Thursday, June 21, 2012

பிறந்த நாள் கொண்டாடலாமா?


 பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது இஸ்லாத்தில் இல்லை. ஒரு மனிதன் பிறந்ததிலிருந்து மரணிக்கும் வரை அவன் கடைபிடிக்க வேண்டிய சந்தோஷமான துக்கமான காரியங்கள் அனைத்தையும் இஸ்லாம் கற்றுத்தந்திருக்கின்றது. இதில் பிறந்தநாள் கொண்டாட்டத்தை இஸ்லாம் குறிப்பிடவில்லை. இந்த சமுதாயத்துக்கு பெரும் பாக்கியமாக அனுப்பப்பட்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது பிறந்த நாளை அவர்களும் கொண்டாடவில்லை. கொண்டாடுமாறு மக்களுக்கும் கூறவில்லை. ஏன் நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட நபித்தோழர்களிடையே இப்படிப்பட்ட ஒரு கலாச்சாரம் இருக்கவில்லை.

வரதற்சனை விருந்து , மவ்லிது விருந்து வித்தியாசம் என்ன ?

வரதற்சனை  விருந்து , மவ்லிது விருந்து வித்தியாசம் என்ன ?


அஸ்ஸலாமு அலைக்கும்


மார்க்கத்திற்கு மாற்றமாக நடக்கும் திருமணத்தை முன்னிட்டு தரப்படும் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என்று கூறுகிறோம். இத்திருமணத்தை நாம் ஆதரிக்கக்கூடாது என்பதே இதற்குக் காரணம். இத்திருமணத்தை முன்னிட்டு தரப்படும் விருந்தில் பங்கெடுத்துவிட்டு நான் இத்திருமணத்தை ஆதரிக்கவில்லை என்று கூறினால் இந்தக் கூற்றில் எந்த உண்மையும் இல்லை.