து அல்லாஹ்விடம் முறையிட்டவளின் சொல்லை அல்லாஹ் செவியுற்றான். உங்களிருவரின் வாதத்தை அல்லாஹ் செவியுறுகிறான். அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்.

அல்குர்ஆன் 58:1

(மேலும் பார்க்க: 43:80, 2:127, 2:137, 3:35)

இந்த வசனங்களில் அல்லாஹ் தன்னை செவிப்புலன் உள்ளவன் என்பதை விளக்குகின்றான்.

(முஹம்மதே!) இதற்கு முன் சில தூதர்களின் வரலாற்றை உமக்குக் கூறியுள்ளோம். சில தூதர்களின் வரலாற்றை நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ் மூஸாவுடன் உண்மையாகவே பேசினான்.

அல்குர்ஆன் 4:164

இந்த வசனத்தில், தான் மூஸா (அலை) அவர்களிடம் பேசியதாகக் குறிப்பிடுகின்றான். இதன் மூலம் அவன் ‘பேசுபவன்’ என்று சொல்கின்றான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ் இரண்டு மனிதர்களைப் பார்த்து சிரிக்கின்றான். அவ்விருவரில் ஒருவர் மற்றொருவரைக் கொன்று விட்டார். இருவருமே சொர்க்கத்தில் நுழைகின்றார்கள். இவர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப் படுகின்றார். பிறகு கொன்றவர் பாவ மன்னிப்பு கோர அதை அல்லாஹ் ஏற்று அவரை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். பிறகு அவரும் அறப்போரில் உயிர்த் தியாகியாகி விடுகின்றார்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 2826

(மேலும் பார்க்க: புகாரி 806, 7438 மற்றும் முஸ்லிம் 278)

இந்த ஹதீஸ்கள் ரப்புல் ஆலமீனின் சிரிப்பை வர்ணனை செய்கின்றன.

பார்வை, செவியுறுதல், பேசுதல், சிரித்தல் ஆகிய பண்புகளையும் அவற்றைத் தாங்கி நிற்கும் அவனது திருமுகத்தைக் கூறுகின்ற வசனங்களையும் ஹதீஸ்களையும் இது வரை கண்டோம்.

அல்லாஹ்வின் மற்ற உறுப்புகள் பற்றி இடம் பெற்றுள்ள ஆதாரங்களைப் பார்ப்போம்.

“"அல்லாஹ்வின் கை கட்டப் பட்டுள்ளது'' என்று யூதர்கள் கூறுகின்றனர். அவர்களின் கைகளே கட்டப்பட்டுள்ளன. அவர்களது இக்கூற்றின் காரணமாக அவர்கள் சபிக்கப்பட்டனர். மாறாக அவனது இரு கைகளும் விரிக்கப்பட்டே உள்ளன. அவன் நாடியவாறு வழங்குவான்.

அல்குர்ஆன் 5:64

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வின் கைகள் என்பது தாராளத்தன்மைக்காக கூறப்பட்டாலும் பின்வரும் வசனத்தில் தனக்கு இரண்டு கைகள் இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான்.

"எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?'' என்று (இறைவன்) கேட்டான்

அல்குர்ஆன் 38:75

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நரகவாசிகள்) நரகத்தில் போடப்படுவார்கள். நரகம், ‘‘இன்னும் அதிகம் இருக்கின்றதா?’’ என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தனது பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, ‘‘போதும், போதும்’’ என்று கூறும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்கள்: புகாரி 4848, 4849, முஸ்லிம் 5084

படைத்த இறைவனின் பாதங்களைப் பற்றி மேற்கண்ட ஹதீஸ்கள் கூறுகின்றன. எல்லாம் வல்ல அல்லாஹ்வும் தனக்குப் பாதங்கள் இருப்பதாகப் பறை சாற்றுகின்றான்.

கெண்டைக் கால் திறக்கப்பட்டு ஸஜ்தா செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது.

அல்குர்ஆன் 67:42
தன்னிகரற்ற தனி நாயன்

சந்தேகத்திற்கு இடமில்லாமல் மேலே நாம் எடுத்துக் காட்டிய இந்த ஆதாரங்கள், அகில உலகத்தைப் படைத்து, பாதுகாத்து, இரட்சிக்கும் அவனுக்கென்று ஒரு தோற்றம் - ஓர் உருவம் உள்ளது என்று பிரகடனப்படுத்துகின்றன.

ஆனால் அவனது அந்தத் தோற்றத்திற்கு - அவனது தனித் தன்மைக்கு ஈடு இணை கிடையாது; ஒப்புவமை இல்லை.

அவனைப் போல் எதுவும் இல்லை.

அல்குர்ஆன் 42:1

எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு யாரும் ஒப்பாக மாட்டார். எதுவும் ஒப்பாகாது. அவனுக்கு ஈடு இணை இல்லை என்று இந்த வசனத்தில் உறுதி படக் கூறுகின்றான்.

இதே கருத்தை திருக்குர்ஆனின் 112வது அத்தியாயம் மிகத் துல்லியமாக விளக்கிக் காட்டுகின்றது.

"அல்லாஹ் ஒருவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை

அல்குர்ஆன் 112:1-4

எனவே இது வரை கண்ட இந்த ஆதாரங்களிலிருந்து அல்லாஹ்வுக் கென்று தன்னிகரற்ற, ஒப்புவமை இல்லாத, ஈடு இணையற்ற ஒரு தனித் தன்மை கொண்ட தோற்றம் இருக்கின்றது என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். மேலும் அல்லாஹ்வுக்கு முகம், கண்கள், கைகள், கால்கள் இருக்கின்றன என்று வரும் வார்த்தைகளுக்கு அதற்குரிய நேரடிப் பொருளைத் தான் கொடுக்க வேண்டும். அவ்வாறு கொடுக்க வழியில்லாத பட்சத்தில் தான் மாற்றுப் பொருள் கொடுக்க வேண்டும்.

அல்லாஹ்வுக்குக் கண்களா? அவனுக்குக் கை, கால்களா? நமக்கு இருக்கும் உறுப்புக்களை அல்லாஹ்வுக்கு இருப்பதாக எப்படிச் சொல்லலாம்? என்று கற்பனை செய்து கொண்டு இவற்றுக்கு வேறு பொருள் கொடுக்க மாட்டோம்.

அதாவது கண் என்றால் கண்காணிப்பு; கை, கால்கள் என்றால் அவனது ஆற்றல்கள் என்று மாற்றுப் பொருள்கள், வேறுபட்ட அர்த்தங்கள் கூற மாட்டோம். அதற்குரிய நேரடியான, உள்ளது உள்ளபடியான அர்த்தத்தைத் தான் கொடுப்போம். கண் என்றால் கண் தான். கை என்றால் கை தான்.

இப்படி ஒரு விளக்கத்தை இங்கு நாம் குறிப்பிடக் காரணம், அல்லாஹ்வின் பண்புகளில், தன்மைகளில் அறிவு ரீதியிலான விளக்கம் கொடுப்பவர்கள் இவர்கள் என்று நம்மை நோக்கி வஞ்சக எண்ணத்தோடு, குரூர சிந்தனையோடு குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இதில் வேடிக்கை என்னவெனில், நம்முடன் இருக்கும் போது கருத்துக்கு எதிராக நாவுயர்த்திப் பேசவில்லை. எதிர்க் கருத்தை நம்மிடம் நேரடியாகக் கூறவில்லை. மாறாக பாராட்டிக் கொண்டிருந்தார்கள். இயக்க ரீதியான பந்தம் அறுந்தவுடன் இந்தக் குற்றச்சாட்டை நம் மீது எறிகின்றார்கள்.
அல்லாஹ் அர்ஷின் மீதா? அல்லது ஆகாயத்திலா?

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் 7:54

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.

அல்குர்ஆன் 20:5

இந்த வசனங்களிலும் 10:3, 13:2, 25:59, 32:4, 57:4 ஆகிய வசனங்களிலும் அல்லாஹ் அர்ஷின் மீது அமர்ந்திருக்கின்றான் என்று ஆணித் தரமாக அடித்துச் சொல்கின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, "என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் நான் அவருக்குக் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்'' என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 1145

(மேலும் பார்க்க: புகாரி 6321, 7394 முஸ்லிம் 1261)

இந்த ஹதீஸில் அல்லாஹ் முதல் வானத்திற்கு ஒவ்வொரு நாள் இரவிலும் இறங்குகின்றான் என்ற கருத்து இடம் பெறுகின்றது.

கடந்த கால மக்களிடம் இந்தக் கருத்து முன் வைக்கப்படும் போது அவர்களுக்கு இதில் எந்த ஐயமும் ஏற்பட அறவே வாய்ப்பில்லை. ஆனால் பூமி 24 மணி நேரமும் சுழன்று கொண்டிருக்கின்றது என்று அறிவியல் உலகில் நிரூபிக்கப்பட்ட பின்பு இந்தக் கருத்தில் சந்தேகம் ஏற்படுகின்றது.

அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றானா? அல்லது முதல் வானத்தில் இருக்கின்றானா? என்பது தான் அந்தச் சந்தேகம். இந்தச் சந்தேகம் ஏன் உருவாகின்றது? சுழல்கின்ற பூமியில் இரவின் கடைசிப் பகுதி என்பது ஒரு நாளில் ஒரு தடவை மட்டும் ஏதாவது ஒரு பகுதியில் மட்டும் ஏற்படுவது கிடையாது. 24 மணி நேரமும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் இரவின் கடைசிப் பகுதி ஏற்பட்டுக் கொண்டே தான் இருக்கும்.

இரவின் கடைசிப் பகுதியில் அல்லாஹ் முதல் வானத்தில் இறங்கி விடுகின்றான் என்றால் 24 மணி நேரமும் அல்லாஹ் முதல் வானத்தில் தான் இருக்கின்றான் என்றாகி விடும். அதாவது அர்ஷில் அவன் இல்லை, அர்ஷ் காலியாக உள்ளது என்ற கருத்து வந்து விடும். இங்கு குர்ஆன் கூறும் கொள்கை ரீதியான விளக்கத்திற்கு நபி (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மோதுவதாக அமைகின்றது.

உண்மையில் ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் குர்ஆனுடன் முரண்படாது. இங்கு மோதுவது போல் தோன்றுகின்றது என்றால் நமது புரிந்து கொள்ளும் தன்மையில் கோளாறு என்று எடுத்துக் கொண்டு இந்த ஹதீசின் சரியான விளக்கத்தை நாம் தேடியாக வேண்டும்.
சத்தியக் கொள்கையை விட்டு சறுகியவர்கள்

அல்லாஹ் இறங்கி வருகின்றான் என்றால் அல்லாஹ் நமது கோரிக்கையை மிக விரைந்து ஏற்றுக் கொள்கின்றான் என்ற விளக்கத்தைக் கொடுக்க வேண்டியவர்களாகின்றோம். இப்படி ஒரு விளக்கத்தைக் கொடுத்தவுடன் நம்மை சத்தியக் கொள்கையை விட்டு சறுகியவர்கள் என்பது போல் நமக்கு எதிராக உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நமக்குப் பின்னால் பேசும் இவர்களிடம் நாம் கூறுவதெல்லாம், ‘எங்களுக்குப் பின்னால் வாய் கிழியப் பேசும் நீங்கள் எங்களுக்கு முன்னால் வந்து பேசுங்கள்’ என்பது தான்.

ஆனால் இந்த சந்தர்ப்பவாதிகள் அவ்வாறு வருவதில்லை. இதிலிருந்து யார் சத்தியத்தை விட்டும் சறுகியவர்கள் என்று தெரிந்து கொள்ளலாம். இவர்களின் சலசலப்புக்கெல்லாம் நாம் ஒரு போதும் அஞ்சப் போவதில்லை; அலட்டிக் கொள்ளப் போவதும் இல்லை.

நமக்கு சத்தியமென்று தெரிகின்ற விஷயத்தை ஊருக்கு அஞ்சி, உலகுக்கு அஞ்சி, சவூதிக்கு அஞ்சி போட்டுடைக்கத் தயங்கியதில்லை. அந்த அடிப்படையில் மேற்கண்ட ஹதீசுக்கு இப்படியொரு விளக்கத்தைக் கொடுக்கின்றோம். இல்லையெனில் குர்ஆன் வசனத்துடன் நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ் மோதுகின்றது என்ற தோற்றம், மற்றவர்களிடம் ஏற்பட்டு விடும். அதைத் தவிர்க்கத் தான் மேற்கண்ட விளக்கம்.

இது மாதிரி நெருடலான இடங்களில் இது போன்றதொரு விளக்கம் கொடுக்கப்படுவது புதிதான ஒன்றல்ல. இவர்களாலும் நம்மாலும் மதிக்கப்படும் ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் இது போன்ற நெருடலான ஒரு விஷயத்தில் கொடுத்த ஒரு விளக்கத்தை இங்கு கோடிட்டுக் காட்டுவது மிகப் பொருத்தமாக இருக்கும்.

நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான்.

அல்குர்ஆன் 57:4

இந்த வசனத்தின் படி அல்லாஹ் மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்திருக்கின்றான் என்ற தவறான கருத்து இங்கு பெறப்படுகின்றது. இதற்கு மறுப்பு கூற வந்த இப்னு தைமிய்யா அவர்கள், ‘நீங்கள் எங்கிருந்தாலும் அவன் உங்களுடன் இருக்கிறான்’ என்ற வசனத்தின் படி அல்லாஹ் படைப்பினங்களுடன் இரண்டறக் கலந்திருக்கிறான் என்று பொருள் கொண்டு விடக் கூடாது. அப்படி ஒரு கருத்தை இந்த வார்த்தை நடை தரவில்லை. இது (இந்த அத்வைதக் கொள்கை) அல்லாஹ் படைத்த இயற்கையான அமைப்பிற்கு நேர் எதிரானது, நம் முன்னோர்கள் கொண்ட ஒருமித்த கருத்துக்கு முற்றிலும் முரணானது.

வானத்தில் மிதந்து கொண்டிருக்கும் சந்திரன் ஊரில் தங்கியிருப்பவர்களுடனும் இருக்கின்றது, பயணியுடனும் இருக்கின்றது என்று சொல்லும் போது, ஊரில் இருப்பவருடன் சந்திரன் இரண்டறக் கலந்திருக்கின்றது என்றோ அல்லது பயணத்தில் இருப்பவருடன் இரண்டறக் கலந்திருக்கின்றது என்றோ எடுத்துக் கொள்ள மாட்டோம். இதில் இடம் பெற்றுள்ள ‘உடன்’ என்ற வார்த்தைக்கு சந்திரன் இரண்டறக் கலந்திருக்கின்றது என்று எடுத்துக் கொள்ள மாட்டோம். அது போலத் தான் மேற்கண்ட வசனத்தின் பொருளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் அர்ஷின் மேல் இருக்கிறான். அதே சமயம் நம்முடனும் இருக்கிறான் என்ற கருத்தை இந்தக் கண்ணோட்டத்தில் எடுத்துக் கொள்ளும் போது ஒவ்வொன்றும் அதனதன் பொருளின் அமைந்து, மாற்றி - திரித்துக் கூறுவதற்கு அவசியமின்றிப் போகின்றது.

அல்அகீதத்துல் வாஸிதிய்யா என்ற நூலில் இப்னு தைமிய்யா அவர்கள் இப்படியொரு விளக்கத்தைக் கொடுக்க முன் வந்ததற்குக் காரணம் அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்ற கருத்துக்கு மாற்றுக் கருத்து வந்து விடக் கூடாது என்பதற்காகவும், அல்லாஹ் அடியார்களுடன் இருக்கிறான் என்ற சூஃபிஸக் கருத்தை உடைப்பதற்காகவும் தான் என்று நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

சொல்லப்படும் செய்தியில் ஒரு கருத்து மற்றொரு கருத்துடன் மோதுவது போல் தோன்றுகின்ற போது அதற்குரிய விளக்கத்தைக் கொடுத்து அந்தச் சந்தேகத்தை நீக்குவது அந்தத் துறையில் ஈடுபடுவோர் மீது கட்டாயக் கடமையாகும்.

இங்கே ஒரு சிலர் அல்லாஹ் அர்ஷின் மீது இருக்கிறான், முதல் வானத்திற்கும் இறங்குகின்றான் என்று அப்படியே விளங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வுக்கு இரண்டும் முடியும் அல்லவா? என்பது போல் தங்கள் வாதங்களை வைக்கின்றனர்.

இத்தகையோர் இரண்டு அடிப்படை விஷயங்களைப் புரிந்து கொள்ளவில்லை.

முரண்பாடு, அசாத்தியம் என்று எதை ஆக்கி விட்டானோ அந்த விஷயத்தில் அவன் எதுவும் மாற்றம் செய்வதில்லை.

குருடனும், பார்வையுள்ளவனும் இருள்களும், ஒளியும் நிழலும், வெப்பமும் சமமாகாது.

அல்குர்ஆன் 35:19-21

இந்த வசனங்களில் ஒன்றுக்கொன்று எதிரான விஷயங்களைச் சொல்லி இது ஒரு போதும் ஒன்றாகாது என்று கூறுகின்றான். முரண்பாடு என்றால் என்ன என்று விளக்குகிறான்.

அதாவது குருடன் என்றால் குருடன் தான் பார்வையாளன் என்றால் பார்வையாளன் தான். ஒருவன் குருடனாக இருந்து கொண்டே பார்வையாளனாக இருப்பது முரண் என்ற இயற்கை விதியை நமக்குக் கற்றுத் தருகின்றான். அந்த இயற்கை விதியின் படி, தான் ஏகன்; ஒருவன்; தன்னிகரற்றவன் என்பதை நிரூபிக்கிறான். ஒரு பொருள் ஓரிடத்தில் இருந்தால் அது இன்னொரு இடத்தில் இருக்க முடியாது என்பது தான் அவன் கற்றுத் தரும் இயற்கை விதி.

அந்த இயற்கை விதியின் அடிப்படையில் அவன் அர்ஷில் தான் இருக்கிறான். அவன் வேறொரு இடத்திற்கு இடம் பெயர்வதில்லை. அதாவது அவன் நிர்ணயித்த அந்த விதிக்கு அவன் ஒரு போதும் முரண்படுவதில்லை.

எனவே நம்முடைய அறிவின் அடிப்படையில் இல்லாமல், அல்லாஹ் விதித்த இயற்கை விதியின் அடிப்படையில் தான் அவன் அர்ஷிலிருந்து வானத்திற்கு வர முடியாது என்று கூறுகின்றோம். அதாவது அர்ஷிலும் முதல் வானத்திலும் ஒரே சமயத்தில் இருக்க முடியாது என்று கூறுகிறோம்.

அடுத்து, அவன் அசாத்தியம் என்று எதைக் கூறி விட்டானோ அவன் சக்தியைப் பயன்படுத்தி சாத்தியமாக்குவதில்லை.

நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது. ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம்.

அல்குர்ஆன் 7:40

இங்கு ஊசிக் காதில் ஒட்டகம் நுழையாது என்று அவன் அசாத்தியமாக்கி விட்டான். அப்படி ஓர் இயற்கை விதியை நிர்ணயித்து விட்டான். அதற்கு அவன் மாறுபட மாட்டான்.

இதைப் புரிந்து கொள்ள ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

‘இறை மறுப்பாளர் சொர்க்கம் செல்வார்’ என்று ஒருவர் சொல்கிறார் என்று வைத்துக் கொள்வோம். ‘அல்லாஹ் இன்னின்ன வசனங்களில் இறை மறுப்பாளர்களுக்கு நிரந்தர நரகம் என்றல்லவா சொல்கிறான்! அவர் எப்படி சொர்க்கம் செல்ல முடியும்’ என்று நாம் அவரிடம் திருப்பிக் கேட்கிறோம். அதற்கு அவர், ‘ஊசிக் காதில் ஒட்டகம் நுழைகின்ற வரை என்று அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ் எல்லாவற்றுக்கும் சக்தி பெற்றவன். எனவே அவன் ஊசியின் காதில் ஒட்டகத்தை நுழைய வைத்து இறை மறுப்பாளனை சொர்க்கத்தில் நுழையச் செய்வான் என்று பதில் சொல்கின்றார் என்றால் அதைப் பைத்தியக்காரத் தனமான வாதம் என்போம். அதற்கு ஆதாரமாக, அல்லாஹ் அசாத்தியமாக்கியதை சாத்தியமாக்குவதில்லை என்ற நியதியையும் கூறுவோம்.

அல்லாஹ் அர்ஷில் இருந்து கொண்டு முதல் வானத்திற்கு இறங்கும் ஆற்றல் பெற்றவன் என்று கூறுவோருக்கும் இதையே நாம் பதிலாகக் கூறுகிறோம். அவன் முரண்பாடு என்று ஆக்கிய இயற்கை விதியில் அவன் ஒரு போதும் மாற்றம் செய்வதில்லை, உறுதியாக மாற்றம் செய்ய மாட்டான். இது முதல் அடிப்படை.

அடுத்து இந்தக் குர்ஆனை தன்னுடைய வேதம் தான் என்பதற்கு சிறந்த சான்றாக சமர்ப்பிப்பது முரண்பாடின்மை தான்.

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிட மிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்

அல்குர்ஆன் 4:82

ஒரு நூலில் முரண்பாடு இருந்தால் அது வேதமல்ல என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றான். இது இரண்டாவது அடிப்படை.

இந்த அடிப்படையின் படி அல்லாஹ்வின் வேதத்தில் முரண்பாடுகளுக்கு இடமில்லை. நாம் விளங்குவதில் தான் கோளாறு இருக்க வேண்டும்.

அல்லாஹ் அர்ஷில் இருக்கிறான் என்று குர்ஆன் கூறுகின்றது.

அல்லாஹ் முதல் வானத்திற்கு வருகிறான் என்று ஹதீஸ் கூறுகின்றது. (அதுவும் வஹீ தான்)

இது முரண்பாடு போல் தோன்றுகிறது. எனவே அதற்குரிய விளக்கம், அல்லாஹ், அடியார்களுடைய தேவையை விரைந்து நிறைவேற்றுகிறான் என்பது தான் என்று கூறுகிறோம்.

எனவே இந்த அடிப்படையையும் அதற்கான விளக்கத்தையும் தெரிந்து கொண்டால் அவர்கள் இந்த வாதத்தை முன் வைக்க மாட்டார்கள்.

அல்லாஹ் கட்டடங்களுக்கு அடியில் வருவானா?

இங்கு இவர்களிடம் இன்னொரு விஷயத்தை முன் வைக்கிறோம். அல்லாஹ்வின் பண்புகள் விஷயத்தில் வேறு விளக்கம் கொடுக்கக் கூடாது என்பதில் நாம் மாறுபடவில்லை. ஆனால் ஒரு சில இடங்களில் மாற்று விளக்கம் கொடுத்தாக வேண்டும். அந்த இடங்களில் மாற்று விளக்கம் கொடுக்காமல் இருக்க முடியாது. இவர்களும் அது போல் மாற்று விளக்கம் கொடுக்கத் தான் செய்கிறார்கள். ஆனால் நாம் அது போன்று விளக்கம் கொடுத்தால் நமக்கு எதிராக விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். இப்போது நாம் அவர்களிடம் கேட்பது,

அவர்களுக்கு முன் சென்றோரும் சூழ்ச்சி செய்தனர். அவர்களின் கட்டடங்களின் அடிப்புறத்தில் அல்லாஹ் வந்தான். மேலேயிருந்த முகடு அவர்கள் மீது விழுந்தது. அவர்கள் உணராத வகையில் அவர்களிடம் வேதனை வந்தது.

அல்குர்ஆன் 16:26

இந்த இடத்தில் என்ன விளக்கம் கொடுக்கப் போகிறீர்கள்? மாற்று விளக்கம் கொடுக்காமல் அதே விளக்கம் கொடுத்தால் அல்லாஹ் கட்டடத்தின் அடித்தளத்திற்கு வருகிறான் என்றாகி விடும். எனவே இதற்கு நிச்சயம் இந்த விளக்கம் கொடுக்க முடியாது.

மேகக் கூட்டங்களில் அல்லாஹ் வும், வானவர்களும் வந்து காரியம் முடிக்கப்பட வேண்டும் என்பதைத் தான் எதிர்பார்க்கிறார்களா? அல்லாஹ்விடமே காரியங்கள் கொண்டு வரப்படும்.

அல்குர்ஆன் 2:210

இந்த வசனத்திற்கும் அதே விளக்கம் கொடுக்க முடியாது. வேறு விளக்கம் தான் கொடுத்தாக வேண்டும். அவர்கள் மாற்று விளக்கம் கொடுத்தால் தப்பில்லை. நாம் கொடுத்தால் தப்பு? அப்படியானால் இதில் தெரிய வருகின்ற பகிரங்கமான உண்மை, ஒரு தனி நபர் மீது கொண்டிருக்கும் வெறுப்பு அவர்களை இவ்வளவு தொலைவுக்கும், தலை கீழ் நிலைக்கும் கொண்டு செல்கிறது.

இதற்கு நாம் கவலைப்படப் போவதில்லை. மேலும் அல்லாஹ் இவர்களின் சதி வலைகளை, பொய் செய்தி அலைகளைத் தொடர்ந்து முறியடித்துக் கொண்டிருக்கிறான் என்பது நாம் நிதர்சனமாகக் கண்டு வரும் உண்மையாகும்.

எனவே இங்கு நாம் தெளிவாகத் தெரிவிப்பது என்னவெனில், அல்லாஹ்வின் பண்புகளில் மாற்று அர்த்தம் கொடுக்கக் கூடாது, அதன் இயற் பொருளைத் தான் கொடுக்க வேண்டும். ஆனால் அவனது பண்புகளைக் கூறும் இடத்தில் எங்கு முரண்பாடு ஏற்படுவது போல் தோன்றுகிறதோ அங்கு எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்படும் விளக்கத்தைக் கொடுத்தாக வேண்டும். இது தான் நமது நிலைபாடாகும்.

இந்த அடிப்படையில் இதுவரை நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்கள், ஹதீஸ்களிலிருந்து அல்லாஹ்வுக்கென்று ஓர் அழகிய திருமுகம், கண்கள், செவிப் புலன்கள், பேசும் ஆற்றல் உள்ளன என்று விளங்கிக் கொள்கிறோம்.

இப்படி ஒரு புனிதத் தோற்றம் இருப்பது உறுதியான பின் நாம் அவனைக் காண வேண்டும் என்ற ஆவல் அலை போல் கிளம்புவது இயல்பானது தான். அத்தகைய புனித தோற்றமுடையவனை நாம் எங்கே காணலாம்?

தொடரும் இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ்வை இவ்வுலகில் நேரில் பார்க்க முடியுமா?

தொடர் - 2

(அக்டோபர் 2005)

எம். ஷம்சுல்லுஹா

அல்லாஹ்வுக்கென்று தனித் தோற்றம் உள்ளது என்பதைக் கடந்த இதழில் கண்டோம். புனிதத் தோற்றமுடைய அந்த அல்லாஹ்வை இவ்வுலகில் பார்க்கலாம் என்று ஒரு சாரார் வாதிடுகின்றனர். தங்கள் வாதத்துக்கு திருக்குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து சில ஆதாரங்களையும் அவர்கள் முன் வைக்கின்றனர். அவர்கள் முன் வைக்கும் ஆதாரங்கள் இதோ:

நட்சத்திரம் மறையும் போது அதன் மேல் ஆணை! உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை. அழகிய தோற்றமுடைய வலிமை மிக்கவர் (ஜிப்ரீல்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அ(ந்த நெருக்கமான)து வில்லின் இரு முனைகள் அளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அறிவித்தான். அவர் பார்த்ததில் அவரது உள்ளம் பொய்யுரைக்க வில்லை. அவர் கண்டது பற்றி அவரிடம் தர்க்கம் செய்கிறீர்களா? ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். (அல்குர்ஆன் 53:1,2)

மேலே நாம் அடிக் கோடிட்டுக் காட்டியிருக்கும் வார்த்தைகள் ஹுவ என்ற சுட்டுப் பெயர் இடம் பெற்றுள்ளது. இந்த இடத்தில் அதற்கு அல்லாஹ் என்றும் பொருள் கொள்ளலாம். ஜிப்ரீல் என்றும் பொருள் கொள்ளலாம்.

"நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்கள்' என்ற கருத்துடையவர்கள், இந்த இடத்தில் "அவரை' என்று மொழி பெயர்ப்பதற்குப் பதிலாக "அவனை' அதாவது அல்லாஹ்வை என்று மொழி பெயர்க்கின்றனர்.

"மற்றொரு முறையும் ஸித்ரத்துல் முன்(த்)தஹா அருகில் அவனைக் கண்டார்'' என்று இந்த வசனத்தில் கூறப்படுவதால் "முதல் தடவை பார்த்தது இந்த உலகத்தில் தான்; எனவே இதன் படி இந்த உலகத்தில் அல்லாஹ்வைப் பார்க்கலாம்'' என்று அவர்கள் வாதிடுகின்றனர். இந்த அடிப்படையில் இவ்வசனம் அவர்களுக்கு ஆதாரமாக அமைந்துள்ளது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இந்தக் கருத்தைக் கொண்டுள்ளார்கள்.

இந்த வசனத்திற்கு அவ்வாறு பொருள் கொள்ள இடமிருக்கின்றது என்பதை நாமும் மறுக்கவில்லை. ஆனால் இவ்வசனத்திற்கு நபி (ஸல்) அவர்கள் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என்றால் தான் இவ்வாறு பொருள் செய்யலாம். நபி (ஸல்) அவர்கள் அதற்கு விளக்கம் அளித்து விட்டால் இவ்வாறு பொருள் செய்ய முடியாது.

நபி (ஸல்) அவர்கள் "அவரை' என்ற பதத்திற்கு "ஜிப்ரீல்' என்று விளக்கம் அறித்துள்ளார்கள்.

நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) "அபூ ஆயிஷாவே! மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார்'' என்று கூறினார்கள். அவை எவை? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "யார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டார்'' என்று சொன்னார்கள். சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த நான் உடனே எழுந்து (நேராக) அமர்ந்து, "இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! நிதானித்துக் கொள்ளுங்கள்! அவசரப்படாதீர்கள்! வல்லமையும், மாண்பும் மிக்க அல்லாஹ், "திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்'' (81:23) என்றும் "அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்'' (53:13) என்றும் கூறவில்லையா?'' என்று கேட்டேன். அதற்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.

இந்தச் சமுதாயத்தில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான் தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை அவர் படைக்கப் பெற்றுள்ள (உண்மைத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறெப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிலிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது'' என்று கூறினார்கள்.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அல்லாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள்.

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (6:103)

அல்லது (பின்வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா?

"வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.'' (42:51)

(பின்னர் தொடர்ந்து மீதமுள்ள இரண்டு விஷயங்களையும் கூறினார்கள்)

அறிவிப்பவர்: மஸ்ரூக்

நூல்: முஸ்லிம் 287

இந்த ஹதீஸில், "அவரைக் கண்டார்' என்பது ஜிப்ரீலைக் கண்டதைத் தான் குறிக்கின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கமளிக்கின்றார்கள். எனவே மேற்கண்ட வசனத்திற்கு அல்லாஹ்வைக் கண்டார்கள் என்று நாம் பொருள் கொள்ள முடியாது.

அல்லாஹ்வை இந்த உலகத்தில் பார்க்க முடியும் என்று கூறுபவர்கள் எடுத்து வைக்கும் அடுத்த ஆதாரம் திர்மிதீயில் இடம் பெறும் செய்தியாகும்.

"முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்கள்'' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிய போது "அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான் என்று அல்லாஹ் கூறவில்லையா?'' என்று நான் கேட்டேன். "நாசமாய்ப் போக! அ(வனைக் கண்கள் பார்க்காது என்ப)து அவன் தனது இயற்கையான ஒளியில் காட்சி தரும் போது தான்'' என்று கூறி விட்டு "இரண்டு முறை அவனை (அல்லாஹ்வை) அவர்களுக்குக் காட்டப்பட்டது'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இக்ரிமா

நூல்: திர்மிதீ 3201

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறும் இரண்டு தடவை என்பது மேற்கண்ட வசனத்தின் அடிப்படையில் தான். ஆனால், தாம் இரண்டு தடவை பார்த்தது ஜிப்ரீலைத் தான் என்று நபி (ஸல்) அவர்களே தெளிவு படுத்திய பிறகு இந்த விளக்கம் முற்றிலும் வலுவிழந்து போகின்றது. அதனால் இந்த இரண்டாவது ஆதாரமும் ஏற்புடையதாக இல்லை.

நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை உள்ளத்தால் பார்த்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: முஸ்லிம் 284

(நபியின்) உள்ளம், அவர் கண்டது தொடர்பாகப் பொய்யுரைக்கவில்லை (53:11), நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார் (53:13) ஆகிய வசனங்கள் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்

நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை இரண்டு முறை தமது உள்ளத்தால் பார்த்தார்கள்

அறிவிப்பவர்: அபுல் ஆலியா

நூல்: முஸ்லிம் 285, திர்மிதீ 3203

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள் என்ற கருத்து ஏற்கும் வகையில் இல்லை.

பார்வை என்பது கண்கள் சம்பந்தப்பட்டதாகும். இதை உள்ளத்துடன் தொடர்பு படுத்துவது பொருத்தமான ஒன்றாகத் தோன்றவில்லை. மேலும் இக்கருத்தை நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் சொந்தக் கருத்தாகத் தான் கூறப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி 53:13 வசனத்தின் விளக்கமாகத் தான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இதைக் கூறுகிறார்கள். ஆனால் அவ்வசனத்தின் விளக்கத்தை நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள். "நபி (ஸல்) அவர்கள் கண்டதாகக் கூறப்படுவது ஜிப்ரீல் (அலை) அவர்களைத் தான்'' என நபி (ஸல்) அவர்களே விளக்கியுள்ளதால் இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கம் ஏற்புடையதல்ல. எனவே இந்த சாராரின் மூன்றாவது ஆதாரமும் அடிபட்டுப் போகின்றது.

தூதரிடம் தோழர் கண்ட பேட்டி

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது அல்லாஹ்வைப் பார்த்தார்களா? என்ற பிரச்சனை நபித்தோழர்களுக்கு மத்தியிலும் சுற்றி வந்திருக்கின்றது. அதனால் இது குறித்து அபூதர் (ரலி) அவர்கள் நேரடியாக நபி (ஸல்) அவர்களிடமே பேட்டி கண்டு விடுகின்றார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு "அவன் ஒளியாயிற்றே நான் எப்படிப் பார்க்க முடியும்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூற்கள்: முஸ்லிம் 291, திர்மிதீ 3204

அல்லாஹ்வைப் பார்த்தீர்களா? என்ற கேள்விக்கு நபி (ஸல்) அவர்கள் அவன் ஒளியாயிற்றே என்று காரணம் காட்டி மறுத்து விடுகின்றார்கள். இதே காரணத்தை நபி (ஸல்) அவர்கள் மற்றொரு இடத்திலும் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று ஐந்து விஷயங்களைச் சொன்னார்கள். அவை: 1. வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் உறங்க மாட்டான்; உறங்குவது அவனுக்குத் தகாது. 2. அவன் தராசைத் தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான். 3. (மனிதன்) இரவில் புரிந்த செயல் பகலில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது. 4. (மனிதன்) பகலில் செய்த செயல் இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது. 5. ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். (மற்றொரு அறிவிப்பில், நெருப்பே அவனது திரையாகும் என்று காணப்படுகிறது.) அத்திரையை அவன் விலக்கி விட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்து விடும்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி)

நூல்: முஸ்லிம் 293

இவ்வுலகில் படைப்பினங்களால் அல்லாஹ்வை ஏன் பார்க்க முடியாது என்ற காரணத்தை நபி (ஸல்) அவர்கள் இங்கு விளக்குகின்றார்கள்.
மூஸா நபி அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

நபி (ஸல்) அவர்கள் கூறும் இந்தக் காரணத்தினால் தான் மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைக் காண இயலாமல் ஆனார்கள்.

நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது "என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்'' எனக் கூறினார். அதற்கு (இறைவன்) "என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்'' என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது "நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' எனக் கூறினார். (அல்குர்ஆன்7:143)

மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் "உன்னை நான் பார்க்க வேண்டும்'' என்று கோரிக்கை வைத்த போது "என்னை நீர் பார்க்கவே முடியாது'' என்று இறைவன் பதிலளித்துள்ளான். அல்லாஹ் மலைக்கு காட்சியளித்த போது நபி மூஸா (அலை) அவர்கள் மூர்ச்சித்து விழுந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது போன்று அவனது பேரொளி மலைகளைத் தூள் தூளாக்கி விட்டது.

ஒளி அலைகளைத் தாங்காத விழித்திரை

உண்மையில் அத்தகைய ஒளி வெள்ளத்தைத் தாங்கும் ஆற்றல் கண்களுக்கு இல்லை என்று இன்றைய அறிவியல் உலகம் கூறுகின்றது.

பூமியைத் தினம் தினம் எத்தனையோ துகள்களும், வெளிச்சங்களும், அலைகளும், கதிர்களும் தாக்குகின்றன. காஸ்மிக் கதிர்கள், எக்ஸ் ரேக்கள், காமா கதிர்கள், அல்ட்ரா வயலட், இன்ஃப்ரா ரெட், ரேடியோ அலைகள், டெலிவிஷன், ரேடார் போன்ற கதிர்கள் முதல் தூர, தூர நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து வரும் கதிரியக்க வெள்ளங்கள் வரை அனைத்தும் நாம் தெருவில் செல்லும் போதும் வீட்டில் தூங்கும் போதும் எப்போதும் நம்மைத் தாக்குகின்றன.

இத்தனை அலைகளில் நாம் பார்ப்பது ஒரு சிறிய, மிகச் சிறிய ஜன்னல் மட்டுமே. ஒளி என்பது 375லிருந்து 775 நானோ மீட்டர் அலை நீளம் மட்டுமே. ஒரு நானோ மீட்டர் என்பது ஒரு மீட்டரில் நூறு கோடி பாகம். மற்றபடி நம்மைச் சுற்றியுள்ள அத்தனை அலைகளையும் நம் கண்களும் மூளையும் வடி கட்டி விடுகின்றன.

அது மட்டுமில்லை. இந்த ஒளி அலைகளிலேயே மூளையும் நரம்புகளும் இன்னும் ஃபில்டர் செய்து விடுகின்றன. நமக்கு உயிர் வாழத் தேவைப்பட்ட காட்சிகளை மட்டுமே நாம் பார்க்கிறோம். பூமியின் மேல் விழும் மற்ற அலைகளை நாம் பார்க்க முடிந்தால் குழப்பத்தில் செத்துப் போய் விடுவோம். அதற்குத் தான் இந்த ஜன்னல்.

இது மனிதனின் பார்வைத் திறன் பற்றி அறிவியல் கூறும் ஆய்வாகும்.

இந்த உலகில் வல்ல அல்லாஹ்வை, அவனது பேரொளியைக் காண முடியாது என்பதை அறிவியல் உலகின் இந்த ஆய்வும் நிரூபித்துக் காட்டியுள்ளது.

வளரும் இன்ஷா அல்லாஹ்
அல்லாஹ்வை இவ்வுலகில் நேரில் பார்க்க முடியுமா?
நினைவுலகமும் கனவுலகமும்

(தொடர் - 3) (டிசம்பர் 2005)

நினைவில் - நேருக்கு நேரில் - அல்லாஹ்வைக் காண முடியாது என்பதை விரிவாகக் கண்டோம்.

அவனைக் கனவில் காண முடியுமா? என்றால் அதுவும் சாத்தியமில்லை என்பதே பதிலாகும்.

மனிதன் தன் வாழ்வில் காணும் காட்சிகள், தன் நினைவில் நிற்கும் நினைவுகள் இவைகள் எல்லாம் அவனுக்குக் கனவாகத் தோன்றுவதைப் பார்க்கிறோம். நாம் ஒருவரை விரும்புகிறோம் என்றால் அவர் நம் கனவிலும் விருப்பத்திற்குரியவராகவே தோன்றுகிறார். நாம் ஒருவரை எதிரியாக, தீயவராக நினைக்கிறோம் என்றால் அந்நபர் நமக்குக் கனவிலும் தீயவராகவே தோன்றுகிறார்.

ஒவ்வொரு மனிதனின் சிந்தனை எப்படி இருக்கின்றதோ அதற்கேற்பவே கனவும் நிகழ்ந்து விடுகின்றது. சில வேளைகளில் இவனுடைய சிந்தனைக்கு அப்பாற்பட்டும் கனவுகளில் நிகழும். சில வேளைகளில் எந்தவித உதவியும் இல்லாமல் பறப்பதைப் போன்று கனவு காண்பான். ஆனால் உண்மையில் அவ்வாறு பறக்க முடியாது. மிருகங்கள் பேசுவதைப் போன்று கனவு காண்பான். ஆனால் மிருகங்கள் பேசாது என்பது தெரியும். இருந்தும் கூட உலக நியதிக்கு மாற்றமாக கனவு தோன்றி விடுகின்றது.

மிகவும் அரிதாக ஏதாவது ஒன்றிரண்டு விஷயங்கள் கனவில் நமக்குத் தோன்றி எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்னறிவிப்புச் செய்து விடுகின்றன. இந்த அறிவிப்பைக் கூட மனிதன் நேரடியாகக் காணும் போது தான் அவன் கண்ட கனவு உண்மை என்று நம்புவானே தவிர நிகழ்வைக் காண்பதற்கு முன்னர் கனவை உண்மை என்று நம்ப மாட்டான். ஏனென்றால் கனவில் காண்பதெல்லாம் நிகழ்ந்து விடாது என்பதை எல்லா மனிதனும் ஏற்றுக் கொண்டுள்ளான்.

இப்படி கனவு என்பது அவரவர்களின் எண்ணங்களுக்கு ஏற்பத் தோன்றுகின்றது. எண்ணங்களுக்கு அப்பாற்பட்டும் தோன்றுகின்றது. நிகழ்வதற்கு சாத்தியமற்ற விஷயங்களும் தோன்றுகின்றன. இவ்வளவு சிக்கல் நிறைந்த கனவில் அல்லாஹ்வைக் காண முடியும் என்று நினைப்பது பல குழப்பங்களுக்கு வழி வகுக்கும்.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கனவில் கண்டார்கள் என்று ஒரு செய்தி சில நூற்களில் இடம் பெற்றுள்ளது. ஆனால் அது பலவீனமானதாகும்.

ஒரு நாள் சுப்ஹு தொழுகையின் போது சூரியனின் உதயத்தை நாங்கள் கண்டு விடுவோம் என்ற அளவுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை ஏதோ ஒரு காரியம் தடுத்து விட்டது. திடீரென்று புறப்பட்டு வந்தார்கள். அப்போது தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தொழுகையை சுருக்கமாக முடித்துக் கொண்டார்கள். ஸலாம் கொடுத்ததும் தம் குரலால் அழைத்து "நீங்கள் உங்கள் வரிசைகளில் இருப்பது போல் அப்படியே இருங்கள்'' என்று சொன்னார்கள்.

பிறகு எங்களை நோக்கித் திரும்பி, இன்று காலை உங்களிடம் வராமல் தடுத்து வைத்திருந்த காரியத்தை உங்களுக்கு அறிவிக்கின்றேன். நான் இரவில் உளூச் செய்து விட்டு எனக்கென்று நிர்ணயமான அளவு தொழுதேன். அப்போது நான் என் தொழுகையில் கண்ணயர்ந்தேன். எனக்கு அது பாரமாக அமைந்தது. அப்போது நான் அழகிய தோற்றத்தில் உள்ள பாக்கியமிக்க உயர்ந்த எனது இறைவனுக்கு முன்னிருந்தேன். அவன், முஹம்மதே! என்று அழைத்தான். அதற்கு நான், "என் இறைவா! லப்பைக்க! (இதோ வந்து விட்டேன்)'' என்று கூறினேன். அவன், "உயர்மட்டக் குழு (வானவர்கள்) எது தொடர்பாக விவாதிக்கின்றது என்று உமக்குத் தெரியுமா?'' என்று கேட்டான். "என் இறைவா! எனக்குத் தெரியாது'' என்றேன். இவ்வாறு அவன் மூன்று தடவை கேட்டான்.

அப்போது அவன் இரு புஜங்களுக்கிடையே தன் முன்னால் கையை வைக்கக் கண்டேன். என் மார்புகளுக்கு இடையே அவனது விரல்களின் இதத்தை உணரும் அளவுக்கு அது அமைந்திருந்தது. எனக்கு எல்லாமே காட்சியளித்தது. நான் அறிந்து கொண்டேன். அப்போது அவன் உயர்மட்டக் குழு எது தொடர்பாக விவாதிக்கின்றது என்று கேட்டான். பரிகாரங்கள் தொடர்பாக விவாதிக்கின்றது என்று நான் பதிலளித்தேன். அவை என்னவென்று அவன் கேட்டான்.

"ஜமாஅத் தொழுகையை நோக்கி பாதங்கள் நடப்பது, தொழுகைக்குப் பின் மஸ்ஜிதில் அமர்வது, சிரமமான கட்டங்களில் உளூவை நிறைவாகச் செய்வது'' என நான் சொன்னேன். பிறகு எது தொடர்பாக என்று கேட்டான். "உணவளித்தல், இதமாகப் பேசுதல், மக்கள் உறங்கும் வேளையில் இரவில் தொழுதல்'' என்று பதிலளித்தேன்.

"யா அல்லாஹ்! நன்மைகள் புரிவதையும் தீமைகளை விடுவதை யும் ஏழைகளை நேசிப்பதையும் ஏழைகளின் நேசத்தையும் எனக்கு மன்னிப்பளித்து அருள் வழங்குவதை யும் உன்னிடத்தில் கோருகின்றேன். நீ ஒரு சமுதாயத்தைச் சோதிக்க விரும்பினால் என்னை அந்தச் சோதனையில் ஆட்படுத்தாது மரணிக்கச் செய்! உனது நேசத்தையும் உன்னை நேசிப்பவரின் நேசத்தையும் உனது நேசத்தின் பக்கம் நெருக்கி வைக்கும் வணக்கத்தை நேசிப்பதையும் உன்னிடத்தில் கோருகின்றேன் என்று சொல்- கேட்பீராக!'' என்று அவன் கூறினான்.

மேலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவை சத்தியமாகும். இவற்றைப் பாடமாக்கிக் கற்றுக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல்(ர-)

நூல்கள்: திர்மிதீ 3159,அஹ்மத் 21093

இந்த ஹதீஸில் அப்துர்ரஹ்மான் பின் ஹாயிஷ் அல் ஹள்ரமி என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பற்றி எந்த வரலாற்றுக் குறிப்பும் இல்லை. சிலர் இவரை நபித்தோழர் என்றும், தாபியி என்றும் குறிப்பிடுகின்றனர்.

இவருக்கு ஒரேயொரு ஹதீஸ் தான் இருக்கிறது, ஆனால் ஹதீஸ் கலை அறிஞர்கள் இவருடைய விஷயத்தில் குழப்பத்தில் இருக்கிறார் கள் என்று இமாம் புகாரி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். (நூல்: இஸாபா)

இதனால் இமாம் தாரகுத்னீ அவர்கள் தமது இலல் என்ற நூலில் இது தொடர்பான அறிவிப்புக்கள் அனைத்தையும் கொண்டு வந்து இதில் எதுவுமே சரியான ஹதீஸ் இல்லை என்று குறிப்பிடுகின்றார்கள்.

இதே போன்று இமாம் பைஹகீ அவர்களும் குறிப்பிடுகின்றார்கள். (நூல்: அல்இலல் முதனாஹியா)

எனவே நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கனவில் கண்டார்கள் என்பது ஆதாரமற்றதாகும்.
அபூஹனீபா அல்லாஹ்வைக் கனவில் கண்டார்களா?

நான் கண்ணியமிக்க இறைவனை 99 தடவை கனவில் கண்டேன். நிறைவாக நூறாவது தடவை அவனைக் காணும் போது, "படைப்புகள் எதன் மூலம் இறுதி நாளில் அவனுடைய வேதனையி லிருந்து விமோசனம் பெற முடியும்? என்று கேட்கப் போகின்றேன்'' என எனக்குள் சொல்லிக் கொண்டேன். அது போலவே நான் (நூறாவது தடவை) கண்டேன். அப்போது, "என் இறைவா! உன் தகுதி கண்ணியம் பெற்று விட்டது. உன் புகழ் மகத்துவம் பெற்று விட்டது. உன்னுடைய பெயர்கள் தூய்மையாகி விட்டன. இறுதி நாளில் உன்னுடைய அடியார்கள் உன்னுடைய வேதனையிலிருந்து எதன் மூலம் விமோசனம் பெறுவர்?'' என்று கேட்டேன். அதற்கு அவன், "காலையிலும் மாலையிலும்,

சுப்ஹான அபதில் அபத், சுப்ஹான வாஹிதில் அஹத், சுப்ஹான ஃபர்திஸ்ஸமத், சுப்ஹான ராஃபிஇஸ் ஸமாயி பிலா அமத், சுப்ஹான மன் பஸதல் அர்ள அலா மாஇன் ஜமத், சுப்ஹான மன் கலகல் கல்க ஃபஅஹ்காஹும் அததா, சுப்ஹான மன் கஸ்ஸமர் ரிஸ்க வலம் யன்ஸ அஹதா, சுப்ஹானல்லதீ லம் யத்தஹித் ஸாஹிபதன் வலா வலதா, சுப்ஹானல்லதீ லம் யலித் வலம் யூலத், வலம் யகுன்லஹு குஃப்வன் அஹத்

என்று யார் சொல்கின்றாரோ அவர் என்னுடைய வேதனையை விட்டும் விமோசனம், விடுதலை பெற்று விட்டார்'' என்று அல்லாஹ் பதிலளித்தான் என அபூஹனீஃபா இமாம் சொன்னார்.

நூல்: ஹாஷியா இப்னு ஆபிதீன், பாகம் 1, பக்கம் 51

அபூஹனீஃபா இமாம் ஒரு தடவை அல்ல. நூறு தடவை பார்த்ததாக ஹனபி மத்ஹபு நூல் கதை அளக்கின்றது; காதில் பூச்சுற்றுகின்றது.
இரு பெரும் பாவங்கள்

ஹனபி நூல் சொல்லும் இந்தக் கட்டுக் கதையில், கைச்சரக்கில் இரு பெரும் பொய்கள் இடம் பெற்றிருக்கின்றன.

ஒன்று, இமாம் அபூஹனீபா அல்லாஹ்வைப் பார்த்தார் என்ற செய்தி. மற்றொன்று, அல்லாஹ் அவருக்கு சில திக்ருகளை, இன்னும் சொல்லப் போனால் இக்லாஸ் எனும் அத்தியாயத்தை விட ஒரு பெரிய அத்தியாயத்தை இறக்கினான் என்பது!

இந்த இரண்டு கருத்துக்களுமே மிகப் பெரும் பாவங்களாகும்.

"வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ, அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.'' (அல்குர்ஆன் 42:51)

இந்த வசனத்தில் அல்லாஹ் மனிதர்களுடன் பேசுவதற்கு வகுத்துள்ள இந்த மூன்று வழிகளைத் தவிர வேறு வழியில் அல்லாஹ் பேசினான் என்று யாரும் கூறினாலும் அது தெளிவான பொய் என்பதில் சந்தேகமில்லை.

அல்லாஹ்வின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டுபவன், தனக்கு (இறைவனிடமிருந்து) எதுவும் அறிவிக்கப்படாதிருந்தும் எனக்கு அறிவிக்கப்படுகிறது' எனக் கூறுபவன், அல்லாஹ் அருளியதைப் போல் நானும் இறக்குவேன் என்று கூறுபவன் ஆகியோரை விட மிகவும் அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் மரணத்தின் வேதனைகளில் இருக்கும் போது நீர் பார்ப்பீராயின் வானவர்கள் அவர்களை நோக்கித் தமது கைகளை விரிப்பார்கள். உங்கள் உயிர்களை நீங்களே வெளியேற்றுங்கள்! அல்லாஹ்வின் பெயரால் உண்மையல்லாதவற்றை நீங்கள் கூறியதாலும், அவனது வசனங்களை நீங்கள் நிராகரித்ததாலும் இன்றைய தினம் இழிவு தரும் வேதனைக்கு உட்படுத்தப்படுகிறீர்கள்! (எனக் கூறுவார்கள்) (அல்குர்ஆன் 6:93)

மேலும் இந்தச் சமாச்சாரத்தில் ஒரு விஷ வித்தும் விதைக்கப்படுகின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது சமுதாயத்தை மறுமை நாளின் வேதனையிலிருந்து காக்கின்ற கைங்கர்யத்தைச் சொல்லத் தவறி விட்டார்கள். அந்தத் தவறை அபூஹனீபா நிவர்த்தி செய்கின்றார்கள் என்பது தான் அந்த விஷ வித்து.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களைக் காக்கும் விஷயத்தில் கவனம் செலுத்தவில்லை. இதோ நான் கவனம் செலுத்துகின்றேன் என்ற அதிகப் பிரசங்கித்தனம் தெளிவாகவே தொனிக்கின்றது.

இதில் கிடைக்கின்ற வேறொரு விபரீதம் என்னவெனில், இன்று ஒருவர், "ஐந்து வேளை தொழுகை இல்லை'' என்று அறிவிக்க முடியும். "இதை நீ எப்படி அறிவிக்கலாம்?'' என்று நாம் கேட்கப் போனால் அதற்கு அவர், "கழிந்த இரவில் நான் அல்லாஹ்வைப் பார்த்தேன். அவன் தான் இந்தச் சலுகையை அறிவித்தான்'' என்று தெரிவிப்பார். இது போன்று ஒவ்வொரு இயக்கத்தாரும், தங்கள் இயக்கத்தை வலுப்படுத்த, வளப்படுத்த இந்தச் சூத்திரத்தைக் கையாள்வர். எனவே இது போன்ற ஒரு வாசல் திறக்கப்படுவது மிகவும் அபாய கரமானது, ஆபத்தானது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரை வைத்தே இன்று அசத்தியவாதிகள் எத்தனையோ விளையாட்டு காட்டுகையில், அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி, என்ன விளையாட்டு காட்டுவார்கள்?

இப்படித் தான் அபூஹனீபா பெயரைச் சொல்லி இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கின்றார்கள். இப்படி எவர் சொன்னாலும் நாம் முன் வைக்கும் கேள்வி இது தான். சம்பந்தப்பட்டவர் அல்லாஹ்வைத் தான் பார்த்தார் என்பதற்கு என்ன ஆதாரம்? அல்லாஹ் என்ற பெயரைச் சொல்லி ஷைத்தான் வர மாட்டான் என்பதற்கு என்ன உத்தரவாதம்? என்ற கேள்வியை எழுப்புவோம்.

எனவே அபூஹனீஃபா மட்டுமல்ல, உலகில் வேறு எவரும் அல்லாஹ்வைக் கனவில் காண முடியாது என்பதே உண்மையாகும்.

19.10.2011. 23:10
ஆடைகள்
ஆடைகள்
(தொடர் 1) (ஜூன் 2007)

அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தையும் வசப்படுத்திக் கொடுத்திருக்கின்றான். இன்னும் அவர்களுக்கு உணவுகளையும், குடிபானங்களையும், ஆடைகளையும் வசப்படுத்திக் கொடுத்திருக்கின்றான். எனினும் அதில் சில வரையறைகளை ஏறபடுத்தி இருக்கிறான். அந்த வரையறைகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: "தனது அடியார்களுக்காக அல்லாஹ் வழங்கிய அலங்காரத்தையும், தூய்மையான உணவுகளையும் தடை செய்பவன் யார்?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! "அவை இவ்வுலக வாழ்க்கையிலும் குறிப்பாக கியாமத் நாளிலும் நம்பிக்கை கொண்ட மக்களுக்குரியது'' எனக் கூறுவீராக! அறிகின்ற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளை விளக்குகிறோம்

அல்குர்ஆன் 7:33

தான் படைத்தவற்றிலிருந்து அல்லாஹ் உங்களுக்கு நிழல்களை ஏற்படுத்தினான். மலைகளில் உங்களுக்காகக் குகைகளையும் ஏற்படுத்தினான். வெப்பத்திலிருந்து உங்களைக் காக்கும் சட்டைகளையும், போரில் உங்களைக் காக்கும் கவச உடைகளையும் அவன் ஏற்படுத்தினான். நீங்கள் கட்டுப்பட்டு நடப்பதற்காக இவ்வாறே அவன் தனது அருட்கொடையை முழுமைப்படுத்தினான்.

அல்குர்ஆன் 16:81
ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள ஆடைகளின் நிறங்கள்
மஞ்சள்:

உபைது பின் ஜுரைஜ் என்பவர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, "அப்துர் ரஹ்மானின் தந்தையே! உங்கள் தோழர்களில் எவரும் செய்யாத நான்கு விஷயங்களை நீங்கள் செய்வதை நான் பார்க்கிறேன்'' என்று கூறி விட்டு, "நீங்கள் ஆடையில் மஞ்சள் நிறத்தால் சாயம் பூசுவதை நான் பார்க்கிறேன்'' என்று கூறினார்.

அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ஆடையில் மஞ்சள் சாயம் பூசுவதை நான் பார்த்தேன். எனவே அதைக் கொண்டு சாயம் பூசுவதை நான் விரும்புகிறேன்'' என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 166, 5851

இந்தச் செய்திலிருந்து மஞ்சள் நிற ஆடையை அணிந்து கொள்ளலாம் என்பதை நாம் விளங்க முடிகிறது.
சிவப்பு:

பராவு பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நடுத்தர உயரமுள்ளவர்களாகவும், இரு புஜங்களுக்கு இடையே அதிக இடைவெளி உள்ள (அகண்ட மார்புடைய)வர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தலைமுடி அவர்களுடைய காதுகளின் சோனையை எட்டும் அளவிற்கு இருந்தது. அவர்களை நான் சிவப்பு நிற அங்கி ஒன்றில் பார்த்திருக்கின்றேன். அதை விட அழகான ஆடையை நான் பார்த்ததில்லை.

நூல் : புகாரி 3551

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் "ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிபவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?'' என்று கேட்டார். அதற்கு, "சட்டை, முழுக்கால் சட்டை, தொப்பி, குங்குமச் சாயம் பட்ட ஆடை, சிவப்புச் சாயமிடப்பட்ட ஆடை ஆகியவற்றை அணியக் கூடாது; யாருக்காவது செருப்பு கிடைக்காமல் இருந்தால் தோலினால் ஆன காலுறை அணிந்து கொள்ளலாம் அந்தக் காலுறை கரண்டைக்குக் கீழே இருக்கும் வகையில் மேல் பாகத்தை வெட்டி விட வேண்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: புகாரி 366

இந்தச் செய்தியில் இஹ்ராம் அல்லாத மற்ற சமயத்தில் சிவப்பு நிற ஆடை அணிந்து கொள்ளலாம் என்று விளங்க முடிகின்றது. குங்கும நிற ஆடைக்கும் இது பொருந்தும் என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஹஜ் அல்லாத மற்ற காலங்களிலும் காவி ஆடை அணியக் கூடாது என்று தனியாகத் தடை வந்துள்ளது.

இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறியதாவது சிவப்பு நிற ஆடை அணிவதையும் தங்கம் மோதிரம் அணிவதையும் ருகூவில் குர்ஆன் ஓதுவதை விட்டும் நான் தடுக்கப்பட்டேன்.

நூல்: நஸயீ 5171

இந்தச் செய்தியை அடிப்படையாக வைத்து சில அறிஞர்கள், "முதலாவது செய்தியில் சிவப்பு நிறம் அனுமதிக்கப் பட்டதாக வருகிறது; இரண்டாவது செய்தியில் தடுக்கப்பட்டதாக வருகிறது; எனவே ஆடைகளில் குறைவாக சிவப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்; முற்றிலும் சிவப்பாக இருக்கக் கூடாது'' என்று கூறுகின்றனர்.

ஆனால் இந்த விளக்கம் ஏற்கத்தக்கதல்ல! ஏனெனில் நஸயீயின் இந்த அறிவிப்பில் மட்டுமே சிவப்பு என்று வருகிறது. இதே இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக, இதே வார்த்தையில் நஸயீயில் வேறு சில அறிவிப்புக்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன. அந்த அறிவிப்புக்கள் அனைத்திலும் காவி நிறம் என்று வந்துள்ளது.

எனவே இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்களில் யாரோ ஒருவர் காவி நிறம் என்பதற்கு சிவப்பு என்று சொல்லி விட்டனர். ஏனென்றால் நிறத்தால் இரண்டும் ஒத்ததாக இருப்பதால் இப்படி மாற்றிக் கூறியிருக்கலாம் என்று விளங்கிக் கொண்டால் எந்த முரண்பாடும் இல்லை.
பச்சை:

அபீ ரிம்ஸா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் இரண்டு பச்சை நிற ஆடைகளை அணிந்து வந்தார்கள்.

நூல்: நஸயீ 5224

கருப்பு:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் தலையில் கருப்புத் தலைப்பாகை அணிந்த நிலையில் நுழைந்தார்கள்.

நூல்: முஸ்லிம் 2638

அப்தில்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: நபி (ஸல்) அவர்கள் மீது கருப்பு நிறமான கோடு போடப்பட்ட பட்டு இருந்த நிலையில் மழை வேண்டினார்கள்.

நூல்: நஸயீ 1490
வெள்ளை:

நபி (ஸல்) அவர்கள், "வெள்ளை நிறமான ஆடைகளை அணியுங்கள்; அது தான் ஆடைகளில் சிறந்ததாகும்; அதன் மூலம் உங்களில் மரனித்தவர்களுக்குக் கபன் செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: திர்மிதீ 915

நஸயீயின் மற்றொரு அறிவிப்பில்.....

நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் வெண்மை நிறமான ஆடையை அணியுங்கள்; அது தான் தூய்மையானதும் சிறந்ததுமாகும். அதன் மூலம் உங்களில் மரணித்தவர்களுக்குக் கபன் செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.

நூல்: நஸயீ 5227

மேற்கூறப்பட்ட நிறங்களில் அமைந்த ஆடைகளையும், இங்கு கூறப்படாத மற்ற நிறங்களிலான ஆடைகளையும் அணியலாம்; எந்தத் தடையும் இல்லை. ஆனால் தடை செய்யப்பட்ட காவி நிறத்தை மட்டும் அணியக் கூடாது.
தடை செய்யப்பட்ட நிறம்

நான் செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட இரு ஆடைகளை அணிந்திருப்பதை அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் கண்ட போது, "இவை இறை மறுப்பாளர்களின் ஆடைகளில் உள்ளதாகும்; எனவே இதை அணியாதீர்'' என்று சொன்னார்கள்.

நூல்: முஸ்லிம் 4218

"அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள், ஆண்கள் குங்குமப்பூ சாயமிட்டுக் கொள்ளக் கூடாது எனத் தடை விதித்தார்கள்'' என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

நூற்கள்: புகாரி 5846, முஸ்லிம் 4268

மேலே சொன்ன முதலாவது செய்தியில் பொதுவாகக் காவி ஆடை அணியக் கூடாது என்று வந்திருக்கிறது. இரண்டாவது செய்தியில் ஆண்களுக்குத் தடை விதித்தார்கள் என்று வருகிறது. எனவே ஆண்கள் தான் காவி ஆடை அணியக் கூடாது என்று எடுத்துக் கொள்ள வேண்டும். இதைப் பின்வரும் செய்தி மேலும் வலுவூட்டுகிறது.

அம்ரு பின் ஷுஐப் தன் பாட்டனார் மூலம் அறிவிக்கிறார்:

நாங்கள் நபி (ஸல்) அவர்களோடு உயரமான இடத்திலிருந்து இறங்கினோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் மீது மிருதுவான ஆடையில் கடுமையாக குங்குமப்பூ சாயமிடப்பட்டிருப்பதைக் கண்டு, "இது என்ன? மிருதுவான ஆடையில் இவ்வளவு காவி நிறத்தால் சாயமிடப்பட்டு இருக்கிறதே?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் வெறுப்பதை நான் அறிந்து என்னுடைய வீட்டிற்கு வந்தேன். அங்கு அடுப்பு மூட்டிக் கொண்டிருந்தார்கள். அந்த அடுப்பில் தூக்கி எறிந்து விட்டு மறுநாள் காலையில் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அந்த சாயமிடப்பட்ட ஆடையை என்ன செய்தாய்?'' என்று கேட்டார்கள். நான் விஷயத்தைக் கூறினேன் அதற்கு நபியவர்கள், "அதை உன் குடும்பத்தாருக்கு அணிவிக்கக் கொடுத்திருக்க கூடாதா? பெண்கள் அணிவது தவறில்லையே'' என்றார்கள்.

நூல்: அபூதாவூத் 3544

இந்தச் செய்தியிலிருந்து பெண்கள் காவி நிற ஆடையை அணிவது தவறில்லை என்பது தெரிகின்றது. இன்ன நிறங்கள் அணியலாம்; இன்ன நிறங்கள் அணியக் கூடாது என்பது ஆண்களுக்கு மட்டும் தான். பெண்களுக்கு இல்லை. பட்டாடை மற்றும் மற்ற ஆடைகளில் பெண்களுக்கு அனுமதி வழங்கப் பட்டிருப்பது போன்று இதிலும் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

முஸ்லிமில் வரக்கூடிய ஒரு செய்தி நமக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தலாம். அந்தச் செய்தியில்...

நபி (ஸல்) அவர்கள் என் மீது இரண்டு காவி ஆடைகளைக் கண்டார்கள். அப்போது கோபமாக "உன்னுடைய தாயாரா (இதை அணியுமாறு) ஏவினார்கள்?'' என்று கேட்டார்கள். நான், "இதைத் துவைத்து நிறத்தை மாற்றி விடட்டுமா?'' என்று கேட்டேன். நபியவர்கள், "இல்லை! இதை எரித்து விடு'' என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 3873

இதற்கு இமாம் நவவீ அவர்கள் இவ்வாறு விளக்கம் கூறுகின்றார்கள்: "இதை உன் தாய் தான் ஏவினார்களா?'' என்ற நபியவர்களின் சொல், "இந்த ஆடை பெண்களுக்குரியதும் அவர்களுடைய அலங்காரமாகவும் இருக்கும் போது அதை எப்படி உனக்கு அணியக் கொடுத்தார்கள்?' என்பது இதன் கருத்தாகும். இதை எரிக்க வேண்டும் என்ற நபியவர்களின் கட்டளை, தண்டனைக்குரியது; கடுமையானது என்பதைக் காட்டுவதற்காகவும் மற்றவர்கள் இதைச் செய்வதை விட்டும் தடுப்பதற்காகவும் தான்.

நூல்: ஷரஹ் முஸ்லிம்
ஆடை அணிவதன் ஒழுக்கங்கள்

ஆடை அணிவதில் இஸ்லாம் சில ஒழுங்கு முறைகளைக் கற்றுத் தந்திருக்கின்றது. அவற்றை இப்போது பார்ப்போம்.
1. மர்ம உறுப்பை மறைக்கும் படி ஆடை அணியவேண்டும்

"எங்கள் மறை உறுப்புகளில் எதை மறைக்க வேண்டும்; எவற்றை மறைக்காமல் இருக்கலாம்'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன் மனைவி, உன் அடிமைப் பெண்களிடம் தவிர மற்றவர்களிடம் உன் மறை உறுப்புகளை பாதுகாத்துக் கொள்'' என்று விடையளித்தார்கள். "ஒரு ஆண் இன்னொரு ஆணுடன் இருக்கும் போது மறை உறுப்பைக் காத்து கொள்ள வேண்டுமா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "வெட்கப்படுவதற்கு அல்லாஹ் மிகத் தகுதியானவன்'' என்று விடையளித்தார்கள். இதை முஆவியா பின் ஹைதா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: திர்மிதி 2693, 3718
2. ஒரு ஆடையில் இருவர் படுக்கக் கூடாது

ஒரு ஆண் மற்றொரு ஆணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு பெண்ணுடைய மறை உறுப்பைப் பார்க்க வேண்டாம். ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்; ஒரு பெண் மற்றொரு பெண்ணோடு ஒரே ஆடைக்குள் படுக்க வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: திர்மிதி 2717, அபூதாவூத் 3502
3. வலது புறமாக ஆரம்பம் செய்ய வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் சட்டை அணிந்தால் வலது புறத்திலிருந்தே ஆரம்பம் செய்வார்கள்.

நூல்: திர்மிதி 1688

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஆடை அணியும் போதும் உளூச் செய்யும் போதும் வலது புறத்திலிருந்தே ஆரம்பம் செய்யுங்கள்.

நூல்: அபூதாவூத் 3612
5. பெருமைக்காக ஆடையை தரையில் படுமாறு நடக்கக் கூடாது

நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: கணுக் கால்களுக்குக் கீழே தொங்கும் (வகையில்) கீழங்கி(யை அணிகிறவர்) நரகில் புகுவார்.

நூல்: புகாரி 5787

அபூதர் (ரலி) கூறியதாவது: "மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், "அவர்கள் இழப்புக்குள்ளாகி விட்டனர்; நஷ்டமடைந்து விட்டனர். அவர்கள் யார்? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டேன். அதற்கு, "தமது ஆடையை கணுக் கால்களுக்குக் கீழ் இறக்கிக் கட்டியவர், செய்த உபகாரத்தைச் சொல்லி காட்டுபவர், பொய் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 171

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முற்காலத்தில் ஒரு மனிதன் தன் கீழங்கியை தற்பெருமையின் காரணத்தால் இழுத்துக் கொண்டே நடந்த போது அவன் புதைந்து போகும் படி செய்யப்பட்டான். அவன் மறுமை நாள் வரை பூமிக்குள் அழுந்திச் சென்று கொண்டே இருப்பான்.

நூல்: புகாரி 3485

இது போன்ற செய்திகளை முன் வைத்து கரண்டைக் கால்களுக்குக் கீழ் ஆடை அணியக் கூடாது; அப்படி அணிகிறவர் நரகில் புகுவார் என்று கூறுகின்றனர். இப்படி மட்டும் செய்தி இருந்தால் இவர்கள் சொன்ன கருத்து சரி என்று சொல்லலாம். ஆனால் இது போன்ற மற்ற செய்திகளைப் பார்க்கும் போது, பொத்தாம் பொதுவாக இப்படிச் செய்கிறவர் நரகில் புகுவார் என்று சொல்லவில்லை. மாறாக பெருமைக்காக இப்படி அணிந்தால் நரகம் என்று நபியவர்கள் சொல்லி இருக்கிறார்கள். இதற்குப் பின்வரும் செய்திகள் ஆதாரமாக இருக்கின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தனது ஆடையைத் தரையில் (படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக் கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

நூல்: புகாரி 5783

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கர்வத்தோடு தனது கீழாடையைத் தரையில் (படுமாறு) இழுத்துச் சென்றவனை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.

நூல்: புகாரி 5788

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: "யார் தனது ஆடையைப் பெருமையுடன் தரையில் படுமாறு இழுத்துக் கொண்டு செல்கிறாரோ அவரை மறுமையில் அல்லாஹ் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நான் கவனமாக இல்லா விட்டால் எனது கீழங்கியின் இரு பக்கங்களில் ஒன்று சரிந்து விடுகிறது'' என்று சொன்னார்கள் அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் தற்பெருமையுடன் அப்படி செய்பவரல்லர்'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5784

மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் தற்பெருமையுடன் கர்வத்துடன் கணுக் கால்களுக்குக் கீழ் அணிந்தால் தான் நரகம் என்று வருகிறது. இதுதான் சரியாகவும் இருக்கிறது. ஏனென்றால் சாதாரணமாக ஆடை தரையில் படுவதற்காக இந்தத் தண்டனை கொடுப்பது சரியில்லை. மாறாக பெருமையுடன் நடந்ததால் தான் இந்தத் தண்டனை கொடுப்பது தான் சரியாகும்.

சில அறிஞர்கள் வேறு விதமான விளக்கத்தைக் கொடுக்கின்றனர். அதாவது கரண்டைக்குக் கீழ் ஆடை இறங்கி விட்டால் அது நரகத்திற்குரியது என்பதும், பெருமைக்காக ஆடை அணிந்து தரையில் படுமாறு சென்றால் அவர்களை அல்லாஹ் பார்க்கவும் மாட்டான் என்பதும் தனித்தனியான செய்திகள். எனவே இரண்டு ஹதீஸ்களையும் இணைத்து பெருமைக்காகச் சென்றால் தான் இந்த எச்சரிக்கை என்று விளங்கக் கூடாது. ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான எச்சரிக்கைகள் இருக்கின்றன. எனவே பெருமைக்காக இருந்தாலும் பெருமை இல்லாவிட்டாலும் கணுக் கால்களுக்குக் கீழ் ஆடை அணியக் கூடாது என்று கூறுகின்றனர்.

ஆனால் இந்த விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனென்றால் பொதுவாக ஹதீஸ் கலையின் விதியில், ஒரு செய்தி காரணம் இல்லாமலும் இன்னொரு செய்தி காரணத்தைக் குறிப்பிட்டும் வந்தால் காரணத்தோடு வந்திருக்கும் செய்தியைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உள்ளது. இந்த விதியை அறியாத காரணத்தால் இப்படி விளக்கம் கூறி விடுகின்றனர்.

இந்த விதியை விளங்குவதற்காக, குர்ஆனில் சொல்லப்பட்ட ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். குர்ஆனில் அல் மாயிதா என்ற அத்தியாயத்தில் ஹராமாக்கப்பட்ட விஷயங்களைச் சொல்லும் போது இரத்தத்தையும் குறிப்பிடுகின்றான்.

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக் கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப் பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.

அல் குர்ஆன் 5:3

இதே செய்தியை திருக்குர்ஆனில் அன்ஆம் என்ற அத்தியாயத்தில் இரத்தத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது ஓட்டப்பட்ட இரத்தம் என்று குறிப்பிடுகிறான்

"தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, மற்றும் அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர்கள் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 6:145)

இங்கே நாம் எப்படி விளங்கிக் கொள்வோம்? ஓடக் கூடிய இரத்தம் தான் ஹராம்! ஓடாத இரத்தங்கள் ஹராம் இல்லை என்று விளங்குவோம். இதே போன்று தான் கணுக் கால்களுக்குக் கீழே ஆடை அணியக் கூடாது என்று வந்திருக்கக் கூடிய செய்தி பொதுவாக இடம் பெற்றுள்ளது. மற்றொரு செய்தியில் பெருமைக்காக என்று வந்துள்ளது. எனவே காரணத்தோடு வந்திருக்கக் கூடிய செய்தியைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இப்படித் தான் இந்த விஷயத்தில் இணைத்து முடிவு காண வேண்டும் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் பத்ஹுல் பாரியிலும், இமாம் நவவீ அவர்கள் முஸ்லிம் விளக்கவுரையிலும் கூறியிருக்கிறார்கள்.

இன்னொரு விஷயத்தையும் இங்கே குறிப்பிடுவது அவசியமாகும். ஆடையை பெருமைக்காக அணிவது குற்றம் என்றவுடன் இது வேட்டியை, கீழங்கியை மட்டும் குறிக்கும், மற்ற ஆடைக்குப் பொருந்தாது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. மாறாக சட்டை, தலைப்பாகை இவைகளுக்கும் இந்த எச்சரிக்கை பொருந்தும்.

"ஆடையைத் தொங்க விடுவது என்பது கீழங்கியிலும், சட்டையிலும், தலைப்பாகையிலும் இருக்கிறது. யார் இவைகளைப் பெருமைக்காக இழுத்துச் செல்கிறாரோ அவரை கியாம நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: அபூதாவூத் (3571)

இந்தச் செய்தி கீழங்கியை அணிபவருக்கு மட்டும் எச்சரிக்கை செய்யவில்லை. மாறாக தலைப் பாகையின் ஓரங்களைப் பெரிதாகத் தொங்க விடுவதையும், சட்டையில் ஜுப்பா என்ற பெயரில் முட்டுக் கால் வரை தொங்க விடுவதையும் எச்சரிக்கை செய்கிறது. சம்பந்தப் பட்டவர்கள் திருந்திக் கொள்ள வேண்டும்.

(குறிப்பு: இந்த ஹதீஸில் இடம் பெரும் அப்துல் அஜீஸ் என்பவரைப் பலர் குறை கூறியிருப்பதாக இமாம் முன்திரி அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இவருடைய விஷயத்தில் குறை கூறியவர்கள் இவர் கொண்டிருந்த கொள்கைக்காகத் தான் குறை கூறியுள்ளார்கள். கொள்கை ரீதியாக ஒருவரைக் குறை கூறுவதால் அவரது நம்பகத்தன்மையில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.)


5. எதுவரை உயர்த்தி கட்டலாம்?

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது எனது கீழாடை கணுக்காலுக்குக் கீழ் இருந்தது. அப்போது அவர்கள், "அப்துல்லாஹ்! உனது கீழாடையை உயர்த்திக் கட்டு!'' என்றார்கள். நான் உயர்த்திக் கட்டினேன். "இன்னும் உயர்த்திக் கட்டு'' என்றார்கள். அவ்வாறே நான் இன்னும் உயர்த்தினேன். பின்னர் நான் அதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறேன். (இவ்வாறு அப்துல்லாஹ் பின் உமர் கூறியதைக் கேட்ட) மக்கள் சிலர், "எதுவரை உயர்த்த வேண்டும்?'' என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "கணுக்கால்களின் பாதியளவுக்கு'' என்று பதிலளித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 4238

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஃமினின் கீழங்கி கணுக்காலின் பாதியளவாகும். கணுக்காலுக்கும் கரண்டைக்கும் மத்தியில் இருந்தால் குற்றமில்லை. கரண்டைக்கும் கீழாக இருந்தால் அது நரகத்திற்கு உரியதாகும். யார் பெருமையோடு ஆடையை இழுத்துச் செல்கிறாரோ அல்லாஹ் அவரை கியாம நாளில் பார்க்க மாட்டான்.

நூல்: அபூதாவூத் 3570

மேலே நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸ்கள் அனைத்திலும் பொதுவாக ஆடைகளை கரண்டைக்குக் கீழ் அணியக் கூடாது என்று வந்திருக்கிறது. எனினும் பெண்களுக்கு என்று இதில் விதி விலக்கு இருக்கிறது. அதைக் கீழ்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.
6. பெண்கள் கரண்டைக்குக் கீழ் அணியலாமா?

நபி (ஸல்) அவர்கள், "யார் தமது கீழாடையைப் பெருமைக்காகத் தரையில் படுமாறு இழுத்துச் செல்கிறாரோ அவரைக் கியாம நாளில் அல்லாஹ் பார்க்க மாட்டான்'' என்று கூறியவுடன் உம்மு ஸலமா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! பெண்கள் தங்களுடைய கீழாடையை எப்படி அணிவது?'' என்று கேட்டார்கள். "ஒரு ஜான் இறக்கிக் கொள்ளட்டும்'' என்றார்கள். "அப்படியானால் அவர்களின் பாதங்கள் வெளிப்படுமே!'' என்று உம்மு ஸலமா (ரலி) கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அப்படியானால் ஒரு முழம் இறக்கிக் கொள்ளலாம்; அதை விட அதிகமாக்கக் கூடாது'' என்றார்கள்.

நூல்கள்: அபூதாவூத் 5241, திர்மிதி 1651

பெண்கள் கரண்டைக்குக் கீழ் ஆடை அணிவதை இந்தச் செய்தி அனுமதிக்கிறது. எனவே அவர்களுக்கு மேற்கூறப்பட்ட எச்சரிக்கை பொருந்தாது என்பதை விளங்கலாம்.
7. அழகான, தூய்மையான ஆடைகளை அணிய வேண்டும்

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம், "ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும், காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா?'' எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "அல்லாஹ் அழகானவன்; அவன் அழகை விரும்புகிறான்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 131

ஒரு மனிதர் அழுக்கான ஆடை அணிந்தவராக நிற்பதை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது "இவர் தனது ஆடையை தூய்மைப் படுத்தக் கூடிய ஒரு பொருளை பெற்றுக் கொள்ளவில்லையா?'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: அபூதாவூத் 3540

வளரும் இன்ஷா அல்லாஹ்
ஆடைகள் தொடர் : 2
அனுமதிக்கப்பட்ட ஆடைகளும் தடுக்கப்பட்ட ஆடைகளும்

(ஜ‚லை 2007)

முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் தமது இயற்கைத் தேவையை நிறைவேற்றச் சென்று விட்டுத் திரும்பி வந்தார்கள். நான் தண்ணீருடன் அவர்களை எதிர் கொண்டேன். பிறகு உளூச் செய்தார்கள். அப்போது அவர்கள் ஷாம் நாட்டு ஜுப்பா அணிந்திருந்தார்கள். அப்போது அவர்கள் வாய் கொப்பளித்து, நாசிக்குத் தண்ணீர் செலுத்தி விட்டுத் தமது முகத்தைக் கழுவினார்கள். பின்னர் தமது இரு கைகளையும் சட்டைக் கையிலிருந்து வெளியே எடுக்கப் போனார்கள். ஆனால் சட்டைக் கைகள் குறுகலாக இருந்தன. ஆகவே தமது இரு கைகளையும் அவர்கள் ஜுப்பாவின் கீழிருந்து வெளியே எடுத்து அவற்றைக் கழுவினார்கள். மேலும் தலையையும், காலுறையையும் மஸஹ் செய்தார்கள்.

நூல்: புகாரி (5798)

முகீரா பின் ஷுஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஒரு பயணத்தில் ஓரிரவு நபி (ஸல்) அவர்களோடு இருந்தேன். அப்போது அவர்கள், "உம்மிடம் தண்ணீர் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள். நான், "ஆம், இருக்கிறது'' என்று பதிலளித்தேன். உடனே அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி இரவின் இருளில் என் பார்வையிலிருந்து மறையும் அளவு நடந்தார்கள். பிறகு வந்தார்கள். நான் குவளை நீரை அவர்கள் மீது ஊற்றினேன். அவர்கள் தமது முகத்தையும் இரு கைகளையும் கழுவினார்கள். அப்போது கம்பளி ஜுப்பா அணிந்திருந்தார்கள். இதனால் ஜுப்பாவிலிருந்து தமது முழங்கைகளை எடுக்க முடியவில்லை. ஆகவே அங்கியின் கீழிலிருந்து எடுத்துக் கழுவினார்கள். பிறகு தமது தலையை மஸஹ் செய்தார்கள். பிறகு நான் அவர்களின் காலுறைகள் இரண்டையும் கழற்ற முனைந்தேன். அதற்கு அவர்கள், "அவற்றை விட்டு விடுவீராக! ஏனெனில் நான் கால்கள் இரண்டையும் தூய்மையான நிலையிலேயே நுழைத்திருந்தேன்'' என்று சொல்லி அவற்றைத் தடவி மஸஹ் செய்து கொண்டார்கள்.

நூல்: புகாரி (5799)
சால்வை ஆடை

"நபி (ஸல்) அவர்களிடம் புர்தா ஒன்றை ஒரு பெண்மணி கொண்டு வந்தார்'' என்று ஸஹ்ல் கூறி விட்டு, "புர்தா என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார். அங்கிருந்தோர், "ஆம், புர்தா என்பது சால்வை தானே'' என்றனர். ஸஹ்ல் ஆம் என்று கூறிவிட்டு, "மேலும் அப்பெண்மணி, "நான் எனது கையாலேயே இதை நெய்திருக்கிறேன்; இதனை உங்களுக்கு அணிவிக்கவே கொண்டு வந்தேன்' என்றதும், அது தேவையாக இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள். பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்த போது ஒருவர், "இது எவ்வளவு அழகாக இருக்கிறது. இதை எனக்கு அணிவித்து விடுங்கள்'' என்று கேட்டார். அங்கிருந்தோர், "நீர் செய்தது சரியா? நபி (ஸல்) அவர்களுக்குத் தேவைப்பட்டதால் தான் அதை அணிந்திருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கேட்பவர்களுக்குக் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அவர்களிடம் அதைக் கேட்டு விட்டீரே'' எனக் கூறினார்கள் அதற்கவர், "அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் அதை அணிந்து கொள்வதற்காகக் கேட்கவில்லை. அது எனக்கு (இறந்த பின் போர்த்தும்) கஃபனாக ஆகி விட வேண்டும் என்றே கேட்டேன்'' என்றார். பின்பு அது அவருக்குக் கஃபனாக ஆகி விட்டது'' என்று ஸஹ்ல் கூறினார்.

நூல்: புகாரி 1277
சட்டை, பேண்ட்

இப்னு உமர் (ரலி) கூறியதாவது: "அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் அணிந்திருக்கும் போது எந்த ஆடைகளை நாங்கள் அணியலாம் என்று நீங்கள் கட்டளை இடுகிறீர்கள்?'' என்று ஒரு மனிதர் எழுந்து கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "நீங்கள் சட்டைகளையும், கால் சட்டைகளையும், தலைப் பாகையையும், தொப்பிகளையும் அணியாதீர்கள். ஒருவரிடம் செருப்புகள் இல்லை என்றால் அவர் காலுறைகளை கரண்டைக்குக் கீழ் உள்ள பகுதி வரை கத்தரித்துக் கொள்ளட்டும். குங்குமப்பூ சாயம், வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்ந்த எதனையும் அணியாதீர்கள். இஹ்ராம் அணிந்த பெண் முகத் திரையையும், கையுறைகளையும் அணியக் கூடாது'' என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி 1838

இந்த ஹதீஸிலிருந்து ஹஜ் காலம் அல்லாத மற்ற காலங்களில் சட்டை மற்றும் கால் சட்டைகள் அணிந்து கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ள முடிகிறது. ஹஜ் உடைய காலங்களில் சட்டை அணியக் கூடாது என்பதற்குக் காரணம் அது தைக்கப்பட்ட ஆடையாக இருப்பதால் தான். தைக்கப்பட்ட ஆடைகளை ஹஜ் காலங்களில் அணியக் கூடாது.
வேலைப்பாடு செய்யப்பட்ட ஆடை

நபி (ஸல்) அவர்களிடம் சில ஆடைகள் கொண்டு வரப்பட்டன. அவற்றில் சிறிய கறுப்பு நிற கம்பளியாடை ஒன்றும் இருந்தது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "இதை யாருக்கு அணிவிக்கப் போகிறோம் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். மக்கள் பதில் கூறாமல் மௌனமாக இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், "உம்மு காலிதை என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்று சொல்ல அவ்வாறே (சிறுமியாக இருந்த) நான் தூக்கிக் கொண்டு வரப்பட்டேன். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தால் அந்த ஆடையை எடுத்து எனக்கு அணிவித்தார்கள். மேலும் இந்த ஆடையை நீ (பழையதாக்கி) கிழித்து நைந்து போகச் செய்து விடு'' என்று கூறிவிட்டு, "உம்மு காலிதே! இது ஸனாஹ் (அழகாக) இருக்கிறது'' என்று சொன்னார்கள். அந்த ஆடையில் பச்சை நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

நூல்: புகாரி 5823

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு மிக்க சதுரமான கருப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்து கொண்டு தொழுதார்கள். பிறகு அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்தார்கள். (தொழுது முடித்து) ஸலாம் கொடுத்தவுடன், "எனது இந்தக் கருப்புக் கம்பளி ஆடையை (எனக்கு அன்பளிப்பு அளித்த) அபூஜஹ்மிடம் கொண்டு செல்லுங்கள். ஏனெனில் சற்று முன்பு அது தொழுகையிலிருந்து எனது கவனத்தைத் திருப்பி விட்டது. அபூஜஹ்மின் மற்றொரு (சாதாரண) ஆடையை என்னிடம் கொண்டு வாருங்கள்'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 5817

இந்த ஹதீஸிலிருந்து இது போன்ற தொழுகையின் கவனத்தை திருப்பக் கூடிய ஆடைகளை விட்டும் தவிர்ந்து கொள்ள வேண்டும் என்றும், இந்த ஆடைகளைத் தொழுகை அல்லாத மற்ற நேரங்களில் பயன்படுத்தலாம் என்றும் அறிய முடிகின்றது.
அரைக்கை சட்டை

அரைக்கை சட்டை அணிந்து தொழுதால் மக்ரூஹ் என்று சில உலமாக்கள் கூறி வருவதைப் பார்க்கிறோம். இதற்குக் குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த ஆதாரமும் இல்லை. ஹதீஸை சரியாகப் படிக்காத அல்லது விளங்காத உலமாக்கள் தான் இப்படிச் சொல்லி வருகிறார்கள். ஆனால் ஹதீஸ்களை ஆராய்ந்து பார்த்தால் இவர்கள் கூறுவது உண்மைக்கு மாற்றமானது என்பதை விளங்கலாம்.

நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் (ஸுஜூது செய்யும் போது) தமது இரு அக்குளின் வெண்மை தெரியும் அளவுக்கு இரு கைகளையும் விரித்து வைப்பார்கள்.

நூல்: புகாரி 390, 807, 3564

இந்த ஹதீஸில் அக்குள் தெரியும் அளவிற்கு நபி (ஸல்) அவர்கள் தொழுதுள்ளார்கள் என்பதிலிருந்து இது ஹராமோ, மக்ரூஹோ அல்ல என்பதை அறியலாம். எனவே அக்குள் தெரியும் அளவுக்கு ஆடை அணியலாம். ஆனால் தொழும் நிலையில் தோளில் துண்டு இல்லாமல் தொழக் கூடாது என்பதைப் பின் வரும் ஹதீஸ் விளக்குகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாரும் தமது தோள்களில் எதுவும் இல்லாதிருக்க ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழ வேண்டாம்.

நூல்: புகாரி 359
அரைக்கால் டவுசர்

நபி (ஸல்) அவர்களிடம் ஒரே ஆடையை அணிந்து தொழுவது பற்றி ஒருவர் வினவினார். அப்போது, "உங்களில் எல்லோரும் இரு ஆடைகளை வைத்திருக்கிறார்களா?'' என நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். (உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில்) பின்னர் ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் இது விஷயமாக வினவினார். அதற்கு, "உங்களுக்கு விசாலமாக்கியிருந்தால் நீங்களும் விசாலமாக்கிக் கொள்ளுங்கள்'' என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். சிலர் எல்லா ஆடைகளும் அணிந்து தொழுதனர். வேறு சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு மேலாடையும் அணிந்து தொழுதனர். வேறு சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு சட்டையும் அணிந்து தொழுதனர். இன்னும் சிலர் ஒரு வேஷ்டியும் ஒரு மேலங்கியும் அணிந்து தொழுதனர். வேறு சிலர் முழுக்கால் சட்டை மேல் போர்வை அணிந்து தொழுதனர். வேறு சிலர் முழுக்கால் சட்டையும் மேல் சட்டையும் அணிந்து தொழுதனர். முழுக்கால் சட்டையும் மேலங்கியும் அணிந்து சிலர் தொழுதனர். சிலர் அரைக்கால் சட்டையும் மேலங்கியும் அணிந்து தொழுதனர். இவ்வாறு பல விதமாகத் தொழலானார்கள்.

நூல்: புகாரி 355

இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள துப்பான் என்ற அரபி வார்த்தைக்கு அரைக்கால் டவுசர் என்று தான் பொருள். இதைப் பற்றி விரிவாக ஏகத்துவத்தில் முந்தைய இதழ்களில் விளக்கப்பட்டுள்ளது.
உயர் ரகமான ஆடை

சிலர் உயர் ரகமான ஆடை அணிவதை, பகட்டுக்குரியது; அவ்வாறு அணிவது கூடாது என்பது போல் பேசி வருகின்றனர். ஆனால் இது நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு மாற்றமானது ஆகும்.

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் "ஒரு மனிதர் தன்னுடைய ஆடையும், காலணியும் அழகாக இருக்க வேண்டும் என விரும்புகிறார். இது பெருமையா?'' எனக் கேட்டார்கள். அதற்கு நபியவர்கள் "அல்லாஹ் அழகானவன், அவன் அழகை விரும்புகிறான்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்: முஸ்லிம் 131

"அல்லாஹ்வின் தூதரே! நான் இன்ன மனிதரிடம் சென்றேன். அவர் எனக்கு விருந்து தரவில்லை. அவர் என்னிடம் வரும் போது அவரைப் போல் நானும் நடந்து கொள்ளலாமா?'' என்று நபி ஸல் அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், கூடாது என்று சொல்லி விட்டு, நான் மட்டமான ஆடை அணிந்திருப்பதைப் பார்த்த நபியவர்கள், "உன்னிடம் வசதி இருக்கிறதா?'' எனக் கேட்டார்கள். ஆடு, ஒட்டகம் மற்றும் அனைத்து செல்வங்களையும் அல்லாஹ் எனக்குக் கொடுத்திருக்கிறான்'' என்று நான் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அந்தச் செல்வம் உம் மீது தென்படட்டும்'' என்றார்கள்.

நூல்: திர்மிதி 1929

வசதி படைத்தவர்கள் உயர் ரகமான ஆடைகளை அணிவது தவறில்லை என்பதுடன் அது விரும்பத்தக்கது என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்கள் நமக்கு அறிவிக்கின்றன.
பட்டாடை அணிதல்

"பட்டாடை அணிவதும், தங்கமும் என்னுடைய சமுதாயத்தில் ஆண்களுக்கு ஹராம் (தடை செய்யப்பட்டது) ஆகும். பெண் களுக்கு ஹலால் (அனுமதிக்கப் பட்டது) ஆகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)

நூல்: திர்மிதி 1642

"சாதாரண பட்டோ, அலங்காரப் பட்டோ அணியாதீர்கள். தங்கம் மற்றும் வெள்ளித் தட்டுகளில் சாப்பிடாதீர்கள். அவை இம்மையில் (காஃபிர்களாகிய) அவர்களுக்கும் மறுமையில் (இறை நம்பிக்கையாளர் களான) நமக்கும் உரியதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் அபீலைலா (ரலி)

நூல்: புகாரி 5426

பட்டாடையின் மீது அமர்வதை நபியவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: ஹுதைபதுல்யமான்(ரலி)

நூல்: புகாரி 5837

நபி (ஸல்) அவர்கள் "இம்மையில் (ஆண்கள்) பட்டு அணிந்தால் மறுமையில் அதிலிருந்து சிறிதளவும் அணியவே முடியாது'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 5830

இந்தச் செய்திகள் அனைத்தும் பட்டாடை அணிவது ஆண்களுக்கு ஹராம் என்று சொன்னாலும் பின்வரும் செய்திகள் சிறிதளவு பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் (ஆண்களுக்கு) பட்டு அணிவதைத் தடை செய்தார்கள்; இந்த அளவைத் தவிர! (என்று கூறி) பெரு விரலை அடுத்துள்ள (சுட்டு விரல், நடுவிரல் ஆகிய) இரு விரல்களால் நபி (ஸல்) அவர்கள் சைகை செய்தார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)

நூல்: புகாரி 5828

இன்னும் சில நோய்களுக்காக பட்டாடைகளை அணிந்து கொள்ளலாம் என்றும் நபி ஸல் அவர்கள் நமக்கு அனுமதி வழங்கியிருக்கிறார்கள்.

"அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி), ஸுபைர் (ரலி) ஆகியோருக்கு இருந்த சிரங்கு நோயின் காரணத்தினால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.

அறிவிப்பாளர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2919



thanks to www.onlinepj.com