Thursday, June 14, 2012

மகளிர்க்கான திரை மார்க்கமா? மரபா?


இலங்கையின் பல்வேறு இடங்களில் மார்க்க நிகழ்ச்சிகள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் நடைபெறுகின்றன. ஜும்ஆவும் நடைபெறுகின்றன. இதில் பெண்களும் கலந்து கொள்கின்றனர். சில போது பெண்களுக்கு என்று பிரத்தியேகமான பயான்களும் ஆண்களால் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆண்களை விட்டும் பெண்களை பிரிக்கும் விதமாக திரை போட வேண்டும் என்று சிலரும் திரை போடக்கூடாது என்று சிலரும் கூறுகின்றனர். இதற்கு குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் மார்க்கத் தீர்ப்பு என்ன என்பதனை இப்போது நாம் பார்க்க முயல்வோம்.

முஃமின்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் அல்லாஹ்வின் பக்கமும் அவனுடைய தூதரின் பக்கமும் திரும்பிவிடவேண்டும். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு தீர்ப்பை வழங்கிவிட்டால் நம்முடைய மனோஇச்சைகளைப் புறம் தள்ளி விட்டு அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப் படுவதே இறைநம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும் பெண்களுக்கும் கடமையாகும்.
அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும்,அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்                 (அல்குர்ஆன் 33 : 36)
அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது ‘செவியுற்றோம். கட்டுப்பட்டோம்” என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.                                                   (அல்குர்ஆன் 24 : 52)
மேற்கண்ட இறைக்கட்டளைகளை நம்முடைய மனதில் பதிய வைத்துக் கொண்டு மேற்கண்ட கருத்து வேறுபாட்டிற்கான மார்க்கத்தீர்ப்பைக் காண்போம்.
நாம் நம்முடைய முன்மாதிரியாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும். பெண்களுக்கு பயான் செய்யும் போதும் தொழுகையிலும் கண்டிப்பாக திரையிட்டுத்தான் ஆகவேண்டும் என்றால் நபியவர்கள் அவ்வாறு கட்டளையிட்டிருக்க வேண்டும். அல்லது நடைமுறையில் செய்து காட்டியிருக்க வேண்டும்.
ஆனால், பெண்களுக்கு உரையாற்றும் போதும், தொழுகையின் போதும் திரையிடவேண்டும் என்று நபியவர்கள் கட்டளைபிறப்பிக்கவில்லை. இன்னும் தம்முடைய வாழ்நாளில் செய்து காட்டவுமில்லை. இதற்கு மாற்றமாக நபியவர்கள் திரையின்றியே பெண்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார்கள். தொழுகை நடத்தியுள்ளார்கள். இதனை பின்வரும் செய்திகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
ஹதீஸ் : 1
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்  : நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாள் அன்று எழுந்து தொழுதார்கள். (பெருநாள்) தொழுகையை முதலில் நடத்திவிட்டுத் தான் உரை நிகழ்த்தினார்கள். உரையாற்றி முடிந்ததும் அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்குச் சென்று (தம்முடனிருந்த) பிலால் (ரலி) அவர்களின் கைமீது சாய்ந்தபடி பெண்களுக்கு உபதேசம் புரிந்தார்கள். பிலால் (ரலி) அவர்களே தமது ஆடையை ஏந்திக்கொண்டிருக்க பெண்கள் (தத்தமது) தர்மத்தை அதில் இட்டுக்கொண்டிருந்தனர்.     ( நூல் : புகாரி 978 )
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டுள்ளேன். அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள். பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் (ரலி) அவர்கள்மீது சாய்ந்துகொண்டு, இறையச்சத்தைக் கடைப் பிடிக்குமாறும் இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்குமாறும் வரியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு, பெண்கள் பகுதிக்குச் சென்று அவர்களுக்கு (மர்க்க நெறிமுறைகளையும் மறுமை நாளையும்) நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும், பெண்களை நோக்கி, ‘தர்மம் செய்யுங்கள். உங்களில் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவீர்கள்” என்று கூறினார்கள்.
அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து ‘அது ஏன், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘நீங்கள் அதிகமாகக் குறை கூறுகின்றீர்கள்@ (நன்றி மறந்து) கணவனை நிராகரிக்கிறீர்கள்” என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதணிகள், மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்களை (கழற்றி) பிலால் (ரலி)  அவர்களின் ஆடையில் போட்டனர்.     நூல் : முஸ்லிம் (1607)
நபியவர்கள் பெண்கள் பகுதிக்குச் சென்று எவ்விதத் திரையுமில்லாமல் பெண்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார்கள். நபியவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் இருந்துள்ளார்கள். மேலும், கன்னங்கள் கருத்த ஒரு பெண்மணி எழுந்து கேள்வி கேட்டார் என்று வந்துள்ளது. திரையிட்டிருந்தால் இவ்வாறு கூறுவதற்கு இயலாது. மேலும்ää பெண்கள் பிலால் (ரலி) அவர்கள் ஏந்திய துணியிலே தர்மங்களைப் போட்டுள்ளார்கள். திரையில்லாமல் இருந்தால் தான் இது சாத்தியமாகும். எனவே, பெண்களுக்கு உரை நிகழ்த்தும் போது திரையில்லாமல் உரை நிகழ்த்தலாம் என்பதற்கு இது தெளிவான ஆதாரமாகும்.
ஹதீஸ் : 2
அப10சயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! (பெண்கள்) உங்கள் உரைகளை(க் கேட்க முடியாதவாறு) ஆண்களே தட்டிச் சென்றுவிடுகின்றனர். ஆகவேää நாங்கள் தங்களிடம் வந்துää அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயித்துவிடுங்கள்” என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள்ää ‘இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்றுகூடுங்கள்” என்று சொன்னார்கள். அவ்வாறே (அந்த நாளில் அந்த இடத்தில்) பெண்கள் ஒன்று திரண்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்பெண்களிடம் சென்றுää அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அவர்களுக்குப் போதித்தார்கள். பிறகுää ‘உங்களில் எந்தப் பெண் தனக்கு (மரணம் வருவதற்கு) முன்பாகää தன் குழந்தைகளில் மூன்று பேரை இழந்துவிடுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறிவிடுவார்கள்” என்று சொன்னார்கள். அப்போது அப்பெண்களில் ஒருவர்ää ‘அல்லாஹ்வின் தூதரே! இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலுமா?” என்று கேட்டார். இதை அந்தப் பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்கää ‘ஆம்@ இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலும்தான்” என்று நபி (ஸல்) அவர்கள் மும்முறை பதிலளித்தார்கள்      (நூல் : புகாரி 7310)
நபியவர்கள் பெண்களுக்கு என்று பிரத்யோகமாக நாள் நேரத்தை நிர்ணயித்து உரையாற்றியுள்ளார்கள். பெண்களும் நபியவர்களிடம் நேரடியாகக் கேள்விகளைக் கேட்டுள்ளார்கள் . இதிலிருந்தே அங்கு எவ்வித திரையும் இருந்திருக்கவில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
நபியவர்கள் காலத்தில் ஐந்து வேளையும் பெண்கள் பள்ளி வந்து ஜமாஅத்துடன் தொழுபவர்களாக இருந்துள்ளனர். ஆனால், நபியவர்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எத்தகைய தடுப்பையும் ஏற்படுத்தவில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் திரை ஏற்படுத்த வேண்டுமானால் தொழுகையில் ஏற்படுத்தியிருக்கவேண்டும். ஆனால்ää நபியவர்கள் அவ்வாறு செய்யவில்லை. இதிலிருந்தும் திரை அவசியமில்லை என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். அதற்கான சான்றுகளைக் காண்போம்.
ஹதீஸ் : 3
சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : சில ஆண்கள்  சிறுவர்களைப் போன்று தங்களது சிறிய வேஷ்டியை தங்கள் கழுத்தில் கட்டிக் கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். (இதைக் கண்ட நபியவர்கள்) பெண்களிடம்ää ‘ஆண்கள் (சஜ்தாவிலிருந்து எழுந்து) உட்காரும்வரை நீங்கள் (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தாதீர்கள்” என்று சொன்னார்கள்.  (நூல் : புகாரி 362)
பெண்களின் பார்வை ஆண்களின் மறைவிடங்களைப் பார்த்துவிடக் கூடாது என்ற காரணத்தினால்தான் நபியவர்கள் பெண்களை தாமதமாக சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்துமாறு கூறுகிறார்கள். இதிலிருந்தே ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எவ்வித திரையும் இருந்திருக்கவில்லை என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
ஹதீஸ் : 4
அம்ர் பின் சலிமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் @ மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்தவுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து  இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிடமிருந்து என் தந்தை திரும்பி வந்த போதுää ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள்ää ‘இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்@ உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக்கட்டும்” என்று சொன்னார்கள்” எனக் கூறினார்கள். ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்துகொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே,  (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், ‘உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.
(நூல் : புகாரி 4302 )
இமாமின் ஆடை கிழிந்திருந்தை ஒரு பெண்மணி சுட்டிக்காட்டுகிறார் என்றால் அங்கு எவ்விதத் திரையும் இருந்திருக்கவில்லை என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். திரை இருந்திருந்தால் இமாமின் ஆடை கிழிந்திருந்ததை அப்பெண்மனி பார்த்திருக்க முடியாது.
ஹதீஸ் : 5
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  (கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்ததது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும்.
அறிவிப்பவர் :  அப10ஹ{ரைரா (ரலி)                           நூல் : முஸ்லிம் (749)
ஆண்களும் பெண்களும் சேர்ந்து தொழும் போது ஆண்களுக்குப் பின்னால் பெண்கள் நிற்பார்கள். இறுதி வரிசையில் நிற்கின்ற ஆண்களின் பார்வை தமக்குப் பின்னால் நிற்கின்ற பெண்களின் மீது படுவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாகத்தான் நபியவர்கள் ஆண்கள் வரிசையில் மிக மோசமானது இறுதி வரிசை என்று கூறுகிறார்கள். அல்லது முதல் வரிசையில் நிற்கின்ற பெண்கள் தமக்கு முன்னால் நிற்கின்ற ஆண்களின் மீது பார்வை செலுத்தும் நிலை ஏற்படலாம் . இதன் காரணமாகத்தான் நபியவர்கள் பெண்களின் வரிசையில் கெட்டது முதல் வரிசை என்று கூறுகிறார்கள்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் திரையிருந்தால் இவ்வாறு நபியவர்கள் கூறியிருக்க வேண்டிய அவசியமில்லை. மேலும்ää நபியவர்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் திரையிட்டுக் கொள்ளுங்கள் என்று கூறவுமில்லை. அவரவர் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் அறிவுரைதான் கூறுகின்றார்கள்.
ஹதீஸ் : 6
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுகையைத் தொழுவார்கள். அப்போது இறைநம்பிக்கை கொண்ட பெண்களும் தங்களது ஆடைகளால் தங்கள் உடல் முழுவதையும் சுற்றி மறைத்தவர்களாக நபி (ஸல்) அவர்களுடன் (தொழுகையில்) கலந்துகொள்வார்கள். பின்னர் தங்களது வீடுகளுக்குத் திரும்பிச் செல்வார்கள். அவர்களை (யார் யார் என்று) எவரும் அறியமாட்டார்கள்.
(நூல் : புகாரி 372)
ஹதீஸ் : 7
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு நாள் பாதி இரவு வரை) இஷாத் தொழுகையைப் பிற்படுத்தினார்கள். உமர் (ரலி) அவர்கள் நபியவர்களை அழைத்து, ‘பெண்களும் சிறுவர்களும் உறங்கிவிட்டனர்” என்று கூறியதும் நபி (ஸல்) அவர்கள் (தமது அறையிலிருந்து) புறப்பட்டு வந்து, ‘ப10மியில் வசிப்போரில் உங்களைத் தவிர வேறு யாரும் இந்தத் தொழுகையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கவில்லை” என்று கூறினார்கள். அன்றைய நாளில் மதீனாவைத் தவிர வேறெங்கும் தொழுகை நடத்தப்படவில்லை. இஷாத் தொழுகையை அடிவானத்தின் செம்மை மறைந்ததிலிருந்து இரவின் முதலாவது மூன்றில் ஒரு பகுதி கழிவது வரை மக்கள் தொழுதுவந்தனர்  (நூல் : புகாரி 864)
பள்ளிவாசலில் பெண்கள் தூங்கிவிட்டார்கள் என்பதை உமர் (ரலி) அவர்கள் நபிக்கு கூறுகின்றார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் திரையிருந்தால் நிச்சயமாக உமர் (ரலி) அவர்கள் இவ்வாறு கூறியிருக்க முடியாது.
ஹதீஸ் : 8
உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்து முடித்ததும் பெண்கள் எழுந்து (சென்று) விடுவார்கள். நபி (ஸல்) அவர்கள் எழுவதற்கு முன் சற்றுநேரம் (தாம் தொழுத) அதே இடத்திலேயே வீற்றிருப்பார்கள்
இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸ{ஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: ‘அ(வ்வாறு அவர்கள் அமர்ந்திருந்த)து, ஆண்களில் எவரும் பெண்களை நெருங்குவதற்கு முன், பெண்கள் திரும்பிச் செல்லட்டும் என்பதற் காகத்தான்” என்றே நாம் கருதுகிறோம். அல்லாஹ் நன்கு அறிந்தவன்.  (நூல் : புகாரி 870 )
மேற்கண்ட ஹதீஸ_ம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எவ்விதத் தடுப்பும் இருந்திருக்கவில்லை என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.
ஹதீஸ் : 9
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களது இல்லத்தில் (உபரித் தொழுகை) தொழு(வித்)தார்கள். நானும் ஓர் அநாதைச் சிறுவரும் அவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டோம். உம்மு சுலைம் அவர்கள் எங்களுக் குப் பின்னால் நின்றார்கள்.  ( நூல் : புகாரி 871 )
உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபியவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதுள்ளார்கள். ஆனால், நபியவர்களுக்கும் அவர்களுக்கும் மத்தியில் எவ்விதத் திரையும் இருக்கவில்லை.
மேலும், தொழுகையில் இமாம் தவறு செய்து விட்டால் அதை உணர்த்தும் கடமை ஆண்களுக்கு உள்ளது போல் பெண்களுக்கும் இருக்கின்றது. திரையிட்டு விட்டால் அது ஒரு போதும் சாத்தியமாகாது.
மேலும், பொதுவாக வீதிகளில் நடந்து செல்லும் போதும்,காய்கறிக் கடைகளிலும் இன்னும் பல்வேறு நிலைகளிலும் ஆண்கள் பெண்கள் ஒன்று கூடுகின்ற நிலைகள் சமுதாயத்தில் இருக்கின்றது. பெண்கள் பயான் மற்றும் தொழுகையைத் தவிர வேறு எங்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் திரையிட்டுக் கொள்வது கிடையாது. பெண்கள் பயானில் திரையிடுவது அவசியம் என்றால் மற்ற இடங்களில் திரையிடுவது அதை விட மிகவும் அவசியமானதாகும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், சந்தைகள், பலசரக்குக் கடைகள்ää கடற்கரைகள் போன்ற அனேக இடங்களில் திரையின்றி தான் பெண்கள் நடமாடுகின்றனர். பித்னா உருவாகும் என்றிருந்தால் இது போன்ற இடங்கள் தான் இதற்கு மிகவும் ஏற்ற இடங்கள். ஆனால், அங்கு யாரும் இதைக் கண்டு கொள்வது கிடையாது. வீட்டுக்கு வரும் மீன் வியாபாரியிடம் குழைந்து இனிக்க இனிக்க பேசுவதற்கு அனமதியளித்துவிட்டு, மார்க்கம் கற்பதற்காய் பெண்கள் வெளிக்கிளம்பும் போது மாத்திரம் ‘ஆண்கள் எப்படி பெண்களை திரையின்றி பார்க்கலாம்? திரையின்றி எப்படி பயான் கேட்கலாம்?’ என்று வினா தொடுப்பது விசித்திரமாய் உள்ளது. இதை நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் தொழுகையில் திரையிட வேண்டும் என்று வலிறுத்துபவர்கள் மற்ற இடங்களில் அதை சாதரணமாக எடுத்துக் கொள்வது ஏன்? என்கின்ற முரண்பாட்டை விளக்குவதற்காகத்தான்.
முறையாகப் பெண்கள் பர்தா அணிந்து இருக்கும் போது அந்தச் சபையில் திரையின்றிப் பேசுவதால் எவ்விதக் குற்றமும் கிடையாது.  அதே நேரத்தில் உரையாற்றுபவரைத் தவிர மற்றவர்கள் தேவையின்றி பெண்கள் சபைக்குச் செல்வதையும், பெண்களின் சபைகளை நோக்கி பார்வைகளைத் திருப்புவதையும் தவிர்ந்து கொள்ள வேண்டும். திரையின்றி ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் இடைவெளியை அதிகரிப்பதில் தவறில்லை.
நபியவர்கள் பெண்களுக்கு உரையாற்றும் போதும் பள்ளியில் தொழுகை நடத்தும் போதும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் மத்தியில் எவ்வித ஹிஜாபையும் ஏற்படுத்திக் கொள்வில்லை. நம்முடைய அழகிய முன்மாதிரி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான். அவர்கள் இவ்வாறு நடைமுறைப்படுத்தியிருக்கும் போது அதற்கு மாற்றமாக திரையிடுவதை அவசியமாக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது.
ஜூன் 2012 அழைப்பில் வெளியானது




thanks to www.sltjweb.com