Friday, June 15, 2012

தொழுகையின் அமர்வில் விரலசைத்தல்


தொழுகையின் அமர்வில் விரலசைத்தல்
தொழுகையில் அத்தஹிய்யாத், ஸலவாத் மற்றும் துஆக்களை ஓதுவதற்காக அமரும் போது வலது கையின் ஆட்காட்டி விரலை அசைப்பது நபிவழி என்று நாம் கூறி வருகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகப் பதிவாகியுள்ள ஹதீஸ்களின் அடிப்படையில் தான் நாம் இதைக் கூறி வருகிறோம்.

இது, தமிழக முஸ்லிம்களுக்கு முன்னர் கேள்விப்படாத ஒரு நடைமுறையாக இருந்ததால் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

இரண்டாம் ஜமாஅத்



இரண்டாம் ஜமாஅத்

ஹதீஸ்களில் இல்லாத கருத்தை ஹதீஸ்களில் உள்ளது போல் காட்டுவதில் கைதேர்ந்த (தங்க நகை கட்டுரையில் இதை அம்பலப்படுத்தியுள்ளோம்.) இலங்கை நவ்பர் என்பார் ஒரு ஜமாஅத் முடிந்து மற்றொரு ஜமாஅத் நடத்துவது கூடாது என்றும் வாதிட்டு வருகிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஆராய்ச்சிக்குப் பதில் சொல்ல தவ்ஹீத் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு ஞானம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளதால் முன்னுரிமை கொடுத்து இதை ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறோம்.

பெருங்கூட்டத்தைப் பின்பற்ற வேண்டுமா!



பெருங்கூட்டத்தைப் பின்பற்ற வேண்டுமா!

பெருங்கூட்டத்தைப் பின்பற்றுங்கள்;எவன் தனித்து விடுகின்றானோ அவன் தனித்து நரகத்தில் போடப்படுவான் என்று மிஷ்காத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் அடிப்படையில் மத்ஹபுகளை விட்டு வெளியேறுவது நரகத்திற்குரிய செயல் என்று விளக்கம் தருகிறார்கள். இது உண்மையா?

இந்த ஹதீஸ் இப்னுமாஜாவில் இடம் பெற்றுள்ளதாக மிஷ்காத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்னுமாஜாவில் இடம் பெறும் ஹதீஸ் இது தான்.

நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல்

நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல்
 வீடியோ ஆடியோ வடிவில் அறிந்து கொள்ள இங்கே கிளிக்  செய்யவும்


பி. ஜைனுல் ஆபிதீன்


தொழுகையில் நிற்கும் போது இடது கையின் மீது வலது கையை வைத்து, இரு கைகளையும் நெஞ்சின் மீது வைக்க வேண்டும் என்று ஆரம்பம் முதல் நாம் கூறி வருகிறோம்.


இந்தியாவில் பெரும்பாலான முஸ்லிம்கள் தொப்புளுக்குக் கீழே கைகளைக் கட்டி தொழுது வருகின்றனர். இது தவறானது என்றும் இந்தக் கருத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து ஹதீஸ்களும் பலவீனமாக உள்ளன என்றும் நாம் கூறி வருகிறோம்.

சூனியம் மறுப்புக்கு மறுப்பு

சூனியம் மறுப்புக்கு மறுப்பு

திருக்குர் ஆனையும் நபிவழியையும் விட்டு விட்டு சலபி எனும் புதுமதஹபுக்கு வக்காலத்து வாங்கப் புறப்பட்டுள்ள அல்ஜன்னத் மாத இதழ் சூனியம் குறித்து மிகப் பெரும் ஆராய்ச்சிக்கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. சூனியம் குறித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு கருத்தை முன்வைக்கிறது என்றால் அது குறித்து எடுத்துவைக்கும் ஒவ்வொரு ஆதாரத்துக்கும் ஒவ்வொரு வாதத்தையும் எடுத்துக் காட்டி அதற்கான மறுப்பை எடுத்து வைக்க வேண்டும். அப்படி இல்லாமல் தூரும் இல்லாமல் தலைப்பும் இல்லாமல் ஒரு மறுப்புக் கட்டுரையை எழுதி அதன் மூலம் தனது அறியாமையை தானே தம்பட்டம் அடித்துள்ளது.

சூனியம் பற்றி தவ்ஹீத் ஜமாஅத்தினர் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் என்று கேள்விகளைச் சமாளிப்பதற்காக எதையாவது எழுதி விட்டு நாங்கள் அபோதே இதற்கு பதில் சொல்லி விட்டோம் என்று கூறி சலபி மத்ஹபினரை நம்ப வைக்கவே இந்தக் கட்டுரையை அல்ஜன்னத் வெலீயிட்டுள்ளது.